Friday, November 21, 2008

மீட்பு நடவடிக்கை

அந்த அலுவலகம் ஒரே களேபரமாய் இருந்தது.

ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தனர்.

ஊழியர்கள் கவலையுடன் காணப்பட்டனர்.

சத்தமாக கூச்சலிட்டு விவாதித்தனர்.

யாரும் வேலை செய்யவில்லை.இருக்கையை விட்டு வந்து ஆலோசனை செய்தனர்.

அவசரக் கூட்டம் போட்டு அதிரடி முடிவெடுக்க ஏற்பாடானது

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் பயத்துடன் இருக்கையிலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்பி மெதுவாக ஒரு உயர் அதிகாரியிடம் கேட்டனர்.

'என்ன ப்ராப்ளம் சார்?'

'நம்ம எம்.டி யை ஒரு கடத்தல் கும்பல் கடத்திப் போய் விட்டது.எப்படி மீட்பது என ஆலோசிக்கிறோம்'

'ஏன் கடத்தினார்கள்.என்ன வேண்டுமாம்?'

'ஒரு கோடி ரூபாய் கேக்கிறாங்க தாவிட்டால் எம்.டியை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க '

'ஓ..அப்படியா? எதுவாக இருந்தாலும் நாங்களும் ஒத்துழைக்கிறோம்.எங்க பங்களிப்பு எவ்வளவு ன்னு சொல்லுங்க'

'அதிகமில்லை ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுப்பது என முடிவு செய்தாச்சு'


'எவ்வளவு?'

' ஒரு லிட்டர் பெட்ரோல்'

4 Comments:

said...

நல்ல தமாசான மொக்கைதான்.
உண்மையா இப்படி நடந்தாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை!
சமிபத்தில் அமெரிக்காவில் நடந்ததை டிவி-ல சொன்னாங்க: ஒரு எக்ஸ்-எம்ப்ளாயீ அவனுடைய பாஸ்-ஐ மர்டர் பண்ணிட்டானாம்! (அந்த CEO இந்தியாகாரர் என்பது வேற விஷயம்!)

said...

:))))))

said...

:)))))

said...

:)))

 

BLOGKUT.COM