Friday, January 2, 2009

நீங்க பார்த்தா ‘சைட் அடிக்குறீங்க’, நாங்க பார்த்தா ‘just looking'

இரண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் என் பள்ளி நண்பர்கள் ,10 பேரும் கடற்கரைக்கு போனோம். ஒரு மெகா pinic! சாப்பாடு,plastic தட்டுகள், mats, கூல் டிரிங்ஸ்- இப்படி ஆளுக்கு ஒன்னு கொண்டு வந்தோம். ஆனா முக்கியமா எல்லாருமே கொண்டு போனது cooling glasses. வெயில் அடிக்குதோ இல்லையோ எல்லாரும் அத மாட்டிகிட்டோம்.

தோழன்: இத போட்டா, எவ்வளவு வசதி தெரியுமா?

தோழி: ஆமா ஆமா...அப்ப தானே வர போற பொண்ணுங்கள சைட் அடிக்க முடியும்.

தோழன்: நீங்க மட்டும் எதுக்கு போடுறீங்களாம்...நல்ல வெள்ளையா ஒரு வெள்ளக்காரன் வந்தா போதுமே...எல்லாம் ஜொல்லு விட்டுகிட்டு இருப்பீங்களே....

அப்போது ஒரு வெள்ளைக்காரன் நாய்க்குட்டியோடு ஜாக்கிங் சென்றார். 6-பெக் வேற.

தோழன்: ஏய் ஏய்....பொண்ணுங்களா...இந்தாங்க டிஷு பேப்பர். வாய துடைச்சுக்குங்கோ....ஜொல்லு வழியுது.

தோழி: ஹேய் தோஸ்த், shut up ya. நாங்க just looking.

தோழன்: ஏய் இங்க பாருங்கடா, நாங்க செஞ்ச அத சைட் அடிக்குறது...நீங்க பண்ண அதுக்கு வேற பெயரு...என்னங்கடி நியாயம் இது.

ஒருத்தி மட்டும் அந்த வெள்ளைக்காரனையே பார்த்து கொண்டிருந்தாள்.

நான்: ஏய், விடு விடு... அவரு போய் அரை மணி நேரம் ஆச்சு.

அவள்: நான் ஒன்னும் அவர பாக்கல்ல.... நாய்க்குட்டிய...
(என்று முடிப்பதற்கு)

நான்: அட பாவி.... என்னது? மனதிர்களை தாண்டி, நாய்க்குட்டியையும் சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டீயா!

தோழர்கள்: மனிதர்கள் புரிந்த கொள்ள இது சாதாரண ‘just looking' அல்ல...அதையும் தாண்டி புனிதமானது! புனிதமானது!

அவள்: கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா....look at that puppy. so cute... guys are total waste. i have lost hope on them.

நான்: ஏய் என்ன ஆச்சு உனக்கு?

இன்னொரு தோழி: ஓ...அவ லவ் failureனால இப்படி பேசுறா...

மறுபடியும் அவள்: அப்படி ஒன்னுமில்ல....basically guys are...Eeeeeeeeee....

நான்: இல்ல மேன். நீ தப்பா புரிஞ்சுகிட்ட.... எல்லாம் ஆண்கள்கிட்டயும் ஒரு speciality இருக்கு. அத நம்ம தான் புரிஞ்சிக்க முயற்சி பண்ணனும்.

அனைத்து தோழிகளும்: ஏய் என்ன சொல்ல வர?

தோழர்களும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர்.

நான் தொடங்கினேன்.

இங்க பாருங்க. பசங்கள 5 வகையா பிரிக்கலாம்- cute, hot,good looking, handsome, attractive.

cute- இவங்க பேரழகர் என்று சொல்ல முடியாது. ஆனால் சுமார் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்கள். எப்படி ஒரு குழந்தை படத்தை நாம் ரசித்து பார்ப்போமோ அப்படி தான் இவர்களும். for example, கண்ணாடி போட்டு இருப்பாங்க. அந்த கண்ணாடி போடும் விதமும் ஒரு ஸ்டையலா இருக்கும். எப்போதுமே வேலை வேலையின்னு இருப்பாங்க. சில விசித்திரமான குணங்கள் இருக்கும்-for example, crossword puzzle போட பிடிக்கும்.

hot- சல்மான் கான், ஷாருக் கான், விவேக் ஓப்ராய், அமீர் கான், சூர்யா, விஷால், மாதவன், வினேய்....இவர்கள் போன்றவர்கள் hot. பார்த்தவுடனே பெண்கள் வாவ் என்று சொல்லும் ரகம். படங்களில், உடற்பயிற்சி நிலையங்களில் மட்டுமே காண முடியும். அந்த நிமிடத்திற்கு பார்க்க தோன்றும். ஆனால், நாளடைவில் அவர்கள் மேல் இருக்கும் மோகம் குறைந்துவிடும். இப்போ, இன்னிக்கு எனக்கு அமீர் கான பிடிக்கும். நாளைக்கு இன்னொரு ஆள பிடிக்கும். சோ....இப்படிப்பட்டவர்கள் ரொம்ப ரொம்ப temporary.

handsome-இவர்கள் தான் நம்ம பக்கத்துவீட்டுல, பக்கத்து தெருவுல, காலேஜ்ல, பஸ் ஸ்டாப்ல, அத்தை பையன், மாமா பையன்...இந்த ரகத்தை சேர்ந்தவர்கள். இயல்பான நமது வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க நேரிடும் நபர்கள். மனசுக்கும் சரி கண்ணுக்கும் சரி ரொம்ப பிடிச்சிருக்கும்.

(இடையில் தோழி கேட்டாள்...handsome, good-looking ஒன்னு தானே...அதுக்கு ஏன் இரண்டு category..)

நான்,

இது ஒரு நல்ல கேள்வி. அதாவது கண்ணுகளா.... handsome, good-looking இடையே ஒரு சின்ன வித்தியாசம். பார்த்தவுடனே handsome என்று வாயில் வந்துவிடும். ஆனால், ஒருத்தர் good-looking என்று உடனே சொல்ல வராது. பழகி, பேசி அவங்கள புரிஞ்சிகிட்டு, அவங்க குறைகளையும் ஏத்துக்கும்போது தான் good-looking என்று மனசு சொல்லும். ஆக, மூளை மட்டும் சொன்னால் அது 'handsome' மனசும் சேர்த்து சொன்னா அவர் 'good-looking' வகையை சேர்ந்தவர்.

கடைசியா attractive- இந்த வகையை சேர்ந்தவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஆண்களின் ஸ்பெஷல் என்னவென்றால் அவர்களின் mannerisms. இப்போ உதாரணத்திற்கு கௌதம் மேனன் தெரியுமா....

தோழி: ஓ...that வாரணம் ஆயிரம் இயக்குனர்...

நான்: அவரே தான். அவர் இந்த attractive வகையை சேர்ந்தவர். அவர் காதோரம் நரைத்திருக்கும். அவர் கைஅசைத்து பேசும்விதம். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும்விதம். அடிக்கடி சட்டையை முன்னாடி இழுத்து கொள்ளும் mannerism. இப்படி physical features தாண்டி ஒரு அழகு தெரியும். அது தான் attractiveness... ஸ்டிபன் தேவசி தெரியுமா... அந்த keyboard player... அவர் வாசிக்கும்போது அவர் விரல் இசை பேசும். அவரும் இந்த வகையை சேர்ந்தவர் தான்!

தோழி: எப்படி இப்படி!!!

நான்: ஆராய்ச்சி செஞ்சிருக்கோம்ல.

தோழர்கள்: அப்போ நான் எந்த வகையை சேர்ந்தவன்?

நான்: சாரி...இன்னிக்கு கிளாஸ் அவ்வளவு தான். ஹாஹா...

சோகமாக பேசிய தோழியிடம் சென்று

“ஏய் cheer up. உலகத்துல உள்ள எல்லா ஆண்களும் ஏதோ ஒரு வகையில அழகு தான். don't worry babe!"

தொடங்கினோம்....சைட் அடிக்க இல்லேங்க...சாப்பிட!:)

8 Comments:

said...

//cute- இவங்க பேரழகர் என்று சொல்ல முடியாது. ஆனால் சுமார் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்கள். எப்படி ஒரு குழந்தை படத்தை நாம் ரசித்து பார்ப்போமோ அப்படி தான் இவர்களும். for example, கண்ணாடி போட்டு இருப்பாங்க. அந்த கண்ணாடி போடும் விதமும் ஒரு ஸ்டையலா இருக்கும். எப்போதுமே வேலை வேலையின்னு இருப்பாங்க. சில விசித்திரமான குணங்கள் இருக்கும்-for example, crossword puzzle போட பிடிக்கும்.
//

ரைட்டேய்!

said...

/
சிரிக்க வைக்க முயற்சித்தது Thamizhmaangani
/

சரி ரைட்டு!

said...

மூளை மட்டும் சொன்னால் அது 'handsome' மனசும் சேர்த்து சொன்னா அவர் 'good-looking' வகையை சேர்ந்தவர்.///

நல்ல ஆராய்ச்சி. தொடர்ந்து வேலை செய்ங்க கண்ணுகளா!!
தேவா...........

said...

அட்ரா சக்கை.....
அட்ரா சக்கை.....
அட்ரா சக்கை.....
அட்ரா சக்கை.....
அட்ரா சக்கை.....

கலக்குறே டமிழு.... என்னா ஒரு ஆராய்ச்சி... என்னா ஒரு அறிக்கை...
பின்னிட்டே போ... :))))))

said...

சிரிக்க முயன்றது குகு, ஆனா லேட்டாச்சு தூக்கம் வருது.

said...

@ஜொள்ளுப்பாண்டி,

//கலக்குறே டமிழு.... என்னா ஒரு ஆராய்ச்சி... என்னா ஒரு அறிக்கை...
பின்னிட்டே போ... :))))))//

நன்றி! ஏதோ என்னால முடிந்தது!
:)

said...

very informative post. shall i forward it to my friends?
:)

said...

இங்க பாருங்க. பசங்கள 5 வகையா பிரிக்கலாம்- cute, hot,good looking, handsome, attractive.

:))))))))))

 

BLOGKUT.COM