வணக்கம் மக்களே இப்பத்த மார்க்கெட் என்னனா சமையல் குறிப்பு எழுதறதுதான் அதான் நானும் சமையல் குறிப்பு எழுத வந்துட்டேன். (அது யாரது ஓரமா சிரிக்கறது ) ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சிரிக்ககூடாது.
அதி காலைல விடிஞ்சும் விடியாததுக்கு முன்னாடி (7 மணிக்கு) போன் மணியடிச்சுது. யாருடா இது இப்டி நடு ராத்திரில போன் பண்ணறாகனு யோசிச்சுகிட்டே போன எடுத்தா என் உயிர் தோழி கனகாதான் லைன்ல.
என்னடி அதிசயம் இந்நேரத்துக்கு போன் பண்ற.
ஒரு சின்ன சிக்கல்டி நீதான் ஒரு தீர்வு சொல்லனும்
சொல்லிடுவோம் என்ன பிரச்னை சொல்லுடி
ஒன்னுமில்ல எங்க அம்மா காலைல ஒரு கல்யாணத்துக்கு போகனும்னு அவசரமா சாதம் பருப்பு மட்டும் செஞ்சிட்டு போயிட்டாங்க. ஆனா எங்க அப்பாவுக்கு பொரியல் செஞ்சே ஆகனும் அதான் பிரச்னை
சரிடி இதுல என்ன பிரச்னை செய்ய வேண்டியதுதான
என்னடி நீயுமா இப்டி பேசற எனக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம் திடீர்னு பொரியல் செய்ய சொன்னா என்ன செயறதுடி அதிலயும் எங்க அப்பா ஈசியா முட்டை போட்டு பண்ணிடுனு சொல்லிட்டு வாக்கிங் போயிருக்காருடி
சரி இவ்ளோதான பிரச்னை நாமெல்லாம் பொறியியல் படிச்சவங்க இந்த சாதாரண பொரியலுக்கு பயப்படலாமாடி?
அடியே அது பொறியியல் இது பொரியல்
அதனால என்ன அங்க எப்டி எதுவும் தெரியாம லேப்ல பாஸ் பண்ணலயா அந்த மாதிரிதான் இதுவும்
சரி சரி அப்டினா எப்டி செய்றதுனு நீயே சொல்லி குடுடி
அவ்ளோதான விடு முதல்ல வெங்காயம் தக்காளி எல்லாம் வெட்டிக்கோ
ம் சரி அப்புறம்
அடுப்புல பாத்திரம் வெச்சு எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து தாளிச்சு இந்த வெங்காயம் தக்காளி கொத்தமல்லி எல்லாம் போட்டு வதக்கிக்கோடி
ம் அப்புறம்
முட்டைய எடுத்து ஒடைச்சு ஊத்திக்கோ
ம்
அப்புறம் ரெண்டு சொம்பு தண்ணிய ஊத்தி நல்லா மூடி வெச்சுடு பத்து நிமிசம் கழிச்சு எறக்கிட்டீனா முட்டை பொரியல் ரெடி
அட இவ்ளோதானா சரிடி நான் செய்யறேன் அப்டீனு போன் கட் பண்ணுனா
அப்ப எங்க அம்மா வந்தாங்க என்னடி காலைல போன் பேசிகிட்டு போய் ஆபீஸ் கிளம்பற வழிய பாருனாங்க. இல்லமா என் தோழிக்கு முட்டை பொரியல் செய்ய சொல்லி குடுத்தேன் அதான் பேசுனேன்னு சொன்னேன். அத கேட்டுட்டு எங்கம்மா சரி எப்படி சொன்ன சொல்லுனாங்க . கடைசி வரைக்கும் கேட்டுட்டு எங்க அம்மா சிரிச்சாங்களே ஒரு சிரிப்பு. அது ஏன்னுதான் புரியல உங்களுக்காவது புரியுதுங்களா?
Thursday, July 12, 2007
பொறி(ரி)யல் படிப்பு
சிரிக்க வைக்க முயற்சித்தது அனுசுயா at 1:04 PM 19 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: சமையல்
Subscribe to:
Posts (Atom)


