Saturday, May 24, 2008

ஜில்லுனு ஒரு ரீ- எண்ட்ரீ வித் ஜோக்ஸ்

ஒரு சர்தார்ஜி டிவி கடைக்குப் போய் கலர் டிவி இருக்கான்னு கேட்டார்.
இருக்கே என கடைக்காரர் சொன்னார்
அப்ப பச்சைக் கலர்ல ஒரு டி வி குடுங்கன்னார் ச.ஜி

ஒரு சர்தார்ஜி கடையில் தெர்மாஸ் பிளாஸ்கை பார்த்து இது எதற்கு என்று கேட்டார்
கடைக்காரர் சொன்னார் சூடான பொருளை சூடாகவும் குளிர்ந்த பொருளை ஜில்லுனும் வச்சுக்கும்
ஒன்று வாங்கிய ச.ஜி மறுநாள் பிளாஸ்குடன் அலுவலகம் போனார்.அவர் நண்பர் அதைப் பார்த்து விட்டு இதில் என்ன இருக்கு எனக் கேட்க
சர்தார்ஜி சொன்னார் இரண்டு கிளாஸ் காபியும் ஒரு கோக்கும்'

ஒரு அடல்ட்ஸ் ஒன்லி சினிமாவுக்கு 18 சர்தார்ஜிகள் சேர்ந்து போனார்கள்.
ஏன் என்று கேட்டபோது 'பதினெட்டுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றனர்.

ஒரு சர்தார்ஜியை சனிக்கிழமையில் சிரிக்க வைக்கனும் என்றால் என்ன செய்யனும்.
புதன் கிழமையே ஒரு ஜோக்கைச் சொல்லிடனும்.

மின்னலடிக்கும் போது சர்தார்ஜிகள் ஏன் சிரிக்கிறார்கள்?
தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சர்தாஜிக்கு ஒரு போன் நெம்பரை போடத் தெரியவில்லை.பூத் காரர் கேட்டார் என்ன பிராப்ளம்
ச.ஜி சொன்னார் இந்த நெம்பர் 911 என முடிகிறது ஆனால் போனில் 11 இல்லையே

மிக குண்டான ஒரு சர்தார்ஜிக்கு டாக்டர் சொன்னார்'தினமும் 8 கிலோ மீட்டர் வீதம் 300 நாள் ஓடினால் 34 கிலோ வரை எடை குறையும்.பின்னர் வந்து பாருங்கள்'
300 நாள் கழித்து ச.ஜி டாக்டருக்கு போன் பண்ணார்'டாக்டர் நான் 34 கிலோ குறைந்து விட்டேன்.ஆனால் வீட்டிலிருந்து 2400 கிலோமீட்டர் தள்ளியிருக்கேன் எப்படி வருவது?

தற்கொலை செய்து கொள்ள ரயில் தண்டவாளம் வந்த ஒரு சர்தார்ஜி கையில் ஒரு பாட்டில் பீரும் சிக்கன் பிரியாணியும் எடுத்துப் போனார்
ஏன் என்று கேட்க டிரெயின் லேட்டா வந்தா பசிக்குமே என்றார்

ஒரு ஓட்டலில் சாப்பிட்டபின் கை கழுவ சென்ற சர்தார்ஜி கை கழுவாமல் வாஷ் பேசினைக் கழுவ ஓட்டல் மானேஜர் வந்து ஏன் இப்படி செய்கிறீகள் என ச.ஜி மேலே மாட்டியிருந்த போர்டைக் காட்டினார்
'வாஷ் பேசின்'

தன்னுடைய நாலாவது குழந்தை பிறந்த போது ஒரு சர்தார்ஜி பர்த் சர்டிபிகேட் எழுதினார்
பாதர்:சீக்[கியர்] மதர்:சீக்[கியர்] குழந்தை :சைனீஸ்
அதெப்படி பாதர் மதர் சீக் காக இருக்கும் போது குழந்தை மட்டும் 'சைனீஸ்'

நீங்கள் பேப்பர் படிப்பதில்லையா உலகில் பிறக்கும் ஒவ்வொரு நாலாவது குழந்தையும் சைனீஸ் என்று'

நாங்க என்ன கேணையனுங்களா?

நாங்க தாங்க கேணையனுங்க, அதாவது ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்கதான் ஒத்துகிறோம்

  • அலுவலகத்துல இலவச இணைப்பு, முழு நேரமும் எங்களோட சேட்டிங் பண்றீங்க. வீட்டுக்குப் போனா dialup. உங்க அப்பன் காசுக்கு மட்டும் அப்படி ஒரு செக்யூரிடடி நீங்க. யாருக்கும் தெரியாம மிஸ்ட் கால் மட்டும் குடுப்பீங்க.
  • செல்லு கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்குத் தெரியுமா நீங்க குடுக்கிற ஒரே ஒரு மிஸ்ட் காலுக்கு பல மணி நேரத்துக்கான பில்லு எங்களுக்குத்தான் பழுக்குதுன்னு.
  • வெளியே போகும்போது பெரிய பை தோளில தொங்கும். காலியா வர்ற பை குண்டா வீட்டுக்குப் போவும், எங்க பர்ஸ் மட்டும் சீக்கிரமா இளைச்சுகிட்டே போவும்.
  • ஷாப்பிங்னு கூப்பிட்டா முப்பது ரூவாய் டீ சர்டும் 5 ரூபாய் கம்மலும் போட்டுகிட்டு வருவீங்க. எங்களுக்கோ ஆயிரம் ஆயிரமாப் செலவு வெப்பீங்க.
  • வீட்டுக்கு வந்தா ஒரு வாய் காப்பி தண்ணி தரமாட்டீங்க. கேட்ட வெக்கத் தெரியாதுன்னு சிரிப்பு வேற. ஆனா நாங்க கூப்பிட்டா மட்டும் காப்பிக்கு 150க்கு பில்லை ஆவும்னு வயித்த கலக்க வெப்பீங்க.
  • உங்ககிட்ட ஸ்கூட்டி இருக்கும், பெட்ரோல் புல் டாங்குல இருக்கும். நாங்க வெளியில கூப்பிட்டா, எங்க வண்டியில பெட்ரோல் மட்டும் இல்லே எங்க தாவும் சேர்ந்தே தீரும்.
  • நீங்க மெரினாவே பார்த்து இருக்க மாட்டீங்க. ஓசிலனா எங்க கூட ரெண்டு பக்கம் கால் போட்டுக்கிட்டு மஹாப்ஸ் போலாம்பீங்க.
  • நீங்க விடுற பீலாவுக்கும் புருடாவுக்கும் மயங்கித்தானே எங்க வாயைபொளந்து கேட்டுக்கிட்டே பர்ஸ்ஸையும் திறந்து வச்சு பார்த்துட்டு இருக்கோம்.
  • மாச ஆரம்பத்துல அவுட்டிங் வருவீங்க, அதனால 20ம் தேதியான அண்ணாச்சி கடையில் அக்கவுண்ட் நாங்க வெப்போம்.
  • காலையில பழைய சோறை கறைச்சு குடுச்சுப்புட்டு வந்துட்டு பீட்ஸா கார்னர் கூட்டிட்டு போவச் சொல்றீங்களே, உருப்புடுவீங்களா?
  • We are too smart?னு அடிக்கடி சொல்றதுக்கு அர்த்தம் இப்போதானே புரியுது.

இப்போ சொல்லுங்க ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்க தானே?

Thursday, May 22, 2008

இளையர்களின் ஆத்திசூடி

எல்லாத்தையும் ரிமிக்ஸ் செய்யும் காலம் இது. சரி நாமும் இந்த தவறை செய்யலாம் என்று நினைத்து உருவாக்கப்பட்டது இது. தவறு செய்வது ஒன்று தப்பில்லை. அப்படினு நான் சொல்லவில்லை. வசூல் ராஜா படத்தில் சிரிச்சு சிரிச்சு வந்தா பாடலில் வைரமுத்து சொன்னது தான்

" தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேடா!"

சரி நம்ம கதைக்கு வருவோம், இன்றைய காலத்தில் இளையர்களின் ஆத்திசூடி எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை-

அபிஷேக் பச்சனை ரசி
ஆன் லைன் chatting செய்
இண்டர்நெட்டை கைவிடேல்
ஈமெயிலில் forward msg அனுப்பு
உறங்கும்போது தலையணைகீழ் cellphone வை
ஊறுகாய் தொட்டுகொள்
எக்ஸாமுக்கு பின் பதில் பார்க்காதே
ஏ பி சி மற
ஐ லவ் யூ சொல்ல பழகு
ஒன்றுக்கு மேல் வலைப்பூ உருவாக்கு
ஓ போடு
ஔவையே, என்னை மன்னிச்சிக்கோ!!

Tuesday, May 20, 2008

பத்திரிக்கை படிக்க, சீரியல் பார்க்க, டிவி நிகழ்ச்சிகள் கண்டுகளிக்க நேரமே போதவில்லையே!

நண்பர் ஒருவர் ரொம்பவும் அங்கலாய்த்துக் கொண்டார். நேரம் போதவே இல்லையாம். அப்படி என்ன வேலை என்று கேட்டதற்கு அவர் சொல்கிறார்.

"நாள் தவறாமல் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், குங்குமம், துக்ளக், சினேகிதி, பக்தி, ரிப்போர்ட்டர், ஜூ.வி என்று ஒன்று மாற்றி ஒன்று வந்து விடுகிறது. ஒரு வாரம் படித்து முடிப்பதற்குள் அடுத்த வாரம் வந்து விடுகிறது.

இது போதாதென்று, செல்லமடி நீ எனக்கு, சூரிய வம்சம், கோலங்கள், மேகலா, ஆனந்தம், அரசி, லக்ஷ்மி.. இப்படி எத்தனை சேனல்கள்.. அதில்தான் எத்தனை சீரியல்கள்!

தவிர ஜோடிப் பொருத்தம், நீயா நானா, மஸ்தானா மஸ்தானா.. இப்படி எத்தனை பார்க்கிறது, நேரம் இருந்தால்தானே?" என்கிறார்.

இப்படி ஒரு நேர நிர்வாகப் பிரச்சினை. இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள்.

---------------------------------------------------------------------------
அசட்டுத்தனமாக நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு. சமுத்திரம் போன்ற ஒரு பெரிய ஆபீஸ். பக்கத்து பக்கத்து சீட்டில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். ஒருத்தருக்கு ஓய்வொழிச்சல் இல்லாத வேலை. காலமே சீக்கிரம் வந்து விடுவார். இரவு நெடு நேரம் உட்கார்ந்திருப்பார். வீட்டுக்கும் மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு போவார். அடுத்த சீட்காரர் குஜாலாய் உட்கார்ந்திருக்கிறார். எப்பவும் மேஜை காலி. ரொம்ப நாள் கழித்து பொறுக்காமல் வேலைப்பளுக்காரர் குஜாலிடம் கேட்டே விட்டார், "அதெப்படி, உங்கள் டேபிள் எப்பவும் காலியாகவே இருக்கு?"

அவர் சொன்னார், "ரொம்ப சிம்பிள். என் பெயருக்கு 'ஜான்' என்று மார்க் பண்ணி வரும் அத்தனை பேப்பர்களிலும் நான் ஸ்மித் என்று மார்க் பண்ணி அவுட் டிரேயில் போட்டு விடுவேன். இந்த ஆபீசில் யாரோ ஒரு ஸ்மித் அத்தனை பேப்பர்களையும் கட்டி அழுது கொண்டிருப்பான்!"

வே.ப. காரர் பரிதாபமாகச் சொன்னார், "நான்தான் அந்த ஸ்மித்."

---------------------------------------------------------------------------
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபன் பக்கத்தில் நின்ற பெரிசிடம் ஒரு சின்ன கேள்விதான் கேட்டிருக்கிறான், "டைம் என்ன சார்?" என்று. பெரிசு பதில் சொல்லணும் அல்லது பேசாமல் இருக்கணும்தானே? மொலு மொலு மொலு என்று பிடித்துக் கொண்டு விட்டார்.

"நான் உனக்கு டைம் சொல்லுவேன். அப்புறம் நீங்க எங்கே சார் போகணும் என்பே. நான் மயிலாப்பூர்னு பதில் சொல்லுவேன். அங்கே எங்கே என்பே. நான் கச்சேரி ரோடும்பேன். நானும் அதே இடம்தான்ம்பே. அப்புறம் என் வீட்டுக்கு வருவே. என் பெண்ணிடம் என்ன படிக்கிறே என்பே. ப்ளஸ் டூ மாத்ஸ்ம்பா. நானும் பி.எஸ்ஸி மேத்ஸ்ம்பே. கணக்கு சொல்லித் தரேன்னு ஆரம்பிப்பே. அப்புறம் என்கிட்ட தைரியமா வந்து உங்க பொண்ணை நான் லவ் பண்ணறேன் சார்ம்பே.. வாட்ச் வாங்க வக்கில்லாத பசங்களுக்கெல்லாம் என் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தர நான் தயாரா இல்லே போடா!"

நன்றி: நிலாச்சாரல்

Monday, May 19, 2008

டும் டும் டும்... அத்தான் வருவாக

டும் டும் டும்!!!! இங்க எல்லாருக்கும் ஒன்னு தெரிவிச்சுக்கு விரும்புறோம்- நம்ம பயமறியாப் பாவையர் சங்க உறுப்பினர் 'இம்சை அரசி'க்கு கல்யாணம்ங்கோ!! (ஜோரா எல்லாரும் ஒரு தடவ கைதட்டுங்கோ).
இம்சை அரசிக்கு கல்யாணம் என்றதும் மை பிரண்ட்டுக்கு ஒரே குஷி. ஓசியில் நல்லா ஒரு வெட்டு வெட்டலாம் என்பதற்காக அல்ல (நிஜமா), தோழி ஒருத்தி வாழ்க்கையின் அடுத்த பகுதி போகிறாள் என்ற மகிழ்ச்சியோடு இருந்தார்.
மற்ற ப. பா உறுப்பினர்கள் அனைவரையும் சந்தோஷ் சுப்பரமணியத்தோடு இருந்தனர்.. ச்சீ.. ஐ மின் சந்தோஷமாக இருந்தனர். மை பிரண்ட் அனைத்து உறுப்பினர்களையும் கூட்டிகிட்டு இம்சை அரசி கல்யாணத்திற்கு இரண்டு நாளைக்கு முன்பே சென்றார். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தோம். கல்யாண நாள் அன்று மணப்பெண்ணை அலங்கரிக்கும் வேலை எங்கள் கடமை! கடமை என்று வந்துவிட்டால் நாங்கல்லாம் காந்தி மாதிரி, நேர்மை என்று வந்து விட்டால் நாங்கல்லாம் நேரு மாதிரி!
ஒரு அறைக்குள் நாங்க எட்டு பேரும் இம்சை அரசியை அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம்.. இதோ கல்யாண கலாட்டா..
இம்சை அரசி: ஏய் காயத்ரி வலிக்குதுடி, பார்த்து hairபின்ன குத்து.
எல்லாம் காயத்ரிகளும்: ஏய் நான் என்ன பண்ணேன். நான் பாட்டுக்கும் என் வேலைய பாத்துகிட்டு இருக்கேன்.
இம்சை அரசி: ஐயோ உங்கள சொல்லல்ல, இவள சொன்னேன்.
கண்மணி: என்ன இம்சை அரசி, மாப்பிள்ளை எப்படி இருப்பாரு? அஜித் மாதிரியா? இல்ல விஷால் மாதிரியா? இல்ல ரண்டும் கலந்த விஜய் மாதிரியா?
அனுசுயா: அவரு இவளுக்கு பிடிச்ச மாதிரி.. அப்படிதானே அரசி!
(கோரஸா எல்லாரும் சிரித்தனர். இந்த தமிழ் படங்களில் ஹீரோயினுக்கு பக்கத்துல சில பெண்கள் நின்று கொண்டு தேவையில்லாமல் சிரிப்பாங்களே, அந்த மாதிரி வச்சுக்குங்க)
இம்சை அரசி: ஏய் ரொம்ப பேசினீங்களா, சாப்பாடு கிடையாது!
மை பிரண்ட் : நோநோநோநோ!!
அனுசுயா: அட சத்தம் போடாம இருக்குறீயா நீ! இப்ப ஏன் நோன்னு கத்துற. அப்பரம் மாப்பிள்ள, பொண்ண ரொம்ப torture பண்ணுறோம்னு நினைச்சுட போறாரு.
காயத்ரி: என்ன அரசி, கல்யாணம் நடக்க போகுது. கொஞ்சம்கூட முகத்துல வெட்கம் இல்ல.. என்ன பொண்ணு போ நீ..
இம்சை அரசி: வெட்கம்ன்னா??
மை ஃபிரண்ட்: அது சரி, நான் அப்பவே சொன்னேன் ..daily 2 மணி நேரம் வெட்கப்படற மாதிரி train பண்ணிக்கோன்னு. கேட்டா தானே.
g3: வெட்கம் தானே, மாப்பிள்ளைய பாத்த பிறகு தானா வந்துடும்.
காயத்ரி: அப்பரம் அரசி, இனி வலைப்பூ பக்கம் வர நேரம் இருக்குமா?
தமிழ்மாங்கனி: ஏன் இல்லாம, இனி தான் காதல் கதைகள், காதல் கவிதைகள் எல்லாம் குருவி மாதிரி..ச்சி ஐ மின் அருவி மாதிரி கொட்ட போது!
அனுசுயா: இல்லடி, கல்யாணம் முடிஞ்சு, அவங்க வீடு, இவங்க வீடுன்னு விருந்து, அப்பரம் honeymoon trip, அப்படி இப்படின்னு இரண்டு மூனு மாசத்துக்கு இம்சைக்கு ஒரே பிஸி தான்!!
(அனைவரும் அதே கல்யாண பொண்ணு தோழிகளின் சிரிப்பை சிரித்தனர்.)
மை பிரண்ட்: ஆமா நீ எப்போதும் இரட்டை வாழைப்பழம் சாப்பிடுற ஆளுதானே, அப்ப கண்டிப்பா இரட்டை குழந்தைதான் பிறக்கும்.
இம்சை அரசி: ஏய் ச்சீ போடி!
காயத்ரி: தோடா, வெட்கம் வந்துடுச்சு டோய்!
(எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்ய...)
அறை கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டது. காயத்ரி சென்று கதவை திறந்தார்.
"இங்க யாரு தமிழ்?" என்றார் ஒரு பெரியவர்.
அனைத்தும் ப.பா சங்க உறுப்பினர்களும் :(கோரஸாக) நாங்க எல்லாரும் தமிழ் ஆளுங்க தான்.
"அட அத சொல்லல்ல, தமிழ்மாங்கனின்னு ஒரு பொண்ணு, அந்த பொண்ண கூப்பிடுறாங்க, மேடையில வாழ்த்து சொல்ல.. சீக்கிரம் வாங்க." என்றார்.
தமிழ்மாங்கனி மேடையில்: மைக் டெஸ்திங், திரிஷா, நயன், சிம்ரன்
"என்னது??" என்றார் அவர்.
தமிழ்மாங்கனி: இல்ல, எத்தனை நாளைக்கு தான் மைக் டெஸ்திங் 1,2,3ன்னு சொல்றது. அதான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லி பாத்தேன். ஏன்னா, நாங்க பயமறியாப் பாவையர்கள்!! பாவையர்கள்! பாவையர்கள் (echo effectல்)
"சரி வாழ்த்த சொல்ல" என்றார்.
தமிழ்மாங்கனி:
இயக்குனர் இறைவனுடைய
இன்றைய
புதிய கதை
உன் வாழ்க்கையின்
என்னொரு அழகிய
பக்கம்
கதாநாயகி நீயே
புதுமுகத்துடன்
கதாநாயகன் அவரோ
அறிமுகத்துடன்
கல்யாண வானில்
காதல் வானவில்
அன்பான நதியில்
அக்கறையான நீரோடை
உன் வாழ்க்கையில்
இனி சோலைவனம்
இனிமையான மலர்வனம்!
வாழ்க! வாழ்க!
என்று வாழ்த்துவோர் ப.பா சங்கம்!
கல்யாணம் இனிதே முடிவடைய, மை பிரண்ட் முதல் பந்தியில் தன் கடமையை ஆரம்பித்தார் :)))))

Friday, May 16, 2008

வெட்கமே இல்லாம....

போன வருசம் இதே மாசம், நான் பாலைவனத்துல இருந்தப்போ சோத்துக்கு ரொம்பத்தான் காய்ஞ்சு போயிருந்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு சமைச்சு(வேக வெச்சு) சாப்பிட்டுக்கிட்டே நாளைக் கழிச்சுட்டு இருந்தேன். ஒரு நாள் நம்ம கூட்டாளி வந்து "மாப்ளே, நமக்கு வாய்தா அவ்ளோதான், இந்தியா போறேன். என்கிட்ட ஒரு இந்திய மிக்ஸி இருக்கு. மிக்ஸி கண்டிசனை பார்த்து ஒருத்தனும் வாங்க மாட்டேங்குறான். சும்மா குடுத்தாக்கூட வாங்க ஆள் இல்லை. ஆப்போதான் உன் ஞாபகம் வந்துச்சு. வந்து எடுத்துக்கோ"ன்னான். அப்பாடா.. இட்லி, தோசைக்கு வழி பண்ணிய தெய்வமே கும்பிட்டுட்டு ஓட்டமா போயி மிக்ஸிய எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்புறமென்ன? மொதல்ல நல்ல சட்னி அரைக்கிறது எப்படின்னு கூகிளோ கூகிளு. ஒரு 20 பக்கத்தைப் பார்த்து, 10 பக்கத்தை செலக்ட் பண்ணி, 5ஐ தேத்தி.. ஒரு வழியா சட்னி எப்படி அரைக்கிறதுன்னு மனப்பாடமே ஆகிருச்சு.

அப்போதான் சடார்னு மண்டையில ஏறுச்சு. மாவுக்கு என்ன பண்ண. எடுடா வண்டிய, தேடுடா அதுக்கு raw materla. தேடிப் புடிச்சு இட்லி அரிசியும், உளுத்துப் போற நெலமையிலிருந்த உளுந்தையும் வாங்கியாந்தேன். கூகிள் மொதலாளி மாவை எப்படி அரைக்கிறதுன்னு சொல்ல மாட்டேன்னு அடம்புடிக்க, "போடா வெங்காயத்தான் எங்க ப.பாச மக்கள் கில்லி மாதிரி சும்மா சேட்ல தட்டினா மாவே அனுப்புவாங்க, நீ பெரிய டுபுக்கு"..................... அப்படின்னு கூகிள் சேட் தொறந்து பபாச மக்கள் யாராவது இருக்காங்களான்னு பார்த்தேன். டொய்ங்கன்னு சத்தம்.


கவிதாயினி: "அண்ணா சவுக்கியாமா?"

"அதெல்லாம் இருக்கட்டும், எப்படி மாவரைக்கிறது?" இது நானு.

"கிரைண்டர்லதான், இதுகூடவா தெரியாது? நீங்க எல்லாம் என்னத்த படிச்சு கிழிச்சீங்களோ?"எகத்தாளமா சிரிச்சுகிட்டே இப்படி ஒரு பதிலு.

எனக்கோ செம கடுப்புதான் என்ன பண்ண? மாவாட்டி ஆவனுமே
"என் கிட்ட மிக்ஸிதான் இருக்கு, பரவாயில்லியா?"

"ஹ்ம்ம் பரவாயில்லே, அட்ஜஸ்ட் பண்ணி அரைச்சுரலாம்"

"சரி, எப்படி?"

"ஊர வெச்சதை போட்டு சுட்சிய போட்டா அரைக்குது. இது கூடத்தெரியாமையா இத்தனை வருசம் உயிரோட இருக்கீங்க? ஹஹஹாஹ்ஹ்ஹ்"

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுத்திருச்சு, மிக்ஸி இல்லீங்க என் தலைதான். " அரிசி எவ்வளவு போடனும், உளுந்து எவ்வளவு போடனும்? அதுதான் தெரியனும். சுட்சிய போட்டா ஓடும்னு எங்களுக்கும் தெரியும்"

"அண்ணா வேலை இருக்கு, பார்க்கலாம் பை"

"சொல்லிட்டுப் போ, இல்லாட்டி ஊர்ல இருக்க மாட்டே"

"தெரிஞ்சா சொல்ல மாட்டோமா? ____________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)

"சரி வெயிட் பண்ணு. இன்னொரு சேட் விண்டோ வருது"


"அண்ணா" இது அனு.

ஆஹா வந்துட்டாடா என் குல தெய்வம், மாரியாத்தா.

"தெய்வமே, மாவரைக்க என்னென்ன போடனும்?"

"யு மீன் இட்லி மாவு?"

அப்பாடா வெவரமா ஒருத்தியாவது இருக்காளேன்னு "ஆமாம்மா ஆமா"

"தோசைக்குக் கூட"

"அத்தேதான். ஆமாண்டி என் ராசாத்தி" மனசுக்குள்ள நெய் தோசை மணக்க ஆரம்பிச்சுருச்சு

"குழிப்பணியாரம் கூட.."


ஆஹா, என்ன ஒரு பொது அறிவு "அப்படித்தாண்டி என் ராசாத்தி"

"இட்லிக்கு எல்லாம் என்ன போயி கேட்கலாமா? பிட்சா பர்கர் அப்படின்னு கேளுங்க."

"தோடா, அறுக்க மாண்டாவதனுக்கு அம்பெத்துட்டு அருவாளாம்.இட்லிக்கு இப்போ சொல்லு போதும்"

"ஹிஹிஹி________________________________________" (இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)

"அண்ணா, இதுக்கு எல்லாம் பிஸ்து G3தான் இன்னும் ஒரு மணி நேரத்துல சேட்டுக்கு வந்துருவாங்க. அவுங்கள கேளுங்க. சும்மா பிச்சு எடுத்துருவாங்க"

"என்னத்த, தோசையவா?"

"அட அவுங்க சரியான சமையல் ஸ்பெசலிஸ்டு தெரியுமா? பபாசவுக்கு ஒரே செஃபு அது G3தான்"

மனசுக்குள்ள நெய் வாசம் வீசுன தோசை, லைட்டா கருகிறாப்ல ஒரு எபஃட்டு. சே, இதுக்கு எல்லாமா கலங்குறது. சிங்கம் இதுக்கே சோர்த்துட்டா எப்படி? G3 வந்து வயித்துல மாவை வார்ப்பாங்கன்னு நினைச்சுகிட்டே சேட் விண்டோவ பார்த்துட்டே இருந்தேன். அப்பவே நடு ராத்திரி, இன்னும் ஒரு மணி நேரமா? இருக்கட்டும். நமக்குன்னு ஒரு தோசை பொறக்காமையா இருக்கும்?

டொங்க்...டொங்க்..டொங்க்..
எப்ப தூங்கினேன்னே தெரியல, கண்ண முழிச்சு பார்த்த G3. உலகத்துல மானஸ்த்தின்னு ஒன்னு இருந்தா அது G3தான், பின்னே ஒத்த லைன்ல அனுபோட்ட மெயிலுக்கு ஓடோடி வந்துருக்காங்களே.

அப்படியே சிவாஜி மாதிரி பாசத்தக் கொட்டிப் பேச ஆரம்பிச்சேன் "அம்மா, மாவரைக்கிறது எப்படின்னு சொல்லும்மா. நீ சின்ன வயசா இருக்கும்போது..."

"ஹல்லோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ______________(இந்த ___க்கு என்ன அர்த்தம்னு கடைசி பத்திக்கு முன்னாடி செவுப்புல இருக்கும் பாருங்க)ஆளை விடுங்க. டொங்க். ஆப்லைன்னுக்கு போயாச்சி.

வெளங்குமாடா? ஒரு தோசைக்கு ஆசைப்பட்டு இப்படிச் சின்னா பின்னமாயிட்டேனே.

அதென்ன அந்த _________________

"யாராவது எனக்கு இட்லி, தோசை சுட்டுப் போட்டா நல்ல ரவுண்டு கட்டி திங்கத்தான் தெரியும். மாவெல்லாம் அரைக்கத் தெரியாது. "

இப்படித்தாங்க, சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி சொன்னாங்க. ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனா டபுள் மீல்ஸ் திங்கிற புள்ளைங்க, ஒரு தோசைக்கு வழி இல்லாம பண்ணிபுட்டாங்க. இவுங்களையும் நம்பி ஒருத்தன் வருங்காலத்துல தாலிய கட்டி தோசைக்கு ஆசப்படுவானே அந்த மவராசன், போனா ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினானோ.

இப்போ தலைப்புக்கு வரலாமா.

வட்டல்ல சோத்தக் கொட்டி வாய்க்கா வெட்டி, அதுல சாம்பார் ஊத்தி (தலைப்பை ஒரு முறை நிமிர்ந்து உக்காந்து படிங்க) திங்கிறீங்களே, மாவாட்டத் தெரியாதா?

Thursday, May 15, 2008

இன்று ப.பா. சங்கத்தில்..

ZZzzzzZZZzzzzZZZzzzzZZZzzz.... எப்போ கவிதாயினிக்கு PRO பதவி கொடுத்து ரிஷப்ஷன்ல உட்கார வச்சாங்களோ அப்போதிலிருந்தே இந்த சீட்டு மட்டும்தான் பிஜியா இருக்கு.. உட்கார்ந்துக்கிட்டே தூங்குறது, படுத்துக்கிட்டே தூங்குறது, காதுல ஃபோனை வச்சிக்கிட்டே தூங்குறதுன்னு தினமும் ஒவ்வொரு ஸ்டைலில் கலக்குறாங்க.. முதல்ல இந்த ரிஷப்ஷன்ல இருக்கிற மேஜையையும் நாற்காலியையும் தூக்கி தூர போடணும்..

அடுத்து.. kRrr.. koRr..mMm.. cHap Chap..SLurrppp... இது என்னன்னு நான் சொல்லிதான் தெரியணுமா என்ன? நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்களே.. G3 நொறுக்கு தீனியை நொருக்கி தின்ற அழகுதான் இது! இதை என்னால எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியல. அப்படி ஏதாவது செய்தா "என்னை கொடுமை படுத்துறாங்க.. காப்பாத்துங்க"ன்னு கத்தி ஊரை, உலகத்தையே கூட்டிடுறாங்க.. என்ன கொடுமை சார் இது!

"காதலா காதலா காதலால் தவிக்கிறேன்.."... இவ்வளவு நாளா மொக்கை போட்டு நம்மை இம்சித்துக்கொண்டிருந்த இம்சை அரசி இப்போ ஒரு நல்லவரின் இம்சையில் வசமாய் மாட்டிக்கொண்டார். இவங்க பொட்டி கட்டிட்டு ஊரு பக்கம் போயிட்டதா காத்து வாக்குல தகவல் வந்துச்சு. திருமணம் முடிஞ்சு எப்போ நம்மளையெல்லாம் இம்சை பண்ண வருவாரோ?... காத்திருக்கிறோம்.

Dush Dush. YeeHaah.. Dishyoommmm.... யாரோ குஸ்தி ப்ராக்டிஸ் பண்ற மாதிரி இருக்கே? யாருப்பா அது? மக்களே, கொஞ்சம் இருங்க..நான் எட்டிப் பார்த்துட்டு சொல்றேன். ஆஹா அஹா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.. போன பதிவுல "நான் காது கடிச்ச மைக் டைசன் ஊருல"ன்னு சொன்னவங்க அடுத்த பதிவுல "காது கடிச்ச மைக் டைசன் என் காலுக்கடியில"ன்னு சொல்லுவாங்க போல.. அம்மணி அனுசுயா வெயிட்டான ட்ரேயினிங்ல இருக்காஹ..

"காணவில்லை.. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு இரண்டு பிரம்படிகளும், மூனு புத்தகம் வீட்டுப்பாடங்களும் கொடுக்கப்படும்" என்ற பேன்னர் இங்கே மாட்டியிருக்கு. அடடே.. போட்டோல உள்ளவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஆஹா.. இவங்கதானே அவங்க.. அதான் மணி மணியா எழுதுவாங்களே கண்மணி டீச்சர்!! ஆஹா டீச்சர், உங்களுக்கு ஏன் இந்த நிலமை? எங்கே இருக்கீங்க..உங்களை கண்டுபிடிக்க வேடந்தாங்கல் பறவைகள் அனுப்பியிருக்கேன்.

----------------------------------------------------------------------------------------------------------
இந்த ஐந்து பேரை தேடி தேடி கண்டுபிடிக்கவே .:: மை ஃபிரண்ட் ::. எவ்வலவு கஷ்டப்படுறா.. பாருங்க மக்களே.. இதனலாத்தான் சொல்றேன். மை ஃபிரண்ட் குழந்தையை திட்ட கூடாது.. பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லவ.. அவ்வ்வ்வ்.....

"டொக் டொக் டொக்"

மை ஃபிரண்ட்:
வெளியே யாரு? உள்ளே நானு..

அனானி: வெளியே நானு.. உள்ளே யாரு?

மை ஃபிரண்ட்: ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா... இன்னைக்கும் எனக்கு சனி உச்சத்துலதான் போல.. யாருய்ய்யா அது?

அனானி: கொஞ்சம் வந்து எட்டிதான் பார்க்கிறது?

மை ஃபிரண்ட் வெளியே வந்து எட்டி (அதாவது தலையை மட்டும் வெளியே நீட்டி) பார்க்கிறார்..

மை ஃபிரண்ட்: இப்போ சொல்லும்மா.. யார் நீ?

அனானி: இது படம் பேர். "நீயா?"ன்னு கேளுங்க..

மை ஃபிரண்ட்:
அடங்கொய்யாலே.. எனக்கு BP எல்லாம் எகுறுது. நீ யார்?

அனானி: நியூ அட்மிஸ்ஷன்

மை ஃபிரண்ட்: உனக்கு யார் கொடுத்த நியூ அட்மிஸ்ஷன்.. எங்களுக்கு மஞ்சள் அறைத்து கொடுத்தாயா? இல்ல நாத்துதான் நட்டாயா? (மனசுக்குள்..) இன்னைக்கு பார்த்த கட்டபொம்மன் படத்து வசனத்தை இங்கே பேசி காட்டியாச்சு. :-)))

அனானி: அட்மிஷன் கொடுத்தவரே யார் கொடுத்தான்னு கேட்டா என்ன சொல்ல.. நகருங்க.. கதவுல நின்னு ஒழுங்க டியூட்டி பாருங்க.. நான் உள்ளே போறேன். அடடே.. இந்த ரூம் நல்லா இருக்கே.. இனி இந்த ரூம் என்னது.. இங்கே உள்ள குப்பைகளையெல்லாம் எடுத்து வெளியே வீசிடு கூர்கா..

மை ஃபிரண்ட்:
என்னது கூர்காவா? இது என்னுடைய அறை.. ஹேய் ஹேய் ஹேய்.. அதெல்லாம் எங்கே வீசுற?

அனானி: எத்தனை தடவை சொல்றது? கூர்கா கதவுகிட்டதான் நிக்கனும். போய் அங்கே நில்லு.. நான் கூப்பிடுற வரைக்கும் உள்ளே வர கூடாது..

மை ஃபிரண்ட்:
அவ்வ்வ்வ்வ்....

அனானி: மக்களே, நான் யாருன்னு பார்க்குறீங்களா? நாந்தான் மாங்கனி... தமிழ் மாங்கனி.. உங்களையெல்லாம் இனி இம்சிக்க வந்த மாங்கனி. வணக்கம் வணக்கம் வணக்கம்

மை ஃபிரண்ட்: (அப்பாவியாக..) அவ்வ்வ்.. என்னை வச்சி காமெடி கீமடி பண்ணலையே???????

Saturday, May 10, 2008

நான் இப்போ காது கடிச்ச மைக் டைசன் ஊருல...

அனு : கரீபூ கரீபூ

மைப்ரெண்ட் : என்னது கருப்பு கருப்புதானா?

அனு : ஆகா வாடி அம்மா வா கரீபூனா நல்வரவுனு அர்த்தம்

மைப்ரெண்ட் : ஓ இது என்ன புதுசா இருக்கு

அனு : இதுதான்மா ஸ்வாகிலி மொழி

மைப்ரெண்ட் : (மனதுக்குள்) ஆரம்பிச்சுட்டாங்கப்பா அலம்பல
சரி சரி சொல்லுங்க ஊரு உலகம்லாம் எப்படி இருக்கு ?

அனு : ம் அதுக்கென்னம்மா அம்சமா இருக்கு நல்ல மண்வளம் மரம் செடி கொடி கடல் ஆடு மாடு மனுசங்க எல்லாம் நல்லா இருக்கு

மைப்ரெண்ட் : இது வரைக்கும் நல்லா இருக்குனு சொல்லுங்க

அனு : இதுக்கு பேருதான் கூட இருந்து குழி பறிக்கறதுனு சொல்லு வாங்க.

மைப்ரெண்ட் : தப்பா எடுத்துக்காதீங்க வாய் தவறி உண்மை வந்திடுச்சு

அனு : ஆகா இனி உன்னைய பேசவிட்டா நீ கவுத்திடுவ சரி சரி அபாரி சா காசி?

மைப்ரெண்ட் : என்னது ஆசாரி காசிக்கு போனாறா? அவரு எங்க போனா எனக்கு என்னங்க?

அனு : அய்யோ இது கூட தெரியலயா அபாரி சா காசினா உன் வேலை எல்லாம் எப்படியிருக்குனு கேட்டேன்.

மைப்ரெண்ட் : ம் என் வேலை எல்லாம் சரியாதான் போகுது புது ஊரு சுத்தி பார்த்தீங்களா?

அனு : ஓ அதெல்லாம் வாரா வாரம் டவுனுக்கு போவமே

மைப்ரெண்ட் : என்னது டவுனுக்கா அப்ப நீங்க எங்க இருக்கீங்க

அனு : நாங்க ஒரு பெரிய மல்ட் நேசனல் வில்லேஜ்ல இருக்கோமே

மைப்ரெண்ட் : அதென்னது மல்டி நேசனல் வில்லேஜ்

அனு : அது அப்டிதான் இப்டியெல்லாம் கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல

மைப்ரெண்ட் : சரி சரி விசயத்தை சொல்லுங்க உங்க ஊரு எப்படியிருக்கு
அனு ஊரு சூப்பரு ஊரு ஆனா என்ன தனியா எங்கயும் போக முடியாது. ஆசையா 10 வளையல் காதுல கம்மல் எதும் போட்டுட்டு போக முடியல
போட்டுட்டு போனா காதையே அறுத்து எடுத்துட்டு போயிடுவாங்க

மைப்ரெண்ட் : அய் அப்ப அவங்க காது கடிச்ச மைக் டைசன் பரம்பரை போல இருக்கு

அனு : ஆமாண்டி அம்மா அவங்களேதான்

மைப்ரெண்ட் : அப்ப சரி உங்க நகை நட்டெல்லாம் என்கிட்ட குடுத்து வையுங்க நான்பத்திரமா பாத்துக்கிறேன்.

அனு : ஆமா நீ நல்லா பார்ப்பியே தெரியுமே நீ பார்த்துக்கறது கல்யாணம்னு சங்கத்தை பார்த்துக்க சொன்னா திரும்பி வந்து பார்த்தா சங்கத்தையே காணோம்
எல்லாத்தையும் ப்ளாட் போட்டு வித்துட்டீங்களே

மைப்ரெண்ட் : இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னாங்க

அனு : அது ஒரு நல்லவரு சொன்னாரு அதுக்கென்ன இப்ப

மைப்ரெண்ட் : ஆகா அப்படியா சேதி அந்த நல்லவர நான் உண்டு இல்லைனு பண்றேன் பாருங்க

அனு : ஏன்

மைப்ரெண்ட் : ம் தூங்கிட்டு இருந்த பூனைய இப்படி எழுப்பி விட்டுட்டாரே இனி ஆ ஊ னா கத்த ஆரம்பிச்சுடுமே அதுக்குதான

அனு : அடி பாவி என்னைய கடைசில பூனைனு சொல்லிட்டயே?

எழுதியவர்,
அனுசுயா


பி.கு: அனுசுயா எழுதிட்டு அவங்க பதிவா போடுறதுக்குள்ள நெட்டு புட்டுக்குச்சாம். அதனால், .:: மை ஃபிரண்ட் ::. ஹெல்பிங். :-)

Thursday, May 8, 2008

கஸ்டமர் சப்போர்ட் கஷ்டம்டா சாமி!!!!

கஸ்டமர்: ஹேல்லோ
HP கஸ்டமர் சர்வீஸ்: ஹேல்லோ, HP கஸ்டமர் சர்வீஸ்.
கஸ்டமர்: என் ப்ரீண்டர் வேலை செய்ய மாட்டேங்குது!!
HP கஸ்டமர் சர்வீஸ்: ப்ரீண்டர்ல ஏதாவது ப்ராப்ளம் இருக்கா? ஏதாவது எர்ரோர் காட்டுதா?
கஸ்டமர்: ம்ம்.. எலி மாட்டிக்கிச்சு
HP கஸ்டமர் சர்வீஸ்: எலி (Mouse)? எலிக்கும் பிரிண்டருக்கும் என்ன சம்பந்தம்?
கஸ்டமர்: சார், நான் என் ப்ரிண்டரோட படம் அனுப்புறேன். நீங்களே பார்த்து என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


யாருக்காவது எலியை எப்படி வெளியே எடுக்கணும்ன்னு தெரியுமா? இவருக்கு ஹெல்ப் பண்ணுங்கோ! :-)

Sunday, May 4, 2008

ஆரிராரோ கண்ணுறங்கு!!

வ.வா.சங்கம் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்துல இருக்காங்க. போட்டி எல்லாம் அறிவிச்சி நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு ஆளாளுக்கு ரெண்டு ஜுரத்துல அலையுறாங்க. கொஞ்ச நாளா யாருக்கு பிங் பண்ணுனாலும் சும்மா இருங்க நான் வ.வா. சங்க போட்டிக்கு அத எழுதுறேன் இத எழுதுறேன்னு படம் காட்டுறாங்க. பாக்க சந்தோஷமா தான் இருக்கு. ஆனாலும் ஒரு வருத்தமுங்க. இந்த ப.பா.சங்கம் ன்னு ஒன்னு இருந்துச்சே அது இப்போ இருக்கா இல்லையான்னே தெரியலையே?


போன வருஷம் ஏப்ரல் மாதத்துல கற்பனை வெள்ளம் கரைபிரண்டு ஒடுனப்போ பாபாசங்கம் அறிமுகம் கண்டதா சொல்லுறாங்க.இன்னைய தேதிக்கு ஒரு வருஷம் முடிஞ்சி போச்சி.. இன்னமும் அந்த பக்கம் ஒரு சத்தத்தையும் காணல. சங்கம் அறிமுகம் கண்டப்போ இப்படி சொன்னாங்க.

பெண்ணென்றால் தாய்மை
பெண்ணென்றால் அன்பு
பெண்ணென்றால் பாசம்
பெண்ணென்றால் கருணை
பெண்ணென்றால் வீரமும் உண்டு

இப்போ பெண்ணென்றால் சங்கமும் அம்பேல்ன்னு சேர்த்துக்கணும் போலருக்கே. என்ன கொடும பாப்பாஸ் இது?


''ஐயேங்... நானு? நான் இந்த பல்லி.. கரப்பான் பூச்சி..எலி.. இந்த மாதிரி பயங்கர மிருகங்கள கண்டா கூட பயப்படவே மாட்டேன் தெரியுமா? பாம்ப கண்டா மட்டும் லேசா ஜெர்க் ஆகி ஓடிப் போய்டுவேன்.. மத்தபடி நான் சுடிதார் போட்ட ஜான்சி ராணியாக்கும்! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க ப்ளீஸ்! ''

என்ன பார்க்குறீங்க மேல உள்ளத பின்னூட்டமா போட்டு பாப்பாசங்கத்துல பி.ஆர்.ஒ வா சேர்ந்தாங்க கவிதாயனி. இவங்கதானே ஆண்டு விழா கொண்டாட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்யணும்? பாலைத்திணைல பதிவு போடுறதுக்கே இவங்களுக்கு இப்போ நேரம் கிடைக்கல போல.

சங்கத்தோட கண்காணிப்பு ஆலோசகரா இருந்த கண்மணி டீச்சர இப்பவெல்லாம் பதிவுகள் பக்கம் பார்க்கவே முடியுறதில்ல. சின்ன புள்ளைங்கள நம்பி வந்திருக்க கூடாதுன்னு தெரிஞ்சி ஒதுங்கிட்டாங்க போல. சங்கத்தோட தல அனுசுயா கல்யாணம் முடிஞ்சப்புறம் இங்க வர்றது இல்ல. பாவை பத்தியும் ஒண்ணும் தெரியல. இம்சை அரசி கல்யாண பிஸில இருக்காங்க. இனிமே அவங்களும் இங்க வருவாங்களானு தெரியல. மிச்சம் இருக்கிறது g3 யும் மை பிரண்டும் தான்.


பிரவாகமா அன்பு பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்ச பிறகு g3 க்கு எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்து போடவே நேரம் பத்தல. ஆக கடைசில மை பிரண்ட் தான் அப்பப்ப பதிவு போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்களும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு இப்ப தேன் கிண்ணத்துல பாட்டு போட்டு காலத்த ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

பாப்பாசங்கத்துக்கு எதிர்காலம் ஏதும் இருக்கா? பதில் சொல்லுங்க பாப்பாஸ்?

இப்படிக்கு,
நிஜமா நல்லவன்

 

BLOGKUT.COM