ZZzzzzZZZzzzzZZZzzzzZZZzzz.... எப்போ கவிதாயினிக்கு PRO பதவி கொடுத்து ரிஷப்ஷன்ல உட்கார வச்சாங்களோ அப்போதிலிருந்தே இந்த சீட்டு மட்டும்தான் பிஜியா இருக்கு.. உட்கார்ந்துக்கிட்டே தூங்குறது, படுத்துக்கிட்டே தூங்குறது, காதுல ஃபோனை வச்சிக்கிட்டே தூங்குறதுன்னு தினமும் ஒவ்வொரு ஸ்டைலில் கலக்குறாங்க.. முதல்ல இந்த ரிஷப்ஷன்ல இருக்கிற மேஜையையும் நாற்காலியையும் தூக்கி தூர போடணும்..
அடுத்து.. kRrr.. koRr..mMm.. cHap Chap..SLurrppp... இது என்னன்னு நான் சொல்லிதான் தெரியணுமா என்ன? நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்களே.. G3 நொறுக்கு தீனியை நொருக்கி தின்ற அழகுதான் இது! இதை என்னால எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியல. அப்படி ஏதாவது செய்தா "என்னை கொடுமை படுத்துறாங்க.. காப்பாத்துங்க"ன்னு கத்தி ஊரை, உலகத்தையே கூட்டிடுறாங்க.. என்ன கொடுமை சார் இது!
"காதலா காதலா காதலால் தவிக்கிறேன்.."... இவ்வளவு நாளா மொக்கை போட்டு நம்மை இம்சித்துக்கொண்டிருந்த இம்சை அரசி இப்போ ஒரு நல்லவரின் இம்சையில் வசமாய் மாட்டிக்கொண்டார். இவங்க பொட்டி கட்டிட்டு ஊரு பக்கம் போயிட்டதா காத்து வாக்குல தகவல் வந்துச்சு. திருமணம் முடிஞ்சு எப்போ நம்மளையெல்லாம் இம்சை பண்ண வருவாரோ?... காத்திருக்கிறோம்.
Dush Dush. YeeHaah.. Dishyoommmm.... யாரோ குஸ்தி ப்ராக்டிஸ் பண்ற மாதிரி இருக்கே? யாருப்பா அது? மக்களே, கொஞ்சம் இருங்க..நான் எட்டிப் பார்த்துட்டு சொல்றேன். ஆஹா அஹா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.. போன பதிவுல "நான் காது கடிச்ச மைக் டைசன் ஊருல"ன்னு சொன்னவங்க அடுத்த பதிவுல "காது கடிச்ச மைக் டைசன் என் காலுக்கடியில"ன்னு சொல்லுவாங்க போல.. அம்மணி அனுசுயா வெயிட்டான ட்ரேயினிங்ல இருக்காஹ..
"காணவில்லை.. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு இரண்டு பிரம்படிகளும், மூனு புத்தகம் வீட்டுப்பாடங்களும் கொடுக்கப்படும்" என்ற பேன்னர் இங்கே மாட்டியிருக்கு. அடடே.. போட்டோல உள்ளவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஆஹா.. இவங்கதானே அவங்க.. அதான் மணி மணியா எழுதுவாங்களே கண்மணி டீச்சர்!! ஆஹா டீச்சர், உங்களுக்கு ஏன் இந்த நிலமை? எங்கே இருக்கீங்க..உங்களை கண்டுபிடிக்க வேடந்தாங்கல் பறவைகள் அனுப்பியிருக்கேன்.
----------------------------------------------------------------------------------------------------------
இந்த ஐந்து பேரை தேடி தேடி கண்டுபிடிக்கவே .:: மை ஃபிரண்ட் ::. எவ்வலவு கஷ்டப்படுறா.. பாருங்க மக்களே.. இதனலாத்தான் சொல்றேன். மை ஃபிரண்ட் குழந்தையை திட்ட கூடாது.. பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லவ.. அவ்வ்வ்வ்.....
"டொக் டொக் டொக்"
மை ஃபிரண்ட்: வெளியே யாரு? உள்ளே நானு..
அனானி: வெளியே நானு.. உள்ளே யாரு?
மை ஃபிரண்ட்: ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா... இன்னைக்கும் எனக்கு சனி உச்சத்துலதான் போல.. யாருய்ய்யா அது?
அனானி: கொஞ்சம் வந்து எட்டிதான் பார்க்கிறது?
மை ஃபிரண்ட் வெளியே வந்து எட்டி (அதாவது தலையை மட்டும் வெளியே நீட்டி) பார்க்கிறார்..
மை ஃபிரண்ட்: இப்போ சொல்லும்மா.. யார் நீ?
அனானி: இது படம் பேர். "நீயா?"ன்னு கேளுங்க..
மை ஃபிரண்ட்: அடங்கொய்யாலே.. எனக்கு BP எல்லாம் எகுறுது. நீ யார்?
அனானி: நியூ அட்மிஸ்ஷன்
மை ஃபிரண்ட்: உனக்கு யார் கொடுத்த நியூ அட்மிஸ்ஷன்.. எங்களுக்கு மஞ்சள் அறைத்து கொடுத்தாயா? இல்ல நாத்துதான் நட்டாயா? (மனசுக்குள்..) இன்னைக்கு பார்த்த கட்டபொம்மன் படத்து வசனத்தை இங்கே பேசி காட்டியாச்சு. :-)))
அனானி: அட்மிஷன் கொடுத்தவரே யார் கொடுத்தான்னு கேட்டா என்ன சொல்ல.. நகருங்க.. கதவுல நின்னு ஒழுங்க டியூட்டி பாருங்க.. நான் உள்ளே போறேன். அடடே.. இந்த ரூம் நல்லா இருக்கே.. இனி இந்த ரூம் என்னது.. இங்கே உள்ள குப்பைகளையெல்லாம் எடுத்து வெளியே வீசிடு கூர்கா..
மை ஃபிரண்ட்: என்னது கூர்காவா? இது என்னுடைய அறை.. ஹேய் ஹேய் ஹேய்.. அதெல்லாம் எங்கே வீசுற?
அனானி: எத்தனை தடவை சொல்றது? கூர்கா கதவுகிட்டதான் நிக்கனும். போய் அங்கே நில்லு.. நான் கூப்பிடுற வரைக்கும் உள்ளே வர கூடாது..
மை ஃபிரண்ட்: அவ்வ்வ்வ்வ்....
அனானி: மக்களே, நான் யாருன்னு பார்க்குறீங்களா? நாந்தான் மாங்கனி... தமிழ் மாங்கனி.. உங்களையெல்லாம் இனி இம்சிக்க வந்த மாங்கனி. வணக்கம் வணக்கம் வணக்கம்
மை ஃபிரண்ட்: (அப்பாவியாக..) அவ்வ்வ்.. என்னை வச்சி காமெடி கீமடி பண்ணலையே???????
Thursday, May 15, 2008
இன்று ப.பா. சங்கத்தில்..
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 12:42 PM 20 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: அறிமுகம்
Thursday, June 14, 2007
ப.பா. சங்கத்தின் புதிய பி.ஆர்.ஓ!!
ஹாய்.. மக்காஸ்.. அண்ட் மக்கீஸ்..
வணக்கம்! சிவாஜி - The Boss இந்தா இன்னிக்கு வறேன்.. நாளைக்கு வறேன்.. இதோ வந்துகிட்டேயிருக்கேன்னு ஒரு வழியா நாளைக்கு வரப்போகுது. ஊர் உலகம் முழுக்க இது பண்ணிட்டிருக்கிற அலப்பறைகளுக்கு நடுவுல அதுக்கு கொஞ்சம் கூட குறையாம வலையுல தமிழ் நெஞ்சங்கள் மனசை குடைஞ்சிட்டிருக்கற கேள்வி ப.பா சங்கத்தோட புதிய பி.ஆர்.ஓ யாருங்கிறது தான்னு நேத்து பி.பி.சி, சி.என்.என்., என்.டி.டிவி ன்னு எல்லா சேனல்லயும் கருத்துக் கணிச்சு போட்டாங்க! (பாக்கல?)
அதுலயும் சங்கத்தோட ஆபீஸ பாத்து ஆடிப்போயிருக்கிற எதிரணி மண்டைல ஏதோ ஒரு மூலைல இருக்கிற மூளைக்கு திடீர்னு வேலை குடுத்து பாத்தும் கண்டுபிடிக்க முடியாம யார் அந்த ஆல் இன் ஆல் அழகு ராணின்னு கண்டுபிடிக்க உளவுப்படை அமைச்சிருக்காங்களாம்!
எங்க தலைவி கூட சொன்னாங்க... "ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தி முன்ன மாதிரியே விருந்து குடுத்திருவோம். சோறு போடறேன்னு சொன்னா எல்லா பயலுவலும் ஓடி வந்துருவாய்ங்க! உங்களுக்கு கட்- அவுட் வெச்சி.. கைல வீரவாள் (வால் இல்ல) குடுத்து... பொன்னாடை அணிவிச்சு 'தங்கத்தாரகை' 'பயமில்லாப் பாவை' 'பாயும் பெண் புலி' 'கற்பூரச் சொற்கோ' 'கவிதாயினி' அப்பிடின்னெல்லாம் பட்டம் குடுத்து உங்கள அறிமுகப்படுத்தரேன்னு"
(ஹிஹி.. எல்லாம் அவங்க சொன்னது தான்!! எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது!!!) அவங்களோட சேர்ந்து கலக...ச்சீ.. கழக உடன்பிறப்புகளும் இதெயே சொல்லி ரொம்ம்ம்ம்ப வற்புறுத்துனாங்க!
நாந்தான் "நோ நோ... அதெல்லாம் வேனாம்.. நான் ஏழைப்பங்காளி.. எளிமையே என் தாரக மந்திரம்" ன்னு சொல்லிட்டேன். (நான் சின்னதுல இருந்தே இப்டிதான்.. யாரும் ஃபீல் பண்ணாதீங்கப்பா!)
ஆகவே மகாஜனங்களே! இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.... பயமில்லாப் பாவையர் சங்கத்தின் மற்றுமொரு பாவையாக மாண்புமிகு மக்கள் தொடர்பு அதிகாரியாக இன்று பொறுப்பேற்றுக் கொள்வது உங்கள்..
சிரிக்க வைக்க முயற்சித்தது காயத்ரி சித்தார்த் at 1:37 PM 23 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: அறிமுகம்
Sunday, April 29, 2007
வெற்றி...வெற்றி..வெற்றி
இன்னமும் தமிழ் மணத்தோடு இணையவில்லை
முழுசாக போஸ்ட் எதுவும் போடவில்லை
சதம் அடித்துவிட்டது பார்த்தவர் எண்ணிக்கை
வந்து குவிகிறது பின்னூட்டம்
பாவையருக்கோ கொண்டாட்டம்
போராடும் களமென்றால்
பூவும் புயலாகும்
பொறுத்திருந்து பாருங்களேன்....
சிரிக்க வைக்க முயற்சித்தது பாவை at 4:02 PM 8 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: அறிமுகம்
Saturday, April 28, 2007
வாங்கோ! வாங்கோ!
என்னடா இது ப.பா சங்கம்?? எல்லாம் சின்ன பாப்பாங்கதானேன்னு நினைச்சுட்டு வந்திருந்தீங்கனா... நீங்க டுமீல்... ஏன்னா நாங்க எல்லாரும் பயம்னா என்னான்னே தெரியாத பாவையர்...... பயமறியா பாவையர்......
"வெத்தலை போட்ட ஷோக்குல
ஆத்து ஆத்துனு ஆத்தி களைச்சுப் போயிட்டேன். அப்பாளிக்கா வரோம். வர்ட்டா............... :)))
சிரிக்க வைக்க முயற்சித்தது பாவை at 6:52 PM 54 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: அறிமுகம்
ப.பா.ச. ஒரு அறிமுகம்
பெண்ணென்றால் தாய்மை
பெண்ணென்றால் அன்பு
பெண்ணென்றால் பாசம்
பெண்ணென்றால் கருணை
பெண்ணென்றால் வீரமும் உண்டு
பறை சாற்ற வருகிறது
பயமறியா பாவையர் சங்கம்
சிரிக்க வைக்க முயற்சித்தது பாவை at 6:48 PM 3 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: அறிமுகம்



