Tuesday, June 24, 2008

நான் அனைவரும் பொய் positive!

பொதுவா, நம்மளோட இரத்தம் குரூப் என்னவோ இருக்கும்- O+, A+, AB-..அப்படி இப்படின்னு ஏதாவது ஒன்னு இருக்கும். ஆனால், நாம் அனைவருக்குமே ஓரே இரத்த குரூப் தான். அதான், பொய் positive!

ஏன் சொல்றோம்னா,

சின்ன வயசுல- அம்மா, நிலாவ பாத்து "நிலா நிலா ஓடி வா'ன்னு பாட்டு சொல்லி கொடுத்தாங்க.

பாட்டி வந்து சோறு ஊட்டும்போது, "நிலாவுல ஒரு பாட்டி வடை சுடுறாங்கன்னு" சொன்னாங்க.

நம்ம தப்பு செஞ்ச தாத்தா சொன்னாங்க, "பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்."

இளம் பருவத்தில்- காதலர்கள், " என் உயிர் உன் கையில" என்பார்கள்.
"நீ இல்லாம நான் செத்துடுவேன்." என்பார்கள்.
"நீ ரொம்ப அழகா இருக்க" என்பார்கள்.

பலாப்பழத்தகூட கையில பிடிக்க பலம் இல்லாதவன், "அந்த நிலாவ தான் நான் கையில பிடிச்சேன்." என்பான்.

ஆரஞ்சுப்பழ மாதிரி ஒரு முகத்த வச்சிருக்கும் பொண்ணுகிட்ட போய், "ஆப்பிள் பெண்ணே நீயாரோ?" என்பான்.

கல்லூரி போகும் பருவத்தில்- இருக்கும் இரண்டு தாத்தா, இரண்டு பாட்டிகளை 1008 முறை கொன்று இருப்பான்/ள், லீவு லெட்டர் மேட்டரில்.
ஸ்பெஷ்ல் க்ளாஸ் என்று சொல்லிவிட்டு சினிமாவுக்கு போவோம்.

கல்யாணம் ஆனபிறகு- தேவையில்லாமல் ஒன்னு கேட்போம், "என்னைய உனக்கு பிடிச்சிருக்கா?"

அவனும்/அவளும் வேறு வழியின்றி, "ம்ம்" என்று தலையாட்டுவான்/ள்

தாத்தா, பாட்டி ஆன பிறகு- ஆறு அறிவு கொண்ட ஒரு சிறு பிள்ளையை போய், "வைரமே, தங்கமே, முத்துவே" என்று கொஞ்சுவோம்.

இப்படி சிறு வயது முதல் பெரியவர் ஆகும் வரை, நம்மை சுற்றி பொய்கள், நாம் கேட்பது பொய்கள். நாம் சொல்வது பொய்கள். ஆனால், இது எல்லாமே positive விஷயங்களுக்காக சொல்லும் பொய் என்பதால், நாம் அனைவரின் இரத்தமும் "பொய் positive".

ஒரு தாய் மக்கள் என்பதை ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ, நாம் அனைவரும் 'ஒரு பொய் மக்கள்' என்பதை ஒத்துகொண்டே ஆக வேண்டும்! ஹிஹிஹி...:))

8 Comments:

Anonymous said...

ஒரு தாய் மக்கள் என்பதை ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ,

aaang nalla sonna po.. namma jaathee enna.. avuka jaathee enna..

oru thaai makkalam la...anthala komattula kuthunamnaa..


நாம் அனைவரும் 'ஒரு பொய் மக்கள்' என்பதை ஒத்துகொண்டே ஆக வேண்டும்! ஹிஹிஹி...:))
no doubt..100%...

amma thaayee nalla kandupidippuma

good luck

Tech Shankar said...

Pin neeeteenga..supernga..ahaa kilambitaangayyaaa.. kilambitaanga

Tech Shankar said...

please enable COMMENT MODERATION to avoid ANONYMOUS spam comments.

மங்களூர் சிவா said...

/
ஒரு தாய் மக்கள் என்பதை ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ, நாம் அனைவரும் 'ஒரு பொய் மக்கள்' என்பதை ஒத்துகொண்டே ஆக வேண்டும்!
/

ரிப்பீட்டேஏஏஏஏஏய்

FunScribbler said...

@தமிழ்நெஞ்சம்,

//Pin neeeteenga..supernga..ahaa kilambitaangayyaaa.. kilambitaanga//

நன்றிங்க!:))

Karthik said...

//நீ ரொம்ப அழகா இருக்க" என்பார்கள்.

ஆமால்ல?!

(ஜெயம் ரவி 'சந்தோஷ் சுப்ரமண்யம்' படத்தில் சொல்வாரே அந்த மாதிரி படிக்கவும்)

Anonymous said...

hi friends..

jebamail.blogspot.com

this is my blog...

visit...

keep touch with me....

thank you...

கருணாகார்த்திகேயன் said...

தமிழ் நீங்க தொட்ட விசியம் ரொம்ப
ஆழமானது.. இன்னும் கொஞ்சம் கூட
சொல்லி இருக்கலாம்...
எனக்கு புடிச்ச விசியம் இது .. இந்த
பதிவை போலவே ..

அன்புடன்
கார்த்திகேயன்

 

BLOGKUT.COM