அந்த அலுவலகம் ஒரே களேபரமாய் இருந்தது.
ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தனர்.
ஊழியர்கள் கவலையுடன் காணப்பட்டனர்.
சத்தமாக கூச்சலிட்டு விவாதித்தனர்.
யாரும் வேலை செய்யவில்லை.இருக்கையை விட்டு வந்து ஆலோசனை செய்தனர்.
அவசரக் கூட்டம் போட்டு அதிரடி முடிவெடுக்க ஏற்பாடானது
புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் பயத்துடன் இருக்கையிலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்பி மெதுவாக ஒரு உயர் அதிகாரியிடம் கேட்டனர்.
'என்ன ப்ராப்ளம் சார்?'
'நம்ம எம்.டி யை ஒரு கடத்தல் கும்பல் கடத்திப் போய் விட்டது.எப்படி மீட்பது என ஆலோசிக்கிறோம்'
'ஏன் கடத்தினார்கள்.என்ன வேண்டுமாம்?'
'ஒரு கோடி ரூபாய் கேக்கிறாங்க தாவிட்டால் எம்.டியை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க '
'ஓ..அப்படியா? எதுவாக இருந்தாலும் நாங்களும் ஒத்துழைக்கிறோம்.எங்க பங்களிப்பு எவ்வளவு ன்னு சொல்லுங்க'
'அதிகமில்லை ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுப்பது என முடிவு செய்தாச்சு'
'எவ்வளவு?'
' ஒரு லிட்டர் பெட்ரோல்'
Friday, November 21, 2008
மீட்பு நடவடிக்கை
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 12:34 PM 4 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: மொக்கை
Tuesday, November 18, 2008
யோசிக்கவச்சுட்டாங்கய்யா....
உலக அளவில் ஒரு கருத்துகணிப்பு நடத்தியது ஐநா. ஆனால் மிக பெரிய தோல்வியானது இக்கருத்து கணிப்பு. ஏன் என்றால்...
கேட்ட கேள்வி "Would you please give your honest opinion about solutions to the food
shortage in the rest of the world?"
ஆப்பிரிக்கா நாட்டில் "food" என்றால் என்னவென்று தெரியவில்லை.
இந்தியாவில் "honest" என்றால் என்னவென்று தெரியவில்லை
ஐரோப்பாவில் 'shortage' என்றால் என்னவென்று தெரியவில்லை.
சீனாவில் 'opinion' என்றால் என்னவென்று தெரியவில்லை.
middle east நாடுகளில் 'solution' என்றால் என்னவென்று தெரியவில்லை.
south ஆமெரிக்காவில் 'please' என்றால் என்னவென்று தெரியவில்லை.
ஆமெரிக்காவில் 'rest of the world' என்றால் என்னவென்று தெரியவில்லை....
ம்ம்ம்...யோசிக்கவச்சுட்டாங்கய்யா...அவ்வ்வ்வ்வ்
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 10:21 AM 4 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: உலகம்
Friday, November 7, 2008
நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்?
(ஆங்கிலத்தில் நண்பர் அனுப்பிய ஈமெயில்.. இங்கே தமிழில்...)
கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."
கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது,
"சார், 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"
கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"
கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்துவிடு"
கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதைபோல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்.....
இப்ப தெரியாதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு? ஹாஹாஹா....
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 9:22 AM 6 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: இது உண்மை
Thursday, September 11, 2008
தமிழ் சினிமான்னா இப்படித்தான் இருக்கும்!
1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..
* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..
* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..
* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
_____________
2) ரெண்டு கதாநாயகி இருந்தா...
* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
* வெளிநாட்டுக்கு போயிடணும்..
* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
____________
3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...
* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..
____________
4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...
* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..
* வில்லனை தான் லவ் பண்ணனும்..
* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
_____________
5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...
* அடி வாங்கணும்..
* அடி கொடுக்கணும்..
* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
_____________
6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..
* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..
* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி காட்டணும்..
* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.
_______________
7) கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...
* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..
* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..
* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
_____________
8) கதாநாயகன் குள்ளமா இருந்தா..
* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..
* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..
* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
______________
9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..
* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..
* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..
* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.
நன்றி: அரசர் நகைச்சுவை
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 8:53 AM 5 சிரிப்பொலிகள்
Friday, September 5, 2008
காக்க காக்க ரீமேக்
படங்களை ரீமேக் செய்யும் காலம் இது!! ஆக, ப.பா சங்கம் ஒரு படத்த ரீமேக் செய்ய போகுது... அதுக்கு நல்ல ஜோடிய தேடுறோம்!
இந்த சீன்னை இவர்கள் சொல்லியிருந்தால்....
சூர்யாவாக சாலமன் பாப்பையா (acp பாப்ஸ்)
ஜோவாக 'பருத்திவீரன்' பிரியாமணி
பிரியாமணி அழுது கொண்டே: ஏன்ய்யா,நீயா? ஏண்டா இந்த பக்கம் வந்தே?
பாப்ஸ்: எனக்கு இங்க வேற யாரும் தெரியாதுலே. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்லே! வா...பழகுவோம்ய்யா!
***
பாப்ஸ்: ஏன் புள்ள, உனக்கு என்ன தான் வேணும்?
பிரியாமணி: புரியல்ல...(அழுது கொண்டே...)
பாப்ஸ்: நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்ய்யா...(குரல் கொஞ்சம் கம்மி செய்துகொண்டு)
பிரியாமணி: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்டா! உன்கூட என் வாழ்க்கைய வாழனும்டா. உன்கூட நான் இருக்கனும்டா. உன்கூட சிரிச்சு பேசனும்டா. சண்ட போடனும்டா... உன் தோள்ல சாஞ்சி அழனும்டா.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்கனும்டா (தலை முடியை பிடித்து கொண்டு அழுகிறார்)
மூன்னு குழந்தைய பெத்துக்கனும்டா. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்கனும்டா. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்கனும்டா.
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும்டா! (சத்தம் போட்டு அழுகிறார்)
அவ்வளவுதான் டா எனக்கு வேணும்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. (பாப்ஸ் காலை பிடித்து அழுகிறார்)
பாப்ஸ்: ஏன்ய்யா? நான் யூத் கிடையாதுய்யா! நான் ஒரு பட்டிமன்ற நடுவர்ய்யா... என்னைய சுத்தி எப்போதே 4 பேரு பேசிகிட்டே இருப்பாங்கலே. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்யா! உனக்கும் எனக்கும் எம்புட்டு வயசு வித்தியாசம் இருக்கு! ஏன் நான்?
பிரியாமணி: அது ஒரு பொண்ணுக்கு தான்டா விளங்கும்! உனக்கெல்லாம் எங்கடா புரிய போகுது....
பாப்ஸ்: சரிய்யா, கல்யாணம் பண்ணிக்கலாம்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்லே. கல்யாணம் பண்ண... நாளை சந்திப்போமா?
இயக்குனர்: cuT!!!!!!!!! ஏங்க பிரியாமணி, இந்த சீன்ல ஜோதிகா எப்படி அழகா நடிச்சிருக்கும். உனக்கு நடிப்புன்னாவே அழதான் தெரியுமா? போ போ.... யோவ் assistant அடுத்த ஜோடிய வர சொல்ல. இந்தா பிரியாமணி, பாப்ஸ் கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. அப்பரம் கூப்பிடுறோம்.
அடுத்து சூர்யாவாக வைரமுத்து
ஜோவாக நமீதா
நமீதா: ஏ மச்சான்ஸ்? ஏண்டா இந்த பக்கம் வந்து?
வைரமுத்து: எனக்கு இங்கு வேற யாரையும் தெரியாது. உன்கூட தான் பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது.
***
வைர: ஏன் நமீதா(high pitch voiceலில்), உனக்கு என்ன வேண்டும்?
நமீதா: எனக்கு ஒன்னும் புரியுது? (புரியல்ல)
வைர: நம்மை பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேண்டும்? மனைவியா?சிநேகிதியே?(எச்சில் தெறித்தது)
நமீதா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் மச்சான்ஸ்! உன்கூட என் life வாழது. உன்கூட நான் இருக்குது. உன்கூட சிரிச்சு பேசுது. சண்ட போடுது... உன் தோள்ல சாஞ்சி அழது.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்குது three kids பெத்துகுது. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அது உன்னைய மாதிரியே இருக்குது. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்குது.
அப்பரம் ஒரு நாள் செத்துபோது! அவ்வளவுதான் மச்சான்ஸ்!(சிரிக்கிறார் நமீதா)
வைர: ஏன்? நான் இளரத்தம் கிடையாது! நான் ஒரு பாடலாசிரியர்.. என்னை சுற்றி எப்போதுமே 4 பேரு பாட்டு எழுத சொல்லி கொண்டே இருப்பார்கள். அது என்னை சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். உனக்கும் எனக்கும் வயது வித்தியாசத்தை பார்த்தாயா? அப்படி இருந்தும் ஏன் என்னை...? (வெள்ளை ஜிப்பா பாக்கேட்டில் கையைவிட்டு வானத்தை பார்க்கிறார்)
நமீதா: நான் இட்லி சாப்பிடுது. இடியாப்பம் சாப்பிடுது. நான் ஒரு தமில்நாட்டு புண்ணு!அது ஒரு புண்ணுக்கு தான் விளங்குது!
வைர: சரி. கல்யாணம் செய்து கொள்ளலாம்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உன்னை பார்த்த முதல் நாளே
கண்கள் கடிதமானது
இதயம் இன்பாக்ஸானது!
(இந்த இடத்துல, தருவீயா தரமாட்டீயா ரீமிக்ஸ் சாங்)
இயக்குனர்: cutttttttttttttt!! நமீதா சூப்பரா நடிச்சீங்க! யோவ் assistant, மேடத்துக்கு ஆப்பிள் ஜூஸ் கொடு! வைரமுத்து சார், நீங்க கொஞ்சம் தமிழ்ல பேசி நடிக்க முடியுமா? நீங்க பேசின தமிழ் வெள்ளக்காரங்களுக்கு மட்டும் தான் புரியும். நம்ம ஆளுங்களுக்கு விளங்காது. சோ கொஞ்சம் ப்ளீஸ்....
assistant: director சார், இன்னொரு ஜோடி ரொம்ப நேரமா வேட் பண்ணிகிட்டு இருக்காங்க.
இயக்குனர்: வர சொல்லுய்யா!
(கவுண்டமணியும், ஜெனிலீயாவும் உள்ளே வர)
சூர்யாவாக கவுண்டர்
ஜோவாக ஜெனிலீயா
ஜெனிலீயா குதித்து கொண்டே(தோள்பட்டையில் நீல கலர் பை): ஏ என்ன மேன்,நீயா? ஏண்டா இந்த பக்கம்?(லூசுத்தனமாக சிரிக்கிறார்)
கவுண்டர்: ஹாலோ லேடிஸ்,எனக்கு இங்க வேற யாரும் தெரியாது. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்! let's go talk ya.
***
கவுண்டர்: உனக்கு என்ன வேணும்?
ஜெனிலீயா: என்ன சந்தோஷ், நீ சொல்றது புரியல்ல...
கவுண்டர்: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே! நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்?
ஜெனிலீயா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்! அப்பரம்...உன்கூட பைக்கல ஊர் சுத்தனும். நாயர் கடையில டீ குடிக்கனும். பக்கத்துவீட்டு பையன்கூட கோலி விளையாடனும்.மொட்ட மாடில ஜஸ்கீரிம் சாப்டனும். உன்கூட சிரிச்சு பேசனும். சண்ட போடனும்... .. நிறைய குழந்த பெத்துக்கனும். அப்ப தான் சந்தோஷ், எதித்தவீட்டு ஆண்டி பிள்ளைங்ககூட கிரிக்கெட் ஆட முடியும். பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்க கூடாது. என்னைய மாதிரி இருக்கனும் சந்தோஷ்.
(முகத்தை பாவமாக வைத்து கொண்டு)
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும் சந்தோஷ்! அவ்வளவுதான் எனக்கு வேணும்!
கவுண்டர்: ஏன்? நான் யூத் தான்! எவ்வளவு ஆம்பளைங்க இருக்கும்போது இந்த ஆல் இன் ஆல் அழகுராஜ்வ why selected? நான் ஒரு அரசியல்வாதி. என்னைய சுத்தி 4 அல்லகைங்க, 5 நாத்தாரிங்க, 6 பிக்பாக்கெட் பசங்க இருப்பாங்க. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்! நீ என்னையவிட 3 வயசு மூப்பு.அரசியல இதெல்லாம் சகஜமா இருந்தாலும், இந்த விஞ்ஞான உலகத்துல....
ஜெனிலீயா: அது ஒரு பொண்ணுக்கு தான் விளங்கும் சந்தோஷ்! உனக்கெல்லாம் அது புரியாது சந்தோஷ். (கண்ணை கசக்குகிறார்)
கவுண்டர்: சரி சரி...லேடீஸ் அழுதா என் heart தாங்காதும்மா! கல்யாணம் பண்ணிக்குவோம்!வாலிப வயசுல இதெல்லாம் சகஜமப்பா!(ஜெனிலீயாவோடு கை குலுக்குகிறார் ஒரு romantic look கொடுத்து...)
இயக்குனர்: cutttttt!! இந்த 3 ஜோடில யார select பண்றது?????
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 12:29 PM 3 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: கலாய்த்தல், காமெடி, ரீமேக்
Thursday, August 28, 2008
கல்லூரி கல்வெட்டுகள்
கணக்கு பாடமும்
கடைசி பெஞ்
கலாவும் ஒன்னு!
இரண்டையுமே
புரிஞ்சிக்க
முடியலையே!
- கணக்கு/கலா புரியாமல் நொந்துபோனவர்கள் சங்கம்
21 வயசுல காதலிக்கலாம்
ஆனா என்னைக்குமே
கல்யாணம்
பண்ணிக்ககூடாது
- கல்லூரி காதல் தோல்வி சங்கத்தின் தலைவர்
பாட புத்தக்கத்த பார்த்தால்
brad pitt ஞாபகத்துக்கு
வராரு.
சன்னல் வெளியே பார்த்தால்
சல்மான் கான் ஞாபகத்துக்கு
வராரு.
நாங்கள் என்ன செய்ய?
-கல்லூரி கன்னிகள் சங்கம்
சூர்யா
விஷால்
மாதவன்
சித்தார்த்
ஜெயம் ரவி
வினய்
பரத்
இவங்களாம்....யாரு?
- அப்பாவி பெண்கள் சங்கம்
பிடிச்சிருந்தா சொல்லிடு!
கடைசிவரைக்கும் காத்திருக்காதே.
கடைசியில சொன்னா அதுக்கு
பேரு காதல் இல்ல
'குட் பை'
- 'இதயம்' முரளியின் ஒன்னுவீட்டு தம்பிகள் சங்கம்
கொஞ்சமா சைட் அடிப்போம்
நிறைய அடி வாங்குவோம்
கொஞ்சமா படிப்போம்
நிறைய மார்க் வாங்குவோம்
- கல்லூரி விருமாண்டிகள் சங்கம்
மனசுக்கு எது அழகா படுதோ
அதை மட்டுமே நோக்கி
போகுது
எங்க கால்கள்
அது
கல்லூரி 'கேட்'டாக இருந்தாலும் சரி
கணக்கு டிப்பார்ட்மெண்ட்
கஸ்தூரியாக இருந்தாலும் சரி!
- படிக்காமல் கவிதை எழுதுபவர்கள் சங்கம்
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 6:06 PM 19 சிரிப்பொலிகள்
Thursday, August 7, 2008
உங்கள் ரத்தம் என்ன நிறம் (க்ரூப்)?
உங்களின் குணாதிசியங்கள் உங்களுக்கு தெரியுமா?
உங்கள் நண்பர்கள் எப்படிப்பட்டவங்கன்னு தெரியனுமா?
இதோ உங்களுக்காக ஒரு quick guide?
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 11:09 AM 9 சிரிப்பொலிகள்
Wednesday, July 30, 2008
சிரிக்கலாம் வாங்க...
1) வேடந்தாங்கல் பறவைகள் எங்கிருந்து வருகின்றன?
உங்க பதில்களா இவை?
- வேடந்தாங்கல் பறவைகள் வேடந்தாங்கலில் இருந்து வருகின்றன
- வீடமைப்புக் கழகத்திலிருந்து வந்தன
- உலகின் பல பகுதிகளில் இருந்து
- வேடம் தாங்கி வருவதால், makeup அறையிலிருந்து
- வேடனிடமிருந்து வருகின்றன
- வானத்தில் இருந்து வருகின்றன
சரி பதில்... வேடந்தாங்கல் பறவைகள் மட்டுமல்ல.. எல்லா பறவைகளுமே, முட்டையிலிருந்து தான் வருகின்றன.. கூ கூ கூ!
2) ஒரு சுட்டிப் பையன்..
பள்ளிக்குச் சென்ற அவன் வீடுத் திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் அந்தப் பையனைத் தேடிப் பார்த்தார்கள்.. ஆனால் அவன் கிடைக்கவில்லை.
மூன்று மாதங்கள் கழித்து, அந்த பையன் வீடு திரும்பினான். அவன் வந்தவுடனேயே, அவர்கள் என்ன செய்திருப்பார்கள்?
உங்க பதில்களா இவை :
- பையனுக்கு நன்றாக அடி உதை கொடுத்திருப்பார்கள்
- கட்டியணைத்து முத்தமிட்டிருப்பார்கள்
- கதவைத் திறந்து வைத்திருப்பார்கள்
- முதலில் அந்தப் பையனைப் பார்ப்பார்கள்
- வா மகனே என்றுக் கூறிக் கட்டியணை ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்கள்.
- நீ யார் என்று கோபத்தோடு கேட்டிருப்பார்கள்
- கால்கள் இருக்கின்றனவா என்றுப் பார்த்திருப்பார்கள்
- ஆரத்தி எடுத்திருப்பார்கள்
- பையன் தேசிய சேவைக்குச் சென்றிருப்பான்.. பெற்றோர்கள் பெருமிதம் அடைந்திருப்பார்கள்.
- இனியும் காணாமல் போகாதே எனக் கண்டித்திருப்பார்கள்
- காவல் துறையினருக்குத் தெரிவித்திருப்பார்கள்
நல்ல பதில்கள் தான்.. இருப்பினும் நான் கேட்டக் கேள்வி..
மூன்று மாதங்கள் கழித்து, அந்த பையன் வீடு திரும்பினான். அவன் 'வந்தவுடனேயே', அவர்கள் என்ன செய்திருப்பார்கள்?
பதில்.. பையன் வந்தவுடனேயே, தேடுவதை நிறுத்தி விடுவார்கள்.. :)
3) அம்மா தன்னுடைய மகனை அழைத்து, ' கடைக்கு போய் 2 முட்டைகளை வாங்கி வாப்பா' அப்படின்னு சொன்னாங்க.. அப்படின்னா பையன் கடைக்குச் சென்று முட்டைகளை எப்படி வாங்குவான்?
உங்க பதில்களா இவை :
- ஒரு முட்டையை வாங்கி இரண்டாக உடைத்து எடுத்து வருவான்
- முட்டைக்கு பதில் கோழி ஒன்றை வாங்கி வருவான்.. அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
- ஒரு தாளில் இரு பூஜியங்களை இட்டுக் கொண்டுக் கொண்டு வருவான்
- மூச்சு வாங்க வாங்கி வருவான்
- கேட்டுதான் வன்ஙி வருவான்
பதில்: பையன் கடைக்குச் சென்று முட்டைகளை எப்படி வாங்குவான்? கைலதான் வாங்குவான்!! :Pஹிஹிஹி....
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 2:25 PM 8 சிரிப்பொலிகள்
Tuesday, July 29, 2008
இத சொல்லி பாருங்க...
இந்த 'pickup lines' பத்தி கேள்விபட்டிருப்பீங்க... பசங்க போய் பொண்ணுங்க கிட்ட முதன் முதலா பேச முயற்சி எடுப்பாங்க. இல்ல பொண்ணுங்க போய் பசங்ககிட்ட பேச முயற்சி எடுப்பாங்க (இது ரொம்ப குறைவு தான்) இருந்தாலும் அப்படி அவங்க முயற்சி எடுக்கும்போது இது போல சில வரிகளை சொன்னால்...
(இப்படி எதையும் செய்யாமல் நல்ல பிள்ளையா வாழ்ந்திருக்கீங்களா.. அப்படின்னா, இத சொல்லி பாருங்க...)
1) உங்களுக்கு கண்டதும் காதல நம்பிக்கை இருக்கா, இல்ல நான் மறுபடியும் ஒரு தடவ உங்க முன்னாடி நடக்கவா?
2) உங்க பெயரு சித்திரையா? இல்ல.. உங்கள பாத்தவுடனே மனசு சூடா போச்சு.3) உங்ககிட்ட map இருக்கா? உங்க கண்கள என்னைய தொலைச்சுட்டு நிக்குறேன்.
4) இப்ப ஏன் மேகம் ரொம்ப கருப்பா இருக்குதுன்னு சொல்லுங்க?
எல்லாம் நீலமும் உன் கண்கள கொட்டி கிடக்குதே!
5) என்னைய ஞாபகம் இருக்கா? ஒரு நாள் என் கனவுல உங்கள பாத்தேனே!
6) அட உங்கள பாத்தா என் வருங்கால மனைவி மாதிரியே இருக்குங்க.
7) முகத்தை உற்று பார்த்து,
பொண்ணு: ஏங்க இப்படி பாக்குறீங்க?
பையன்: ஏதாச்சு label இருக்கான்னு பாக்குறேன்.
பொண்ணு: what???
பையன்: உங்கள சொர்க்கத்துல செஞ்சாங்களான்னு பாக்க தான்!
8) பொண்ணு: வழி காட்டுறீங்களா?
பையன்: ஏங்க போக?
பொண்ணு: உங்க மனசுக்குள்ள போகதான்...
இப்படி சொல்ல போக, தர்மடி வாங்கி வந்தீங்கன்னா, வீரசூரன் என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுப்போம். முகத்தில், கை கால்களில் அடி பலமா இருந்தா, ஒரு bandage இலவசமா கொடுப்போம்! இது ஸ்டாக் இருக்கும்வரை தான்! இது ஆடி தள்ளுபடி இல்ல, அடி தள்ளுபடி! :))
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 7:54 AM 10 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: அடிதடி, கலாய்த்தல், நகைச்சுவை
Tuesday, July 22, 2008
ஃமை பிரண்ட் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஒரு five star hotel வெளியில் மிக பிரமாண்டமான 'கட் அவுட்'. மாலை, தோரணம், பெரிய banner என்று திருவிழா போல் காட்சியளித்தது இடம்! 'மை ஃபிரண்ட் பிறந்த நாள் கொண்டாட்டம்' என்று பெரியதாய் ஒரு பலகையில் எழுதியிருந்தது. முக்கியமான பல ஆட்கள், தொழில் அதிபர்கள் என்று ஒவ்வொருவராய் உள்ளே சென்றனர்... நமக்கு தெரிந்த பல ஆட்களும் அங்கே வந்திருந்தனர். என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்!
(பன்னீர் தெளித்து கொண்டிருந்த பெண்களை நோக்கி நடந்தார்)
கவுண்டமணி: ஹாய் லேடீஸ் லேடீஸ், ஐ எம் ஆல் இன் ஆல் அழகுராஜா, எம் எல் ஏ, அஞ்சா சிங்கம்.
செந்தில்: வணக்கம்ண்ணே....
கவுண்டமணி: who is that black sheep? (என்று பின்னாடி பார்க்கிறார்) ஓ, நீயா... என்னடா horlicks bottleக்கு label சுத்துன மாதிரி ஒரு சட்டைய போட்டு வந்திருக்கே..
செந்தில்: நீங்க மட்டும் என்னவாம்...toilet tiles போட்ட சட்டைய போட்டு வந்து இருக்கீங்க...
கவுண்டமணி: என்னடா... நக்கலா...
செந்தில்: சரி வாங்கண்ணே உள்ளே போவோம்...(வாசலில் நின்ற பெண்களிடம் பல்லை காட்டி கொண்டே..)
கவுண்டமணி: சரிடா யாருக்கு இன்னிக்கு பொறந்த நாளாம்?
செந்தில்: மை ஃபிரண்ட்
கவுண்டமணி: சரி இருக்கட்டும்... உன் ஃபிரண்ட் தான். அதான் யாருக்கு?
செந்தில்: மை ஃபிரண்ட் அண்ணே!
கவுண்டமணி: அடே, நான் அத கேட்கல்லடா... யாருக்கு பொறந்த நாளு?
செந்தில்: அதான் அண்ணே மை ஃபிரண்ட்....
கவுண்டமணி: அடே!!! (என்று அடிக்க போகிறார்..)
அரங்கத்தினுள் இருக்கும் மேடையில், சாலமன் பாப்பையா பேச ஆரம்பிக்கிறார்.
கவுண்டமணி: நிகழ்ச்சிய ஆரம்பிச்சுட்டாங்க... நீ தப்பிச்சுட்டே இப்போ..அப்பரம் கவனிச்சுக்கிறேண்டா உன்னைய....
(பாவமாக பார்க்கிறார் செந்தில்)
பாப்பையா: அருமை தாய்மார்களே, அன்பு பெரியோர்களே... வணக்கம்ய்யா! இன்னிக்கு எல்லாரும் நம்ம பொறந்த நாளு பொண்ண வாழ்த்த வந்திருக்கிறோம்ய்யா... நிறைய பேரு வந்திருக்காங்க... ஒவ்வொரு ஆளா வாங்க..வந்து வாழ்த்துங்க... முதல வராரு நம்ம ரஜினிகாந்த்
ரஜினி: எல்லாருக்கும் வணக்கம்(சிரிக்கிறார்) நான் இன்னிக்கு இமயமலைக்கு போறதா இருந்துச்சு.. ஆனா, இன்னிக்கு நம்ம லேடி சூப்பர் ஸ்டார் பொறந்த நாள் விலான்னு கேள்விபட்ட உடனே, எல்லாத்தையும் cancel பண்ணிட்டு வந்துட்டேன்... அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு சொன்ன காலமெல்லாம் மலையேறி போச்சு... இப்ப பொண்ணுங்க எல்லாம் ரொம்ப முன்னேறிகிட்டு வராங்க.. அதுக்கு ஒரு living example தான் நம்ம மை ஃபிரண்ட். எனக்கு ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகத்துக்கு வருது.. ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க... அவங்க ரொம்ப ஏழை. அவங்க வீட்டுல ஒரே ஒரு சைக்களில் தான் இருந்துச்சு
(கதைய ஆரம்பித்து பேசி கொண்டிருந்தார்...)
கீழே உட்கார்ந்து இருந்த செந்தில்,
செந்தில்: உங்களுக்கு கதை புரியுதா அண்ணே
கவுண்டமணி: புரியலன்னு சொன்னா... புரிய வைக்கவா போறே.. சும்மா நிகழ்ச்சிய பாருடா...
பாப்பையா: ரொம்ப அருமையா வாழ்த்து சொன்னாரு நம்ம ரஜினிகாந்த். அடுத்து வாங்கய்யா தசாவதார சிங்கம் உலக நாயகன் கமல்.
கமல்: மேடையில் அமிர்ந்து இருக்கும் அனைவருக்கும், இந்த விழாவை கண்டுகளிக்க வந்திருக்கும் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகளை முதலில் தெரிவித்து கொள்கிறேன். ஐயா அழைக்கும்போது, தசாவதார சிங்கம் என்று சொன்னார்கள். தசாவதார சிங்கம் நான் இல்லை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் மை ஃபிரண்ட் தான். என் படத்தை பலவகையில் விமர்சனம் போட்டு, பெரிய அளவில் மக்களிடம் சேர்த்தவளுக்கு நான் என்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன். அடுத்த படத்திற்காக நிறைய வேலைகள் உள்ளதால், நான் கிளம்பவேண்டிய சூழலுக்கு தள்ளபட்டிருக்கிறேன். விழா நன்றாக நடக்கட்டும். மை ஃபிரண்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க தமிழ், வளர்க தமிழ், வாழ்க உன் தமிழ் சேவை!
கவுண்டமணி பக்கத்தில் நம்ம பிரியாமணி வந்து உட்காருகிறார்.
செந்தில் உற்சாகமாகிறார், நான் தான் செந்தில் என்று அறிமுகப்படுத்தி கை குலுக்கி கொள்ள கையை நீட்டுகிறார். அதை தடுத்த கவுண்டமணி,
கவுண்டமணி: ஹாய் ஐ எம் ஆல் இன் ஆல் அழகுராஜ், அஞ்சா சிங்கம்.
பிரியாமணி: hello, hi. glad to meet you. was in caught in a heavy traffic jam. it's so stuffy in here. are the air conditioners working?
(கவுண்டமணி முழிக்க, செந்தில் சிரிக்கிறார்...)
கவுண்டமணி:(செந்தில் காதுகளில் கேட்கும் அளவில் மெல்லிய குரலில்) என்னடா இவ இப்படி பேசுறா.. ஒன்னுமே புரியல்ல... சரி சரி இது நமக்குள்ளே இருக்கட்டும்....
(திடீரென்னு பிரியாமணி அழும் சத்தம் கேட்க...)
பிரியாமணி ஒரு தாளில் வாழ்த்து எழுதுகிறார்,
பிரியாமணி: உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டி மை ஃபிரண்ட்....
செந்தில்: ஆமா, நீங்க ஏன் அழுவுறீங்க...
பிரியாமணி: பருத்திவீரன் படத்துக்கு அப்பரம் எனக்கு இப்படியே வந்துடுச்சு....
மேடையில் பலரும் வாழ்த்து சொல்கிறார்கள். கைதட்டல்கள் ஒரு புரம் இருக்க... உள்ளே நுழைகிறார் பருத்திவீரன் கார்த்தி. மை ஃபிரண்ட் பக்கத்தில் உட்காருகிறார். மதுரை பாஷையில்,
கார்த்தி: இப்பலாம் ரேடியோவில் ஒரே லவ் சாங்கா தான் கேட்க தோனுது. அதே மாதிரி இப்பலாம் இண்டெர்நெட் பக்கம் போனா ஒரே உங்க ப்ளாக்கா தான் பாக்க தோணுது. நல்லா எழுதுற புள்ள... இந்த புள்ள என் அண்ணி ஜோ கொடுத்துவுட்டாங்க gift. வரட்டா முத்தழகு!
இவர் கொடுத்த giftயை வாங்கி கொண்டு சந்தோஷத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார் மை ஃபிரண்ட்.
மேடை ஏறுகிறார் பார்த்திபன்.
பார்த்திபன்: ஒரு விதைக்கு தண்ணி ஊத்தின்னா, அது செடியா மாறும். அதுக்கு அப்பரம் பூவா மாறும். அந்த பூவ ரசிக்க நிறைய பேர் இருப்பாங்க. அதே மாதிரி, இங்க ஒரு 'பூ' வைச்சுருக்கும் பல வலைப்பூக்களை நாங்கள் ரசித்து கொண்டிருக்கிறோம். இவங்க தேன்கிண்ணத்துல எண்ணங்கள ஊத்துறாங்க. பசங்களுக்கு போட்டியா பயமறியா பாவையர் சங்கத்தலையும் இருக்காங்க. இந்த 'பறவை' ஒரு வேடந்தாங்கல் சொந்தக்காரி. இந்த குழந்தைக்கும் ஒரு குட்டீஸ் கார்னர். ஜில்லுனு ஒரு காதல் பார்த்த நமக்கு ஜில்லுனு ஒரு மலேசியாவையும் காட்டுறாங்க. இந்த வலைப்பூ வசியக்காரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!
பார்த்திபன் பேசி முடித்தபிறகு, பயங்கர கைதட்டல். தனஷை அழைக்கிறார் சாலமன் பாப்பையா...
தனஷ்: நான் தான் கொக்கி குமார் பேசுறேன். யாருச்சு இருக்கீங்களா?
கவுண்டமணி: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே, கூட்டம் ஜெய் ஜெய்ன்னு இருக்கு. யாருச்சு இருக்கீங்களான்னு கேட்குறான். இந்த வரேண்டா...(என்று கோபத்தில் மேடைக்கு போக, செந்தில் கவுண்டரை தடுக்கிறார்)
செந்தில்: அண்ணே, உட்காருங்கண்ணே. அவர் கொஞ்சம் அப்படிதான்....
தொடர்கிறார் தனஷ்.
கவுண்டமணி: யப்பா...ஒரு வழியா.. காதல் கொண்டேன் தனஷ், புதுப்பேட்டை தனஷ், சுள்ளான் தனஷ்னு எல்லா modulationலையும் பேசி முடிச்சுட்டான். என்னால முடியலடா சாமி.
பக்கத்தில் ஒருவர் வந்து நிற்கிறார். தலையை நிமிர்த்தி பார்க்கிறார் கவுண்டர்.
7ஜி ரவிகிருஷ்ணா: ம்ம்ம்...பசங்கன்னா அப்படிதான் இருப்பாங்க. ஒரே மாதிரியாவா பேசுவாங்க ம்ம்ம்.... நான் எந்த பொறந்த நாள் வாழ்த்தும் சொன்னது இல்ல இதுவரைக்கும்....ம்ம்ம்.. அனிதாகிட்டகூட இப்படிலாம் செஞ்சதில்ல தெரியுமா..ம்ம்ம்....
கவுண்டமணி: மைக் செட் வாயா, அதுக்கு என்னய என்னடா பண்ண சொல்லுற...
ரவிகிருஷ்ணா: நான் போய் மை ஃபிரண்டுகிட்ட ஹாய் சொல்லிட்டு வந்துடுறேன்...(லூசுத்தனமாக சிரித்து கொண்டு மை ஃபிரண்ட் பக்கத்துக்கு செல்கிறார்....)
ஒரு வழியா எல்லாரும் வாழ்த்துகள் சொல்லி முடித்தார்கள். சாப்பாடு வழங்கப்பட்டது. கவுண்டமணியும் செந்திலும் வாழ்த்து சொல்ல மை ஃபிரண்டை பாக்க செல்கிறார்கள். அங்கே ஒருவர் ஒரு மணி நேரமா மை ஃபிரண்ட்கிட்ட பேசாமலேயே அவங்க கண்களை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறார்.
கவுண்டமணி: என்னடா இங்க நடக்குது?
ஜெயம் ரவி: அவர் தான் சார் சித்தார்த். special guest for this show. மை ஃபிரண்டுக்கு ரொம்ப பிடிச்ச ஆளு. அதான் அவங்க கண்ணாலேயே பேசிக்கிறாங்க.
செந்தில்: அது ஏன் காபி குடிச்சிகிட்டே பேசுறாங்க?
ஜெயம் ரவி: அதான்ங்க 'காபி வித் அனு'
கவுண்டமணி: ஓ அனுவா? ஆமா.. நீ என்னடா இவ்வளவு நேரமா இங்க பண்ணிகிட்டு இருக்கே....
ஜெயம் ரவி: சித்தார்த் அநேகமா தெலுங்குலதான் பேசி இருப்பாரு. அத, நான் copyright வாங்கி தமிழ்ல பண்ணலாம்னு தான் வேட்டிங்!!!! (அசட்டு சிரிப்பு சிரிக்கிறார்)
கவுண்டமணி: இந்த விஞ்ஞான உலகத்துல இப்படி ஒரு கொடுமையா?
***முற்றும்***
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 1:26 PM 11 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: பிறந்தநாள் கொண்டாட்டங்கள், மை ஃபிரண்ட் பிறந்த நாள் வாழ்த்துகள்
Thursday, June 26, 2008
பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!
பெண்கள் என்றால் இந்த ஆண்கள் எப்படிக் கணக்கு பண்ணுகிறார்கள் பாருங்கள்!
பெண்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா?
அத்தனை சுலபமாக கணக்குப் பண்ண முடியுமா?
அத்தனை சுலபமாக விடை காணவும் முடியுமா?
கடலின் ஆழம் கூட அறியலாம்..பெண்கள் மனமறிய முடியுமா?
எத்தனை சுலபமாய் பெண்களை கண்டு பிடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!......சங்கத்து பெண்சிங்கங்களே...
ஏன் இத்தனை கோபம் ?என்ன மேட்டர்னு கேக்கறீங்களா?
இதைப் பாருங்க புரியும்
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 8:16 PM 12 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: பெண்பாவம்
Tuesday, June 24, 2008
நான் அனைவரும் பொய் positive!
பொதுவா, நம்மளோட இரத்தம் குரூப் என்னவோ இருக்கும்- O+, A+, AB-..அப்படி இப்படின்னு ஏதாவது ஒன்னு இருக்கும். ஆனால், நாம் அனைவருக்குமே ஓரே இரத்த குரூப் தான். அதான், பொய் positive!
ஏன் சொல்றோம்னா,
சின்ன வயசுல- அம்மா, நிலாவ பாத்து "நிலா நிலா ஓடி வா'ன்னு பாட்டு சொல்லி கொடுத்தாங்க.
பாட்டி வந்து சோறு ஊட்டும்போது, "நிலாவுல ஒரு பாட்டி வடை சுடுறாங்கன்னு" சொன்னாங்க.
நம்ம தப்பு செஞ்ச தாத்தா சொன்னாங்க, "பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்."
இளம் பருவத்தில்- காதலர்கள், " என் உயிர் உன் கையில" என்பார்கள்.
"நீ இல்லாம நான் செத்துடுவேன்." என்பார்கள்.
"நீ ரொம்ப அழகா இருக்க" என்பார்கள்.
பலாப்பழத்தகூட கையில பிடிக்க பலம் இல்லாதவன், "அந்த நிலாவ தான் நான் கையில பிடிச்சேன்." என்பான்.
ஆரஞ்சுப்பழ மாதிரி ஒரு முகத்த வச்சிருக்கும் பொண்ணுகிட்ட போய், "ஆப்பிள் பெண்ணே நீயாரோ?" என்பான்.
கல்லூரி போகும் பருவத்தில்- இருக்கும் இரண்டு தாத்தா, இரண்டு பாட்டிகளை 1008 முறை கொன்று இருப்பான்/ள், லீவு லெட்டர் மேட்டரில்.
ஸ்பெஷ்ல் க்ளாஸ் என்று சொல்லிவிட்டு சினிமாவுக்கு போவோம்.
கல்யாணம் ஆனபிறகு- தேவையில்லாமல் ஒன்னு கேட்போம், "என்னைய உனக்கு பிடிச்சிருக்கா?"
அவனும்/அவளும் வேறு வழியின்றி, "ம்ம்" என்று தலையாட்டுவான்/ள்
தாத்தா, பாட்டி ஆன பிறகு- ஆறு அறிவு கொண்ட ஒரு சிறு பிள்ளையை போய், "வைரமே, தங்கமே, முத்துவே" என்று கொஞ்சுவோம்.
இப்படி சிறு வயது முதல் பெரியவர் ஆகும் வரை, நம்மை சுற்றி பொய்கள், நாம் கேட்பது பொய்கள். நாம் சொல்வது பொய்கள். ஆனால், இது எல்லாமே positive விஷயங்களுக்காக சொல்லும் பொய் என்பதால், நாம் அனைவரின் இரத்தமும் "பொய் positive".
ஒரு தாய் மக்கள் என்பதை ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ, நாம் அனைவரும் 'ஒரு பொய் மக்கள்' என்பதை ஒத்துகொண்டே ஆக வேண்டும்! ஹிஹிஹி...:))
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 3:05 PM 8 சிரிப்பொலிகள்
Tuesday, June 17, 2008
பிரியாணி with பிரியாமணி
இன்றைக்கு நாம் பாக்க போக போற நட்சத்திரம், சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரியாமணி. ஒரு படத்தில்தான் அவர் உருப்படியாக நடித்தார். முத்தழகு என்று தமிழ்நாட்டு ரசிகர் நெஞ்சில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் நமது பிரியாமணியை இந்த 'பிரியாணி with பிரியாமணி' நிகழ்ச்சி மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நிருபர்: வணக்கம் பிரியாமணி. நாங்க ப.பா. சங்கத்திலிருந்து வந்து இருக்கிறோம்.
பிரியாமணி: yea hi.
நிருபர்: உங்களுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. அத பத்தி நினைக்கும்போது எப்படி இருக்கு?
பிரியாமணி: i am really thrilled and excited. i couldn't believe when my father broke the news to me. (சிரித்து கொண்டு) i was actually sleeping at that time..
நிருபர்: கொஞ்ச நிறுத்துங்க. ஏங்க தமிழ் தெரியாதா உங்களுக்கு? தமிழ்ல பேசி தான படத்துல நடிக்கிறீங்க. விருதுலாம் வாங்கியிருக்கீங்க. தமிழ்ல பேசுங்கப்பா.. ஏன்னா, இந்த நிகழ்ச்சிய வெள்ளைக்காரனும் பாக்குறான். அவனுக்கு தமிழ் நல்லா தெரியும்!
பிரியாமணி:( சிரித்து கொண்டே) எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எப்படி என்னைய தேர்வு செஞ்சாங்கன்னு தெரியல்ல. ஆனா இந்த நேரத்துல அமீர் சாருக்கு என்னுடைய நன்றிய சொல்லிக்கிறேன்.
நிருபர்: அப்ப அமீர் சார் தான் உங்க வெற்றிக்கு காரணமா?
பிரியாமணி: ஆமா சொல்ல போனால் அவர் எனக்கு குரு மாதிரி.
நிருபர்: ஆனா நாங்க கேள்விப்பட்டோம் அவர் நடிக்கபோகும் அடுத்த படத்துக்கு உங்கள select பண்ணாரு.. ஆனா நீங்க தான்...(என்று இழுத்தோம்)
பிரியாமணி: அப்படிலாம் ஒன்னுமில்லையே. எனக்கு dates சரிவரல்ல. அதுனால தான் (என்று மழுப்பி கொண்டு சும்மா இருந்த கைப்பேசியில் ஸ்.எம்.ஸ் வந்த மாதிரி சீன் போட..)
நிருபர்: dates? தமிழ்ல பேரிச்சம்பழம் என்போமே அதுவா? சரிவரல்லைன்னா வேற கடையில வாங்கவேண்டியது தானே.
பிரியாமணி: ஹாஹா.. குட் ஜோக்! ஒகே அடுத்த கேள்விக்கு போகலாமா?
நிருபர்: பருத்திவீரன் படத்துல உங்க மொத்த நடிப்பையும் நடிச்சதுனால, அதுக்கு அப்பரம் வந்த தோட்டா, மலைக்கோட்டை படத்துல் சுத்தமா நடிக்க மறந்துட்டீங்களே, ஏங்க?
பிரியாமணி: பருத்திவீரன் படத்துல நடிக்கிறதுக்கு space இருந்துச்சு.. மத்த படம் hero-oriented movies.
நிருபர்: ஆமா ஆமா.. கண்டிப்பா உங்களுக்கு space இருந்திருக்காது.. தோட்டா படத்துல ஜீவன் வச்சிருக்கும் முடிக்கே இடம் இருந்திருக்காது.. அப்பரம் இப்படி உங்களுக்கு.. ச்சே ச்சே.. அப்பரம் இன்னொரு கேள்வி. உங்களுக்கு ஞாபகம் மறதி இருக்கா?
பிரியாமணி: இல்ல. ஏன் இப்படி திடீர்ன்னு ஒரு கேள்வி?
நிருபர்: 'ஏ ஆத்தா ஆத்தோரமா' பாட்டுல நீங்க மறந்துபோய் உங்க அண்ண பொண்ணு dress போட்டுகிட்டு ஆடுனீங்களே. அத வச்சு சொன்னேன்.
பிரியாமணி: மம்மீ(என்று கூச்சலிட்டார். கோபமாக தான் கூப்பிடுகிறார் என்று பயந்துபோய்..)
நிருபர்: ஐயோ ஏங்க?
பிரியாமணி:(சிரித்து கொண்டு) இல்ல, இப்ப ஆப்பிள் ஜூஸ் குடிக்குற நேரம். அதான் அம்மாவ கொண்டுவர சொன்னேன்.
நிருபர்: ஓ.. நாங்க பயந்துபோயிட்டோம்.
பிரியாமணி:(ஆப்பிள் ஜூஸை குடித்து கொண்டு) ம்.. அடுத்த கேள்வி.
நிருபர்: அங்க செவுத்துல மாட்டி இருக்கே படம். அது எப்ப எடுத்தது?
பிரியாமணி: அச்சு birthday partyல.
நிருபர்: அச்சுவா?
பிரியாமணி: அஸ்வீன். ஸ்வீ சேகர் son.
நிருபர்: ஓ.. அவரா!! ஹாஹாஹா..
பிரியாமணி; ஏன் சிரிக்கிறீங்க?
நிருபர்:இல்ல, உங்க ஃபிரண்ட்ஸை பாத்தா சிரிப்பு வருது. வேகம் படத்துல என்னமா நடிச்சாரு? ச்சே.. சான்ஸே இல்ல. தொப்பை அழகனாச்சே!! பக்கத்துல அது பாக்யராஜ் மகன் தானே. அவர் படம் எப்ப வெளிவருதுன்னு அவருக்கே தெரியாது! அதுக்கு பக்கத்துல சந்தியா. காதல் படத்துக்கு அப்பரம், உங்கள மாதிரியே அவங்களும் நடிக்க மறந்துட்டாங்க. ஹாஹஹ..அதான சிரிச்சேன்.
பிரியாமணி: என்ன கிண்டலா?
நிருபர்: இல்ல சுண்டலு!
பிரியாமணி: what?!
நிருபர்: இல்ல.. பசிக்குது. அதான் கேட்டேன்.
பிரியாமணி: பேட்டி முடியட்டும். விருதே கொடுக்குறோம்.
நிருபர்: என்னது விருதா?
பிரியாமணி: சாரி ஐ மின் விருந்து. விருது கிடைச்ச பிறகு வாயிலேந்து விருது விருதுன்னே வருது.
நிருபர்: ம்ஹும் வரும் வரும்!
நி்ருபர்: அப்பரம் அடுத்த கேள்வி. உங்கள நிறைய பேர் mimicry செய்யுறாங்களே, அத பத்தி என்ன நினைக்குறீங்க.
பிரியாமணி: நம்மள ரொம்ப நேசிக்கிறவங்க தான் நம்மள மாதிரியே பண்ண ஆசைப்படுவாங்க. அப்படி நினைக்கும்போது, என் ரசிகர்களை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நிருபர்: அப்படியா! நான்கூட உங்கள மாதிரியே பேசுவேன். பாக்குறீங்களா?
(பிரியாமணி முகத்தில் ஆனந்தம் ஆட...)
நிருபர்:(அழுதுகொண்டே) உன்னைய எனக்கு ரொம்ப புடிக்கும்டா. நீ என் உசுருடா!!
பிரியாமணி: ஹாஹாஹா... நான் சாதாரணமா பேசுற மாதிரி பேசுங்க.
நிருபர்: சாரி அது என்னால முடியாது. அப்படி ஒருத்தருக்கு மட்டும்தான் வரும்.
பிரியாமணி; அப்படியா? who is that?
நிருபர்: நம்ம மன்சூர் அலிகானுக்கு தொண்டை கட்டிக்கிச்சுன்னா.. உங்க குரலே தான்!!!
(நாங்கள் எங்கள் பைகளை எடுத்து கொண்டு ஒரே ஓட்டம்...விடு ஜூட்!!)
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 11:00 AM 22 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: கலாய்த்தல், காமெடி, சினிமா
Saturday, June 7, 2008
லிப்ஸ்டிக் கறையை எப்படித் துடைப்பது?
ஒரு பள்ளியில் மாணவிகள் லிப்ஸ்டிக் போடக் கூடாதுன்னு தடை விதிச்சாங்க
ஆனாலும் மாணவிகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்க ஆசை.
வகுப்பறையில் மட்டும் தானே அனுமதி இல்லை என்பதால் தினமும் பள்ளியின் கழிப்பறைக்குப் போய் லிப்டிக் போட்டுக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பார்கள்.
அதோடு நிற்காமல் அந்த பெரிய கண்ணாடியில் அங்கங்கே தங்கள் லிப்ஸ்டிக் பூசிய உதடு்ளைப் பதித்தும் வருவார்கள்.
தினமும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளருக்கு கண்ணாடியில் பதிந்தி்ருக்கும் உதட்டுச் சாயக் கறைகளைத் துடைப்பதே பெரிய பாடாகிப் போனது.
மறுநாள் நன்கு சுத்தம் செய்ய்யப் பட்ட கண்ணாடியைப் பார்த்ததும் மாணவிகள் மேலும் குஷியாகி உதட்டுச் சாயத்தை பதித்து வைப்பார்கள்.
இது தினமும் தொடர் கதையாகிப் போக பணியாளார் பிரின்ஸ்பாலிடம் முறையிட்டார்.
மாணவிகளை அழைத்துப் பேசிய பிரின்ஸ்பால் தினமும் பணியாளர் எவ்வளவு சிரமப்பட்டு அந்தக் கறைகளைத் துடைக்கிறார் என்பதை சொன்னார்.மேலும் அவரை அதைச் செய்து காட்டச் சொல்ல பணியாளர் ஒரு ஸ்பாஞ்சை எடுத்து கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்..
மறுநாள் முதல் கழிப்பறை கண்ணாடியில் எந்த உதட்டுச் சாயக்கறையும் காணப்பட வில்லை;))
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 1:48 PM 10 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: டெக்னிக்
Wednesday, June 4, 2008
நீங்க இப்ப எந்த stage?
நான் ரொம்ப நாளா யோசிச்ச, ஆராய்ச்சி பண்ண ஒரு விஷயத்த பத்தி தான் இன்னிக்கு சொல்ல போறேன். நம்ம போதுவா கார் பார்க் பண்ணற விஷயம் தான். ஒரு சாதாரண விஷயம் தான். ஆனா, அதுக்குள்ளே ஒரு பெரிய ரகசியமே இருக்கு.
காதலர்களாக இருந்தார்கள் என்றால், கார் பார்க் பண்ணிட்டு ரொம்ப நேரமா உள்ளேயே உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாங்க.
கல்யாணம் ஆனா புதுசு என்றால், பையன் கார் பார்க் பண்ணிட்டு பொண்ண பக்கம் உள்ள கதவை திறந்துவிடுவான்.
கல்யாணம் முடிஞ்சு ஒரு அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு பார்த்தா, கார் பார்க் பண்ணும்வரை பொண்ணு வெளியே நின்னு வேட் பண்ணி, கார்க் டிக்கியில் வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து கொண்டு செல்லும்.
கல்யாணம் முடிஞ்சு பத்து இல்ல 12 வருஷம் கழிச்சு பார்த்தா, கார் பார்க் பண்ணும்போதே, பொண்ணு, "ஏங்க, இத்தன வருஷம் கார் ஓட்டுறீங்க, பார்க் கூட சீக்கிரம் பண்ண தெரியாதா?"
கல்யாணம் முடிஞ்சு, 20 வருஷம் கழிச்சு பார்த்தா...
கார் பார்க் முடிஞ்ச அடுத்த வினாடியே, கார் கதவை 'படார்'னு முடிவிட்டு சென்றுவிடுவார் கணவன்.
மனைவி் பாவமா பொருட்களை எடுத்து கொண்டு வீட்டுக்குள் செல்வார்.
நீங்க இப்ப என்ன stage?
கார் விஷயம் மட்டும் இல்ல. நீங்களும் உங்க மனைவி/கணவன் சேர்ந்து செய்த ஏதேனும் ஒரு விஷயம் 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு, இப்ப எப்படி இருக்குனு உங்க மனம் DVDய சற்று rewind பண்ணி பாருங்க... கண்ணு கலங்கிடும்! :))
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 12:55 PM 3 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சும்மா ஜாலிக்கு
Saturday, May 24, 2008
ஜில்லுனு ஒரு ரீ- எண்ட்ரீ வித் ஜோக்ஸ்
ஒரு சர்தார்ஜி டிவி கடைக்குப் போய் கலர் டிவி இருக்கான்னு கேட்டார்.
இருக்கே என கடைக்காரர் சொன்னார்
அப்ப பச்சைக் கலர்ல ஒரு டி வி குடுங்கன்னார் ச.ஜி
ஒரு சர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்
கடைக்காரர் சொன்னார் சூடான பொருளை சூடாகவும் குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்
ஒன்று வாங்கிய ச.ஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க
சர்தார்ஜி சொன்னார் இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'
ஒரு அடல்ட்ஸ் ஒன்லி சினிமாவுக்கு 18 சர்தார்ஜிகள் சேர்ந்து போனார்கள்.
ஏன் என்று கேட்டபோது 'பதினெட்டுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றனர்.
ஒரு சர்தார்ஜியை சனிக்கிழமையில் சிரிக்க வைக்கனும் என்றால் என்ன செய்யனும்.
புதன் கிழமையே ஒரு ஜோக்கைச் சொல்லிடனும்.
மின்னலடிக்கும் போது சர்தார்ஜிகள் ஏன் சிரிக்கிறார்கள்?
தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு சர்தாஜிக்கு ஒரு போன் நெம்பரை போடத் தெரியவில்லை.பூத் காரர் கேட்டார் என்ன பிராப்ளம்
ச.ஜி சொன்னார் இந்த நெம்பர் 911 என முடிகிறது ஆனால் போனில் 11 இல்லையே
மிக குண்டான ஒரு சர்தார்ஜிக்கு டாக்டர் சொன்னார்'தினமும் 8 கிலோ மீட்டர் வீதம் 300 நாள் ஓடினால் 34 கிலோ வரை எடை குறையும்.பின்னர் வந்து பாருங்கள்'
300 நாள் கழித்து ச.ஜி டாக்டருக்கு போன் பண்ணார்'டாக்டர் நான் 34 கிலோ குறைந்து விட்டேன்.ஆனால் வீட்டிலிருந்து 2400 கிலோமீட்டர் தள்ளியிருக்கேன் எப்படி வருவது?
தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளம் வந்த ஒரு சர்தார்ஜி கையில் ஒரு பாட்டில் பீரும் சிக்கன் பிரியாணியும் எடுத்துப் போனார்
ஏன் என்று கேட்க டிரெயின் லேட்டா வந்தா பசிக்குமே என்றார்
ஒரு ஓட்டலில் சாப்பிட்டபின் கை கழுவ சென்ற சர்தார்ஜி கை கழுவாமல் வாஷ் பேசினைக் கழுவ ஓட்டல் மானேஜர் வந்து ஏன் இப்படி செய்கிறீகள் என ச.ஜி மேலே மாட்டியிருந்த போர்டைக் காட்டினார்
'வாஷ் பேசின்'
தன்னுடைய நாலாவது குழந்தை பிறந்த போது ஒரு சர்தார்ஜி பர்த் சர்டிபிகேட் எழுதினார்
பாதர்:சீக்[கியர்] மதர்:சீக்[கியர்] குழந்தை :சைனீஸ்
அதெப்படி பாதர் மதர் சீக் காக இருக்கும் போது குழந்தை மட்டும் 'சைனீஸ்'
நீங்கள் பேப்பர் படிப்பதில்லையா உலகில் பிறக்கும் ஒவ்வொரு நாலாவது குழந்தையும் சைனீஸ் என்று'
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 9:22 PM 20 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: ஜோக்ஸ்
நாங்க என்ன கேணையனுங்களா?
நாங்க தாங்க கேணையனுங்க, அதாவது ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்கதான் ஒத்துகிறோம்
- அலுவலகத்துல இலவச இணைப்பு, முழு நேரமும் எங்களோட சேட்டிங் பண்றீங்க. வீட்டுக்குப் போனா dialup. உங்க அப்பன் காசுக்கு மட்டும் அப்படி ஒரு செக்யூரிடடி நீங்க. யாருக்கும் தெரியாம மிஸ்ட் கால் மட்டும் குடுப்பீங்க.
- செல்லு கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்குத் தெரியுமா நீங்க குடுக்கிற ஒரே ஒரு மிஸ்ட் காலுக்கு பல மணி நேரத்துக்கான பில்லு எங்களுக்குத்தான் பழுக்குதுன்னு.
- வெளியே போகும்போது பெரிய பை தோளில தொங்கும். காலியா வர்ற பை குண்டா வீட்டுக்குப் போவும், எங்க பர்ஸ் மட்டும் சீக்கிரமா இளைச்சுகிட்டே போவும்.
- ஷாப்பிங்னு கூப்பிட்டா முப்பது ரூவாய் டீ சர்டும் 5 ரூபாய் கம்மலும் போட்டுகிட்டு வருவீங்க. எங்களுக்கோ ஆயிரம் ஆயிரமாப் செலவு வெப்பீங்க.
- வீட்டுக்கு வந்தா ஒரு வாய் காப்பி தண்ணி தரமாட்டீங்க. கேட்ட வெக்கத் தெரியாதுன்னு சிரிப்பு வேற. ஆனா நாங்க கூப்பிட்டா மட்டும் காப்பிக்கு 150க்கு பில்லை ஆவும்னு வயித்த கலக்க வெப்பீங்க.
- உங்ககிட்ட ஸ்கூட்டி இருக்கும், பெட்ரோல் புல் டாங்குல இருக்கும். நாங்க வெளியில கூப்பிட்டா, எங்க வண்டியில பெட்ரோல் மட்டும் இல்லே எங்க தாவும் சேர்ந்தே தீரும்.
- நீங்க மெரினாவே பார்த்து இருக்க மாட்டீங்க. ஓசிலனா எங்க கூட ரெண்டு பக்கம் கால் போட்டுக்கிட்டு மஹாப்ஸ் போலாம்பீங்க.
- நீங்க விடுற பீலாவுக்கும் புருடாவுக்கும் மயங்கித்தானே எங்க வாயைபொளந்து கேட்டுக்கிட்டே பர்ஸ்ஸையும் திறந்து வச்சு பார்த்துட்டு இருக்கோம்.
- மாச ஆரம்பத்துல அவுட்டிங் வருவீங்க, அதனால 20ம் தேதியான அண்ணாச்சி கடையில் அக்கவுண்ட் நாங்க வெப்போம்.
- காலையில பழைய சோறை கறைச்சு குடுச்சுப்புட்டு வந்துட்டு பீட்ஸா கார்னர் கூட்டிட்டு போவச் சொல்றீங்களே, உருப்புடுவீங்களா?
- We are too smart?னு அடிக்கடி சொல்றதுக்கு அர்த்தம் இப்போதானே புரியுது.
இப்போ சொல்லுங்க ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்க தானே?
சிரிக்க வைக்க முயற்சித்தது ILA (a) இளா at 5:18 AM 17 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: ILA, Smart girls
Thursday, May 22, 2008
இளையர்களின் ஆத்திசூடி
" தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேடா!"
சரி நம்ம கதைக்கு வருவோம், இன்றைய காலத்தில் இளையர்களின் ஆத்திசூடி எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை-
அபிஷேக் பச்சனை ரசி
ஆன் லைன் chatting செய்
இண்டர்நெட்டை கைவிடேல்
ஈமெயிலில் forward msg அனுப்பு
உறங்கும்போது தலையணைகீழ் cellphone வை
ஊறுகாய் தொட்டுகொள்
எக்ஸாமுக்கு பின் பதில் பார்க்காதே
ஏ பி சி மற
ஐ லவ் யூ சொல்ல பழகு
ஒன்றுக்கு மேல் வலைப்பூ உருவாக்கு
ஓ போடு
ஔவையே, என்னை மன்னிச்சிக்கோ!!
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 6:26 PM 11 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: காமெடி, சும்மா ஜாலிக்கு
Tuesday, May 20, 2008
பத்திரிக்கை படிக்க, சீரியல் பார்க்க, டிவி நிகழ்ச்சிகள் கண்டுகளிக்க நேரமே போதவில்லையே!
நண்பர் ஒருவர் ரொம்பவும் அங்கலாய்த்துக் கொண்டார். நேரம் போதவே இல்லையாம். அப்படி என்ன வேலை என்று கேட்டதற்கு அவர் சொல்கிறார்.
"நாள் தவறாமல் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், குங்குமம், துக்ளக், சினேகிதி, பக்தி, ரிப்போர்ட்டர், ஜூ.வி என்று ஒன்று மாற்றி ஒன்று வந்து விடுகிறது. ஒரு வாரம் படித்து முடிப்பதற்குள் அடுத்த வாரம் வந்து விடுகிறது.
இது போதாதென்று, செல்லமடி நீ எனக்கு, சூரிய வம்சம், கோலங்கள், மேகலா, ஆனந்தம், அரசி, லக்ஷ்மி.. இப்படி எத்தனை சேனல்கள்.. அதில்தான் எத்தனை சீரியல்கள்!
தவிர ஜோடிப் பொருத்தம், நீயா நானா, மஸ்தானா மஸ்தானா.. இப்படி எத்தனை பார்க்கிறது, நேரம் இருந்தால்தானே?" என்கிறார்.
இப்படி ஒரு நேர நிர்வாகப் பிரச்சினை. இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள்.
---------------------------------------------------------------------------
அசட்டுத்தனமாக நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு. சமுத்திரம் போன்ற ஒரு பெரிய ஆபீஸ். பக்கத்து பக்கத்து சீட்டில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். ஒருத்தருக்கு ஓய்வொழிச்சல் இல்லாத வேலை. காலமே சீக்கிரம் வந்து விடுவார். இரவு நெடு நேரம் உட்கார்ந்திருப்பார். வீட்டுக்கும் மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு போவார். அடுத்த சீட்காரர் குஜாலாய் உட்கார்ந்திருக்கிறார். எப்பவும் மேஜை காலி. ரொம்ப நாள் கழித்து பொறுக்காமல் வேலைப்பளுக்காரர் குஜாலிடம் கேட்டே விட்டார், "அதெப்படி, உங்கள் டேபிள் எப்பவும் காலியாகவே இருக்கு?"
அவர் சொன்னார், "ரொம்ப சிம்பிள். என் பெயருக்கு 'ஜான்' என்று மார்க் பண்ணி வரும் அத்தனை பேப்பர்களிலும் நான் ஸ்மித் என்று மார்க் பண்ணி அவுட் டிரேயில் போட்டு விடுவேன். இந்த ஆபீசில் யாரோ ஒரு ஸ்மித் அத்தனை பேப்பர்களையும் கட்டி அழுது கொண்டிருப்பான்!"
வே.ப. காரர் பரிதாபமாகச் சொன்னார், "நான்தான் அந்த ஸ்மித்."
---------------------------------------------------------------------------
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபன் பக்கத்தில் நின்ற பெரிசிடம் ஒரு சின்ன கேள்விதான் கேட்டிருக்கிறான், "டைம் என்ன சார்?" என்று. பெரிசு பதில் சொல்லணும் அல்லது பேசாமல் இருக்கணும்தானே? மொலு மொலு மொலு என்று பிடித்துக் கொண்டு விட்டார்.
"நான் உனக்கு டைம் சொல்லுவேன். அப்புறம் நீங்க எங்கே சார் போகணும் என்பே. நான் மயிலாப்பூர்னு பதில் சொல்லுவேன். அங்கே எங்கே என்பே. நான் கச்சேரி ரோடும்பேன். நானும் அதே இடம்தான்ம்பே. அப்புறம் என் வீட்டுக்கு வருவே. என் பெண்ணிடம் என்ன படிக்கிறே என்பே. ப்ளஸ் டூ மாத்ஸ்ம்பா. நானும் பி.எஸ்ஸி மேத்ஸ்ம்பே. கணக்கு சொல்லித் தரேன்னு ஆரம்பிப்பே. அப்புறம் என்கிட்ட தைரியமா வந்து உங்க பொண்ணை நான் லவ் பண்ணறேன் சார்ம்பே.. வாட்ச் வாங்க வக்கில்லாத பசங்களுக்கெல்லாம் என் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தர நான் தயாரா இல்லே போடா!"
நன்றி: நிலாச்சாரல்
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 12:21 PM 1 சிரிப்பொலிகள்
Monday, May 19, 2008
டும் டும் டும்... அத்தான் வருவாக
சிரிக்க வைக்க முயற்சித்தது FunScribbler at 10:01 AM 4 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: கலாய்த்தல், கல்யாண கலாட்டா, காமெடி
Friday, May 16, 2008
வெட்கமே இல்லாம....
போன வருசம் இதே மாசம், நான் பாலைவனத்துல இருந்தப்போ சோத்துக்கு ரொம்பத்தான் காய்ஞ்சு போயிருந்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு சமைச்சு(வேக வெச்சு) சாப்பிட்டுக்கிட்டே நாளைக் கழிச்சுட்டு இருந்தேன். ஒரு நாள் நம்ம கூட்டாளி வந்து "மாப்ளே, நமக்கு வாய்தா அவ்ளோதான், இந்தியா போறேன். என்கிட்ட ஒரு இந்திய மிக்ஸி இருக்கு. மிக்ஸி கண்டிசனை பார்த்து ஒருத்தனும் வாங்க மாட்டேங்குறான். சும்மா குடுத்தாக்கூட வாங்க ஆள் இல்லை. ஆப்போதான் உன் ஞாபகம் வந்துச்சு. வந்து எடுத்துக்கோ"ன்னான். அப்பாடா.. இட்லி, தோசைக்கு வழி பண்ணிய தெய்வமே கும்பிட்டுட்டு ஓட்டமா போயி மிக்ஸிய எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
அப்புறமென்ன? மொதல்ல நல்ல சட்னி அரைக்கிறது எப்படின்னு கூகிளோ கூகிளு. ஒரு 20 பக்கத்தைப் பார்த்து, 10 பக்கத்தை செலக்ட் பண்ணி, 5ஐ தேத்தி.. ஒரு வழியா சட்னி எப்படி அரைக்கிறதுன்னு மனப்பாடமே ஆகிருச்சு.
அப்போதான் சடார்னு மண்டையில ஏறுச்சு. மாவுக்கு என்ன பண்ண. எடுடா வண்டிய, தேடுடா அதுக்கு raw materla. தேடிப் புடிச்சு இட்லி அரிசியும், உளுத்துப் போற நெலமையிலிருந்த உளுந்தையும் வாங்கியாந்தேன். கூகிள் மொதலாளி மாவை எப்படி அரைக்கிறதுன்னு சொல்ல மாட்டேன்னு அடம்புடிக்க, "போடா வெங்காயத்தான் எங்க ப.பாச மக்கள் கில்லி மாதிரி சும்மா சேட்ல தட்டினா மாவே அனுப்புவாங்க, நீ பெரிய டுபுக்கு"..................... அப்படின்னு கூகிள் சேட் தொறந்து பபாச மக்கள் யாராவது இருக்காங்களான்னு பார்த்தேன். டொய்ங்கன்னு சத்தம்.
கவிதாயினி: "அண்ணா சவுக்கியாமா?"
"அதெல்லாம் இருக்கட்டும், எப்படி மாவரைக்கிறது?" இது நானு.
"கிரைண்டர்லதான், இதுகூடவா தெரியாது? நீங்க எல்லாம் என்னத்த படிச்சு கிழிச்சீங்களோ?"எகத்தாளமா சிரிச்சுகிட்டே இப்படி ஒரு பதிலு.
எனக்கோ செம கடுப்புதான் என்ன பண்ண? மாவாட்டி ஆவனுமே
"என் கிட்ட மிக்ஸிதான் இருக்கு, பரவாயில்லியா?"
"ஹ்ம்ம் பரவாயில்லே, அட்ஜஸ்ட் பண்ணி அரைச்சுரலாம்"
"சரி, எப்படி?"
"ஊர வெச்சதை போட்டு சுட்சிய போட்டா அரைக்குது. இது கூடத்தெரியாமையா இத்தனை வருசம் உயிரோட இருக்கீங்க? ஹஹஹாஹ்ஹ்ஹ்"
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுத்திருச்சு, மிக்ஸி இல்லீங்க என் தலைதான். " அரிசி எவ்வளவு போடனும், உளுந்து எவ்வளவு போடனும்? அதுதான் தெரியனும். சுட்சிய போட்டா ஓடும்னு எங்களுக்கும் தெரியும்"
"அண்ணா வேலை இருக்கு, பார்க்கலாம் பை"
"சொல்லிட்டுப் போ, இல்லாட்டி ஊர்ல இருக்க மாட்டே"
"தெரிஞ்சா சொல்ல மாட்டோமா? ____________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)
"சரி வெயிட் பண்ணு. இன்னொரு சேட் விண்டோ வருது"
"அண்ணா" இது அனு.
ஆஹா வந்துட்டாடா என் குல தெய்வம், மாரியாத்தா.
"தெய்வமே, மாவரைக்க என்னென்ன போடனும்?"
"யு மீன் இட்லி மாவு?"
அப்பாடா வெவரமா ஒருத்தியாவது இருக்காளேன்னு "ஆமாம்மா ஆமா"
"தோசைக்குக் கூட"
"அத்தேதான். ஆமாண்டி என் ராசாத்தி" மனசுக்குள்ள நெய் தோசை மணக்க ஆரம்பிச்சுருச்சு
"குழிப்பணியாரம் கூட.."
ஆஹா, என்ன ஒரு பொது அறிவு "அப்படித்தாண்டி என் ராசாத்தி"
"இட்லிக்கு எல்லாம் என்ன போயி கேட்கலாமா? பிட்சா பர்கர் அப்படின்னு கேளுங்க."
"தோடா, அறுக்க மாண்டாவதனுக்கு அம்பெத்துட்டு அருவாளாம்.இட்லிக்கு இப்போ சொல்லு போதும்"
"ஹிஹிஹி________________________________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)
"அண்ணா, இதுக்கு எல்லாம் பிஸ்து G3தான் இன்னும் ஒரு மணி நேரத்துல சேட்டுக்கு வந்துருவாங்க. அவுங்கள கேளுங்க. சும்மா பிச்சு எடுத்துருவாங்க"
"என்னத்த, தோசையவா?"
"அட அவுங்க சரியான சமையல் ஸ்பெசலிஸ்டு தெரியுமா? பபாசவுக்கு ஒரே செஃபு அது G3தான்"
மனசுக்குள்ள நெய் வாசம் வீசுன தோசை, லைட்டா கருகிறாப்ல ஒரு எபஃட்டு. சே, இதுக்கு எல்லாமா கலங்குறது. சிங்கம் இதுக்கே சோர்த்துட்டா எப்படி? G3 வந்து வயித்துல மாவை வார்ப்பாங்கன்னு நினைச்சுகிட்டே சேட் விண்டோவ பார்த்துட்டே இருந்தேன். அப்பவே நடு ராத்திரி, இன்னும் ஒரு மணி நேரமா? இருக்கட்டும். நமக்குன்னு ஒரு தோசை பொறக்காமையா இருக்கும்?
டொங்க்...டொங்க்..டொங்க்..
எப்ப தூங்கினேன்னே தெரியல, கண்ண முழிச்சு பார்த்த G3. உலகத்துல மானஸ்த்தின்னு ஒன்னு இருந்தா அது G3தான், பின்னே ஒத்த லைன்ல அனுபோட்ட மெயிலுக்கு ஓடோடி வந்துருக்காங்களே.
அப்படியே சிவாஜி மாதிரி பாசத்தக் கொட்டிப் பேச ஆரம்பிச்சேன் "அம்மா, மாவரைக்கிறது எப்படின்னு சொல்லும்மா. நீ சின்ன வயசா இருக்கும்போது..."
"ஹல்லோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ______________(இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)ஆளை விடுங்க. டொங்க். ஆப்லைன்னுக்கு போயாச்சி.
வெளங்குமாடா? ஒரு தோசைக்கு ஆசைப்பட்டு இப்படிச் சின்னா பின்னமாயிட்டேனே.
அதென்ன அந்த _________________
"யாராவது எனக்கு இட்லி, தோசை சுட்டுப் போட்டா நல்ல ரவுண்டு கட்டி திங்கத்தான் தெரியும். மாவெல்லாம் அரைக்கத் தெரியாது. "
இப்படித்தாங்க, சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி சொன்னாங்க. ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனா டபுள் மீல்ஸ் திங்கிற புள்ளைங்க, ஒரு தோசைக்கு வழி இல்லாம பண்ணிபுட்டாங்க. இவுங்களையும் நம்பி ஒருத்தன் வருங்காலத்துல தாலிய கட்டி தோசைக்கு ஆசப்படுவானே அந்த மவராசன், போனா ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினானோ.
இப்போ தலைப்புக்கு வரலாமா.
வட்டல்ல சோத்தக் கொட்டி வாய்க்கா வெட்டி, அதுல சாம்பார் ஊத்தி (தலைப்பை ஒரு முறை நிமிர்ந்து உக்காந்து படிங்க) திங்கிறீங்களே, மாவாட்டத் தெரியாதா?
சிரிக்க வைக்க முயற்சித்தது ILA (a) இளா at 8:43 AM 31 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: ILA
Thursday, May 15, 2008
இன்று ப.பா. சங்கத்தில்..
ZZzzzzZZZzzzzZZZzzzzZZZzzz.... எப்போ கவிதாயினிக்கு PRO பதவி கொடுத்து ரிஷப்ஷன்ல உட்கார வச்சாங்களோ அப்போதிலிருந்தே இந்த சீட்டு மட்டும்தான் பிஜியா இருக்கு.. உட்கார்ந்துக்கிட்டே தூங்குறது, படுத்துக்கிட்டே தூங்குறது, காதுல ஃபோனை வச்சிக்கிட்டே தூங்குறதுன்னு தினமும் ஒவ்வொரு ஸ்டைலில் கலக்குறாங்க.. முதல்ல இந்த ரிஷப்ஷன்ல இருக்கிற மேஜையையும் நாற்காலியையும் தூக்கி தூர போடணும்..
அடுத்து.. kRrr.. koRr..mMm.. cHap Chap..SLurrppp... இது என்னன்னு நான் சொல்லிதான் தெரியணுமா என்ன? நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்களே.. G3 நொறுக்கு தீனியை நொருக்கி தின்ற அழகுதான் இது! இதை என்னால எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியல. அப்படி ஏதாவது செய்தா "என்னை கொடுமை படுத்துறாங்க.. காப்பாத்துங்க"ன்னு கத்தி ஊரை, உலகத்தையே கூட்டிடுறாங்க.. என்ன கொடுமை சார் இது!
"காதலா காதலா காதலால் தவிக்கிறேன்.."... இவ்வளவு நாளா மொக்கை போட்டு நம்மை இம்சித்துக்கொண்டிருந்த இம்சை அரசி இப்போ ஒரு நல்லவரின் இம்சையில் வசமாய் மாட்டிக்கொண்டார். இவங்க பொட்டி கட்டிட்டு ஊரு பக்கம் போயிட்டதா காத்து வாக்குல தகவல் வந்துச்சு. திருமணம் முடிஞ்சு எப்போ நம்மளையெல்லாம் இம்சை பண்ண வருவாரோ?... காத்திருக்கிறோம்.
Dush Dush. YeeHaah.. Dishyoommmm.... யாரோ குஸ்தி ப்ராக்டிஸ் பண்ற மாதிரி இருக்கே? யாருப்பா அது? மக்களே, கொஞ்சம் இருங்க..நான் எட்டிப் பார்த்துட்டு சொல்றேன். ஆஹா அஹா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.. போன பதிவுல "நான் காது கடிச்ச மைக் டைசன் ஊருல"ன்னு சொன்னவங்க அடுத்த பதிவுல "காது கடிச்ச மைக் டைசன் என் காலுக்கடியில"ன்னு சொல்லுவாங்க போல.. அம்மணி அனுசுயா வெயிட்டான ட்ரேயினிங்ல இருக்காஹ..
"காணவில்லை.. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு இரண்டு பிரம்படிகளும், மூனு புத்தகம் வீட்டுப்பாடங்களும் கொடுக்கப்படும்" என்ற பேன்னர் இங்கே மாட்டியிருக்கு. அடடே.. போட்டோல உள்ளவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஆஹா.. இவங்கதானே அவங்க.. அதான் மணி மணியா எழுதுவாங்களே கண்மணி டீச்சர்!! ஆஹா டீச்சர், உங்களுக்கு ஏன் இந்த நிலமை? எங்கே இருக்கீங்க..உங்களை கண்டுபிடிக்க வேடந்தாங்கல் பறவைகள் அனுப்பியிருக்கேன்.
----------------------------------------------------------------------------------------------------------
இந்த ஐந்து பேரை தேடி தேடி கண்டுபிடிக்கவே .:: மை ஃபிரண்ட் ::. எவ்வலவு கஷ்டப்படுறா.. பாருங்க மக்களே.. இதனலாத்தான் சொல்றேன். மை ஃபிரண்ட் குழந்தையை திட்ட கூடாது.. பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லவ.. அவ்வ்வ்வ்.....
"டொக் டொக் டொக்"
மை ஃபிரண்ட்: வெளியே யாரு? உள்ளே நானு..
அனானி: வெளியே நானு.. உள்ளே யாரு?
மை ஃபிரண்ட்: ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா... இன்னைக்கும் எனக்கு சனி உச்சத்துலதான் போல.. யாருய்ய்யா அது?
அனானி: கொஞ்சம் வந்து எட்டிதான் பார்க்கிறது?
மை ஃபிரண்ட் வெளியே வந்து எட்டி (அதாவது தலையை மட்டும் வெளியே நீட்டி) பார்க்கிறார்..
மை ஃபிரண்ட்: இப்போ சொல்லும்மா.. யார் நீ?
அனானி: இது படம் பேர். "நீயா?"ன்னு கேளுங்க..
மை ஃபிரண்ட்: அடங்கொய்யாலே.. எனக்கு BP எல்லாம் எகுறுது. நீ யார்?
அனானி: நியூ அட்மிஸ்ஷன்
மை ஃபிரண்ட்: உனக்கு யார் கொடுத்த நியூ அட்மிஸ்ஷன்.. எங்களுக்கு மஞ்சள் அறைத்து கொடுத்தாயா? இல்ல நாத்துதான் நட்டாயா? (மனசுக்குள்..) இன்னைக்கு பார்த்த கட்டபொம்மன் படத்து வசனத்தை இங்கே பேசி காட்டியாச்சு. :-)))
அனானி: அட்மிஷன் கொடுத்தவரே யார் கொடுத்தான்னு கேட்டா என்ன சொல்ல.. நகருங்க.. கதவுல நின்னு ஒழுங்க டியூட்டி பாருங்க.. நான் உள்ளே போறேன். அடடே.. இந்த ரூம் நல்லா இருக்கே.. இனி இந்த ரூம் என்னது.. இங்கே உள்ள குப்பைகளையெல்லாம் எடுத்து வெளியே வீசிடு கூர்கா..
மை ஃபிரண்ட்: என்னது கூர்காவா? இது என்னுடைய அறை.. ஹேய் ஹேய் ஹேய்.. அதெல்லாம் எங்கே வீசுற?
அனானி: எத்தனை தடவை சொல்றது? கூர்கா கதவுகிட்டதான் நிக்கனும். போய் அங்கே நில்லு.. நான் கூப்பிடுற வரைக்கும் உள்ளே வர கூடாது..
மை ஃபிரண்ட்: அவ்வ்வ்வ்வ்....
அனானி: மக்களே, நான் யாருன்னு பார்க்குறீங்களா? நாந்தான் மாங்கனி... தமிழ் மாங்கனி.. உங்களையெல்லாம் இனி இம்சிக்க வந்த மாங்கனி. வணக்கம் வணக்கம் வணக்கம்
மை ஃபிரண்ட்: (அப்பாவியாக..) அவ்வ்வ்.. என்னை வச்சி காமெடி கீமடி பண்ணலையே???????
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 12:42 PM 20 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: அறிமுகம்
Saturday, May 10, 2008
நான் இப்போ காது கடிச்ச மைக் டைசன் ஊருல...
அனு : கரீபூ கரீபூ
மைப்ரெண்ட் : என்னது கருப்பு கருப்புதானா?
அனு : ஆகா வாடி அம்மா வா கரீபூனா நல்வரவுனு அர்த்தம்
மைப்ரெண்ட் : ஓ இது என்ன புதுசா இருக்கு
அனு : இதுதான்மா ஸ்வாகிலி மொழி
மைப்ரெண்ட் : (மனதுக்குள்) ஆரம்பிச்சுட்டாங்கப்பா அலம்பல
சரி சரி சொல்லுங்க ஊரு உலகம்லாம் எப்படி இருக்கு ?
அனு : ம் அதுக்கென்னம்மா அம்சமா இருக்கு நல்ல மண்வளம் மரம் செடி கொடி கடல் ஆடு மாடு மனுசங்க எல்லாம் நல்லா இருக்கு
மைப்ரெண்ட் : இது வரைக்கும் நல்லா இருக்குனு சொல்லுங்க
அனு : இதுக்கு பேருதான் கூட இருந்து குழி பறிக்கறதுனு சொல்லு வாங்க.
மைப்ரெண்ட் : தப்பா எடுத்துக்காதீங்க வாய் தவறி உண்மை வந்திடுச்சு
அனு : ஆகா இனி உன்னைய பேசவிட்டா நீ கவுத்திடுவ சரி சரி அபாரி சா காசி?
மைப்ரெண்ட் : என்னது ஆசாரி காசிக்கு போனாறா? அவரு எங்க போனா எனக்கு என்னங்க?
அனு : அய்யோ இது கூட தெரியலயா அபாரி சா காசினா உன் வேலை எல்லாம் எப்படியிருக்குனு கேட்டேன்.
மைப்ரெண்ட் : ம் என் வேலை எல்லாம் சரியாதான் போகுது புது ஊரு சுத்தி பார்த்தீங்களா?
அனு : ஓ அதெல்லாம் வாரா வாரம் டவுனுக்கு போவமே
மைப்ரெண்ட் : என்னது டவுனுக்கா அப்ப நீங்க எங்க இருக்கீங்க
அனு : நாங்க ஒரு பெரிய மல்ட் நேசனல் வில்லேஜ்ல இருக்கோமே
மைப்ரெண்ட் : அதென்னது மல்டி நேசனல் வில்லேஜ்
அனு : அது அப்டிதான் இப்டியெல்லாம் கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல
மைப்ரெண்ட் : சரி சரி விசயத்தை சொல்லுங்க உங்க ஊரு எப்படியிருக்கு
அனு ஊரு சூப்பரு ஊரு ஆனா என்ன தனியா எங்கயும் போக முடியாது. ஆசையா 10 வளையல் காதுல கம்மல் எதும் போட்டுட்டு போக முடியல
போட்டுட்டு போனா காதையே அறுத்து எடுத்துட்டு போயிடுவாங்க
மைப்ரெண்ட் : அய் அப்ப அவங்க காது கடிச்ச மைக் டைசன் பரம்பரை போல இருக்கு
அனு : ஆமாண்டி அம்மா அவங்களேதான்
மைப்ரெண்ட் : அப்ப சரி உங்க நகை நட்டெல்லாம் என்கிட்ட குடுத்து வையுங்க நான்பத்திரமா பாத்துக்கிறேன்.
அனு : ஆமா நீ நல்லா பார்ப்பியே தெரியுமே நீ பார்த்துக்கறது கல்யாணம்னு சங்கத்தை பார்த்துக்க சொன்னா திரும்பி வந்து பார்த்தா சங்கத்தையே காணோம்
எல்லாத்தையும் ப்ளாட் போட்டு வித்துட்டீங்களே
மைப்ரெண்ட் : இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னாங்க
அனு : அது ஒரு நல்லவரு சொன்னாரு அதுக்கென்ன இப்ப
மைப்ரெண்ட் : ஆகா அப்படியா சேதி அந்த நல்லவர நான் உண்டு இல்லைனு பண்றேன் பாருங்க
அனு : ஏன்
மைப்ரெண்ட் : ம் தூங்கிட்டு இருந்த பூனைய இப்படி எழுப்பி விட்டுட்டாரே இனி ஆ ஊ னா கத்த ஆரம்பிச்சுடுமே அதுக்குதான
அனு : அடி பாவி என்னைய கடைசில பூனைனு சொல்லிட்டயே?
எழுதியவர்,
அனுசுயா
பி.கு: அனுசுயா எழுதிட்டு அவங்க பதிவா போடுறதுக்குள்ள நெட்டு புட்டுக்குச்சாம். அதனால், .:: மை ஃபிரண்ட் ::. ஹெல்பிங். :-)
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 3:01 PM 11 சிரிப்பொலிகள்
Thursday, May 8, 2008
கஸ்டமர் சப்போர்ட் கஷ்டம்டா சாமி!!!!
கஸ்டமர்: ஹேல்லோ
HP கஸ்டமர் சர்வீஸ்: ஹேல்லோ, HP கஸ்டமர் சர்வீஸ்.
கஸ்டமர்: என் ப்ரீண்டர் வேலை செய்ய மாட்டேங்குது!!
HP கஸ்டமர் சர்வீஸ்: ப்ரீண்டர்ல ஏதாவது ப்ராப்ளம் இருக்கா? ஏதாவது எர்ரோர் காட்டுதா?
கஸ்டமர்: ம்ம்.. எலி மாட்டிக்கிச்சு
HP கஸ்டமர் சர்வீஸ்: எலி (Mouse)? எலிக்கும் பிரிண்டருக்கும் என்ன சம்பந்தம்?
கஸ்டமர்: சார், நான் என் ப்ரிண்டரோட படம் அனுப்புறேன். நீங்களே பார்த்து என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க.
யாருக்காவது எலியை எப்படி வெளியே எடுக்கணும்ன்னு தெரியுமா? இவருக்கு ஹெல்ப் பண்ணுங்கோ! :-)
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 1:26 PM 17 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: நகைச்சுவை
Sunday, May 4, 2008
ஆரிராரோ கண்ணுறங்கு!!
வ.வா.சங்கம் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்துல இருக்காங்க. போட்டி எல்லாம் அறிவிச்சி நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு ஆளாளுக்கு ரெண்டு ஜுரத்துல அலையுறாங்க. கொஞ்ச நாளா யாருக்கு பிங் பண்ணுனாலும் சும்மா இருங்க நான் வ.வா. சங்க போட்டிக்கு அத எழுதுறேன் இத எழுதுறேன்னு படம் காட்டுறாங்க. பாக்க சந்தோஷமா தான் இருக்கு. ஆனாலும் ஒரு வருத்தமுங்க. இந்த ப.பா.சங்கம் ன்னு ஒன்னு இருந்துச்சே அது இப்போ இருக்கா இல்லையான்னே தெரியலையே?
போன வருஷம் ஏப்ரல் மாதத்துல கற்பனை வெள்ளம் கரைபிரண்டு ஒடுனப்போ பாபாசங்கம் அறிமுகம் கண்டதா சொல்லுறாங்க.இன்னைய தேதிக்கு ஒரு வருஷம் முடிஞ்சி போச்சி.. இன்னமும் அந்த பக்கம் ஒரு சத்தத்தையும் காணல. சங்கம் அறிமுகம் கண்டப்போ இப்படி சொன்னாங்க.
பெண்ணென்றால் தாய்மை
பெண்ணென்றால் அன்பு
பெண்ணென்றால் பாசம்
பெண்ணென்றால் கருணை
பெண்ணென்றால் வீரமும் உண்டு
இப்போ பெண்ணென்றால் சங்கமும் அம்பேல்ன்னு சேர்த்துக்கணும் போலருக்கே. என்ன கொடும பாப்பாஸ் இது?
''ஐயேங்... நானு? நான் இந்த பல்லி.. கரப்பான் பூச்சி..எலி.. இந்த மாதிரி பயங்கர மிருகங்கள கண்டா கூட பயப்படவே மாட்டேன் தெரியுமா? பாம்ப கண்டா மட்டும் லேசா ஜெர்க் ஆகி ஓடிப் போய்டுவேன்.. மத்தபடி நான் சுடிதார் போட்ட ஜான்சி ராணியாக்கும்! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க ப்ளீஸ்! ''
என்ன பார்க்குறீங்க மேல உள்ளத பின்னூட்டமா போட்டு பாப்பாசங்கத்துல பி.ஆர்.ஒ வா சேர்ந்தாங்க கவிதாயனி. இவங்கதானே ஆண்டு விழா கொண்டாட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்யணும்? பாலைத்திணைல பதிவு போடுறதுக்கே இவங்களுக்கு இப்போ நேரம் கிடைக்கல போல.
சங்கத்தோட கண்காணிப்பு ஆலோசகரா இருந்த கண்மணி டீச்சர இப்பவெல்லாம் பதிவுகள் பக்கம் பார்க்கவே முடியுறதில்ல. சின்ன புள்ளைங்கள நம்பி வந்திருக்க கூடாதுன்னு தெரிஞ்சி ஒதுங்கிட்டாங்க போல. சங்கத்தோட தல அனுசுயா கல்யாணம் முடிஞ்சப்புறம் இங்க வர்றது இல்ல. பாவை பத்தியும் ஒண்ணும் தெரியல. இம்சை அரசி கல்யாண பிஸில இருக்காங்க. இனிமே அவங்களும் இங்க வருவாங்களானு தெரியல. மிச்சம் இருக்கிறது g3 யும் மை பிரண்டும் தான்.
பிரவாகமா அன்பு பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்ச பிறகு g3 க்கு எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்து போடவே நேரம் பத்தல. ஆக கடைசில மை பிரண்ட் தான் அப்பப்ப பதிவு போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்களும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு இப்ப தேன் கிண்ணத்துல பாட்டு போட்டு காலத்த ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.
பாப்பாசங்கத்துக்கு எதிர்காலம் ஏதும் இருக்கா? பதில் சொல்லுங்க பாப்பாஸ்?
இப்படிக்கு,
நிஜமா நல்லவன்
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 6:09 AM 31 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: நிஜமா நல்லவன்
Thursday, April 3, 2008
எல்லாமே இந்திய உணவுதான்
விஷயம் தெரியுமா உங்களுக்கு? காதை கொடுங்க.. எல்லா உணவும் இந்தியர்களிடமிருந்துதான் காப்பியடிக்கப்பட்டதாமே?
அட.. எல்லாம் உண்மைங்க.. நீங்க நம்பலைன்னா கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க.. நாம் சாப்பிடுற KFC, pizza, Mexican Paiia, Speggetti எல்லாமே நம்முடைய உணவுதான் என்று ஆதாரத்துடன் சொல்றார் இவர். ;-)
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 6:57 PM 7 சிரிப்பொலிகள்
Monday, March 24, 2008
எங்க தலைக்கு இன்னைக்கு கண்ணாளம்..
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
எங்கே பார்த்தாலும் இப்போது திருமண மயம்.
ஆனால், இன்று ஒரு ஸ்பெஷல் வி.ஐ.பிக்கு திருமணம்..
அது யாருங்கோ?
எங்க தலைவிங்கோ!
பெயர் என்னங்கோ!
அட அவங்க எங்க அனு.. அனுசுயாதானுங்கோ!
இந்த பதிவு எழுதிக்கொண்டிருக்கும்போது அவங்க திருமணமும் கோலாகலமாக சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.
பயமறியா பாவையர்ங்கிறதுனால எதுலேயும் துணிவுடன் செயல்படுவாங்க என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
மாப்பிள்ளையும் பொண்ணும் (A. சுந்தரம் - V அனுசுயா) எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ நாங்களும் நீங்களும் பிரார்த்திப்போமாக..
மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா - நல்ல
மருமகள் தான் வந்த நேரமடா
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 5:49 AM 19 சிரிப்பொலிகள்
Tuesday, February 26, 2008
இத்தனை காலமா "உண்மையா " உழைச்சுகிட்டுதான் இருக்கோம்
முதலாளி வேலைகேட்டு வந்தவரிடம்...
நீ நிறைய பொய் சொல்லுவியா..?
இல்ல சார்.. ஆனா கூடிய சீக்கிரம் கத்துகிட்டு உங்க நிறுவனத்தில் பெயர் எடுப்பேன்..
________________________________________
பின்னர் வேலை கிடைத்த அவரும் அவரது தாயும்..
ஏண்டா தம்பி.. பொய் சொல்ற ஆள் எதுக்கு அவங்களுக்கு தேவையாம்..?
தெரியலேம்மா.. இப்போதைக்கு எனக்கு சேல்ஸ்மேன் வேலை கொடுத்திருக்காங்க.. பிற்காலத்தில், பி.ஆர்.ஓ. ஆக ஆக்கறேன்னு சொல்லியிருக்காங்க..!
_________________________________________
வேறொரு இடத்தில்.. முதலாளி வேலைகேட்டு வந்த பெண்ணிடம்...
என்னம்மா நீ..? உன்கிட்ட என்ன திறமை இருக்குன்னா, நல்லா கூடை, ஸ்வெட்டர் எல்லாம் பின்னுவேன்னு சொல்றியே..? அதுக்கும் ஆபீஸ் வேலைக்கும் என்ன சம்பந்தம்..?
முன்ன வேலை செய்த இடங்களில் ஆபீஸ் நேரத்தில்தான் சார் அதெல்லாம் பின்னினேன்..!
__________________________________________நண்பர் : எவ்வளவு காலமா இந்த நிறுவனத்தில் உண்மையா உழைச்சுகிட்டு இருக்கே..?
மொக்கை : அந்த மேனேஜர் கடன்காரன் என்னை டிஸ்மிஸ் பண்ணப்போறேன்னு எப்போ மிரட்டினானோ... அப்போலேருந்து..!
__________________________________________
வங்கி மேலாளர், ஊழியரிடம்..
எங்கேய்யா அந்த கேஷியர் போய்த் தொலைஞ்சான்..?
சீட்டாட்ட கிளப்புக்கு போயிருக்கார் சார்..
வேலை நேரத்தில என்ன சீட்டாட்டம்.. ?
சீட்டாட்ட முடிவை வச்சுதான் அவர் வேலை நிலைக்குமா என்னான்னு தெரியுமாம் சார்..!
நன்றி: தமிழ் ஜோக்ஸ்
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 7:09 PM 5 சிரிப்பொலிகள்
Monday, February 11, 2008
தலைவலி மாத்திரைகள் இம்மாதம் அதிக விற்பனையாவதற்கு என்ன காரணம்?
எங்கள் நன்றியினை சிம்புவின் "காளை" படத்திற்கு அன்புக் காணிக்கையாக்குகிறோம்.
இப்படிக்கு
சாரிடான், மெட்டாசின், அனாசின், ஆக்ஷன் 500, நோவால்ஜின் கம்பெனிகள்.
****
பேராசிரியர் வணிகவியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
பேரா : ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு பைனான்ஸ் கிடைக்கும் இடங்களில் அதிமுக்கியமான ஒன்றைக் கூறு.
மாணவன் : மாமனார்..
****
குட்டிப்பையன் : அம்மா…உங்க தலையில எப்படி சில நரைமுடிகள் வந்துருக்கு?
அம்மா : நீ அதிகமா சேட்டை செய்யிறேயில்ல. நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.
பையன் : ஓ! அப்படியா.. பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
அம்மா : !!??
****
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். எவ்வளவு ஆச்சரியம்! இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.
****
நபர் : சிரிச்ச பழம் ஒண்ணு கொடுங்க
கடைக்காரர் : அப்படின்னா??
நபர் : அழுகாத பழம் தான் சிரிச்ச பழம்.
நன்றி: நிலாச்சாரல்
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 3:25 PM 9 சிரிப்பொலிகள்
Monday, January 21, 2008
பெண்கள் அழகு நிஜ அழகா? எப்பொழுது?
நான்: சுவாமி பெண்கள் எப்பொழுது மிகவும் அழகாக இருப்பார்கள்? அவர்களுக்கு இருப்பது நிஜமான அழகா?
சுவாமி: குழந்தாய் என்ன இது சின்ன பிள்ளை தனமாக கேள்வி உனக்கு எப்பொழுது அழகா தெரிகிறார்கள் சொல் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன்.
நான்: சுவாமி சில சமயம் தொட்டில் குழந்தையாக ஈஈஈ என்று பொக்கை வாய் காட்டி சிரிக்கும் பொழுது அழகாக தெரிகிறது.
சுவாமி: இல்லை, அப்பொழுது நீ கூட அழகாய்தான் இருந்து இருப்பாய்!!!
நான்: (இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்) நடக்க தெரியாமல் தத்தகா பித்தகா என்று நடக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மண் தரையில் சொப்பு சட்டிவைத்து மண் சோறு சமைத்து விளாயாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மாமா பச்சை ஓலை கட்டிய பிறகு புதிதாய் போட்ட தாவணியில் வெளியே வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: 12 வது படிக்கும் பட்டணத்து பெண் குட்டியோண்டு பாவாடை சட்டையில் புத்தக மூட்டை தூக்கி செல்லும் பொழுது?
சுவாமி: இல்லை
சுவாமி: இல்லை
நான்: தலை குளித்து நுனியில் ஒரு முடிச்சு போட்டு லேசான ஈரம் படர்ந்து கோவிலுக்கு வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: வெவ்வெவ்வே என்று பழிப்பு காட்டும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: விழி ஓரத்தில் கண்ணீரும் அதை மறைக்க உதட்டு ஓரத்தில் பொய் சிரிப்பும் சிரிக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் பட்டு சேலை சர சரக்க மாலை போட்டு மண கோலத்தில்?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் வயிறு பெருத்து முகம் பூரித்து நிறை மாத கர்பிணியாய் இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: குழந்தை பெற்று குழந்தையோடு குழந்தையாகி மூக்கோடு மூக்கு உரசி விளையாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: பொக்கை வாய் தெரிய சிரித்து தோல் சுருங்கி பாட்டியாக இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: சுவாமி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன் குழந்தை முதல் பாட்டிவரை எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் இதுக்கு மேல் ஒன்னும் சொல்ல முடியாது நீங்களே சொல்லிவிடுங்கள் குருவே!
சுவாமி: பெண் என்று வந்த பிறகு அவள் எப்பொழுதுமே அழகுதானாட! இப்பொழுது அப்பொழுது என்று எல்லாம் பிரித்து சொல்ல முடியாது! எப்பொழுதுமே அழகாய் தான் இருக்கிறாள் பெண் உன் பார்வை தானடா வித்தியாசபடுகிறது.
குறிப்பு: 1) இந்த பதிவை சுயநினைவோடும், யாருரைய மிரட்டலும் இல்லாமல் நானே எழுதியது.
2) அருகில் பா.பா சங்கத்து ஆட்கள் யாரும் இல்லை அவர்கள் கையில் கத்தி, தூக்கு கயிறு, விசம், கவிதாயினி கவிதை, அய்யனார் கவிதை தொகுப்பு புத்தகம் எல்லாம் வைத்து என்னை மிரட்டவில்லை நானே சொந்தமாக எழுதியது அவ்வ்வ்வ்வ்:(
சிரிக்க வைக்க முயற்சித்தது குசும்பன் at 10:05 AM 26 சிரிப்பொலிகள்