Tuesday, May 20, 2008

பத்திரிக்கை படிக்க, சீரியல் பார்க்க, டிவி நிகழ்ச்சிகள் கண்டுகளிக்க நேரமே போதவில்லையே!

நண்பர் ஒருவர் ரொம்பவும் அங்கலாய்த்துக் கொண்டார். நேரம் போதவே இல்லையாம். அப்படி என்ன வேலை என்று கேட்டதற்கு அவர் சொல்கிறார்.

"நாள் தவறாமல் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், குங்குமம், துக்ளக், சினேகிதி, பக்தி, ரிப்போர்ட்டர், ஜூ.வி என்று ஒன்று மாற்றி ஒன்று வந்து விடுகிறது. ஒரு வாரம் படித்து முடிப்பதற்குள் அடுத்த வாரம் வந்து விடுகிறது.

இது போதாதென்று, செல்லமடி நீ எனக்கு, சூரிய வம்சம், கோலங்கள், மேகலா, ஆனந்தம், அரசி, லக்ஷ்மி.. இப்படி எத்தனை சேனல்கள்.. அதில்தான் எத்தனை சீரியல்கள்!

தவிர ஜோடிப் பொருத்தம், நீயா நானா, மஸ்தானா மஸ்தானா.. இப்படி எத்தனை பார்க்கிறது, நேரம் இருந்தால்தானே?" என்கிறார்.

இப்படி ஒரு நேர நிர்வாகப் பிரச்சினை. இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள்.

---------------------------------------------------------------------------
அசட்டுத்தனமாக நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு. சமுத்திரம் போன்ற ஒரு பெரிய ஆபீஸ். பக்கத்து பக்கத்து சீட்டில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். ஒருத்தருக்கு ஓய்வொழிச்சல் இல்லாத வேலை. காலமே சீக்கிரம் வந்து விடுவார். இரவு நெடு நேரம் உட்கார்ந்திருப்பார். வீட்டுக்கும் மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு போவார். அடுத்த சீட்காரர் குஜாலாய் உட்கார்ந்திருக்கிறார். எப்பவும் மேஜை காலி. ரொம்ப நாள் கழித்து பொறுக்காமல் வேலைப்பளுக்காரர் குஜாலிடம் கேட்டே விட்டார், "அதெப்படி, உங்கள் டேபிள் எப்பவும் காலியாகவே இருக்கு?"

அவர் சொன்னார், "ரொம்ப சிம்பிள். என் பெயருக்கு 'ஜான்' என்று மார்க் பண்ணி வரும் அத்தனை பேப்பர்களிலும் நான் ஸ்மித் என்று மார்க் பண்ணி அவுட் டிரேயில் போட்டு விடுவேன். இந்த ஆபீசில் யாரோ ஒரு ஸ்மித் அத்தனை பேப்பர்களையும் கட்டி அழுது கொண்டிருப்பான்!"

வே.ப. காரர் பரிதாபமாகச் சொன்னார், "நான்தான் அந்த ஸ்மித்."

---------------------------------------------------------------------------
பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபன் பக்கத்தில் நின்ற பெரிசிடம் ஒரு சின்ன கேள்விதான் கேட்டிருக்கிறான், "டைம் என்ன சார்?" என்று. பெரிசு பதில் சொல்லணும் அல்லது பேசாமல் இருக்கணும்தானே? மொலு மொலு மொலு என்று பிடித்துக் கொண்டு விட்டார்.

"நான் உனக்கு டைம் சொல்லுவேன். அப்புறம் நீங்க எங்கே சார் போகணும் என்பே. நான் மயிலாப்பூர்னு பதில் சொல்லுவேன். அங்கே எங்கே என்பே. நான் கச்சேரி ரோடும்பேன். நானும் அதே இடம்தான்ம்பே. அப்புறம் என் வீட்டுக்கு வருவே. என் பெண்ணிடம் என்ன படிக்கிறே என்பே. ப்ளஸ் டூ மாத்ஸ்ம்பா. நானும் பி.எஸ்ஸி மேத்ஸ்ம்பே. கணக்கு சொல்லித் தரேன்னு ஆரம்பிப்பே. அப்புறம் என்கிட்ட தைரியமா வந்து உங்க பொண்ணை நான் லவ் பண்ணறேன் சார்ம்பே.. வாட்ச் வாங்க வக்கில்லாத பசங்களுக்கெல்லாம் என் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தர நான் தயாரா இல்லே போடா!"

நன்றி: நிலாச்சாரல்

1 Comment:

said...

கடைசியா வந்த ஜோக், ரொம்ப சிரிப்பா இருந்துச்சு!! ஹாஹாஹா..:)))

 

BLOGKUT.COM