Friday, November 21, 2008

மீட்பு நடவடிக்கை

அந்த அலுவலகம் ஒரே களேபரமாய் இருந்தது.

ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தனர்.

ஊழியர்கள் கவலையுடன் காணப்பட்டனர்.

சத்தமாக கூச்சலிட்டு விவாதித்தனர்.

யாரும் வேலை செய்யவில்லை.இருக்கையை விட்டு வந்து ஆலோசனை செய்தனர்.

அவசரக் கூட்டம் போட்டு அதிரடி முடிவெடுக்க ஏற்பாடானது

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் பயத்துடன் இருக்கையிலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்பி மெதுவாக ஒரு உயர் அதிகாரியிடம் கேட்டனர்.

'என்ன ப்ராப்ளம் சார்?'

'நம்ம எம்.டி யை ஒரு கடத்தல் கும்பல் கடத்திப் போய் விட்டது.எப்படி மீட்பது என ஆலோசிக்கிறோம்'

'ஏன் கடத்தினார்கள்.என்ன வேண்டுமாம்?'

'ஒரு கோடி ரூபாய் கேக்கிறாங்க தாவிட்டால் எம்.டியை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க '

'ஓ..அப்படியா? எதுவாக இருந்தாலும் நாங்களும் ஒத்துழைக்கிறோம்.எங்க பங்களிப்பு எவ்வளவு ன்னு சொல்லுங்க'

'அதிகமில்லை ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுப்பது என முடிவு செய்தாச்சு'


'எவ்வளவு?'

' ஒரு லிட்டர் பெட்ரோல்'

Monday, October 1, 2007

இவர்கள் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்கள்...?

பபாச கொஞ்ச நாளா சொந்த வேலை காரணமா பிஸியா இருக்க மக்கள்ஸ் சங்கம் அம்பேல்னு சவுண்டு உட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பப்ப அதிரடியா வந்து தாக்குவோம்ல

சங்கத் தலைவி அனுசுயா உடனே ஏதாச்சும் செய்யனும்னு சொல்ல இன்ஸ்டண்ட்டா செய்யனும்னா சினிமா நியூஸ்தான் சரி வரும்னு நம்ம பேவரிட் நடிகர் நடிகைகளை ஒரு பேட்டி எடுத்தோம்.
பொதுவா நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருப்பீங்கன்னா கலெக்டர்,டாக்டர்னு பீலா உடுவாங்க.இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க.

விஜயகாந்த்: நடிக்க வரலைன்னா நான் என்ன செஞ்சிகிட்டிருப்பேன்னு தமிழ் நாட்டுல எந்த பச்சப் புள்ளையக் கேட்டாக் கூட சொல்லும்.
தமிழ்நாட்டுல எத்தனை கிராமம் இருக்கு அங்க எத்தனை குழந்தங்க இருக்காங்க இன்னும் எத்தனை குழந்தைங்க புதுசா பொறக்கப் போகுதுங்க அதுல எத்தனை பேர் என்னோட தே.மு.தி.க கட்சிக்கு ஆதரவா இருக்காங்க எத்தனை பேர் ஓட்டு போட்டு 2020 க்குள்ள என்னை முதல்வரா போறாங்கன்னு புள்ளி விபரம் எடுக்கும் ஆபிஸரா போயிருப்பேன்.

ராமராஜன்: ஏம்மா தாய்க்குலமே உனக்குத் தெரியாதா?நீல கலர் டவுசரும் தலையில ஒரு முண்டாசும் கட்டிகிட்டு வீடு வீடா போயி மாடு இருக்கான்னு பார்த்து பாடிக் கிட்டே பால் கறந்துகிட்டு இருப்பேன்.என் அரை டவுசர் பாக்கெட்டுல எப்போதும் ஒரு சின்ன டேப்ரிக்கார்டர்ல 'செண்பகமே....செண்பகமே....பதிவு பண்ணி வச்சிருக்கேன்ல

விக்ரம்: நானா...ம்ம்ம்....தெனமும் காலையில ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரத்துல குருடன் மாதிரி முழிய மாத்திகிட்டு 'புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே...ன்னு பாடுவேன்.
மத்தியானம் சுடுகாட்டு பக்கம் போயி எரியற பொணத்துக்கு முன்னாடி ஒக்காந்து காவிப் பல்லைக் காட்டிகிட்டு ,'ஆஹ் பாஅவிபஈஇவூ...ஆஆப்ம் ஆஆஆஆஅவ்வாஅர்ர்ரூ ஆஆஅ ன்னு பாடுவேன்.
ராத்திரி நேரத்துல தலை முடியை விரிச்சி மூஞ்சி மேல போட்டுக்கிட்டு தெரு முக்குல இருக்குற புரோட்டா கடைக்கு போயி கடன் குடுக்க மாட்டியா எனக்கு நான் அந்நியண்டா .உனக்கு கருடா புராணத்துல இந்த தண்டனைதான்னு சொல்லிட்டு புரோட்டா மாஸ்டரை கைமா பண்ணுவேன்

தங்கர் பச்சான்:ஆஹா நான் தமிழன்
'ஒன்பது மணிக்கு ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடாம்டா நாலரை மணிக்கு நாலரை மணிக்கு வீடு திரும்புடா'
ன்னு சொல்லி எல்லாப் பசங்களையும் பள்ளிக்கூடம் அழைச்சிப் போவேன்.
ஆங்.அழகி ங்களுக்கு முன்னுரிமை..நான் சொல்லமறந்த கதை ஒன்னு இருக்கு.என் படத்துல ஆங்கில கலப்பே இருக்காது
'ரோஸ் மேரி.....நீ என் ஜூஸ் மாரி..ஏனுங்க இது நம்ம படத்துபாட்டுதானுங்க.

ஜோதிகா: ஹாய் ...நான் ஹோல்சேல் டீலராயிருந்திருப்பேன்.அட நம்ம இதயம் நல்லெண்ணைக்குத் தாங்க.என்ன ஒன்னு விக்கிறத விட நான் இட்லிக்கு ஊத்திக்கிறதுதான் கொஞ்சம் அதிகமாயிருக்கும்

ஸ்நேகா:சரவணா ஸ்டோர்ஸில் நல்ல சேல்ஸ் கேர்ளா சேர்ந்திருப்பேன்.அப்பத்தான் அவங்க கடை துணிகள்,நகைகள் எல்லாத்துக்கும் மாடலா பர்மணெண்டா இருக்க முடியும்.[இந்த ஸ்ரேயா வேற போட்டியா கெளம்பிடுச்சி இல்ல]

திரிஷா:நிச்சயமா நான் பொறுக்கி கிட்டு இருந்திருப்பேன்.அதாங்க ஃபாண்டா பாட்டிலு மூடிங்க
நூறு மூடி பொறுக்கிக் குடுத்தா ஒரு பாட்டில் இலவசமா குடிக்கலாமில்லை?ஸ்கூல் டேஸ்ல இருந்தே இதுல நல்ல டிரெய்னிங் இருக்கு.

தேவயானி: இப்ப செய்யறதான் அப்பவும் செஞ்சிகிட்டு இருப்பேன்.மெகா சீரியல்ல நடிச்சிகிட்டே இருந்திருப்பேன்.
எப்படியும் என் மகள் இனியா பெரிய பொண்ணாயிட்டு வந்து என் ரோலை செய்யறவரைக்கும் கதையை இழுத்துக்கிட்டே......போயி அப்பால அவ நடிப்பா..
[ம்ம் இன்னும் ஒன்னு முடிந்தவரை எல்லா சீன்லேயும் அது வீடானாலும்,ஆபிஸ்னாலும் இல்லை ஹாஸ்பிடல்ல ஐ.சி யூனிட்னாலும் நான் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கிட்டேதான் இருப்பேன்.]



இந்த மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......

Friday, July 20, 2007

ப.பா.ச விலிருந்து கண்மணி வெளி நடப்பு

வர்ர வர்ர இந்த சிறுசுங்களுக்கு வயசானவங்கன்னு
ஒரு மரியாதையே இல்லீங்க.x(

அப்படி என்ன நமக்கு பல்லெல்லாம் கொடிப் போயி
'குடுகுடு' வயசா ஆயிடுச்சி.>:)

ஏதோ வயசான ஆயா மாதிரி நம்மள கலந்துக்காம இதுகளா லூட்டி அடிக்கிதுகள்.

பெரியவங்க அனுபவசாலின்னு ஒரு பயம் வேண்டாம்
சாட்டுன்னா இதுகளே பேசிக்கிறது.நம்மள இன்வைட் பண்ரதில்ல.
பதிவு போட்டாலும் இதுக இஷ்டம்தான்.நம்ம கேக்கறதில்ல.

இதுங்க லூட்டிக்கெல்லாம் ஈடு கொடுக்க நாம என்ன வாலிபமா?இல்லை வெவரம் இல்லாதவங்களா?

சங்க நடவடிக்கை ஒன்னும் நம்மகிட்ட சொல்றது இல்லை.சங்கம் இருக்கான்னு தெரியலை.
அது அது தானா பதிவு போட்டுக்கிதுங்க போலும்.

டீம்ல இருந்தாலும் நாம சும்மா பேருக்குத்தான்.ஏதோ வயசானவளாச்சே ஒரு பாடிகார்டு மாதிரி இருப்பமின்னு நெனச்சுத்தான் ஒப்புக்கிட்டேன்.

வயசானா என்னங்க நமக்கு இல்லாத ஒலக அனுபவமா?இல்ல நாம அடிக்காத லூட்டியா?
அத இத பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.

எளசுங்களுக்கு சமமா நம்ம லூட்டியடிக்க முடியுமா ?நாம அந்த காலத்து சாவித்திரி சரோஜா தேவி ரேஞ்சு.
இதுக இந்தக்கால அசின் திரிஷா ரேஞ்சு ன்னு ஒதுங்கியிருந்தா ஒரேயடியா நம்மள கழட்டி விட்டுடிச்சிங்க போலும்.

அக்கா எங்கிருக்கீங்க என்ன பண்றீங்க உங்க பதிவு இல்லாம புள்ளைங்க ஏங்கிப் போயிட்டம்னு கொஞ்சமாச்சும் ஒரு அக்கறை வேணாம்.

இருக்கிற வேலைய வுட்டுட்டு காலேஜு கடலைன்னு இதுக மாதிரி நாம பதிவு போட்டுகிட்டிருக்க முடியுமா?

நாம பாக்காத காலேஜா போடாத கடலையா?அத்த ஒரு பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.;)

பாய் ஃபிரண்ட் வேனுமா வேணாமன்னு கேக்குதுங்க.

பாயைப் பிராண்டற வயசுலா நாம பாய்பிரண்டு பத்தி பேச முடியுமா?
என்னயிது சின்னப் புள்ளைத்தனமாயிருக்கு.:-/

சின்னப் புள்ளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்.அனுபவிக்கிற வயசு.
பிரியாமணி அதான் நம்ம பருத்திவீரன் 'முத்தழகு' ஒரு பேட்டியில சொன்ன மாதிரி

இந்த நாள் இந்த நிமிடம் இந்த வயசு ன்னு
வாழ்க்கையை அனுபவிக்கனும்.
=D>

அதுக்காக ஒரு வயசு வரைமுறை வேனாம்?நம்மள கேட்டா இப்படி செய்யுதுங்க ச்சே...
வெறுத்துப் போச்சுங்க அதான் வெளியப்போலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

வயசுக்கும் மரியாதை இல்லை.

நம்மள ஏதோ ஓல்டு மாங்க்னு நெனைக்கிறவங்க கூட எப்படி காலம் தள்ள முடியும்.

அதான் வெளி நடக்கலாம்னு முடிவு செஞ்சேன்...செஞ்சிட்டேன்.

ஆமா நான் என்ன சொல்ல வர்ரேன்னு கேக்கறீங்களா?

யாரைப் பத்தி சொல்றேன்னு குழம்புதா?:-/

சங்கத்தை விட்டு வெளியே கொஞ்சம் காத்தாடப் போறத்தான் வெளி நடப்புன்னேன்.
நீங்க என்ன ஆஹா....பூசல் வெடிச்சிடுச்சின்னு பாத்தியளா

கெளம்பிட்டாய்ங்கய்ய்யா.......கெளம்பிட்டாய்ய்ங்க...:((

இதுக கூட்டணியே வேண்டாம்னு ஒதுங்கிக்கிறேன்.வர்ட்ட்டா

இப்ப நான் என்ன சொல்ல நெனச்சேன் ?

என்ன சொல்லிக்கிட்டிருக்கேன்?

யாருக்குத் தெரியும்?

ஏதோ 'மொக்கை' போடுன்னாங்க போட்டுட்டேன்.
கெலிச்சா அப்பாலிக்கா சொல்லியனுப்பறேன்.

சரி .... சரி ரொம்ப வழியுது மூஞ்சத் தொடச்சிக்கோ ராசா =))

வர்ட்டா.....:-h

 

BLOGKUT.COM