Tuesday, July 10, 2007

கடலைன்னா என்ன???

ஹாய் ஹாய் ஹாய்..... மக்கள்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க? பாத்தே ரொம்ப நாளாச்சு. இதுக்கு மேல வராம இருந்தேனா இப்டி ஒருத்தி இருக்கறதே எல்லாருக்கும் மறந்து போயிடும்ன்ற பயத்துல வரல..... ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா ஒரு டாபிக் கிடச்சது. அதான் நம்ம மக்கள்ஸ் அறிவு எந்த அளவுக்கு பெருகி போயிருக்குனு பாக்கலாம்னுதான் வேக வேகமா ஓடி வந்தேன்.


எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.


கடலைன்னா என்ன?


போன வெள்ளி கிழமை என் ஃபோன் பில் கட்ட வரிசைல நின்னப்ப எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு. பின்னாடி ஒரு பையன். ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். அந்த பையன் கொஞ்சம் லேட்டா வந்துட்டான். அவன் வரதுக்குள்ள நான் கரடி மாதிரி நடுவுல போயிட்டேன் போல. அவன் வந்ததும் அந்த பொண்ணு சைடுல வர சொல்லி கூப்பிட்டுச்சு. இனி ஓவர் டு கான்வர்சேஷன்


அவன் : அதான் உன்கிட்ட கடலை போடறதுக்குன்னு ஒரு இளிச்சவாயன் இருக்கானே அவன்ட்ட கடலை போடு



அவள் : ஏ! அதுக்கு பேரு கடலை இல்ல



அவன் : கடலை இல்லாம வேற என்னவாம்?



அவள் : தெரிஞ்சவங்ககிட்ட பேசினா அதுக்கு பேரு கடலை இல்ல. தெரியாதவங்க கிட்ட தேவை இல்லாம பேசினாதான் கடலை



அவன் : யார் சொன்னா? ஒரு மேட்டரும் இல்லாம வெட்டியா நேரம் போறது தெரியாம பேசிட்டு இருந்தா அதுக்கு பேரு கடலை


இப்படியே அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. கடைசில ஒரு முடிவுக்கு வராமலே பேச்ச மாத்திட்டாங்க. அப்போதான் எனக்கு அந்த சரித்திர புகழ் வாய்ந்த சந்தேகம் வந்தது. கடலைன்னா என்ன?


நான் காலேஜ்ல படிக்கும்போது நல்லா சிரிச்சு பேசினாலே கடலை போடறன்னு ஓட்டுவாங்க. என் ஃப்ரெண்டு ஒருத்தி அப்படியே மூக்க பொத்திக்குவா(ஏன்னா கடலை ஓவரா வறுத்து தீஞ்சி போச்சாம்). அப்போல்லாம் சும்மா ஜாலிக்காக ஓட்டறதுக்கு இந்த பேரை யூஸ் பண்றாங்கன்னு நினைச்சேன். அப்புறமா ஒரு ஃப்ரெண்டு கோனார் நோட்ஸ் விளக்கவுரை கணக்கா விளக்கம் குடுத்தா. அதாவது பையனும் பொண்ணும் பேசினா அது கடலையாம். பொண்ணும் பொண்ணும் பேசினா அது மொக்கையாம். ஓ அப்படியா!ன்னு நானும் வாயப் பொளந்துட்டு கேட்டுட்டு இருந்துட்டேன்(என்ன பண்றது.... அவ்ளோ நல்ல பொண்ணு நானு).


அதுக்கப்புறம் ஒரு தடவை குமுதம்லயோ ஆ.வி.லயோ ஏதோ காலேஜ் பசங்க விளக்கம் கொடுத்துருந்தாங்க. அதாவது கடலை வறுக்கும்போது(நிஜ கடலைங்க) பாத்து கேர்ஃபுலா வறுக்கனுமாம். வறுபட்டுடுச்சுனு நினைச்சு பாத்தா வறுபடாம இருக்குமாம். இன்னும் வறுபடலைனு நினைச்சு நல்லா வறுத்தா தீஞ்சு போயிடுமாம். அந்த மாதிரிதான் பொண்ணுங்ககிட்ட பாத்து ஜாக்கிரதையா பேசனுமாம். அதனாலதான் பசங்க பொண்ணுங்ககிட்ட பேசறத கடலை வறுக்கறதுன்னு சொல்வாங்களாம். அது பேச்சு வாக்குல கடலை போடறதுன்னு மாறி போயிடுச்சாம். அப்போ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனா இப்போ சந்தேகம் வந்துடுச்சு. அப்போ பொண்ணு பையன்கிட்ட பேசினா அதை என்னன்னு சொல்றது? சோ இந்த விளக்கமும் தப்பு.


யாராச்சும் சந்தேகத்த தீத்து வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும். சரியா பதில சொல்லி சந்தேகத்த தீத்து வைக்கறவங்களுக்கு பத்து பாக்கெட் கடலை வழங்கப்படும் என்பதை அறிவிக்கிறோம்.

 

BLOGKUT.COM