Thursday, June 4, 2009

புது பொண்ணுக்கு வாழ்த்து சொல்லலாம், வாங்க!!

'மை ஃபிரண்ட்' அனுவுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. பல காலமாக வலைப்பூ உலகில் கொடி கட்டி பறக்கும் ஒருத்தர் தான் நம்ம அனு அக்கா! இமெயிலில் செய்தி வந்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு! இந்த ப.பா சங்கத்திற்கு என்னை உறுப்பினர் ஆக்கியதே இவர் தான். பல வகையில் ஊக்கவித்து உள்ளார்.(hairpin, band எல்லாமுமே வித்துவுள்ளார்.)

அனு அக்காவுக்கு வாழ்த்துகள்!!!

அக்கா தற்போது ரொம்ப பிஸியா இருப்பாங்கோ!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அழைப்பிதழை பார்த்தபோது, அக்காவிடம்

"என்னக்கா என்கிட்ட சொல்லவே இல்ல.... அதுக்குள்ள கல்யாணமா?"

அக்கா: "ஓய்..சரியா பாரு... அது கல்யாணம் invitation இல்ல...வெறும் நிச்சயதார்த்தம் தான்...கல்யாணம் அடுத்த வருஷம்."

நான்: "ஓ... ஐ சி.. ஐ சி... மாமா பெயரு நல்லா இருக்கே!"

ஆமாங்கோ அக்காவை கைப்பிடிக்க போற அந்த கொடுத்தவைத்தவரின் பெயர் விஜய்!(முழுபெயர் விஜயகுமார்) இவர்களுக்காக ஒரு சூப்பர் பாட்டு dedicate பண்ணுறேன்...

Thursday, April 30, 2009

முப்பெரும் விழா

"டாக்டர்! இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப்போற அந்த பேஷண்டுக்கு கல்யாண நாள், பிறந்தநாள் இரண்டுமே இன்னைக்குத்தானாம்!"

"அடுத்த வருஷம் முப்பெரும் நாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க!"

-----------------------------------------------

நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்"

"ஏன்..?"

"அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."

-----------------------------------------------

"மாப்பிள்ளை ரொம்பக் கறுப்போ?"

"ஏன்?"

"வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ் அனுப்பி வெச்சிருக்காரே!"

------------------------------------------------

"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா... சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"

" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"

------------------------------------------------

"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு?"

"நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்!"

நன்றி: தமிழ் ஜோக்ஸ்

Friday, April 10, 2009

காக்க காக்க ரீமேக்

படங்களை ரீமேக் செய்யும் காலம் இது!! ஆக, ப.பா சங்கம் ஒரு படத்த ரீமேக் செய்ய போகுது... அதுக்கு நல்ல ஜோடிய தேடுறோம்!


மேல்காட்டப்பட்ட சீன்னை இவர்கள் சொல்லியிருந்தால்....

சூர்யாவாக சாலமன் பாப்பையா (acp பாப்ஸ்)

ஜோவாக 'பருத்திவீரன்' பிரியாமணி

பிரியாமணி அழுது கொண்டே: ஏன்ய்யா,நீயா? ஏண்டா இந்த பக்கம் வந்தே?

பாப்ஸ்: எனக்கு இங்க வேற யாரும் தெரியாதுலே. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்லே! வா...பழகுவோம்ய்யா!

***
பாப்ஸ்: ஏன் புள்ள, உனக்கு என்ன தான் வேணும்?

பிரியாமணி: புரியல்ல...(அழுது கொண்டே...)

பாப்ஸ்: நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்ய்யா...(குரல் கொஞ்சம் கம்மி செய்துகொண்டு)

பிரியாமணி: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்டா! உன்கூட என் வாழ்க்கைய வாழனும்டா. உன்கூட நான் இருக்கனும்டா. உன்கூட சிரிச்சு பேசனும்டா. சண்ட போடனும்டா... உன் தோள்ல சாஞ்சி அழனும்டா.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்கனும்டா (தலை முடியை பிடித்து கொண்டு அழுகிறார்)

மூன்னு குழந்தைய பெத்துக்கனும்டா. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்கனும்டா. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்கனும்டா.
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும்டா! (சத்தம் போட்டு அழுகிறார்)
அவ்வளவுதான் டா எனக்கு வேணும்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. (பாப்ஸ் காலை பிடித்து அழுகிறார்)


பாப்ஸ்: ஏன்ய்யா? நான் யூத் கிடையாதுய்யா! நான் ஒரு பட்டிமன்ற நடுவர்ய்யா... என்னைய சுத்தி எப்போதே 4 பேரு பேசிகிட்டே இருப்பாங்கலே. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்யா! உனக்கும் எனக்கும் எம்புட்டு வயசு வித்தியாசம் இருக்கு! ஏன் நான்?


பிரியாமணி: அது ஒரு பொண்ணுக்கு தான்டா விளங்கும்! உனக்கெல்லாம் எங்கடா புரிய போகுது....


பாப்ஸ்: சரிய்யா, கல்யாணம் பண்ணிக்கலாம்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்லே. கல்யாணம் பண்ண... நாளை சந்திப்போமா?

இயக்குனர்: cuT!!!!!!!!! ஏங்க பிரியாமணி, இந்த சீன்ல ஜோதிகா எப்படி அழகா நடிச்சிருக்கும். உனக்கு நடிப்புன்னாவே அழதான் தெரியுமா? போ போ.... யோவ் assistant அடுத்த ஜோடிய வர சொல்லு. இந்தா பிரியாமணி, பாப்ஸ் கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. அப்பரம் கூப்பிடுறோம்.

அடுத்து சூர்யாவாக வைரமுத்து
ஜோவாக நமீதா

நமீதா: ஏ மச்சான்ஸ்? ஏண்டா இந்த பக்கம் வந்து?

வைரமுத்து: எனக்கு இங்கு வேற யாரையும் தெரியாது. உன்கூட தான் பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது.
***

வைர: ஏன் நமீதா, உனக்கு என்ன வேண்டும்?

நமீதா: எனக்கு ஒன்னும் புரியுது? (புரியல்ல)

வைர: நம்மை பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேண்டும்? மனைவியா?சிநேகிதியே?(எச்சில் தெறித்தது)


நமீதா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் மச்சான்ஸ்! உன்கூட என் life வாழது. உன்கூட நான் இருக்குது. உன்கூட சிரிச்சு பேசுது. சண்ட போடுது... உன் தோள்ல சாஞ்சி அழது.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்குது three kids பெத்துகுது. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அது உன்னைய மாதிரியே இருக்குது. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்குது.

அப்பரம் ஒரு நாள் செத்துபோது! அவ்வளவுதான் மச்சான்ஸ்!(சிரிக்கிறார் நமீதா)

வைர: ஏன்? நான் இளரத்தம் கிடையாது! நான் ஒரு பாடலாசிரியர்.. என்னை சுற்றி எப்போதுமே 4 பேரு பாட்டு எழுத சொல்லி கொண்டே இருப்பார்கள். அது என்னை சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். உனக்கும் எனக்கும் வயது வித்தியாசத்தை பார்த்தாயா? அப்படி இருந்தும் ஏன் என்னை...? (வெள்ளை ஜிப்பா பாக்கேட்டில் கையைவிட்டு வானத்தை பார்க்கிறார்)


நமீதா: நான் இட்லி சாப்பிடுது. இடியாப்பம் சாப்பிடுது. நான் ஒரு தமில்நாட்டு புண்ணு!அது ஒரு புண்ணுக்கு தான் விளங்குது!


வைர: சரி. கல்யாணம் செய்து கொள்ளலாம்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உன்னை பார்த்த முதல் நாளே
கண்கள் கடிதமானது
இதயம் இன்பாக்ஸானது!

இயக்குனர்: cutttttttttttttt!! நமீதா சூப்பரா நடிச்சீங்க! யோவ் assistant, மேடத்துக்கு ஆப்பிள் ஜூஸ் கொடு! வைரமுத்து சார், நீங்க கொஞ்சம் தமிழ்ல பேசி நடிக்க முடியுமா? நீங்க பேசின தமிழ் வெள்ளக்காரங்களுக்கு மட்டும் தான் புரியும். நம்ம ஆளுங்களுக்கு விளங்காது. சோ கொஞ்சம் ப்ளீஸ்....

assistant: director சார், இன்னொரு ஜோடி ரொம்ப நேரமா வேட் பண்ணிகிட்டு இருக்காங்க.

இயக்குனர்: வர சொல்லுய்யா!

(கவுண்டமணியும், ஜெனிலீயாவும் உள்ளே வர)

சூர்யாவாக கவுண்டர்
ஜோவாக ஜெனிலீயா


ஜெனிலீயா குதித்து கொண்டே(தோள்பட்டையில் நீல கலர் பை): ஏ என்ன மேன்,நீயா? ஏண்டா இந்த பக்கம்?(லூசுத்தனமாக சிரிக்கிறார்)


கவுண்டர்: ஹாலோ லேடிஸ்,எனக்கு இங்க வேற யாரும் தெரியாது. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்! let's go talk ya.
***

கவுண்டர்: உனக்கு என்ன வேணும்?

ஜெனிலீயா: என்ன சந்தோஷ், நீ சொல்றத புரியல்ல...

கவுண்டர்: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே! நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்ம்ம்ம்ம்?(குரலை உயர்த்தி கத்துகிறார்)

ஜெனிலீயா(அமைதியாக, உதட்டை கடித்துகொண்டு): நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்! அப்பரம்...உன்கூட பைக்கல ஊர் சுத்தனும். நாயர் கடையில டீ குடிக்கனும். பக்கத்துவீட்டு பையன்கூட கோலி விளையாடனும்.மொட்ட மாடில ஜஸ்கீரிம் சாப்டனும். உன்கூட சிரிச்சு பேசனும். சண்ட போடனும்... .. நிறைய குழந்த பெத்துக்கனும். அப்ப தான் சந்தோஷ், எதித்தவீட்டு ஆண்ட்டி பிள்ளைங்ககூட கிரிக்கெட் ஆட முடியும். பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்க கூடாது. என்னைய மாதிரி இருக்கனும் சந்தோஷ்.


(முகத்தை பாவமாக வைத்து கொண்டு)
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும் சந்தோஷ்! அவ்வளவுதான் எனக்கு வேணும்!

கவுண்டர்: ஏன்? நான் யூத் தான்! இவ்வளவு ஆம்பளைங்க இருக்கும்போது இந்த ஆல் இன் ஆல் அழகுராஜ்வ why selected? நான் ஒரு அரசியல்வாதி. என்னைய சுத்தி 4 அள்ளகைங்க, 5 நாத்தாரிங்க, 6 பிக்பாக்கெட் இருப்பாங்க. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்! நீ என்னையவிட 3 வயசு மூப்பு.அரசியல இதெல்லாம் சகஜமா இருந்தாலும், இந்த விஞ்ஞான உலகத்துல....


ஜெனிலீயா: அது ஒரு பொண்ணுக்கு தான் விளங்கும் சந்தோஷ்! உனக்கெல்லாம் அது புரியாது சந்தோஷ். (கண்ணை கசக்குகிறார்)

கவுண்டர்: சரி சரி...லேடீஸ் அழுதா என் heart தாங்காதும்மா! கல்யாணம் பண்ணிக்குவோம்!வாலிப வயசுல இதெல்லாம் சகஜமப்பா!(ஜெனிலீயாவோடு கை குலுக்குகிறார் ஒரு romantic look கொடுத்து...)

இயக்குனர்: cutttttt!! இந்த 3 ஜோடில யார select பண்றது?????

Monday, April 6, 2009

'மரியாதை' பார்த்தால் மரியாதை கெடுமா?

சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மரியாதைக்குரிய படம் மரியாதை. விஜயகாந்த் என்றாலே நிறைய பேருக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. அதுவும் சமீபகாலமாக அது அதிகமாய் போக, அனைவரும் முந்தி அடித்துகொண்டு படத்தை பார்க்க துடிக்கின்றனர். அன்று ஒரு திரையரங்கில் இப்படத்தின் போஸ்டர் பார்த்தேன். போஸ்டரை பார்த்தே அரை மணி நேரம் சிரித்தேன். படத்தை பார்த்தால் எவ்வளவு மஜாவாக இருக்கும்!

இப்போது விக்ரமன் படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவருவதில்லை. அதை அறிந்தே அவர் விஜயகாந்தை ஹீரோவாக போட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.அவரது சிஷயர்கள் கேஸ் ரவிகுமார் போன்றோர் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கிறார்கள். நாமும் அப்படி எடுக்கவேண்டும் என்று நினைத்து இப்படத்தை அதிக பொருட்செலவில் எடுத்துள்ளார். பாருங்க இந்த ஸ்டில்லை...

பொதுவாக ஒரு கேமிரா வைத்து எடுக்கலாம். ஆனால், ஒரு கேமிராவுக்குள் அதுவும் ஒரு frameக்குள் இருவரையும் கொண்டு வந்திருக்க முடியுமா? ஆக, அநேகமாக ரெண்டு மூணு கேமிராவை வைத்து இந்த ஸ்டில்லை எடுத்து இருப்பார்! ஒரு சின்ன ஸ்டில்லுக்கே இப்படி என்றால்... முழு படத்தை எந்த மாதிரி எடுத்து இருப்பார் என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்! ஆக, அதிக பொருட்செலவு தானே!

விக்ரமன் படம் என்றாலே ஒரு 'லல்லலா லல்லலா..." தீம் மியூசிக் இருக்கும் அதுக்கு சொந்தக்காரர் ராஜ்குமாராக தான் இருப்பார்! ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி! யப்பா... என்ன நடக்கபோகுதே. மனதில் பீதியையும் மீதியை வயிற்று கலக்களால் போக நேரிடும் பேதியையும் நினைத்து பார்த்தாலே... நெஞ்சு பகீர் என்கிறது. அதுவும் இப்படத்தில் "இன்பமே, உந்தன் பெயர் பெண்மையோ" பாடலை ரீமிக்ஸ் செய்து நம்மை இன்னும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டது 'மரியாதை'. இப்பாடல் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டதாம்!(கொடுமை.. சரி விடுங்க)

படத்தில் மீரா ஜாஸ்மின், சீனியர் நடிகை மீனா, சீனியரின் சீனியர் நடிகை அம்பிகா... இன்னும் எத்தன ஹீரோயின் இருக்க போறாங்கன்னு தெரியல. மீனா, அம்பிகா.. சரி ஒகே.. வயசாச்சு.. பரவாயில்ல. ஏங்க மீரா ஜாஸ்மீன், உங்களுக்கு ஏங்க இப்படி... ! பாவமா இருக்கு உங்கள நினைச்சா...அவ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படத்தை பார்த்தே தீருவேன் என்று சில நண்பர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட்.

ஜே.கே ரித்தீஷை வீழ்த்த வந்த சாம்!

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், தனஷ்-சிம்பு என்று ஒரு பட்டியல் இருக்கிறது! அந்த வரிசையில் ரீத்தீஷ்-சாம் ஆண்டர்சன் வந்துள்ளனர். ஜே கே ரித்தீஷுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம்! யார் ஒருத்தருக்கு பெண் ரசிகர்கள் இருக்கிறதோ அவருக்கு தான் மவுசு அதிகம், நம்ம சூர்யா, மாதவன பாருங்க அந்த மாதிரி. ஜே கே ரீத்திஷ் கலக்கிகொண்டிருக்கிறார் என்று ஒரு புரம் இருக்க, அவரை வீழ்த்த வந்துவிட்டார் சாம் ஆண்டர்சன். நடிப்பிலும் சரி, ஆடல் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளிலும் சரி மனதைவிட்டு நீங்கா இடத்தில் stool போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.

ஹீரோயினிடம் அவர் இயல்பாய் பேசியதை பார்த்து நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்த பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வீடியோவை பாருங்க....ஹீரோயின் நம்மைவிட அரை அடி உயரம் என்றபோதிலும், தனது வசீகர பார்வையால் ஹீரோயின் மனதில் நமது செருப்புகளிலும் இடம் பிடித்துவிடுகிறார் இந்த கருப்பு மாதவன்! ஹீரோயினிடம் தண்ணி அடிச்சுட்டு பாட சொல்வது தமிழ் சினிமாவின் இன்னொரு புதுமை!

ஆங்கில புலமை கொண்ட விஜய்காந்துக்கே மிரட்டல் விடும் அளவுக்கு எங்கள் மார்டன் சூர்யா ஆங்கிலம் பேசுவது அருமையிலும் அருமை! மஞ்ச காட்டு மைநா என்று பெண்களை பார்த்து பாடும் காலம் மலை ஏறிபோச்சு. வந்துவிட்டார் எங்கள் மஞ்ச காட்டு நைனா!ஒவ்வொரு படத்தின் ப்ளஸ் அதன் கிளைமெக்ஸ் காட்சியாக இருக்கவேண்டும். அப்படி நிறைய படங்கள் அமைவதில்லை. நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, சேது போன்ற ஒருசில படங்களே கிளைமெக்ஸில் நம்மை உருக வைத்தது. அந்த வரிசையில் இப்படத்தின் கிளைமெக்ஸ் தாய்க்குலங்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இந்த காட்சியை பார்த்த பிறகு, இவருக்கு நிறைய பெண் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், 60 அடி உயரத்தில் இவருக்கு ஒரு கட் அவுட், கண்ணம்மாபேட்டையில்!

நமது கலாச்சாரத்தில் புதுமையை புகுத்தி, கல்யாணம் முடிந்து காரை சுற்றி வருகிறார் இந்த பெண்களின் நாயகன்! நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு!! :(


அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு கொடுக்க போகும் பட்டம் "புரட்சி புறா"

Wednesday, March 18, 2009

நம்மூரு சென்னையிலே

சமீபத்தில் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்க, பிரேமின் அண்ணன் வெங்கட் பிரபு பாட ஒரு பாடல் வெளிவந்தது.பாடல்: நம்மூர சென்னையிலே நாள்தோறும் வீதியிலே

பல நூறு பொண்ணுங்கள பாத்தேனே
......
.....

பச்சோந்தி தேவலடா, அந்த பொண்ணுங்க மோசமடா
அந்த விஷயம்கூட தேவலடா, நம்ம ஆபத்து பொண்ணுங்கடா..

என்று வரும் அப்பாடல்.


இந்த பாடலை கேட்டு கொதித்து எழுந்த சில தோழிகளின் கோபங்களை அடக்க முடியவில்லை. online chat status, facebook status, orkut community- இப்படி எல்லா இடங்களிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழிகளிடம் நான் சொன்னது,"விடு விடு.... சில பொண்ணுங்க உண்மையிலே அப்படி தானே... சும்மா பாட்டு தானே விட்டு தள்ளு."எனக்கும் சேர்த்தே கண்டனம் தெரிவித்து, வன்மையாக கண்டித்தனர். ஹாஹா... என்ன செய்ய? அவர்களிடம் அதிகாரப்பூர்வமான ஒரு மன்னிப்பை போட்டு, அவர்கள் அமைத்த திடீர் சங்கத்திற்கு என்னை உறுப்பினராக மாற்றிவிட்டனர். எனக்கு கொடுத்த முதல் வேலை, சங்கத்திற்கு ஒரு tagline அமைப்பது. மூளையை கசக்கி பிழிந்து யோசித்தால்... ஒன்னும் வேலைக்கு ஆகல.ஆக, ஒரு முடிவுக்கு வந்தேன். ஏதேனும் ஒன்றை ரீமேக் பண்ணிவிடலாம்னு.

ஆட்டோ பின்னாடி பார்த்திருக்கும் வாசகம்,"சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே!"ரீமேக் செய்த வடிவம்,"அச்சுறுத்தும் அனக்கோண்டாவை நம்பு, ஆசையாய் பேசும் ஆண்களை நம்பாதே!"மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

Thursday, March 5, 2009

ஆண்களின் டைரியிலிருந்து....

ஆண்கள் பெண்களிடம் சொல்லும் சட்டங்கள்:

 1. ஞாயிற்றுகிழமை= கிரிக்கெட் பார்த்தல். எழுதப்படாத சட்டத்தில் இதுவும் ஒன்று
 2. shopping கிரிக்கெட் மாதிரி அல்ல. அப்படி நாங்க நினைக்கபோவதும் இல்ல.
 3. அழுவது என்பது blackmail.
 4. உங்களுக்கு ஒன்னு வேணும்னு, தெளிவா சொல்லிடுங்க. மறைமுகமா கேட்பது, புதிர் போட்டு பேசுவது, தெளிவா குழப்புவது- இது எதுவுமே வேலைக்கு ஆகாது!
 5. பிறந்தநாட்களும், கல்யாண தேதியும் எங்களுக்கு நினைவில் இருக்காது. ஆக, அவற்றை நாள்காட்டியில் குறித்துவைங்க. எங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடுங்க, ப்ளீஸ்!
 6. 'ஆம்' மற்றும் 'இல்லை'- இவை இரண்டுமே சமமான பதில்கள், எல்லா கேள்விகளுக்குமே.
 7. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மட்டுமே எங்களிடம் வாங்க. அனுதாபம் வேண்டும் என்றால் உங்களோட படித்த எல்கேஜி தோழிகளை போய் பாருங்க.
 8. நாங்கள் 6 மாசத்துக்கு முன்னாடி சொன்னவற்றை இன்று போடும் சண்டையில் இழுக்க கூடாது. நாங்கள் என்ன சொன்னாலும், 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.
 9. நீங்கள் குண்டாக இருக்கீங்கன்னு நினைத்தால், நினைத்துகொள்ளுங்கள். உண்மையிலே நீங்க அப்படிதான். எங்ககிட்டு வந்து கேட்காதீங்க. பதில் சொல்ல விருப்பமில்லை.
 10. நாங்கள் சொல்வது சில, உங்களை காயப்படுத்தும் அல்லது கோபப்படுத்தும். எங்கள் நோக்கம் இரண்டுமே.
 11. எங்களிடம் ஒன்றை செய்ய சொல்லுங்கள் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். இரண்டையுமே ஒரே நேரத்தில் சொல்லாதீங்க. அந்த வேலையை பற்றி முழுமையா தெரிந்தால், நீங்களே செய்யலாம். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல.
 12. எது சொல்ல வேண்டும் என்றாலும், டிவி விளம்பரங்கள் நேரத்தில் மட்டுமே சொல்லுங்க. live match நடந்து கொண்டிருக்கும்போது....மூச்!!
 13. கோலாம்பஸுக்கு திசைகள் தேவைப்பட்டது இல்லை. நாங்களும் அப்படிதான். காரில் செல்லும்போது கொஞ்ச நேரம்.....'shut up'
 14. எங்களிடம் உலக பொருளாதாரம், அமெரிக்கா வரலாறு, கிரிக்கெட், மொக்கை ஜோக்ஸ்-இதை பத்தி பேச விருப்பம் என்றால் மட்டுமே கேளுங்க இல்லை என்றால் நாங்கள் அமைதியாக இருக்கும்போது என்ன நினைக்குறீங்க என்று கேட்காதீங்க.
 15. I am in shape. ROUND is a shape too.
இதை உங்க மனைவியிடம் சொன்னால், நீங்க அநேகமா இன்று இரவு ஹாலில் அல்லது வீட்டு திணையில் தான் படுக்க நேரிடும். இருந்தாலும் பரவாயில்ல, camping போன உணர்வு கிடைக்கும்! அப்படி வெளியே படுக்க பயம் என்றால், உடனே ஒரு ரோஜா பூவை வாங்கி மனைவிடம் கொடுத்து இதை சொல்லுங்க,

"happy women's day!"

கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க. மார்ச் 8ஆம் தேதி அன்று மகளிர் தினத்தை கொண்டாடும் அனைத்து பெண்களுக்கு எங்க சங்கத்தின் வாழ்த்துகள்!:)

Monday, February 16, 2009

surya vs goundamani!

Saturday, February 14, 2009

கண்டதும் காதல்? கண்டதெல்லாம் காதல்!

அனைவருக்கும் ப.பா. சங்கத்தின் அன்பர் தின வாழ்த்துகள்.

அப்படின்னா என்னவா?

அதாங்க காதலர் தின வாழ்த்துகளை தான் அப்படி பொதுவா சொல்கிறோம்.

இன்று நிறைய டீவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள். நேற்று 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியில் காதலை பத்தி பேசுனாங்க.

காலையில் எனக்கு வந்த ஸ் எம் ஸ்,

"ஏப்ரல் 1 தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் என்ன வித்தியாசம்?
ஏப்ரல் 1- முட்டாள்கள் தினம்
பிப்ரவரி 14- முட்டாள்கள் ஆகும் தினம்"

இப்படி ஒரே காதல் விஷயமா இருந்துச்சா.. சரி அத பத்தி ஏதாச்சு எழுதலாமேன்னு வந்தேன்.

காதல் என்பது கழிட்டு போட்ட ஷூ மாதிரி.. சைஸ் சரியா இருந்தா.. யாரு வேணாலும் போட்டுகிட்டு போகலாம்.

ஐயோ அப்படின்னு நான் சொல்லல. என் காலேஜ் நண்பர் ஒருத்தன் அடிக்கடி சொல்வான். சொன்னது காமெடியாக இருந்தாலும், காதல் என்பது ரொம்ப சீரியஸான மேட்டர். அந்த seriousness இன்று மட்டும் ரொம்ப தூக்கலா இருப்பது ஆச்சிரியமா இருக்கு.

காதலர்கள் என்ன செய்யலாம் இன்று?
ரோஸ் மற்றும் வாழ்த்து அட்டை வாங்கி கொடுங்க.

காதல் பிடிக்காதவர்கள் என்ன செய்யலாம் இன்று?
ரோஸ் மற்றும் வாழ்த்து அட்டை விற்கும் கடை போடுங்க. செம்ம collection வரும்!

நேற்று இரவு தோழியிடம் உரையாடி கொண்டிருந்தேன் தொலைபேசியில்,

தோழி: ஏய் நாளைக்கு என்ன ஸ்பெஷல்?

நான்: அம்மா, மட்டன் குழம்பு வைக்க போறாங்க.

தோழி: அட ச்சி, அது இல்ல. ஏதாச்சு டேடிங்?

நான்: ஆமா!

தோழி: ஓ மை காட்! நீயா? யாரு அவரு?

நான்: உனக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும்.

தோழி: என்னடி சொல்லவே இல்ல.

நான்: நீ கேட்கவே இல்ல.

தோழி: எத்தன நாளா தெரியும்.

நான்: சின்ன பிள்ளையா இருக்கும்போதே தெரியும்.

தோழி: யூ மின் childhood love?

நான்: அட ச்சே, லவ் எல்லாம் கிடையாது? மரியாதை, ரொம்ப பிடிக்கும் அவர...

தோழி: ஓ ஓ...அப்படி போகுதா கதை. ஆமா எனக்கு தெரியும்னு சொன்னீயே, பார்த்து இருக்கேனா...

நான்: ம்ம்... பாத்து இருக்கே...

தோழி: எப்போ, எங்க?

நான்: போன வாரம் நம்ம வெளியே போனோமே...அப்போ.

தோழி: என்னடி குழப்புறே? நம்ம இரண்டு பேரும் மட்டும் தானே வெளியே போனோம்... யாரு நம்மகூட வந்தா... சரி அவரு பெயரு என்ன?

நான்: ஹாஹா.... நான் நாளைக்கு ஆஞ்ஜநயா கோயிலுக்கு போறேன் டி. ஜே ஆஞ்ஜநயா!

தோழி: what!!!!!??? valentine's day அன்னிக்கு ஆஞ்ஜநயா கோயிலுக்கு போறே! ஓ மை கடவுளே!!!

இன்னொரு முறை, அனைவருக்கும் இந்த ஆஞ்ஜநயா பக்தையின் காதலர் தின வாழ்த்துகள்

Wednesday, February 4, 2009

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (2)

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (1)

தொடர்கிறது ஷோ...

போன ஷோல கொடுத்த ஷாக்கால மீள முடியாமல், தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தேன்.

நான்: அவங்க குஷ்புவா??? ஏன்? எதுக்கு இந்த விபரீதம்?

தேவா: இந்த படத்துக்கு நிறைய ரிசுக்கு எடுத்து இருக்கோம். அதுல இதுவும் ஒன்னு.

(தலையில் அடித்து கொண்டு தொடர்ந்தேன்.)

நான்: வேற என்னென்ன ரிசுக்கு எடுத்து இருக்கீங்க, தேவா?

(விஜய் குறிக்கீட்டு பதில் அளித்தார்.)

விஜய்: நயன் தாராவ ஹீரோயினா போட்டது. வடிவேலு காமெடி.

நான்: வர வர நீங்களே நல்ல காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க.... அப்பரம் தேவா, உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்வி. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் எப்படி தெலுங்கு பாடல்கள் சாயலே பண்ணீங்க?


(தேவா பதில் அளிக்கும் முன் விஜய் பேசினார்)


விஜய்: இந்த படத்துல 6 பாட்டு இருக்கு. அதுல 4 பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு.


நான்: ஏன், மத்த இரண்டும் original tuneஆ?


(விஜய் முறைப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.)


தேவா: ரொம்ப peppy சாங்ஸ் வேணும்னு கேட்டேன்... அதான் இப்படி வந்து இருக்கு.


நான்: ஒகே விஜய், உங்ககிட்ட ஒரு கேள்வி. முன்பெல்லாம் ரஜினி மாதிரி காபி அடிப்பீங்க...இப்ப திடீரென்னு எம் ஜி ஆர காபி அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க..எப்படி? இந்த படத்துல ஒரு வசனம் வருது 'தலைவர் வழில போனா எல்லாம் success தான்'. அப்பன்னா, நீங்க அரசியலுக்கு போக போறீங்களா?


தேவா: சாதாரணமா ஒரு கேள்வி கேட்டாலே, ரொம்ப நேரம் கழித்து தான் உதட்டை அசைக்காமல் பதில் சொல்வாரு சார். நீங்க ஒரே நேரத்துல இத்தன கேள்வி கேட்டா, என்ன ஆவரது? நான் போய் டீ குடிச்சுட்டு மெதுவா வரேன். அவரு யோசிச்சு முடிக்கட்டும்.


விஜய்: நோ சார், இதோ சொல்றேன்.... உங்க கேள்விக்கு என் பதில்- அப்பாவ கேட்டு தான் சொல்லனும்!


நான்: இப்படி ஒரு பதிலா?? என்ன கொடுமை விஜய் இது! சரி...விடுங்க... உங்களுக்கு physics பத்தி எதுவுமே தெரியாதா?


விஜய்: physics...? அது யாரு நடிச்ச தெலுங்கு படம்?


நான்: என்னது தெலுங்கு படமா? யோவ்...physicsயா! physics! newton's first law, 2nd law, 3rd law, force, friction, density...இப்படியலாம் வருமே...அத சொன்னேன்!


தேவா: கூல்... கூல்...டென்ஷன் ஆகாதீங்க... விஜய் எப்பவுமே இப்படி தான்!


(டென்ஷனை கட்டுப்படுத்தி கொண்டு தொடர்ந்தேன்...)


நான்: ஏன் physics பத்தி கேட்டேனா? உங்க படத்துல...ஏறி ஏறி சண்ட போடுறீங்க...பறந்து பறந்து சண்ட... ஆகாயத்துல, தண்ணிக்குள்ள சண்ட...இப்படி physics படிச்ச எங்கள முட்டாளாக்க பாக்குறீங்களே...அதுக்கு கேட்டேன். உங்க இம்சைக்கு அளவே இல்லையா!


தேவா: தப்புதான். நான் அப்பவே சொன்னேன். நேரா வெண்வெளிக்கு போய் அங்க ஒரு சண்ட காட்சி வைப்போம்னு. கேட்குல. அங்க வச்சு இருந்தா, இந்த physics பிரச்சனையல்லாம் வந்து இருக்காது பாருங்க...


விஜய்: அடுத்த படத்துல செட் போட்டு பண்ணிடலாம் சார்.


தேவா: செட்டா? நோ....நம்ம நேரா அங்க போய் ரியலா எடுக்கனும். இப்ப ஜனங்க realistic படங்கள எதிர்ப்பாக்குறாங்க.


நான்: நீங்க realistic படம் எடுக்க போறீங்களா! யப்பா சாமி, என்னைய நீ தான் காப்பாத்தனும்!


தேவா: அடுத்து அவரோட 51வது படத்துல 51 கெட்டப்ல வராரு பாருங்க... தமிழ்நாடே அதிரும்!


நான்: ஒரு வித்தியாசமும் இல்லாம வருவார்.. அதானே!


(விஜய் பாவமாக முகத்தை வைத்து கொண்டு சோகமாக இருந்தார்...)


நான்: சரி சரி... ஷோ முடியும் வேளையில் ஒரு சந்தோஷமான விஷயம்.


(விஜய் குஷியாகி விட்டார்...தேவா புன்னகையித்தார்)


நான்: என் பாட்டி ஒன்னு கொடுத்து அனுப்பிவிட்டாங்க.


இருவரும்: என்னது?


நான்: துணி காய போட என் வீட்டுல கொடி அறுந்துபோச்சு. விஜய் சார், நீங்க வில்லு படத்துல entry கொடுத்த மாதிரி ஒரு அரை மணி நேரம் நின்னீங்கன்னா, துணிய காய வச்சுட்டு போயிடுவேன், தெங்ஸ்.
மீண்டும் அடுத்த ஷோவுல சந்திப்போம்.

Wednesday, January 28, 2009

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (1)

கொலை பண்றதுல பலவிதம் இருக்கு. சிலர் கத்திய வச்சு கொலை பண்ணுவாங்க,சிலர் கத்தி பேசி கொலை பண்ணுவாங்க, சிலர் பாட்டு பாடி கொலை பண்ணுவாங்க, சிலர் டான்ஸ் ஆடி கொலை பண்ணுவாங்க, எல்லாத்தையும் தாண்டி, சிலர் நடிப்பு என்ற பெயரில் கொலை பண்ணுவாங்க. அந்த வரிசையில் உலகம் அறிந்த இருவரைதான் இன்னிங்க நம்ம ஷோல சந்திக்க போறோம், அவங்க வேறு யாருமில்ல

the one and only பல்லு...ச்சி...வில்லு பட நாயகன், இளைய தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார், இன்றைய இளையர்களின் நாடி துடிப்பு, என்றைக்குமே பெண்களின் சமையல் அடுப்பு, சமுதாயத்திலுள்ள தீமைகளை ஒழிக்க வந்த துடுப்பு....

(சத்தம் போடாமல் விஜய்: ஏங்க கொஞ்ச சீக்கிரம் கூப்பிடுங்க...இப்படியே சொல்லி, எப்ப முடிப்பீங்க?)

நம்ம தமிழ்நாட்டின் சிங்கம் விஜய் அவர்களையும், அவரை வச்சு படம் பண்ண இயக்குனர் சிகரம் பிரபுதேவா அவர்களையும் அன்போடு வரவேற்கிறோம்.

(இருவரும் வந்து அமர்கிறார்கள்)

நான்: வாங்க, வாங்க, இன்னிக்கு உங்கள வச்சு தான் காமெடி பண்ண போறேன்.

தேவா: என்னது? (முழித்தார்)

நான்: சாரி, ஐ மின் ஷோ பண்ண போறேன்னு சொல்ல வந்தேன்.

(தாடியை தடவி கொண்டார் தேவா)

நான்: தேவா, சொல்லுங்க, எப்படி இப்படி ஒரு படம் பண்ணனும்னு தோனிச்சு?

தேவா: விஜய வச்சு வேற என்ன பண்ண முடியும்? அதான் இப்படி ஒரு படம் பண்ணலாம்னு...

நான்: அட... இது நல்லா இருக்கு.

( தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று தெரியாமல் முழித்தார் விஜய்)

நான்: விஜய், சொல்லுங்க, உங்க படங்கள டான்ஸுக்கும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கே... அது எப்படி. நீங்களே விரும்பி கேட்குறதா, இல்ல அதுவா அமையுதா...

விஜய்: நீங்க வேற, வயத்தெறிச்சல கிளப்பாதீங்க... என்கிட்ட வரவங்க எல்லாம் 5 டான்ஸ்/ பாட்டுடோட தான் வராங்க. அதுக்கு அப்பரம் தான், அத சுத்தி ஒரு கதைய பண்ணி, படமா எடுக்குறோம்.

தேவா: இந்த படத்துல 6 பாட்டுமே சூப்பர் ஹிட். படம் பாக்கும்போதே ஒரு james bond படம் பார்க்குற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.

நான்: ஓ.. எந்த james bond படத்துல 6 பாட்டு இருக்குன்னு கொஞ்ச சொல்லுறீங்களா?

(நான் சொன்னதை கேட்டு ஃபிரண்ஸ் படத்தில் வடிவேலு தலையில் தார் கொட்டியபிறகு விஜய் சிரிப்பாரே, அதே போல சிரிக்க ஆரம்பித்துவிட்டார் இங்க, விஜய்)

தேவா: என்ன விஜய், நக்கலா இருக்கா?
அப்படி சொல்ல வரல....வில்லுன்னு ஒரு positive energy கிடைச்ச மாதிரி இருந்துச்சு.. அந்த காலத்து...(என்று ஆரம்பித்தார்)

நான்: அந்த காலத்து எம் ஜி ஆர் படம் மாதிரி இருக்கும். படம் பார்த்தா ஒரு exhibitionக்குள்ள போன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். இத தானே சொல்ல வந்தீங்க?

தேவா: எப்படிங்க கண்டு பிடிச்சீங்க?

நான்: ஆமா, பொங்கல் அன்னிக்கு எந்த சேனல திருப்பினாலும் இதே டயலாக், இதே பேச்சு.

விஜய்: அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சுன்னு பேச மாட்டோம். எப்பவுமே ஒரே பேச்சு தான்!

தேவா: சார், சூப்பர் சார்! நம்ம அடுத்த படத்துக்கு இதையே பஞ் டயலாக்கா வச்சுடுவோம்.

(இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.)

நான்: அட ராமா...

தேவா: ஏய் ராமா ராமா பாட்டு உங்களுக்கு பிடிக்குமா?

நான்: என்னனமோ பிடிச்சுருக்கு, இத பிடிக்காதா. ஆமா, உங்ககிட்ட ஒரு கேள்வி. இந்த பாட்டுல எப்படி graphics சேர்க்கலாம்னு ஐடியா வந்துச்சு?

(இருவரும் குழப்பம் அடைந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்)

விஜய்: நீங்க என்ன சொல்லவறீங்க?

நான்: ஆமாங்க, எத்தனையோ டான்சர்ஸ் இருந்தாலும், 5 அடி இட்லி குண்டா மாதிரி graphicsல போட்டு விஜயோட ஆடவிட்டீங்க பாத்தீங்களா...அங்க தான் நீங்க நிக்குறீங்க.

தேவா(சிரித்து கொண்டே): ஐயோ அது இட்லி குண்டாவும் இல்ல, graphicsம் இல்ல. அது குஷ்பு மேடம்!

நான்: குஷ்புவா?????????????

(இவங்கள கிண்டல் பண்ணி முடிக்க ஒரு ஷோ போதாது என்பதால் அடுத்த வாரமும் தொடரும்)

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா
(-2)

Tuesday, January 13, 2009

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

சிலம்பாட்டத்தில் சிலம்பரசன் ஆடிய ஆட்டத்தை இனி வரும் 7 ஜென்மங்களிலும் மறக்க முடியாது. நான் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது "சிம்புக்கு மட்டும் தான் இப்படி ஆட தெரியுமா?" ஏன் நம்மளும் ஆடலாமேன்னு என் மனதில் தோன்றியது. சிலம்பரசன் ஆடும் சிலம்பாட்டத்தை ரசிக்க முடிந்ததோ இல்லையோ, இனி வர போகும்
வலைப்பூவரசன்/வலைப்பூவரசி ஆடும் வலைப்பூஆட்டத்தை பாருங்கோ....

நம்மில் எத்தனையோ பேருக்கு எழுத்து திறமை இருக்கும் ஆனால் ஆடல் திறமை இருக்கிறதோ இல்லையோ என்று நிறைய வலைப்பூ எழுத்தாளர்கள் யோசித்து இருப்பாங்க....

ஆக, இன்று நாம் ஆடும் திறனை வளர்த்து கொண்டு சிலம்பரசனையும் தாண்டி வேற ஒரு லெவலுக்கு கொண்டு போக போறேன் உங்களை. சிறப்பா செய்ய போறோம் ஜி!

முதலில் குரு நமஸ்காரம். ஒரு கண்ணில் சிம்புவையும் மறுகண்ணில் விஜயையும் நினைத்து கொண்டு மூன்று முறை எச்சி துப்புங்கோ. அது தான் குரு நமஸ்காரம்.

இனி நம்ம ஆட போகும் ஸ்டெப் ரொம்ப கஷ்டம். அதனால, உங்க கணினவிட்டு கொஞ்ச தள்ளி நில்லுங்க. ஆபிஸுல இருந்தா, பக்கத்தில் வேலை செய்யும் நண்பர்களை அழைத்து கொண்டு ஆடலாம். வீட்டில் இருந்தா, பாட்டி, தாத்தா இப்படி யாரேனும் கம்பெனிக்கு கூப்பிடலாம்.

ஒகே....ரெடி....

என்னது? இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களா? அட...உட்கார்ந்துகிட்டே எப்படிங்க ஆடுறது... நான் உங்கள சிம்பு, விஜய் அளவுக்கு கொண்டு போக பாக்குறேன்..நீங்க இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களே...

சரி எழுந்து நில்லுங்க.

1,2,3,4
தொடையில் இரண்டு தடவ அடிக்கனும்.

5,6,7,8
தலையில் இரண்டு தடவ அடிக்கனும்.

1,2,3,4
கீழே உட்காரனும். பந்தியில் இலை சாப்பாடு போட்டு இருக்கும்போது நாம் உட்கார்ந்து கொள்வோமே, அந்த மாதிரி உட்காரனும். சாப்பிடுவதுபோல பாவனை செய்யனும்.

5,6,7,8
டக்குனு மேல எழுந்திருச்சு வலது பக்கத்துக்கு குதிக்கனும்.

இது தான் ஸ்டெப். இதையே 4 முறை செய்தால்...கிட்டதட்ட... இப்படி ஆடிவிடலாம்.

Friday, January 2, 2009

நீங்க பார்த்தா ‘சைட் அடிக்குறீங்க’, நாங்க பார்த்தா ‘just looking'

இரண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் என் பள்ளி நண்பர்கள் ,10 பேரும் கடற்கரைக்கு போனோம். ஒரு மெகா pinic! சாப்பாடு,plastic தட்டுகள், mats, கூல் டிரிங்ஸ்- இப்படி ஆளுக்கு ஒன்னு கொண்டு வந்தோம். ஆனா முக்கியமா எல்லாருமே கொண்டு போனது cooling glasses. வெயில் அடிக்குதோ இல்லையோ எல்லாரும் அத மாட்டிகிட்டோம்.

தோழன்: இத போட்டா, எவ்வளவு வசதி தெரியுமா?

தோழி: ஆமா ஆமா...அப்ப தானே வர போற பொண்ணுங்கள சைட் அடிக்க முடியும்.

தோழன்: நீங்க மட்டும் எதுக்கு போடுறீங்களாம்...நல்ல வெள்ளையா ஒரு வெள்ளக்காரன் வந்தா போதுமே...எல்லாம் ஜொல்லு விட்டுகிட்டு இருப்பீங்களே....

அப்போது ஒரு வெள்ளைக்காரன் நாய்க்குட்டியோடு ஜாக்கிங் சென்றார். 6-பெக் வேற.

தோழன்: ஏய் ஏய்....பொண்ணுங்களா...இந்தாங்க டிஷு பேப்பர். வாய துடைச்சுக்குங்கோ....ஜொல்லு வழியுது.

தோழி: ஹேய் தோஸ்த், shut up ya. நாங்க just looking.

தோழன்: ஏய் இங்க பாருங்கடா, நாங்க செஞ்ச அத சைட் அடிக்குறது...நீங்க பண்ண அதுக்கு வேற பெயரு...என்னங்கடி நியாயம் இது.

ஒருத்தி மட்டும் அந்த வெள்ளைக்காரனையே பார்த்து கொண்டிருந்தாள்.

நான்: ஏய், விடு விடு... அவரு போய் அரை மணி நேரம் ஆச்சு.

அவள்: நான் ஒன்னும் அவர பாக்கல்ல.... நாய்க்குட்டிய...
(என்று முடிப்பதற்கு)

நான்: அட பாவி.... என்னது? மனதிர்களை தாண்டி, நாய்க்குட்டியையும் சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டீயா!

தோழர்கள்: மனிதர்கள் புரிந்த கொள்ள இது சாதாரண ‘just looking' அல்ல...அதையும் தாண்டி புனிதமானது! புனிதமானது!

அவள்: கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா....look at that puppy. so cute... guys are total waste. i have lost hope on them.

நான்: ஏய் என்ன ஆச்சு உனக்கு?

இன்னொரு தோழி: ஓ...அவ லவ் failureனால இப்படி பேசுறா...

மறுபடியும் அவள்: அப்படி ஒன்னுமில்ல....basically guys are...Eeeeeeeeee....

நான்: இல்ல மேன். நீ தப்பா புரிஞ்சுகிட்ட.... எல்லாம் ஆண்கள்கிட்டயும் ஒரு speciality இருக்கு. அத நம்ம தான் புரிஞ்சிக்க முயற்சி பண்ணனும்.

அனைத்து தோழிகளும்: ஏய் என்ன சொல்ல வர?

தோழர்களும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர்.

நான் தொடங்கினேன்.

இங்க பாருங்க. பசங்கள 5 வகையா பிரிக்கலாம்- cute, hot,good looking, handsome, attractive.

cute- இவங்க பேரழகர் என்று சொல்ல முடியாது. ஆனால் சுமார் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்கள். எப்படி ஒரு குழந்தை படத்தை நாம் ரசித்து பார்ப்போமோ அப்படி தான் இவர்களும். for example, கண்ணாடி போட்டு இருப்பாங்க. அந்த கண்ணாடி போடும் விதமும் ஒரு ஸ்டையலா இருக்கும். எப்போதுமே வேலை வேலையின்னு இருப்பாங்க. சில விசித்திரமான குணங்கள் இருக்கும்-for example, crossword puzzle போட பிடிக்கும்.

hot- சல்மான் கான், ஷாருக் கான், விவேக் ஓப்ராய், அமீர் கான், சூர்யா, விஷால், மாதவன், வினேய்....இவர்கள் போன்றவர்கள் hot. பார்த்தவுடனே பெண்கள் வாவ் என்று சொல்லும் ரகம். படங்களில், உடற்பயிற்சி நிலையங்களில் மட்டுமே காண முடியும். அந்த நிமிடத்திற்கு பார்க்க தோன்றும். ஆனால், நாளடைவில் அவர்கள் மேல் இருக்கும் மோகம் குறைந்துவிடும். இப்போ, இன்னிக்கு எனக்கு அமீர் கான பிடிக்கும். நாளைக்கு இன்னொரு ஆள பிடிக்கும். சோ....இப்படிப்பட்டவர்கள் ரொம்ப ரொம்ப temporary.

handsome-இவர்கள் தான் நம்ம பக்கத்துவீட்டுல, பக்கத்து தெருவுல, காலேஜ்ல, பஸ் ஸ்டாப்ல, அத்தை பையன், மாமா பையன்...இந்த ரகத்தை சேர்ந்தவர்கள். இயல்பான நமது வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க நேரிடும் நபர்கள். மனசுக்கும் சரி கண்ணுக்கும் சரி ரொம்ப பிடிச்சிருக்கும்.

(இடையில் தோழி கேட்டாள்...handsome, good-looking ஒன்னு தானே...அதுக்கு ஏன் இரண்டு category..)

நான்,

இது ஒரு நல்ல கேள்வி. அதாவது கண்ணுகளா.... handsome, good-looking இடையே ஒரு சின்ன வித்தியாசம். பார்த்தவுடனே handsome என்று வாயில் வந்துவிடும். ஆனால், ஒருத்தர் good-looking என்று உடனே சொல்ல வராது. பழகி, பேசி அவங்கள புரிஞ்சிகிட்டு, அவங்க குறைகளையும் ஏத்துக்கும்போது தான் good-looking என்று மனசு சொல்லும். ஆக, மூளை மட்டும் சொன்னால் அது 'handsome' மனசும் சேர்த்து சொன்னா அவர் 'good-looking' வகையை சேர்ந்தவர்.

கடைசியா attractive- இந்த வகையை சேர்ந்தவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஆண்களின் ஸ்பெஷல் என்னவென்றால் அவர்களின் mannerisms. இப்போ உதாரணத்திற்கு கௌதம் மேனன் தெரியுமா....

தோழி: ஓ...that வாரணம் ஆயிரம் இயக்குனர்...

நான்: அவரே தான். அவர் இந்த attractive வகையை சேர்ந்தவர். அவர் காதோரம் நரைத்திருக்கும். அவர் கைஅசைத்து பேசும்விதம். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும்விதம். அடிக்கடி சட்டையை முன்னாடி இழுத்து கொள்ளும் mannerism. இப்படி physical features தாண்டி ஒரு அழகு தெரியும். அது தான் attractiveness... ஸ்டிபன் தேவசி தெரியுமா... அந்த keyboard player... அவர் வாசிக்கும்போது அவர் விரல் இசை பேசும். அவரும் இந்த வகையை சேர்ந்தவர் தான்!

தோழி: எப்படி இப்படி!!!

நான்: ஆராய்ச்சி செஞ்சிருக்கோம்ல.

தோழர்கள்: அப்போ நான் எந்த வகையை சேர்ந்தவன்?

நான்: சாரி...இன்னிக்கு கிளாஸ் அவ்வளவு தான். ஹாஹா...

சோகமாக பேசிய தோழியிடம் சென்று

“ஏய் cheer up. உலகத்துல உள்ள எல்லா ஆண்களும் ஏதோ ஒரு வகையில அழகு தான். don't worry babe!"

தொடங்கினோம்....சைட் அடிக்க இல்லேங்க...சாப்பிட!:)

 

BLOGKUT.COM