Tuesday, June 5, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 2

என்னமோ இந்த ராமும் வ,வா.சங்கத்துப் பசங்க மட்டும் தான் காலேஜ்ல படிச்ச மாதிரி இதுங்களப் பார்த்து காப்பியடிக்கிறோமாம்.

நாங்க என்ன டுடோரியல் காலேஜ்லயா படிச்சோம்...நற...நற...

காலேஜ் லூட்டி,கலாட்டால்லாம் ஒரு அருமையான நிகழ்வுகள்.

நான் படிச்சது ஒரு கிறிஸ்டியன் காலேஜ்.காலேஜ்ல ஒரு பங்கு டார்ச்சர்னா ஹாஸ்டல் லைப் பத்து மடங்கு. பையாலஜி கேத்தரின் மிஸ்தான் ஹாஸ்டல்ல ஸ்டடி சுபர்வைசர். எப்பப்பாரு படி...படி...ன்னுட்டு.

படிப்பெல்லாம் எக்ஸாம் டையத்துல மட்டும்தான் இது கூட தெரியாதவங்கல காலேஜ் ஹாஸ்டல்ல வார்டனா போட்டு 24x7 NDTV சேனல் மாதிரி 24x7 படிப்பு.

இருக்கிற கொஞ்சம் மேல்மாடி சரக்கும் பாயிலாயி இவாப்பரேட் ஆகும்னு தெரியாதவங்க. ஹாஸ்டல்ல மாலை 5 முதல் 8 ஸ்டெடி ஹவர்.முடிச்சப்பிறகுதான் மணியடிப்பாங்க.அட சோத்துக்குத்தாம்லே.
தட்டத் தூக்கிக்கிட்டு ஏதோ கிரிமினல் கேஸ்ல மாட்டின கைதி மாதிரி கியூவுல நின்னு சோறு வாங்கனும். டைனிங் டேபிள் இருந்தாலும் நம்ம வானரப் படைங்களுக்கு கையேந்திபவன் ஸ்டைல்தான் பிடிக்கும்.
இப்படித்தான் ஓரு நாள் ஸ்டடி ஹவர்.என் டேஸ்காலர் பிரண்ட் ஒரு பாக்கெட் நாவல் குடுத்தா.

தமிழ்தேன் இங்கிலீஷ்னா பார்பரா கார்ட்லேண்டும் மில்ஸ் அன்டு பூன் மட்டும்தான் [அட சரித்திரக் கதை இல்லீங்க ] பாடப் புஸ்தகத்தோடு நாவலை வச்சிட்டு படிச்சிக்கிட்டிருந்தப்ப பின்னாடி டேபிள்ல இருந்த என் பிரண்ட் அப்பப்ப என்னாச்சுன்னு கதை கேட்டா. வழக்கம் போல கேத்தரின் மிஸ் ரவுண்டு உட்டுக்கிட்டிருந்தாங்க.நானும் எப்படியோ பாதி கதையை முடிச்சிட்டேன். அப்ப என்னாச்சு என பக்கத்தில் குரல் கேட்க நம்ம பின் சீட்டு பார்ட்டிதான் கதை கேக்குதுன்னு 'பாவம்டி விமலா அவ மாமியார் ரொம்ப மோசம்'என்றேன்.

'வாட் 'என்று 100 வாட்டில் ஒரு சத்தம் வர திரும்பினால் கேத்தரின் மிஸ்.

கைகாலெல்லாம் உதற சட்டென்று நாவலோடு நோட் புக்கை மூடிவிட்டு,
'பாவம் விமலா'என்றேன், மிஸ் மறுபடி 'வாட்' என 'பாவம் விமலா'என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். மிஸ் பயந்து போய் மதர் சுப்பீரியரை [ஹாஸ்டல் ஹெட் சிஸ்டர்] கூப்பிட அவங்க வந்து கேட்ட போதும்,
'பாவம் விமலா' எனக் கூற 'இப்படித்தான் மதர் திரும்பத் திரும்ப சொல்றா....திரும்பத் திரும்பச் சொல்றா...'

'மதர் பயந்து போயி 'கேத்தரின் ஆர் யூ ஆல் ரைட்'ன்னு பதறினாங்க, எனக்கு என்னமோ ஆயிடுச்சின்னு தூக்கிட்டுப் போய் 'சிக் ரூம்'ல போட்டுட்டாங்க.:(
சிக் ரூம் என்பது அந்த காலத்து 'அந்தமான் ஜெயில் மாதிரி'. உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட கூட்டிப் போய் ஊசி போட்டு சிக்ரூம்ல தள்ளிட்டாங்கன்னா ஈ காக்கா நம்மள திரும்பிப் பார்க்க உடமாட்டாங்க.
[என்ன தொத்து வியாதியா வந்துடிச்சி?]:-/

ரெண்டு நாள் கழிச்சி சிக் ரூம்ல இருந்து 'ரிலீஸ்' ஆனதும் பின் சீட் எருமை[இவளாலதானே மாட்டினேன்] 'சாரிடி இவளே...ஆனா அந்த கேத்தரின் அனகொண்டா கிட்டயிருந்து எப்படியோ உளறிக் கொட்டி தப்பிச்சே' என
'ஆமாம் ரெண்டு நாள் ஜெயில்ல கிடந்து அனுபவிச்சேன் போடி பேசாதே'என்றேன்.x(

மறு வாரமே கேத்தரின் மிஸ் எங்கிட்ட மாட்டுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது நானும் எதிர்பார்க்கலை[விதி யாரை விட்டது]

ஹாஸ்டல்ல டின்னருக்கப்புறம் 10 மணிக்கெல்லாம் லைட் ஆப் செஞ்சிடனும். படிக்கவும் கூடாது லைட்டும் எரியக்கூடாது.[படிக்கத்தான் ஸ்டடி ஹவர் இருக்கேன்னு சொல்வாங்க]. நாம எப்பவுமே 11ந்த் அவர் பார்ட்டி.அப்படித்தான் ஒருநாள் இரவு நானும் அதே சேம் ஓல்டு [எருமை] பிரண்டும் எல்லோரும் தூங்கினதுக்குப் பிறகும் டார்ச் லைட் வெளிச்சத்துல போர்வைக்குள்ள ஒளிஞ்சபடி படிச்சிக்கிட்டிருந்தோம். படிப்பு மேல அம்புட்டு அக்கறையில்லை .இப்பக்கூட படிக்காட்டி கரை சேர முடியாதுன்னு பயம்தான். நைட்டும் கேத்தரின் மிஸ் ரவுண்டு வருவாங்க.

அன்னைக்கு அவங்க வரும் போது டார்ச் வெளிச்சம் பார்த்துட்டாங்க. 'யாரது'என அதட்டியபடி ரூமை நோக்கி வர மாட்டுனா தீர்ந்தோம்னு யோசிச்சப்ப சட்டென்று ஒரு ஐடியா. டார்ச் லைட்டை எரியவிட்டு உள்ளங்கையால் அழுத்தி மூடியபடி போர்வையை முகம் வரை இழுத்துவிட்டுட்டு ஊ...ஊஉ.....ஊஊ.....என ரெண்டு பேரும் சவுண்டு விட்டோம்.
எரியும் டார்ச் லைட்டை உள்ளங்கையால் அழுத்தி மூடினா செக்கச் செவேல்னு தெரியும்ல.அத்தோட ஊ...ஊஊ ..ஊஉ சவுண்டும் சேர மிஸ் ஏதோ கொள்ளிவாய்ப் பிசாசோ பேயோன்னு அலறி விழுந்துட்டாங்க. >:)

மறுநாள் எதைப் பார்த்தாலும் ஊஉ...ஊஊ ன்னு அலறி விழ மதர் சுப்பீரியர் அவங்களை 'சிக்ரூம்ல' போடச் சொல்லிட்டாங்க.

நாலு..நாலே நாள் தான் சிக் ரூம்ல இருந்தாங்க அப்புறம்...? அப்புறமென்ன?பொட்டியக் கட்டிக்கிட்டு டிரான்ஸ்பர் வாங்கிட்டாங்க பாவம்

எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லப்பா......;)

52 Comments:

நாகை சிவா said...

கையில டார்ச் வச்சு உஊ னாங்களாம்... மேடம் பயந்து விழுந்து நாலு நாள் கழிச்சு எழுந்தார்களாம்.... என்னது இது எல்லாம்... கதை விடலாம்... ஆனா நம்புற மாதிரி விடனும் சொல்லிப்புட்டேன்...

நாகை சிவா said...

//'மதர் பயந்து போயி 'கேத்தரின் ஆர் யூ ஆல் ரைட்'ன்னு பதறினாங்க//

நீங்க திரும்ப திரும்ப சொன்னதுக்கு மதர், கேத்தரினை எதுக்கு ஆர் யூ ஆல் ரைட்னு கேட்கனும்....

இம்சை அரசி said...

அதென்ன நீங்க வெள்ள காக்கா பறக்குதுனு சொன்னாக் கூட நாங்க நம்பனும். ஆனா நாங்க உண்மைய சொன்னா நீங்க நம்ப மாட்டிங்க. என்ன உலகமடா சாமி...

இராம்/Raam said...

//என்னமோ இந்த ராமும் வ,வா.சங்கத்துப் பசங்க மட்டும் தான் காலேஜ்ல படிச்ச மாதிரி இதுங்களப் பார்த்து காப்பியடிக்கிறோமாம்.//


யக்கோவ்,

இது உண்மையிலும் உண்மைதான்... :)

//நாங்க என்ன டுடோரியல் காலேஜ்லயா படிச்சோம்...//

ஆமாம், நீங்க அந்தப்பக்கமே போகமே பாஸ் பண்ணினேன்னு எங்களை மாதிரி ஒத்துக்கோங்க பார்ப்போம்... :)

Anonymous said...

//என்னது இது எல்லாம்... கதை விடலாம்... ஆனா நம்புற மாதிரி விடனும் சொல்லிப்புட்டேன்...
//
ithu ellam only vavasa guy will do.papasa girls unmai thavira vera ethuvum pesa mathanga

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
//என்னமோ இந்த ராமும் வ,வா.சங்கத்துப் பசங்க மட்டும் தான் காலேஜ்ல படிச்ச மாதிரி இதுங்களப் பார்த்து காப்பியடிக்கிறோமாம்.//


யக்கோவ்,

இது உண்மையிலும் உண்மைதான்... :)
//

சரிப்பா காலேஜ் போயி படிச்சது உங்க சிங்கங்கள் மட்டும்தானு எதுலயாவது எழுதி வச்சிருக்கீங்களா என்ன? அப்டி இருந்தா ஒத்துக்கறோம்...

//நாங்க என்ன டுடோரியல் காலேஜ்லயா படிச்சோம்...//

ஆமாம், நீங்க அந்தப்பக்கமே போகமே பாஸ் பண்ணினேன்னு எங்களை மாதிரி ஒத்துக்கோங்க பார்ப்போம்... :)
//

யோவ் நீ பண்ணினத எல்லாம் ஏன் இங்க சொல்லிக்கிட்டு திரியற??? :@

Anonymous said...

//யக்கோவ்,

இது உண்மையிலும் உண்மைதான்... :)
//

ellam jealous.ungalai vida ivanga nalla ezuthuranga enkira pooramai

Anonymous said...

//
சரிப்பா காலேஜ் போயி படிச்சது உங்க சிங்கங்கள் மட்டும்தானு எதுலயாவது எழுதி வச்சிருக்கீங்களா என்ன? அப்டி இருந்தா ஒத்துக்கறோம்...
//
ithu point...raamu come n answer this man!

அபி அப்பா said...

வந்துட்டேன் வந்துட்டேன்....சொல்லுங்கப்பா இது யார் பதிவு, எதை பத்தி, யாரை கலாய்க்கனும்....

அபி அப்பா said...

யார் யார் இருக்கீங்க ஆட்டைல? ராம்/ஜெயந்தி/துர்க்கா/புலி/நான்/ ரெடி ஜூட்....

நாகை சிவா said...

காக்கா பறக்குதுனா சொன்னா எல்லாரும் நம்ப தான் செய்வாங்க...

வெள்ள காக்கானு நாங்க சொல்லுறதுக்கு முன்னால் ஒரு காக்காவை பிடிச்சு வெள்ளை கலர் பெயிண்ட் அடிச்சு பறக்க விட்டு அப்பாலிக்கா தான் சொல்லுவோம்...

பெட்டர திங்க் பண்ணுங்க...

ஜே கே | J K said...

சொல்றதுக்கு ஒன்னுமில்ல...

அபி அப்பா said...

//நாங்க உண்மைய சொன்னா நீங்க நம்ப மாட்டிங்க. என்ன உலகமடா சாமி... //

நல்ல காமடியான பின்னூட்டம் சபாஷ் தங்கச்சி!

இம்சை அரசி said...

// அபி அப்பா 덧글 내용...
வந்துட்டேன் வந்துட்டேன்....சொல்லுங்கப்பா இது யார் பதிவு, எதை பத்தி, யாரை கலாய்க்கனும்....
//

வேற யாரை அண்ணா??? நாம கலாய்ச்சு எஞ்சாய் பண்றதுக்காகவே ஒரு கூட்டம் காத்து கிடக்கு இல்ல... அட நம்ம ஆப்பு வாங்கற திலகங்கள்தான்

Anonymous said...

// அபி அப்பா said...
யார் யார் இருக்கீங்க ஆட்டைல? ராம்/ஜெயந்தி/துர்க்கா/புலி/நான்/ ரெடி ஜூட்....
//

paasakaras anna vanthudingala.enna allai kanomenu paarthen...

அபி அப்பா said...

//கையில டார்ச் வச்சு உஊ னாங்களாம்... மேடம் பயந்து விழுந்து நாலு நாள் கழிச்சு எழுந்தார்களாம்.... என்னது இது எல்லாம்... கதை விடலாம்... ஆனா நம்புற மாதிரி விடனும் சொல்லிப்புட்டேன்...//

புலி! டீச்சர் சிரிக்காம அடிக்கிராங்க சோக்கு!

அபி அப்பா said...

//ellam jealous.ungalai vida ivanga nalla ezuthuranga enkira pooramai //

துக்கா, நானும் காலைல இருந்து பாக்கறேன் இந்த ஒரே கமெண்ட காபி/பேஸ்ட்லயே ஓடுதே!

இராம்/Raam said...

/சரிப்பா காலேஜ் போயி படிச்சது உங்க சிங்கங்கள் மட்டும்தானு எதுலயாவது எழுதி வச்சிருக்கீங்களா என்ன? அப்டி இருந்தா ஒத்துக்கறோம்...//

தஞ்சவூர் பெரிய கோவில் கல்வெட்டு'லே எங்க பேரையெல்லாம் நீங்க பார்க்கலையா??

;-)

//யோவ் நீ பண்ணினத எல்லாம் ஏன் இங்க சொல்லிக்கிட்டு திரியற??? :@//

யக்கோவ்,

இது நாங்கதான் ஏற்கெனவே ஒத்துக்கிட்டோமில்ல... நீங்க அதை ஒத்துக்கோங்க'ன்னு தான் கேள்வியே??? ;)

CVR said...

கலக்கிட்டீங்க கண்மனி அக்கா!!
மிகவும் ரசித்து படித்தேன் !!

வாழ்த்துக்கள்!! :-)

கண்மணி/kanmani said...

ஐயா புலி
இது எங்க அனுபவம் இதை நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.
டார்ச் லைட் அடிச்சி உள்ளங்கைய அதுல வச்சி மூடிப் பாருங்க தெரியும்
அப்பால லேடிஸ் மட்டுமே இருக்கிற எடத்துல இரவுல சிகப்பா வெளிச்சமும்,ஊஊ சத்தமும் வந்தா பயப்படுவது எங்க இயல்பு ஏன்னா நாங்க இளகிய மனம் படைத்தவர்கள்

கண்மணி/kanmani said...

அபி அப்பா உங்ககிட்ட இந்த மாதிரி அனுபவம் இல்லைன்னா நாங்க சோக்கு அடிக்கிறோம்னு சொல்லுவீங்க.

கண்மணி/kanmani said...

@சிவா கேத்தரின் மிஸ்ஸும் எனக்கு என்னாமோ ஆயிப்போச்சினு பயந்து போயி திரும்பத் திரும்பச் சொன்னதால்தான் மதர் ஆர் யூ ஆல்ரைட்னாங்க.
இன்னும் எங்க ஹாஸ்டல்ல போய்க்கு பயந்த கதை ஏராளம் இருக்கு.
சொன்னா பேய் பொய்யுனு வீங்க

நாமக்கல் சிபி said...

////'மதர் பயந்து போயி 'கேத்தரின் ஆர் யூ ஆல் ரைட்'ன்னு பதறினாங்க//

நீங்க திரும்ப திரும்ப சொன்னதுக்கு மதர், கேத்தரினை எதுக்கு ஆர் யூ ஆல் ரைட்னு கேட்கனும்....//

நாகை சிவா!

குட் கொஸ்டீன்!

நானும் இதையேதான் கேக்குறேன்!

கண்மணி/kanmani said...

தம்பி ராம் டுடோரியல் காலேஜ்னா இன்னாப்பா
நாங்கதான் [கேர்ள்ஸ்] ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கறம் நீங்க பாய்ஸ்]அங்கப் போறீங்க
ஒன்னும் தெரியாத புள்ளையா நீயி.

நாமக்கல் சிபி said...

//மதர்! ஆர் யூ ஆல்ரைட்னாங்க.//

ஓ! இப்போ கேத்தரின் மிஸ் மதரைப் பார்த்து
"மதர்! ஆர் யூ ஆல்ரைட்"னாங்களா?

கடவுளே! சிவாஜி மஹராஜ் என்னைப் பார்த்து கெக்கேபிக்கேன்னு சிரிக்குறாரே!

கண்மணி/kanmani said...

@இம்சை
இவங்ககிட்ட ஏன் தங்கச்சி விளக்கம்.இவங்க கண்ணு காது எல்லாம் வச்சி ஒரு மேட்டரு சொன்னா நம்பனும்.நாம உண்மையை கோர்வையா சொன்னா டூப்பாம்.

Anonymous said...

அக்கா,
நல்லா கதை எழுதுறிஙக
நீங்க இத எதாவது பத்திரிக்கைக்கு அனுபுனா, பணமாவது கிடைக்கும்

Anonymous said...

:((

கண்மணி/kanmani said...

பணம் வேண்டாம் உங்கள மாதிரி தம்பிங்க படிச்சாலே போதும் ராசா:))

ACE !! said...

யப்பா.. எல்லாரும் ஃபிராடா தான் இருப்பாங்க போலிருக்கு..

நல்லா தான்யா கிளம்பி இருக்காங்க..

பேய் மாதிரி வேசம் கட்டிகிட்டு, ப்யூட்டினு வேற சொல்லிக்கறாங்க.. கலிகாலம்டா சாமி...

கண்மணி/kanmani said...

@CVR
நீங்க மட்டும் தான் போஸ்ட் ரசிச்சு படிச்சு பாராட்டினீங்க.மத்தவங்களுக்கு வயித்தெரிச்சல்ல வார்த்தை வரல.

Anonymous said...

யக்கோவ்

டார்ச் லைட் ஊஊ சத்தம் எல்லாம் பொய்தன.. இருட்ல உங்க மூஞ்சிய பாத்தே பயந்துட்டாங்க தன

கண்மணி/kanmani said...

@சிங்கம்லே
பேய்னா அசிங்கமாயிருக்கும்னு யார் சொன்னது.
அழகான ராட்சசி இருக்கும்போது அழகான பேய் இருக்கக் கூடாதா?

கண்மணி/kanmani said...

அனானி உனக்கும் இதான் ராசா பதிலு.

புலி சிங்கத்தவிட பேய்ங்க அழகோ அழகு

ACE !! said...

//புலி சிங்கத்தவிட பேய்ங்க அழகோ அழகு //

சோக்கு சோக்கு.. ஐயோ ஐயோ... :D :D

ஆவி அம்மணி said...

//பேய்னா அசிங்கமாயிருக்கும்னு யார் சொன்னது.
அழகான ராட்சசி இருக்கும்போது அழகான பேய் இருக்கக் கூடாதா? //

டீச்சர்,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!

நளாயினி said...

ooooooo vaaf

Lakshmi said...

Hi girls,
Keep it up.. sabash sariyana potti..
Arvind amma

Chinna Ammini said...

////'மதர் பயந்து போயி 'கேத்தரின் ஆர் யூ ஆல் ரைட்'ன்னு பதறினாங்க//

நீங்க திரும்ப திரும்ப சொன்னதுக்கு மதர், கேத்தரினை எதுக்கு ஆர் யூ ஆல் ரைட்னு கேட்கனும்....//

நாகை சிவா!

குட் கொஸ்டீன்!
நானும் இதையேதான் கேக்குறேன்""


இங்க கேள்வியேல்லாம் கேக்க கூடாதுங்கோ

Anonymous said...

kalakiteenga kanmani akka

athukaga sangathu makkalkita sandai poadanuma? puliyoada commentuke pathivu thaangathu.

ithula Raam ellam vantha sollave venam. konjam paarthu pathivu poadunga.

Royal Kolai Veri Padai
Jupiter Kuruku Santhu,
Jupiter main road,
Jupiter

Anonymous said...

oru dialoguei thirumba thirumba sonna onnu Pei pidichirukunu Sottanikarai bagavathi amma kovila sangilila katti poatu pei ootuvaanga

illai paithiyam pidichirukunu Ervaadila sangilila katti poaduvaanga.

ivungala mattum Sick roomla vechi rendu naala vitutaangalam.

vellai kaaka parukuthunu sonna kooda paravala. Velli kaaka manja yaanaiya thoolitu parakuthunu sonna eppadinga nambuvaanga

கண்மணி/kanmani said...

ராயல் ராம் கொலை வெறிப்படையில்லை மொத்த படை சொறி,சிரங்கு திரண்டு வந்தாலும் நாங்க பயப்பட மாட்டோம்ல.
உண்மை சொன்னா கிண்டலா?
@அனானி
நான் திரும்ப திரும்பச் சொன்ன எபக்ட்ல கேத்தரின் மேமும் சொல்ல மதர் பயந்து போயி அவங்களைப் பார்த்து 'ஆர் யூ ஆல்ரைட் னாங்க'
இதக்கூட புரிஞ்சிக்க முடியாத நீரெல்லாம் புலி,சிங்கம்னு உறுமுறீர்.ஐயோ என்ன கொடுமையிது சரவணா?

கண்மணி/kanmani said...

@ யாரையும் நம்பாதவரே
உங்க ஊர்ல ரெண்டு தடவ பயத்துல உளறினாலே ஏர்வாடிதானா?
அப்ப நீரு அங்கிருந்துதான் கமெண்ட் போடுறீரா?பாவம்.....

கண்மணி/kanmani said...

அனானி [அ]சிங்கங்களே உங்களை நம்பச் சொல்லலியே.ஏதோ பதிவு படிச்சமா போனமான்னு இருப்பீரா?

கண்மணி/kanmani said...

உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்

Anonymous said...

//உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்
உண்மை கசக்கும்
//

பார்த்தீங்களா?

உண்மைய எழுதாம விட்டுட்டமேன்னு உங்களுக்கே கசக்குது!

Anonymous said...

adiye kanmani,

inge daan irukiyaa. Nan daan catahrine miss. Un pallai pudungaren vaa. hahaha
;)

கண்மணி/kanmani said...

அடப்பாவி கேத்தரின் மிஸ்
பேயாப் போயும் நீங்க திருந்தலையா
இன்னமும் நான் உங்க ஸ்டூடண்ட்னு நெனப்பா =)) =))

Anonymous said...

what is going on here :-B
catherine,s friend

Anonymous said...

:(( என்ன கூத்து இது கேக்க ஆளில்லையா

Anonymous said...

கண்மனி அக்கா.. ரொம்ப தான் மெனக்கெட்டு ட்ரை பண்றீங்க..

உண்மைய சொல்லுங்க.. அவங்க உங்க கத்தலை கேட்டு பயந்தாங்களா.. தலைய விரிச்சுப் போட்டு இருந்த உங்க கூட்டத்தை பாத்து பயந்தாங்களா..

கேத்தரின் மிஸ்ஸை கூட்டியாங்க யாராச்சும் சீக்கிறம்

Anonymous said...

நாந்தான் அப்பவே ஓடிட்டேனே இன்னும் என்னையேன் வம்புக்கு இழுக்கறீங்க பாவிகளா[பாப்பாக்களா]

 

BLOGKUT.COM