ஹாய் ஹாய் ஹாய்..... மக்கள்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க? பாத்தே ரொம்ப நாளாச்சு. இதுக்கு மேல வராம இருந்தேனா இப்டி ஒருத்தி இருக்கறதே எல்லாருக்கும் மறந்து போயிடும்ன்ற பயத்துல வரல..... ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா ஒரு டாபிக் கிடச்சது. அதான் நம்ம மக்கள்ஸ் அறிவு எந்த அளவுக்கு பெருகி போயிருக்குனு பாக்கலாம்னுதான் வேக வேகமா ஓடி வந்தேன்.
எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.
கடலைன்னா என்ன?
போன வெள்ளி கிழமை என் ஃபோன் பில் கட்ட வரிசைல நின்னப்ப எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு. பின்னாடி ஒரு பையன். ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். அந்த பையன் கொஞ்சம் லேட்டா வந்துட்டான். அவன் வரதுக்குள்ள நான் கரடி மாதிரி நடுவுல போயிட்டேன் போல. அவன் வந்ததும் அந்த பொண்ணு சைடுல வர சொல்லி கூப்பிட்டுச்சு. இனி ஓவர் டு கான்வர்சேஷன்
அவன் : அதான் உன்கிட்ட கடலை போடறதுக்குன்னு ஒரு இளிச்சவாயன் இருக்கானே அவன்ட்ட கடலை போடு
அவள் : ஏ! அதுக்கு பேரு கடலை இல்ல
அவன் : கடலை இல்லாம வேற என்னவாம்?
அவள் : தெரிஞ்சவங்ககிட்ட பேசினா அதுக்கு பேரு கடலை இல்ல. தெரியாதவங்க கிட்ட தேவை இல்லாம பேசினாதான் கடலை
அவன் : யார் சொன்னா? ஒரு மேட்டரும் இல்லாம வெட்டியா நேரம் போறது தெரியாம பேசிட்டு இருந்தா அதுக்கு பேரு கடலை
இப்படியே அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. கடைசில ஒரு முடிவுக்கு வராமலே பேச்ச மாத்திட்டாங்க. அப்போதான் எனக்கு அந்த சரித்திர புகழ் வாய்ந்த சந்தேகம் வந்தது. கடலைன்னா என்ன?
நான் காலேஜ்ல படிக்கும்போது நல்லா சிரிச்சு பேசினாலே கடலை போடறன்னு ஓட்டுவாங்க. என் ஃப்ரெண்டு ஒருத்தி அப்படியே மூக்க பொத்திக்குவா(ஏன்னா கடலை ஓவரா வறுத்து தீஞ்சி போச்சாம்). அப்போல்லாம் சும்மா ஜாலிக்காக ஓட்டறதுக்கு இந்த பேரை யூஸ் பண்றாங்கன்னு நினைச்சேன். அப்புறமா ஒரு ஃப்ரெண்டு கோனார் நோட்ஸ் விளக்கவுரை கணக்கா விளக்கம் குடுத்தா. அதாவது பையனும் பொண்ணும் பேசினா அது கடலையாம். பொண்ணும் பொண்ணும் பேசினா அது மொக்கையாம். ஓ அப்படியா!ன்னு நானும் வாயப் பொளந்துட்டு கேட்டுட்டு இருந்துட்டேன்(என்ன பண்றது.... அவ்ளோ நல்ல பொண்ணு நானு).
அதுக்கப்புறம் ஒரு தடவை குமுதம்லயோ ஆ.வி.லயோ ஏதோ காலேஜ் பசங்க விளக்கம் கொடுத்துருந்தாங்க. அதாவது கடலை வறுக்கும்போது(நிஜ கடலைங்க) பாத்து கேர்ஃபுலா வறுக்கனுமாம். வறுபட்டுடுச்சுனு நினைச்சு பாத்தா வறுபடாம இருக்குமாம். இன்னும் வறுபடலைனு நினைச்சு நல்லா வறுத்தா தீஞ்சு போயிடுமாம். அந்த மாதிரிதான் பொண்ணுங்ககிட்ட பாத்து ஜாக்கிரதையா பேசனுமாம். அதனாலதான் பசங்க பொண்ணுங்ககிட்ட பேசறத கடலை வறுக்கறதுன்னு சொல்வாங்களாம். அது பேச்சு வாக்குல கடலை போடறதுன்னு மாறி போயிடுச்சாம். அப்போ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனா இப்போ சந்தேகம் வந்துடுச்சு. அப்போ பொண்ணு பையன்கிட்ட பேசினா அதை என்னன்னு சொல்றது? சோ இந்த விளக்கமும் தப்பு.
யாராச்சும் சந்தேகத்த தீத்து வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும். சரியா பதில சொல்லி சந்தேகத்த தீத்து வைக்கறவங்களுக்கு பத்து பாக்கெட் கடலை வழங்கப்படும் என்பதை அறிவிக்கிறோம்.
Tuesday, July 10, 2007
கடலைன்னா என்ன???
Subscribe to:
Post Comments (Atom)
17 Comments:
எனக்கு தெரிஞ்சு கடலை போடுறது என்றால் வயல்ல உழுது கடல போட்டுவாங்க.
யாரும் என்ன மாரிய்யா என்ன போட்டு இருக்க என்றால் கடல போட்டு இருக்கேன் என்பார். அதுதான் தெரியும் எனக்கு.
கடலையில் நில கடலை, கொண்ட கடலை, என்று பல வகை இருக்கு
கடற்கரையில் ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கிட்டுருக்கும் போது கடலை விற்கும் சிறுவர்கள் அவர்களிடம் சென்றால் உடனே வியாபாரம் ஆகும் என்று அவர்கள் அருகில் சென்று "கடலை கடலை" என்று சொல்வர்கள் (1985 - 1990 களில்). அதில் இருந்து தான் இந்த பதம் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த கடலகாய் சாப்பிட்டா என் மூளை வளருமா? நான் கேக்கலிங்க..... mbbs படத்துள கமல் கேட்டாரு. கடலையை பற்றி ஆராய வேண்டியது நிறைய இருக்கு அம்மணி. சோ இப்பொதைக்கு நோ கொமேன்.
எனக்கு தெரிஞ்சது எல்லாம் வேர்கடலை தான்
ஆகா!!!
சமுதாயத்திற்கு என்னமா சேவை செய்யறீங்க!!!
உங்களை மாதிரி நாலு பேரு இருந்தா நாட்டுல பசி ,பஞ்சம் எதுவும் இருக்காது!!!
நல்லா ஆராய்ச்சி பண்ணி எனக்கு கடைசியா விளக்கம் தாங்க சரியா?? :-)
pasanga ponnunga kita pesuradhu/vaziyuradhu - kadalai...
ponnunga pasanga kita pesuradhu/vaziyuradhu ku peru 'pongal'...
pasangala ponnunga (luv la)yemathina - bulb...
ponnungala pasanga yemathina - bucket...
கடலை ,மொக்கை , கும்மி இதுக்கெல்லாம் அருமையான விளக்கங்கள் கொடுத்து இந்த இளைய சமுதாயத்துக்கு மாபெரும் தொண்டுசெய்யும் உங்களை எப்படி
வாழ்த்துறதுன்னு தெரியலை
//கடலை ,மொக்கை , கும்மி இதுக்கெல்லாம் அருமையான விளக்கங்கள் கொடுத்து இந்த இளைய சமுதாயத்துக்கு மாபெரும் தொண்டுசெய்யும் உங்களை எப்படி
வாழ்த்துறதுன்னு தெரியலை//
ரிபீட்டு..:))
ஹ்ம்ம்.. அப்புறம்..:-?
தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் // ஹா.. ஹா...
Kadalai is common name. Ponnu to Paiyan and Paiyan to Ponnu. Rendukkum ore peruthan.
Paiyanum Paiyanum vettiya pesittu iruntha athukkum oru peru irukku. athu 'Maanga adikarathu'.
Naan college padikarappo, paiyan voice-la oru ponnu pesuva. (tough voice but nice girl). Avakittta entha paiyanavathu kadalai potta, Naanga 'avan Maalai poduran'nu comment pannuvom (Maanga + Kadalai) ;)
Ponnum Ponnum Pesikkaradhuku peru PONGAL nu kelvi pattirken :D
Aruvai ku peruthaan Mokkai
இந்த கட்டுரையை படிக்கும்போது நான் பள்ளியில் படித்த திருக்குறள் ஒன்று நினைவுக்கு வருகிறது...
"அஞ்சியஞ்சி கடற்கரையில் கடலைபோடும் கோயானுக்கு
மிஞ்சுவது சுண்டல் கடனே!"
enna ulagamda idu
கடலைன்னா, பொட்டுக் கடலை, நிலக்கடலை, .. வேற ஏதாவது இருக்கா?
பதிவை தாக்கிச் சாப்பிட்டது குசும்பனின் பின்னூட்டம். பேருக்கேத்த மாதிரி அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
//pasanga ponnunga kita pesuradhu/vaziyuradhu - kadalai...
ponnunga pasanga kita pesuradhu/vaziyuradhu ku peru 'pongal'...
pasangala ponnunga (luv la)yemathina - bulb...
ponnungala pasanga yemathina - bucket...//
oho kadalai, pongal ku meaning edhuthana.
Post a Comment