Tuesday, January 13, 2009

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

சிலம்பாட்டத்தில் சிலம்பரசன் ஆடிய ஆட்டத்தை இனி வரும் 7 ஜென்மங்களிலும் மறக்க முடியாது. நான் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது "சிம்புக்கு மட்டும் தான் இப்படி ஆட தெரியுமா?" ஏன் நம்மளும் ஆடலாமேன்னு என் மனதில் தோன்றியது. சிலம்பரசன் ஆடும் சிலம்பாட்டத்தை ரசிக்க முடிந்ததோ இல்லையோ, இனி வர போகும்
வலைப்பூவரசன்/வலைப்பூவரசி ஆடும் வலைப்பூஆட்டத்தை பாருங்கோ....

நம்மில் எத்தனையோ பேருக்கு எழுத்து திறமை இருக்கும் ஆனால் ஆடல் திறமை இருக்கிறதோ இல்லையோ என்று நிறைய வலைப்பூ எழுத்தாளர்கள் யோசித்து இருப்பாங்க....

ஆக, இன்று நாம் ஆடும் திறனை வளர்த்து கொண்டு சிலம்பரசனையும் தாண்டி வேற ஒரு லெவலுக்கு கொண்டு போக போறேன் உங்களை. சிறப்பா செய்ய போறோம் ஜி!

முதலில் குரு நமஸ்காரம். ஒரு கண்ணில் சிம்புவையும் மறுகண்ணில் விஜயையும் நினைத்து கொண்டு மூன்று முறை எச்சி துப்புங்கோ. அது தான் குரு நமஸ்காரம்.

இனி நம்ம ஆட போகும் ஸ்டெப் ரொம்ப கஷ்டம். அதனால, உங்க கணினவிட்டு கொஞ்ச தள்ளி நில்லுங்க. ஆபிஸுல இருந்தா, பக்கத்தில் வேலை செய்யும் நண்பர்களை அழைத்து கொண்டு ஆடலாம். வீட்டில் இருந்தா, பாட்டி, தாத்தா இப்படி யாரேனும் கம்பெனிக்கு கூப்பிடலாம்.

ஒகே....ரெடி....

என்னது? இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களா? அட...உட்கார்ந்துகிட்டே எப்படிங்க ஆடுறது... நான் உங்கள சிம்பு, விஜய் அளவுக்கு கொண்டு போக பாக்குறேன்..நீங்க இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களே...

சரி எழுந்து நில்லுங்க.

1,2,3,4
தொடையில் இரண்டு தடவ அடிக்கனும்.

5,6,7,8
தலையில் இரண்டு தடவ அடிக்கனும்.

1,2,3,4
கீழே உட்காரனும். பந்தியில் இலை சாப்பாடு போட்டு இருக்கும்போது நாம் உட்கார்ந்து கொள்வோமே, அந்த மாதிரி உட்காரனும். சாப்பிடுவதுபோல பாவனை செய்யனும்.

5,6,7,8
டக்குனு மேல எழுந்திருச்சு வலது பக்கத்துக்கு குதிக்கனும்.

இது தான் ஸ்டெப். இதையே 4 முறை செய்தால்...கிட்டதட்ட... இப்படி ஆடிவிடலாம்.

0 Comments:

 

BLOGKUT.COM