போன கும்மியில் கும்மு கும்முன்னு கும்மி பின்னி பெடலெடுத்துட்டாரு சச்சின் கோப்ஸ். அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு இந்த வாரத்தின் விவாத கும்மி என்னன்னு பார்ப்போம்.. வாங்க வாங்க..
பஸ்..
இதுல நாம ஏறுவது வாழ்க்கையில ஒரு பங்கு..
இது நம்ம மேலே ஏறுனா ஊதிடுவாங்க சங்கு..
வாழ்க்கையில ஏதாவது ஒரு சமயத்துலயாவது நாம பஸ்ஸுல ஏறியிருப்போம்.. சின்ன வயசுல நம்மளை நம்ம அம்மா அப்பா தூக்கிட்டு ஏறியிருப்பாங்க.. ஸ்கூல் படிக்கும்போது புத்தக மூட்டையை தோளில் சுமந்துட்டு தட்டு தடுமாறீ ஏறியிருப்போம். அப்புறம் காலேஜு படிக்கிறப்ப, அப்பா பைக் அல்லது கார் வாங்கி கொடுத்திருந்தாலும், அது ஒரு ஓரத்துல பார்க் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறியிருப்போம். வேலை செய்யுறப்போ கம்பேனி பஸ்ல ஏறின அனுபவமாவது இருந்திருக்கும். இல்லன்னா, டூர் போறதுக்காவது நண்பர்களோட பஸ் பிடிச்சுட்டு போயிருப்போம்.
பஸ்.. அல்லது பேருந்து.. இதில் ஏறுவதிலும் நன்மைஸ் கொடுமைஸ்ன்னு ரெண்டு இருக்கு, நன்மைன்னு பார்த்தா (எப்படி பார்க்கிறதுன்னு யாருப்பா அங்கே கேட்குறது?) இப்படி பஸ்ஸுலதான் பல காதல் கதைகள் ஆரம்பிச்சிருக்கு.. கண்டதும் காதல், இடிச்சதும் காதல், டிக்கெட் வாங்கி கொடுத்தவுடன் காதல், கீழே விழ இருந்தவளை தாங்கி பிடிச்சதும் காதல்ன்னு லிஸ்ட்டு பெருசாகிட்டே போகுது. ஆனால், கொஞ்சம் தப்பா ஹேண்டல் பண்ணியிருந்தீங்கன்னா இது கொடுமையா மாறி உங்களை "மாமியார்" வீட்டுல சேர்த்திருப்பாங்க. இல்லையா?
அடுத்து, பஸ் எல்லா சந்து புந்துலேயும் போகும். இங்கே ஆட்டோதான் எல்லா சந்து புந்துலேயும் போகும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனால், இங்கே நாம் காம்பேர் பண்றது ரயிலுடந்தான். ரயில் தண்டவாளத்து மேலேதான் போகும். ஆனால், பஸ் ரோட்டு மேலேயே போகும்! (என்ன தத்துவம் .::மை ஃபிரண்ட்::. ஆஹா! ஆஹா!) இதனால் என்ன சொல்ல வர்றேனா, நீங்க உங்க வீட்டு முன்னுக்கே நின்னு பஸ் ஏறலாம். இல்லைன்னா ஒரு பத்து அடி தள்ளி நடந்தீங்கன்னா ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும். வீதிக்கு வீதி இப்போ பஸ் ஸ்டாப் இருக்கே! ஆனா, இதுல என்ன கொடுமைன்னா எந்த பஸ்ஸும் ப்ஸ்ஸும் பஸ் ஸ்டாப்ல நிக்குறதே இல்ல!
இப்போ நாம பஸ்ஸோடு ஒப்பிட போவது ட்ரேயினைத்தான்.
வண்டி வண்டி ரயிலு வண்டி!
இந்த வண்டியில ஏறியிருக்கீங்களா ஆண்டி..
தண்டவாளத்துல ட்ராபிக் ஜேம் இல்ல. ஓடுது ஓடுது ரயிலு! அந்த ரயிலுக்கு முன்ன இல்ல இன்னொரு முயலு! சாரி ரயிலு! சோ, (நாகேஷை எல்லாம் கூப்பிட முடியாது! ஆன்லி சோ) ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்னு ஆபிஸ்ல நீங்க சாக்கு சொல்றதுக்கு சான்சே இல்ல.. சொன்ன டைமுக்கு ரயிலு ஸ்டேஷன்ல நிக்கும்.. அதைவிட முக்கியமான பாய்ண்ட் என்னன்னா, ட்ரேயின், ட்ரேயின் ஸ்டேஷன்லதான் நிக்கும்.. ஆனா பஸ், ப்ஸ் ஸ்டேஷன்ல நிக்குமா? இதுல பஸ் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு எப்போ வரும் எப்படி வரும்ன்னு தெரியாது! ஆன வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வராதுன்னு சொல்வாங்க.. அதானே!
இப்படி நிறைய.. ரொம்ப நிறைய சொல்லிட்டே போகலாம். மத்த பாய்ண்ட்டுகளை நீங்களே கொஞ்சம் அள்ளி தெளிச்சு, விளக்கமா கும்மி.. உங்க வோட்டு ட்ரேயினுக்கே! பஸ்ஸுக்கே!ன்னு சொல்லி ஓட்டு குத்திட்டு போங்கப்பா!


