Monday, June 11, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 3

மக்கள்ஸ் எல்லாரும் அவங்க ஹாஸ்டல்ல பண்ண லூட்டீஸ சொன்னாங்க.. நமக்கு தான் ரொம்ப நல்ல மனசாச்சே.. ஹாஸ்டல்ல நாம போய் சேந்துட்டா வீட்ல இருக்கறவங்க எல்லாம் நிம்மதியா இருந்துடுவாங்களே.. அதுக்கு நாம காரணமாயிட கூடாதுன்னு நல்லெண்ணத்துல சென்னையிலேயே கல்லூரி படிப்ப முடிச்சிட்டோம்.. சரி.. ஹாஸ்டல் லூட்டிய போட தான் வழியில்லை.. அதுக்காக பதிவு போடாம உங்கள நிம்மதியா இருக்க விட முடியுமா சொல்லுங்க? அதான் ஆபீஸ்ல அடிச்ச லூட்டிய போட வந்துட்டேன்..

*************************************************

கௌதம் - இவன் வீடு சத்யம் தியேட்டர் பக்கத்துல. நாங்க எப்போ படம் போகனும்னாலும் அய்யாதான் டிக்கட் ரிசர்வ் பண்ணுவாரு.

நான் : டேய் கௌதம், இந்த வாரம் சனிக்கிழமை மேட்னி ஷோ "Main Hoon Na" படத்துக்கு 3 டிக்கட் வேணும். இன்னிக்கு ரிசர்வ் பண்ணிடறியா?

கௌதம் : கேக்கறது ஹெல்ப்பு.. அதை பவ்யமா கேக்க தெரியாதாக்கும் அம்மணிக்கு? ஒழுங்கா பவ்யமா "அண்ணா டிக்கெட் ரிசர்வ் பண்ணி தாங்கண்ணா"ன்னு கேளு. இல்லாட்டி ரிசர்வ்லாம் பண்ண முடியாது.

நான் : என்னது அண்ணாவா? அதுக்கு வேற யாரையாவது பாரு.. உன்னால டிக்கெட் ரிசர்வ் பண்ணி தர முடியுமா? முடியாதா?

கௌதம் : முடியாது.

நான் : சரிதான் போடா.. நாங்களே பாத்துக்கறோம்.

கௌதம் : நான் ரிசர்வ் பண்ணி தராம் நீங்க எப்படி படம் பாக்கறீங்கன்னு பாக்கலாம்.. கடைசி நேரத்துல போனாலாம் டிக்கெட்டு கிடைக்காது.

நான் : பாக்கலாம்.. நீ டிக்கெட் ரிசர்வ் பண்ணித் தராம நாங்க அந்த படம் பாத்துட்டு வர்றோம்.

கௌதம் : நீங்க மட்டும் அப்படி பாத்துட்டா அடுத்து வர்ற மாதவன் படத்துக்கு டிக்கெட் செலவு என்னோடது.

நான் : டீல் ஓ.கே..


பெட்டு வெச்சிட்டோமேன்னு நாங்களும் அந்த வேகாத வெய்யில்ல மாயாஜால் போய் படம் பாத்துட்டு வந்தோம் (அங்க தான் ஷோ ஆரம்பிக்க ஒரு 30 நிமிஷம் முன்னாடி போனாலும் டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும் :-)) ஆனா அந்த லூஸு இதெல்லாம் கிடையாது, நான் சொன்னது சத்யம்ல பாக்கறதுக்கு தான். ஸோ இதெல்லாம் நீ பெட்டுல ஜெயிச்சதா ஒத்துக்க மாட்டேன்னு சொல்லி ஏமாத்திட்டான் :-((

சில நாட்களுக்கு பிறகு,

கௌதம் : ஹே.. இந்த வாரம் MCA க்ளாஸ்ல இந்த ரெக்கார்ட் சப்மிட் பண்ணனும். வெள்ளிக்கிழமைக்குள்ள எழுதி குடுத்துடு.

நான் : சரி.


இரண்டு நாட்கள் கழித்து,

கௌதம் : ரெக்கார்ட் எழுதி முடிச்சிட்டியா?

நான் : ஓ...

கௌதம் : அப்போ கொண்டு வந்திருக்கியா?

நான் : இல்லியே..

கௌதம் : ஏன்?

நான் : நான் அன்னிக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ண சொன்னப்போ என்ன சொன்ன? அண்ணா டிக்கெட் ரிசர்வ் பண்ணி தாங்கண்ணான்னு சொல்லனுமா?

கௌதம் : அதுக்கென்ன இப்போ?

நான் : இப்போ நீ "அக்கா நாளைக்கு என் ரெக்கார்ட் நோட்ட கொண்டு வாங்கக்கா"ன்னு சொன்னா தான் நாளைக்கு ரெக்கார்டு வரும்.

கௌதம் : ஹே.. விளையாடாத...

நான் : நான் சீரியஸா தான் சொல்றேன்.. எங்க டயலாக்க கரெக்டா சொல்லு பாப்போம்.

கௌதம் : அதுக்கு நான் தூக்குல தொங்கலாம்.

நான் : உன் சாய்ஸ் :-)

கௌதம் : ஹே.. படிப்போட விளையாடாத.. ப்ளீஸ்..

நான் : சரி.. ஏதோ என்ன விட பெரியவனா போய்ட்ட.. போனா போகுது.. அக்காக்கு பதில் தங்கச்சின்னு வேணா சொல்லிக்கோ..

கௌதம் : (மனசுல திட்டிக்கிட்டே) தங்கச்சி, நாளைக்கு என் ரெக்கார்ட் நோட்டு கொண்டு வந்துடு தங்கச்சி. போதுமா?

நான் : போதும் போதும்.... நாளைக்கு உன் ரெக்கார்ட் நோட்டு வரும். இப்போ போய் உன் வேலைய பாரு..


நம்ம கிட்ட வாலாட்டறவங்கள ஒரு வழி பண்ணாம விடலாமா? நீங்களே சொல்லுங்க..

91 Comments:

Anonymous said...

எல்லா குட்டிசாத்தானும் ஒரே மாதிரிதான் எங்க பயல்களை படுத்தி எடுக்குதுங்க...

said...

@அனானி : போஸ்ட்ட முழுசா படிச்சீங்களா?? வம்ப ஆரம்பிச்சது அவன் தான்னு புரியும் :-)) நாங்க பதில் மட்டும் தான் :-)

said...

//எல்லா குட்டிசாத்தானும் ஒரே மாதிரிதான்//

Same Blood

said...

@இளா : ////எல்லா குட்டிசாத்தானும் ஒரே மாதிரிதான்//

Same Blood //

உங்கள பத்தி நீங்களே பெருமை பட்டுக்கறீங்களா? :-)

Anonymous said...

//
@அனானி : போஸ்ட்ட முழுசா படிச்சீங்களா?? வம்ப ஆரம்பிச்சது அவன் தான்னு புரியும் :-)) நாங்க பதில் மட்டும் தான் :-)
//

முழுசாதானுங்க படிச்சோம்..

உதவி கேக்கறத கொஞ்சம் பதவிசா கோளுங்கோனு சொல்றது ஒரு குத்தமா??

அதுக்காக முக்கியமான நேரத்துல குனிய வச்சு கும்மிருக்கிங்களே...

said...

வாலிபரை வதைப்பது சிலருக்கு வாடிக்கை!! என்ன உலகம்டா சாமி!!

said...

@அனானி : //உதவி கேக்கறத கொஞ்சம் பதவிசா கோளுங்கோனு சொல்றது ஒரு குத்தமா??//

வேலை ஆகனும்னா கூழ கும்புடு போடுன்னு சொல்லுறது நியாயமா???


//அதுக்காக முக்கியமான நேரத்துல குனிய வச்சு கும்மிருக்கிங்களே... //

6 செமஸ்டரும் கை நோக assignment-உம் ரெக்கார்டும் எழுதி தந்த என் கிட்டயே வால ஆட்டினா என்ன நடக்கும்னு காட்ட வேண்டாமா? அதான் :-)

said...

@குட்டிபிசாசு : //வாலிபரை வதைப்பது சிலருக்கு வாடிக்கை!! என்ன உலகம்டா சாமி!! //

அடடா, இதையே ஒரு பொண்ணு பண்ணி இருந்தாலும் நாங்க இதே ரியாக்ஷன் தான் குடுத்திருப்போம் :-)

said...

ஆஹா!!
என்னமா கரம் வெச்சு பழிவாங்கறீங்க!!!

பாவைகளோட பதிவுகள் எல்லாம் பாக்க பாக்க பயமா தான் இருக்கு!! :-S

கெளதம் said...

கௌதம் : (மனசுல திட்டிக்கிட்டே) தங்கச்சி, நாளைக்கு என் ரெக்கார்ட் நோட்டு கொண்டு வந்துடு தங்கச்சி. போதுமா?
////


ஆண்டி நான் பாவமில்லையா...???

Anonymous said...

//
ஆண்டி நான் பாவமில்லையா...???

//

இந்த பச்சை புள்ளைய கொடுமைபடுத்த எப்படித்தான் மனசு வந்துச்சோ..

குப்பை said...

இதெல்லாம்
நல்லாவா
இருக்கு....??

ப்திவின் தலைப்பை சொன்னேன்

said...

@சிவிஆர் : //பாவைகளோட பதிவுகள் எல்லாம் பாக்க பாக்க பயமா தான் இருக்கு!! :-S //

இதுக்கேவா?

அரக்கன் said...

இந்த பச்சை புள்ளைய கொடுமைபடுத்த எப்படித்தான் மனசு வந்துச்சோ..
///


ஈவு எரக்கமே இவங்களுக்கு இல்ல
இதெல்லாம் லூட்டீயா...??

said...

@கௌதம் : //ஆண்டி நான் பாவமில்லையா...??? //

இங்க ஆண்டியார்-லாம் வந்து உன் கமெண்ட பாத்து ரிப்ளை பண்ணுவாரான்னு தெரியலியேப்பா..

said...

//எல்லா குட்டிசாத்தானும் ஒரே மாதிரிதான் எங்க பயல்களை படுத்தி எடுக்குதுங்க....//

ரிப்பீட்டே.. ஆனா ஒரு கரெக்ஷன்.. பயல்கள மட்டும் இல்ல.. எல்லாரையும் தான்... :D :D

said...

@அனானி : //இந்த பச்சை புள்ளைய கொடுமைபடுத்த எப்படித்தான் மனசு வந்துச்சோ.. //

அவன் பச்சை கலர் சொக்கா போட்டு உங்கள் ஏமாத்தறான். நம்பாதீங்கோ..

said...

@குப்பை : //ப்திவின் தலைப்பை சொன்னேன் //

நான் உங்க பேர தான் சொன்னீங்களோன்னு தப்பா இல்ல நினைச்சிட்டேன்.

பழனியாண்டி said...

என்னய யாராவது கூப்டிங்களா???

said...

கெளதமாச்சும் டிக்கெட் எடுக்கறதுக்கு முன்னடியே உங்களுக்கு சொல்லிட்டான்.. ஆனா நீங்க அவன் கிட்ட ரெக்கார்ட் வாங்கறதுக்கு முன்னடி சொல்லியிருக்கனும்..

பண்றது எல்லாம் ஃபிராடு.. எங்கள மாதிரி அப்பாவி நல்லவங்கள ஏமாத்தி, மிரட்டி, பயமுறுத்தி.. அவ்வ்வ்வ்வ்வ்

said...

@அரக்கன் : //ஈவு எரக்கமே //

உங்க பேருக்கும் நீங்க இந்த வார்த்தைய எல்லாம் உச்சரிக்கலாமாண்ணா?

said...

@ஏஸ் : //ரிப்பீட்டே.. ஆனா ஒரு கரெக்ஷன்.. பயல்கள மட்டும் இல்ல.. எல்லாரையும் தான்... :D :D //

அனுபவம் பேசுது போல :-)

சிவப்பு கண்ணாடி போட்டவன் said...

//
அவன் பச்சை கலர் சொக்கா போட்டு உங்கள் ஏமாத்தறான். நம்பாதீங்கோ..
//

இல்லையே அவன் சிவப்பு சொக்கா தன போட்டுருக்கான்

said...

@பழனியாண்டி : //என்னய யாராவது கூப்டிங்களா??? //

நீங்க பழனியாண்டி தான்னு ப்ரூவ் பண்ண பஞ்சாமிர்தம் கொண்டு வந்திருக்கீங்களா????

said...

@ஏஸ் : //ஆனா நீங்க அவன் கிட்ட ரெக்கார்ட் வாங்கறதுக்கு முன்னடி சொல்லியிருக்கனும்..//

நான் என்ன அவன மாதிரி கேனையா?? நான் முன்னாடியே சொல்லி அவன் தப்பிக்க சான்ஸ குடுக்க?

said...

@ஏஸ் : //எங்கள மாதிரி அப்பாவி நல்லவங்கள //

சீக்கிரம் உங்களுக்கு ஒரு சர்வே போடனும் போல இருக்கே..

said...

@சிவப்பு கண்ணாடி போட்டவன் : //இல்லையே அவன் சிவப்பு சொக்கா தன போட்டுருக்கான் //

அவன் நீங்க பாக்கறதுக்குள்ள சொக்காவ மாத்திட்டானுங்க :-)

அரக்கன் said...

G3 said...
@அரக்கன் : //ஈவு எரக்கமே //

உங்க பேருக்கும் நீங்க இந்த வார்த்தைய எல்லாம் உச்சரிக்கலாமாண்ணா?
///

இப்பயாவது ஒத்துகிட்டிங்கலே நீங்க அரக்கினு

அரக்கி said...

//
இப்பயாவது ஒத்துகிட்டிங்கலே நீங்க அரக்கினு
//
அய்யோ என்னக்கா நீயே வாய
விட்டு மாட்டிகிட்டியே

said...

//அடடா, இதையே ஒரு பொண்ணு பண்ணி இருந்தாலும் நாங்க இதே ரியாக்ஷன் தான் குடுத்திருப்போம் :-)//
ஐ, யார்க்கிட்டே இந்த கதையெல்லாம் விடறீங்க?


//எல்லா குட்டிசாத்தானும் ஒரே மாதிரிதான்//
நாங்க எல்லாம் சாத்தானுங்க..

said...

@அரக்கன் : //இப்பயாவது ஒத்துகிட்டிங்கலே நீங்க அரக்கினு //

நான் அப்படி சொல்லவே இல்லயே.. நம்ம வ.வா. சங்கத்துல சில சிங்கங்கள் கூடத்தான் என்ன அக்கான்னு கூப்பிடறாங்க. அதுக்காக நானும் சிங்கமாயிடுவேனா என்ன?

said...

@அரக்கி : //அய்யோ என்னக்கா நீயே வாய விட்டு மாட்டிகிட்டியே//

யாரும்மா அது?? சந்துல சிந்து பாடுறது?

said...

@இளா : //ஐ, யார்க்கிட்டே இந்த கதையெல்லாம் விடறீங்க?//

உங்க கிட்ட தான் :-)))

//நாங்க எல்லாம் சாத்தானுங்க.. //

யூ மீன் சீனியர்ஸ் டு குட்டிசாத்தான்ஸ் ;-)))

said...

ஊஞ்சல்ஸ்,

உங்க போஸ்ட் காமெடியை விட தலைப்பை பார்த்து வர்ற சிரிப்பை தான் இன்னவரைக்கும் அடக்கமுடியலை... :)))

said...

@ராம் : உலகம் உருண்டைனு கலீலியோ சொன்னப்போ அவர பாத்தும் மக்கள் இப்படித்தான் சிரிச்சாங்களாம்.. உண்மைக்கு இந்த உலகத்துல வரவேற்பு இப்படித்தான் இருக்கும்..

said...

// G3 said...
@ராம் : உலகம் உருண்டைனு கலீலியோ சொன்னப்போ அவர பாத்தும் மக்கள் இப்படித்தான் சிரிச்சாங்களாம்.. உண்மைக்கு இந்த உலகத்துல வரவேற்பு இப்படித்தான் இருக்கும்.. //

நல்ல வேளை அந்தாளு போய் சேந்துட்டார், அப்பவே... ;-)

said...

இதுக்கு பேர் லூட்டியா... மிரட்டல்...

ஆனாலும் கேவலம் ஒரு ரெக்கார்ட் வாங்க உங்க பிரண்ட் இவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்க கூடாது... வந்தது நினைச்சா ரொம்ப கவலையா தான் இருக்கு....

இதே நாங்களா இருந்தா அத நீயே வச்சுக்கோனு சொல்லிட்டு வேற ஒருத்தர் கொடுத்து எழுதி வாங்கி இருப்போம்... அப்பக் கூட நாங்க எழுத மாட்டோம், எழுதி தான் வாங்குவோம்...

said...

நல்லாத்தான் கலாய்ச்சிருக்கீங்க‌
வ‌ வா சங்கத்துக்காரங்க வயித்துல புளியக்கரைக்கிறீங்க போல இருக்கு

said...

ஆக ரெக்கார்ட் நீங்க தானே எழுதி கொடுத்திங்க... அப்புறம் என்ன..

said...

//நல்லாத்தான் கலாய்ச்சிருக்கீங்க‌
வ‌ வா சங்கத்துக்காரங்க வயித்துல புளியக்கரைக்கிறீங்க போல இருக்கு //

நாங்க என்ன ரசமா வைக்க போறோம் புளிய கரைக்க?

அது யுத்த பூமி.... இது வெறும் சத்த பூமி....

அது போர்க்களம் இது வெறும் நடைக்களம்....

அங்க எப்பவும் ரணக்களம் தான். நாங்க இங்க வந்தா களமே ரணம் ஆயிடும்....

said...

//நான் அப்படி சொல்லவே இல்லயே.. நம்ம வ.வா. சங்கத்துல சில சிங்கங்கள் கூடத்தான் என்ன அக்கான்னு கூப்பிடறாங்க. அதுக்காக நானும் சிங்கமாயிடுவேனா என்ன?//

அது சொர்ணாக்கா...

said...

//இராம் said...

ஊஞ்சல்ஸ்,

உங்க போஸ்ட் காமெடியை விட தலைப்பை பார்த்து வர்ற சிரிப்பை தான் இன்னவரைக்கும் அடக்கமுடியலை... :))) //

இதை நான் வழி மொழிகிறேன் :-)

said...

// Chinna Ammini said...

நல்லாத்தான் கலாய்ச்சிருக்கீங்க‌
வ‌ வா சங்கத்துக்காரங்க வயித்துல புளியக்கரைக்கிறீங்க போல இருக்கு //

போஸ்டைவிட இது காமெடியா இருக்கு :-)

அய்ஸ்' வர்யா said...

பியூட்டி பாருல போய் 5 கோட்டீங் ஏத்துனது தெரியாதா எங்களுக்கு....????

அபி said...

அய்ஸ்' வர்யா said...
பியூட்டி பாருல போய் 5 கோட்டீங் ஏத்துனது தெரியாதா எங்களுக்கு....????
///

5 கோட்டீங் அடிச்சும் பியூட்டி வரலங்கிறதுதான் இப்போ பிரச்சனையே

said...

@சிவா ://நல்ல வேளை அந்தாளு போய் சேந்துட்டார், அப்பவே... ;-) //

நீங்க தான் அனுப்பி வெச்சீங்களாமே??

//இதே நாங்களா இருந்தா அத நீயே வச்சுக்கோனு சொல்லிட்டு வேற ஒருத்தர் கொடுத்து எழுதி வாங்கி இருப்போம்... //

பாவம் பையனுக்கு உங்க அளவுக்கு விஷயம் தெரியலை :-))

said...

@சின்ன அம்மணி : //நல்லாத்தான் கலாய்ச்சிருக்கீங்க‌
வ‌ வா சங்கத்துக்காரங்க வயித்துல புளியக்கரைக்கிறீங்க போல இருக்கு //

ஹி....ஹி.. :-)))

said...

@சிவா : //ஆக ரெக்கார்ட் நீங்க தானே எழுதி கொடுத்திங்க... அப்புறம் என்ன.. //

எல்லா செமஸ்டருக்கும் நானேதான் எழுதி குடுத்தேன் :-((


//இது வெறும் சத்த பூமி....//

நல்லா கேட்டுபாருங்க.. அது உங்க உறுமல் சத்தம் தானே ;-))

said...

@வெட்டிப்பயல் : //அது சொர்ணாக்கா... //

அவங்கள ஏன் இங்க வம்புக்கிழுக்கறீங்க? பாவம் அவங்க..


//இதை நான் வழி மொழிகிறேன் :-) //

சொந்தமா ஒரு கமெண்டு போட தெரில.. ஹூம்... என்னத்த சொல்ல??


//போஸ்டைவிட இது காமெடியா இருக்கு :-) //

பொறாமைல என்னமோ சொல்லிட்டு போங்க... அதெல்லாம் எங்கள பாதிக்காது :-))

said...

@அய்ஸ்' வர்யா & அபி : நாங்க ப்யூட்டின்னு சொல்றது எங்க மனச... இது கூட தெரியாம.. என்ன மக்களோ போங்க..

said...

////இதை நான் வழி மொழிகிறேன் :-) //

சொந்தமா ஒரு கமெண்டு போட தெரில.. ஹூம்... என்னத்த சொல்ல??//

சொந்தமா டயலாக் சொல்ல தெரியாம அந்த பையன் சொன்னதை காப்பி அடிச்சிட்டு எங்களுக்கு சொந்தமா சொல்ல தெரியலைனு சொல்றீங்களா சொர்ணா அக்கா ;-)

said...

@வெட்டிபயல் : //சொந்தமா டயலாக் சொல்ல தெரியாம அந்த பையன் சொன்னதை காப்பி அடிச்சிட்டு எங்களுக்கு சொந்தமா சொல்ல தெரியலைனு சொல்றீங்களா //

சங்கத்து சிங்கங்கள் எங்கள் விட கொஞ்சம் பெரிய ரேஞ்சுன்னு நினைச்சேன்.. நீங்களும் எங்க லெவல் தானா??? :-)))

said...

yakko.. semma kalakkal.. nallaave looty adichchirukkeengga..

athuvum makkals podda commentsukku pathil comments superO super. :-D

said...

//G3 said...

@வெட்டிபயல் : //சொந்தமா டயலாக் சொல்ல தெரியாம அந்த பையன் சொன்னதை காப்பி அடிச்சிட்டு எங்களுக்கு சொந்தமா சொல்ல தெரியலைனு சொல்றீங்களா //

சங்கத்து சிங்கங்கள் எங்கள் விட கொஞ்சம் பெரிய ரேஞ்சுன்னு நினைச்சேன்.. நீங்களும் எங்க லெவல் தானா??? :-))) //

யாரும் யாரையும் விட பெரியவங்களும் இல்லை.... சின்னவங்களும் இல்லை ;)

மணிகண்டன் said...

சொர்ணாக்கா என்ற பெயர் ஏற்கனவே பொன்ஸ் அக்காவிற்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் சொர்ணாக்கா என்ற பெயர் இங்கே வேறொருவரரச் சுட்டிக் காட்டிப் பயன்படுத்திருப்பதையும் கடுமையான கண்டனத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

said...

//யாரும் யாரையும் விட பெரியவங்களும் இல்லை.... சின்னவங்களும் இல்லை ;) //

அட்ரா சக்கை.... அட்ரா சக்கை... அட்ரா சக்கை னா.....

இந்த தன்னடக்கம், அவையடக்கம் எல்லாம் நமக்கே உரித்தானது வெட்டி...

said...

G3,sariyana looty thaan ponga!!

post eh vida comments section sema looty.. epdinga ipdilaam..

said...

@.:: மை ஃபிரண்ட் ::. : நன்றி ஹை :-)))

said...

//நாங்க ப்யூட்டின்னு சொல்றது எங்க மனச... இது கூட தெரியாம.. என்ன மக்களோ போங்க..
//

chance ye illa..kalakkiteenga!!

said...

@வெட்டிப்பயல் : //யாரும் யாரையும் விட பெரியவங்களும் இல்லை.... சின்னவங்களும் இல்லை ;)//

நீங்க சொன்னத நம்பி நானும் எங்க டேமேஜர் கிட்ட போயி, எங்க வெட்டிகாரு இப்படி செப்பிட்டாரு.. அதனால அடுத்த மாசத்துல இருந்து நீங்க வாங்கற சம்பளத்தையே எனக்கும் குடுங்கன்னு கேட்டேன்.. ஒத்துக்க மாட்டேங்கறாரு :-((

said...

@மணிகண்டன் : நீங்க சொல்றது வெட்டிக்கு தானே :-)))

said...

@சிவா : //இந்த தன்னடக்கம், அவையடக்கம் எல்லாம் நமக்கே உரித்தானது வெட்டி...//

ரொம்பவே தன்னடக்கம் தான் உங்களுக்கு :-)))

said...

@பத்மப்ரியா : //G3,sariyana looty thaan ponga!!

post eh vida comments section sema looty.. epdinga ipdilaam..//

//chance ye illa..kalakkiteenga!!//

நன்றி!!! நன்றி!!! நன்றி!!! :-))

ஒருவன் said...

G3 said...
@அய்ஸ்' வர்யா & அபி : நாங்க ப்யூட்டின்னு சொல்றது எங்க மனச... இது கூட தெரியாம.. என்ன மக்களோ போங்க..
///

உண்மைய ஓத்துகிட்டா சரி

said...

65 potu oru chicken 65 ketu arambipom :)

said...

idhellam oru pozhapu...munnadi ippadithaan santhosa santhosama padam paarka vida paduthi edutheenga....ippa gautam....enna kodumai ace idhu....

said...

//வீட்ல இருக்கறவங்க எல்லாம் நிம்மதியா இருந்துடுவாங்களே.. அதுக்கு நாம காரணமாயிட கூடாதுன்னு நல்லெண்ணத்துல//....ivlo nallavangala neenga...

said...

//மாயாஜால் போய் படம் பாத்துட்டு வந்தோம் //...mayajaal poradhuku idhellam oru saaku....padiakara pozhapa paarkaama ooru sutha vendiyadhu....ketta betu...batu....karanama solla vendiyadhu....

said...

ellarukum record ezhudhu kudukaradha oru thozhilave vachi irukeenga...therinji irundha ennoda recordum anupi irupen....

said...

oru 70...edachum paarthu potu kudunga..

said...

@ஒருவன் : //உண்மைய ஓத்துகிட்டா சரி//

நாங்க என்னைக்குமே உண்மைய தான் பேசுவோம் :-))

said...

@பரணி : //chicken 65 ketu arambipom :)//
உங்களுக்கு இல்லாத சிக்கன் 65-அ?

//munnadi ippadithaan santhosa santhosama padam paarka vida paduthi edutheenga....ippa gautam//
ஹி..ஹி.. அந்த சந்தோஷ் தான் இந்த கௌதம். அவன் தான் போஸ்டுக்கு இந்த பேர யூஸ் பண்ண சொன்னான் :-))))

//ivlo nallavangala neenga...//
இன்னுமா உங்களுக்கு சந்தேகம்???

said...

//அந்த சந்தோஷ் தான் இந்த கௌதம். அவன் தான் போஸ்டுக்கு இந்த பேர யூஸ் பண்ண சொன்னான் //....andha paavapata jeevaraasi dhaana ivaru.....ivlo vaangiyum punai peru poda solraaru paarunga.....anga nikaraaru namma aalu...

said...

adhu enna 74

said...

75 vachikanga....

said...

@பரணி : //ellarukum record ezhudhu kudukaradha oru thozhilave vachi irukeenga...therinji irundha ennoda recordum anupi irupen....//
இந்த போஸ்ட படிச்சப்புறமும் இப்படி தோணுதா உங்களுக்கு? நீங்க நிஜமாவே தைரியசாலி தான் :-)

//edachum paarthu potu kudunga..//
உங்களுக்கு புடிச்ச குர்மி நானும் பீஸ் மசாலாவும் ஆன் தி வே :-)) இதுக்கும் சிக்கன் 65 க்கும் சேத்து எப்பவும் போல நீங்களே பில்ல பே பண்ணிடுங்க பில்லு பரணி :-)))

said...

@பரணி : அடடா.. ஆன்லைன்ல தான் இருக்கீங்களா???

//andha paavapata jeevaraasi dhaana ivaru.....ivlo vaangiyum punai peru poda solraaru paarunga.....anga nikaraaru namma aalu...//
ஹி..ஹி.. :-)))

75-ஆவது கமெண்ட்டுக்கு நாயர் கடைல சொல்லி மசாலா பால் வாங்கி சாப்டுக்கோங்க :-))

said...

//இதுக்கும் சிக்கன் 65 க்கும் சேத்து எப்பவும் போல நீங்களே பில்ல பே பண்ணிடுங்க பில்லு பரணி//....idhuku neenga eduvum thara maatenu direct-ave solli irukalaaam....

said...

naan poi masala paal saptutu kelambaren....

said...

friend-a poiteenga....adhanala eduvum tharalanaalum oru 80...

said...

@பரணி : //idhuku neenga eduvum thara maatenu direct-ave solli irukalaaam....//
நீங்க இருக்கும் போது நாங்க பில்ல பே பண்ணா அது உங்களுக்கு தானே இன்ஸல்ட்.. அதான் அப்படி சொன்னேன்..

//naan poi masala paal saptutu kelambaren....//
சமத்து :-)))

//friend-a poiteenga....adhanala eduvum tharalanaalum oru 80...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இப்போ எல்லாம் உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..

said...

// இராம் 덧글 내용...
ஊஞ்சல்ஸ்,

உங்க போஸ்ட் காமெடியை விட தலைப்பை பார்த்து வர்ற சிரிப்பை தான் இன்னவரைக்கும் அடக்கமுடியலை... :)))
//

ஹ்ம்ம்ம்... இங்க இப்படி சொல்ல வேண்டியது... அப்புறம் போயி ப்ரிகேட் ரோடுல ஃபோரம்ல-ன்னு பயங்கரமா சைட் அடிச்சு அதை பதிவா போட வேண்டியது...

யாராவது ஒருத்தர்... ஒருத்தர் இங்க பொண்ணுங்களை சைட் அடிக்காம இருக்க்கோம்னு நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க பாப்போம்... ஏன் பொண்ணுங்களைப் பத்தி பதிவு போட்டதில்லைனு சொல்லுங்க பாப்போம்... அப்படி இருக்கறவங்கள தவிர எங்க தலைப்ப கமென்ட் அடிக்க யாருக்கும் தகுதி இல்ல...

said...

//ஹ்ம்ம்ம்... இங்க இப்படி சொல்ல வேண்டியது... அப்புறம் போயி ப்ரிகேட் ரோடுல ஃபோரம்ல-ன்னு பயங்கரமா சைட் அடிச்சு அதை பதிவா போட வேண்டியது...//

யக்கோவ்,

அது எங்களோட பிறப்புரிமை.... :)

//யாராவது ஒருத்தர்... ஒருத்தர் இங்க பொண்ணுங்களை சைட் அடிக்காம இருக்க்கோம்னு நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க பாப்போம்... ஏன் பொண்ணுங்களைப் பத்தி பதிவு போட்டதில்லைனு சொல்லுங்க பாப்போம்...//

அப்பிடி சொல்ல எங்களுக்கு என்ன தயக்கம்... ஆனா அந்த பொண்ணு ரொம்பவே வருத்தப்படுமே??? நாமே அழகா இருக்கோம், நம்மளை ஏன் இந்த பசங்க பார்க்க போறாங்கன்னு அநியாத்துக்கு வருத்தப்படுவாங்க... :)

//அப்படி இருக்கறவங்கள தவிர எங்க தலைப்ப கமென்ட் அடிக்க யாருக்கும் தகுதி இல்ல...//

ஓ அப்பிடியா? அந்த தகுதியை வளர்த்துக்க முயற்சி பண்ணுறோம்... :)


கடைசியா ஒன்னே ஒன்னு,

நீங்க அதாவது பொண்ணுங்க அழகுன்னு பொண்ணை சொல்லிக்கிறத விட எதிர்பாலான ஆண் சொன்னாதான் அது அழகு..... ஐ மீன் ஃப்யூட்டி

said...

யக்கோவ்!!
ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க???

அவங்க பொண்ணுங்க எல்லாம் அழகு இல்லைன்னு சொல்லல,பா பா சா -ல இருக்கறவங்கதான் பியூட்டீஸ் இல்லனு சொல்றாங்க!! அதுவும் தமாஷுக்கு!!
ஓவரா ஆணி புடிங்கு மூளை சூடாயிருச்சு போல.

வெளில போய்ட்டு சில்லுனு கரும்பு ஜூஸ் குடிச்சிட்டு வந்து படிங்க!! :-)

said...

// நீங்க அதாவது பொண்ணுங்க அழகுன்னு பொண்ணை சொல்லிக்கிறத விட எதிர்பாலான ஆண் சொன்னாதான் அது அழகு..... ஐ மீன் ஃப்யூட்டி
//

இங்க ப்யுட்டிஸ்னு நாங்க மீன் பண்ணினது பொதுவா "கேர்ள்ஸ்"-னுதான். ஓகே?

said...

// CVR 덧글 내용...
யக்கோவ்!!
ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க???

//

நானொன்னும் டென்ஷன் ஆகலை அண்ணா... :)))

எல்லாருக்கும் விளக்கம் குடுத்தேன். எத்தனை நாள்தான் ஒரே விஷயத்தை சொல்லிட்டே இருப்பீங்க? போர் அடிக்குது இல்ல ;)

said...

//யாராவது ஒருத்தர்... ஒருத்தர் இங்க பொண்ணுங்களை சைட் அடிக்காம இருக்க்கோம்னு நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க பாப்போம்... ஏன் பொண்ணுங்களைப் பத்தி பதிவு போட்டதில்லைனு சொல்லுங்க பாப்போம்...//

ஏன்? நாங்களெல்லாம் சைட் அடிக்காமத்தான் இருக்கோம். இதைச் சொல்வதில் எங்களுக்கென்ன தயக்கம்!

வேணும்னா துண்டை போட்டு கூடத் தாண்டத் தயார். இதன் பிறகும் நம்பிக்கை இல்லையெனில் எங்கள் தலைக்கு அலகு குத்தி நிரூபிப்போம் என்று எச்சரிக்கிறேன்!

said...

//நீங்க அதாவது பொண்ணுங்க அழகுன்னு பொண்ணை சொல்லிக்கிறத விட எதிர்பாலான ஆண் சொன்னாதான் அது அழகு..... ஐ மீன் ஃப்யூட்டி//

எங்க தலயோட தத்துவார்த்த விளக்கங்களுக்கு யாராவது ஈடு கொடுக்க முடியுமா என்ன?

said...

//எத்தனை நாள்தான் ஒரே விஷயத்தை சொல்லிட்டே இருப்பீங்க? போர் அடிக்குது இல்ல //

நீங்க கூட தான் ப்யூட்டீஸ்னு விடாம 3 போஸ்ட்டா சொல்லிட்டு இருக்கீங்க... நிறுத்திக்குவோம்.. எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.. முதல்ல நீங்க நிறுத்துங்க.. :D :D :D

said...

ச்சே... ச்சே... ச்சே... ச்சே... கொஞ்ச நேரம் நிம்மதியா கமெண்ட் படிக்கலாம்னு வந்தா ஒரே சண்டையா இருக்குது...

பதிவுலக நாரதன் said...

என்ன நடக்குது இங்கே?

ஒண்ணுமே புரியலை!

நாராயணா! நாராயணா!

 

BLOGKUT.COM