Thursday, June 14, 2007

ப.பா. சங்கத்தின் புதிய பி.ஆர்.ஓ!!

ஹாய்.. மக்காஸ்.. அண்ட் மக்கீஸ்..

வணக்கம்! சிவாஜி - The Boss இந்தா இன்னிக்கு வறேன்.. நாளைக்கு வறேன்.. இதோ வந்துகிட்டேயிருக்கேன்னு ஒரு வழியா நாளைக்கு வரப்போகுது. ஊர் உலகம் முழுக்க இது பண்ணிட்டிருக்கிற அலப்பறைகளுக்கு நடுவுல அதுக்கு கொஞ்சம் கூட குறையாம வலையுல தமிழ் நெஞ்சங்கள் மனசை குடைஞ்சிட்டிருக்கற கேள்வி ப.பா சங்கத்தோட புதிய பி.ஆர்.ஓ யாருங்கிறது தான்னு நேத்து பி.பி.சி, சி.என்.என்., என்.டி.டிவி ன்னு எல்லா சேனல்லயும் கருத்துக் கணிச்சு போட்டாங்க! (பாக்கல?)

அதுலயும் சங்கத்தோட ஆபீஸ பாத்து ஆடிப்போயிருக்கிற எதிரணி மண்டைல ஏதோ ஒரு மூலைல இருக்கிற மூளைக்கு திடீர்னு வேலை குடுத்து பாத்தும் கண்டுபிடிக்க முடியாம யார் அந்த ஆல் இன் ஆல் அழகு ராணின்னு கண்டுபிடிக்க உளவுப்படை அமைச்சிருக்காங்களாம்!

எங்க தலைவி கூட சொன்னாங்க... "ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தி முன்ன மாதிரியே விருந்து குடுத்திருவோம். சோறு போடறேன்னு சொன்னா எல்லா பயலுவலும் ஓடி வந்துருவாய்ங்க! உங்களுக்கு கட்- அவுட் வெச்சி.. கைல வீரவாள் (வால் இல்ல) குடுத்து... பொன்னாடை அணிவிச்சு 'தங்கத்தாரகை' 'பயமில்லாப் பாவை' 'பாயும் பெண் புலி' 'கற்பூரச் சொற்கோ' 'கவிதாயினி' அப்பிடின்னெல்லாம் பட்டம் குடுத்து உங்கள அறிமுகப்படுத்தரேன்னு"
(ஹிஹி.. எல்லாம் அவங்க சொன்னது தான்!! எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது!!!) அவங்களோட சேர்ந்து கலக...ச்சீ.. கழக உடன்பிறப்புகளும் இதெயே சொல்லி ரொம்ம்ம்ம்ப வற்புறுத்துனாங்க!

நாந்தான் "நோ நோ... அதெல்லாம் வேனாம்.. நான் ஏழைப்பங்காளி.. எளிமையே என் தாரக மந்திரம்" ன்னு சொல்லிட்டேன். (நான் சின்னதுல இருந்தே இப்டிதான்.. யாரும் ஃபீல் பண்ணாதீங்கப்பா!)

ஆகவே மகாஜனங்களே! இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.... பயமில்லாப் பாவையர் சங்கத்தின் மற்றுமொரு பாவையாக மாண்புமிகு மக்கள் தொடர்பு அதிகாரியாக இன்று பொறுப்பேற்றுக் கொள்வது உங்கள்..


காயத்ரி
காயத்ரி
(இது எக்கோ! கண்டுக்காதீங்க)
பேரக் கேட்டா சும்மா அதிருதி'லே!
ஆகவே மக்களே... இனிவரும் காலங்களில் சங்கத்தை தொடர்பு கொள்வது, நன்கொடை வசூலிப்பது, பின்னூட்டத்துல கும்மி அடிக்கிறது, பதிவுல உப்புமா கிண்டறது, எதிரணியோட நல்லுறவு வளர்க்கிறது, பருவமழை பெய்யாம போறது, பெட்ரோல் விலையேற்றம், திருட்டு விசிடி பிரச்சினை, காவிரி பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, எல்லை தாண்டிய பயங்கர வாதம், அல்கொய்தாவை அடக்கும் வழிமுறைகள்........
இப்படி என்ன மாதிரியான பிரச்சினையா இருந்தாலும் சங்கத்தோட ஆதரவு வேணும் னா மாண்புமிகு பி.ஆர்.ஓ ஆகிய என்னை அணுகும்படி கழுத்தில கத்தி வெச்சு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொல்கிறேன்.. சாரி கொள்கிறேன்.!
இது வெறும் ஆரம்பம் தான்! ஆட்டம் இனிமேதான் இருக்கு!
வெகு விரைவில் எதிர்பாருங்கள்! பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் பார்ட் - 4
உங்கள் அபிமான ப.பா.சங்கப் பதிவில்....

23 Comments:

said...

ஆஆஆ........... கவிதாயினி காயத்ரி'யும் ப.பா.சங்கத்திலே சேர்ந்துட்டாங்களா? இனிமே நீங்கெல்லாம் அவங்களை மாதிரி MA படிச்சு பாஸ் பண்ணின டாக்டர்'கிட்டே தான் போகப்போறீங்க.. =))

said...

Vaazhthukkal Gayathri!!

said...

so innum full swing la kalakka poreenga ellarumnu sollunga!!

said...

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்ப்பிட்டாங்க...!!!!!!!

ஈ ரோட்ல கிளம்புன எக்கோ திருச்சி வந்து பெங்களூர்ல உழுது போங்க...

said...

//so innum full swing la kalakka poreenga ellarumnu sollunga//

அதே அதே!!

எலேய் ராமு அடங்குப்பா நீயி! உங்க ஊரு வைத்தியரெல்லாம் என்ன படிச்சிருக்காவ? கைராசின்னு ஒன்னு வேணும் மக்கா!

//ஈ ரோட்ல கிளம்புன எக்கோ திருச்சி வந்து பெங்களூர்ல உழுது போங்க... //

ஹிஹி ஆமா ரவி!!

Anonymous said...

உள்ள தொல்லையே தாங்க முடியல இப்ப நீங்க வேறயா...

ம்ம்ம் நடத்துங்க

பக்கத்துல இருந்து பாத்தவன் said...

//
நான் சின்னதுல இருந்தே இப்டிதான்..
//

தப்பு குட்டியா இருந்த போதிருந்தே இப்படித்தான்

கும்மிக்கு வந்தவன் said...

கும்மிக்கு ஒரு பதிவ போட்டுட்டு இந்த பி.ஆர்.ஓ எங்க போய்ட்டாய்க...

said...

இந்த நியமன உத்தரவை முன்னிட்டு எங்க காயத்திரிக்கு மூனு தடவை திருஷ்டி சுத்தி த்தூ த்தூன்னு துப்பவைக்க வேண்டுமாய் ஈரோடு மன்றத்தை (ரெஜிஸ்டர் நெ 1203) கேட்டுக்கொள்ளவேண்டுமாய் சென்னை கிளை அழைக்கிறது.

ப.பா.ச சென்னை கிளை,
ரங்கநாதன் தெரு,
தி.நகர்,
சென்னை - 17

said...

"யார் அந்த ஆல் இன் ஆல் அழகு ராணின்னு கண்டுபிடிக்க உளவுப்படை அமைச்சிருக்காங்களாம்!"

ஐயோ பாவம் உளவுப்படை தேடினாலும் கிடைக்கபோவது இல்லை
"அழகு ராணி"

said...

ஆஆஆஆ!!
ஏற்கெனவே இருக்கறா பாப்பாகளோட லூட்டியாலேயே கண்ண கட்டுதே!!
இனிமே எதிர்கட்சியை கவிதையிலேயே அடிக்கப்போறிங்கன்னு சொல்லுங்க!! :-D

என்னென்ன ரண்களம் ஆகப்போகுதோ!! :-S

Anonymous said...

....................................................................

said...

கலக்குங்க காயத்ரி
உங்க எதிரணி கலங்குற மாதிரி கலக்குங்க‌

said...

Yakka, oru vazhiyaa Jothiyile aikkiyamaayiddeengga.. ini kalakkungga. :-D

said...

//உங்களுக்கு கட்- அவுட் வெச்சி.. கைல வீரவாள் (வால் இல்ல) குடுத்து... பொன்னாடை அணிவிச்சு 'தங்கத்தாரகை' 'பயமில்லாப் பாவை' 'பாயும் பெண் புலி' 'கற்பூரச் சொற்கோ' 'கவிதாயினி' அப்பிடின்னெல்லாம் பட்டம் குடுத்து உங்கள அறிமுகப்படுத்தரேன்னு"
(ஹிஹி.. எல்லாம் அவங்க சொன்னது தான்!! எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது!!!)//

vachchidamlaama? :-D

said...

சே இந்த பி.ஆர்.ஓ தொல்லை தாங்கலடா சாமி!! குண்டூசி விக்கிரவங்க...புண்ணாக்கு விக்கிரவங்கெல்லாம் பி.ஆர்.ஓ ஆகுராங்கபா!!

said...

//கும்மிக்கு ஒரு பதிவ போட்டுட்டு இந்த பி.ஆர்.ஓ எங்க போய்ட்டாய்க...//

ஸ்ஸ்ஸ்.. எல்லா ஃப்ங்ஷனுக்கும் என்னையே தலைமை தாங்க சொன்னா.. சின்ன பொண்ணு என்னங்க பண்ணும்? அதான் வந்துட்டமில்ல?

said...

//பக்கத்துல இருந்து பாத்தவன் said... //

அனானி.. யாருப்பா நீயி? உண்மையெல்லாம் உளறிப்பிடாதே ராசா!

said...

//இனிமே எதிர்கட்சியை கவிதையிலேயே அடிக்கப்போறிங்கன்னு சொல்லுங்க!! :-D

என்னென்ன ரண்களம் ஆகப்போகுதோ!! :-//

ச்சேச்சே!! பாவம்.. சின்ன பசங்க.. பொழச்சு போகட்டும். கவிதை எல்லாம் பாலைத்திணைல மட்டும் தான். இங்க.. அக்மார்க் கும்மி மட்டும்!

said...

உங்கள் காமெடி நல்லாருக்கு. விஜய் டீவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்து கலக்கறீங்களா ?

said...

அக்கா அக்கா

நீங்க கல்கப்பொவ்து ஆரு நிழ்ச்சில கல்ந்துக்கங்கா..நான்னூ நல்லா ச்ச்சிரிக்காரேன்.

said...

ஏய் யாருடா அது எம்பொண்டாட்டிக்கிட்ட வம்பு பன்றது

said...

புதுசா ஒரு பாப்பாவா? ச்சே.. பாவையா??

வாழ்த்துக்கள்...

 

BLOGKUT.COM