Wednesday, February 4, 2009

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (2)

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (1)

தொடர்கிறது ஷோ...

போன ஷோல கொடுத்த ஷாக்கால மீள முடியாமல், தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தேன்.

நான்: அவங்க குஷ்புவா??? ஏன்? எதுக்கு இந்த விபரீதம்?

தேவா: இந்த படத்துக்கு நிறைய ரிசுக்கு எடுத்து இருக்கோம். அதுல இதுவும் ஒன்னு.

(தலையில் அடித்து கொண்டு தொடர்ந்தேன்.)

நான்: வேற என்னென்ன ரிசுக்கு எடுத்து இருக்கீங்க, தேவா?

(விஜய் குறிக்கீட்டு பதில் அளித்தார்.)

விஜய்: நயன் தாராவ ஹீரோயினா போட்டது. வடிவேலு காமெடி.

நான்: வர வர நீங்களே நல்ல காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க.... அப்பரம் தேவா, உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்வி. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் எப்படி தெலுங்கு பாடல்கள் சாயலே பண்ணீங்க?


(தேவா பதில் அளிக்கும் முன் விஜய் பேசினார்)


விஜய்: இந்த படத்துல 6 பாட்டு இருக்கு. அதுல 4 பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு.


நான்: ஏன், மத்த இரண்டும் original tuneஆ?


(விஜய் முறைப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தேன்.)


தேவா: ரொம்ப peppy சாங்ஸ் வேணும்னு கேட்டேன்... அதான் இப்படி வந்து இருக்கு.


நான்: ஒகே விஜய், உங்ககிட்ட ஒரு கேள்வி. முன்பெல்லாம் ரஜினி மாதிரி காபி அடிப்பீங்க...இப்ப திடீரென்னு எம் ஜி ஆர காபி அடிக்க ஆரம்பிச்சுட்டீங்க..எப்படி? இந்த படத்துல ஒரு வசனம் வருது 'தலைவர் வழில போனா எல்லாம் success தான்'. அப்பன்னா, நீங்க அரசியலுக்கு போக போறீங்களா?


தேவா: சாதாரணமா ஒரு கேள்வி கேட்டாலே, ரொம்ப நேரம் கழித்து தான் உதட்டை அசைக்காமல் பதில் சொல்வாரு சார். நீங்க ஒரே நேரத்துல இத்தன கேள்வி கேட்டா, என்ன ஆவரது? நான் போய் டீ குடிச்சுட்டு மெதுவா வரேன். அவரு யோசிச்சு முடிக்கட்டும்.


விஜய்: நோ சார், இதோ சொல்றேன்.... உங்க கேள்விக்கு என் பதில்- அப்பாவ கேட்டு தான் சொல்லனும்!


நான்: இப்படி ஒரு பதிலா?? என்ன கொடுமை விஜய் இது! சரி...விடுங்க... உங்களுக்கு physics பத்தி எதுவுமே தெரியாதா?


விஜய்: physics...? அது யாரு நடிச்ச தெலுங்கு படம்?


நான்: என்னது தெலுங்கு படமா? யோவ்...physicsயா! physics! newton's first law, 2nd law, 3rd law, force, friction, density...இப்படியலாம் வருமே...அத சொன்னேன்!


தேவா: கூல்... கூல்...டென்ஷன் ஆகாதீங்க... விஜய் எப்பவுமே இப்படி தான்!


(டென்ஷனை கட்டுப்படுத்தி கொண்டு தொடர்ந்தேன்...)


நான்: ஏன் physics பத்தி கேட்டேனா? உங்க படத்துல...ஏறி ஏறி சண்ட போடுறீங்க...பறந்து பறந்து சண்ட... ஆகாயத்துல, தண்ணிக்குள்ள சண்ட...இப்படி physics படிச்ச எங்கள முட்டாளாக்க பாக்குறீங்களே...அதுக்கு கேட்டேன். உங்க இம்சைக்கு அளவே இல்லையா!


தேவா: தப்புதான். நான் அப்பவே சொன்னேன். நேரா வெண்வெளிக்கு போய் அங்க ஒரு சண்ட காட்சி வைப்போம்னு. கேட்குல. அங்க வச்சு இருந்தா, இந்த physics பிரச்சனையல்லாம் வந்து இருக்காது பாருங்க...


விஜய்: அடுத்த படத்துல செட் போட்டு பண்ணிடலாம் சார்.


தேவா: செட்டா? நோ....நம்ம நேரா அங்க போய் ரியலா எடுக்கனும். இப்ப ஜனங்க realistic படங்கள எதிர்ப்பாக்குறாங்க.


நான்: நீங்க realistic படம் எடுக்க போறீங்களா! யப்பா சாமி, என்னைய நீ தான் காப்பாத்தனும்!


தேவா: அடுத்து அவரோட 51வது படத்துல 51 கெட்டப்ல வராரு பாருங்க... தமிழ்நாடே அதிரும்!


நான்: ஒரு வித்தியாசமும் இல்லாம வருவார்.. அதானே!


(விஜய் பாவமாக முகத்தை வைத்து கொண்டு சோகமாக இருந்தார்...)


நான்: சரி சரி... ஷோ முடியும் வேளையில் ஒரு சந்தோஷமான விஷயம்.


(விஜய் குஷியாகி விட்டார்...தேவா புன்னகையித்தார்)


நான்: என் பாட்டி ஒன்னு கொடுத்து அனுப்பிவிட்டாங்க.


இருவரும்: என்னது?


நான்: துணி காய போட என் வீட்டுல கொடி அறுந்துபோச்சு. விஜய் சார், நீங்க வில்லு படத்துல entry கொடுத்த மாதிரி ஒரு அரை மணி நேரம் நின்னீங்கன்னா, துணிய காய வச்சுட்டு போயிடுவேன், தெங்ஸ்.




மீண்டும் அடுத்த ஷோவுல சந்திப்போம்.

2 Comments:

said...

செமை கலக்கல்

said...

நல்ல கற்பனை... நிஜமா நடந்தா நல்லா இருக்கும்...

 

BLOGKUT.COM