Tuesday, August 21, 2007

ஜெ-வுடன் ஒரு பேட்டி

சங்கத்து ரிசப்ஷன்ல நல்லா தூங்கிட்டிருந்த நம்ம கவிதாயினி டக்குனு "யூ ஹேவ் அ நியூ மெயில்" னு கம்ப்யூட்டர்ல இருந்து சத்தம் வந்ததும் அலறி அடிச்சிக்கிட்டு எழுந்துக்கறாங்க.. வந்திருந்த மெயில பாத்ததும் அலறி அடிச்சிக்கிட்டு மத்த மக்கள் எல்லாரையும் கூப்பிட மொத்த சங்கமும் கவிதாயினி முன்னாடி ஆஜர்..

கண்மணி : ஏண்டி இப்படி அலறின??

கவிதாயினி : இங்க வந்து இந்த மெயில பாருங்க.. இன்னிக்கு ஜெ.ஜெ. மேடம்க்கு பிறந்தநாளாம். நம்ம சங்கத்து மக்களுக்கு போன்ல பேச அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்களாம்..

மை ப்ரெண்ட் : என்னது? நிஜமாவா?

ஜி3 : ஆஹா.. சூப்பர்.. இப்பவே போன போடுவோம்..

அனுசுயா : சரி.. சரி.. வாங்க போன் பண்ணலாம்.

இம்சை : ஒரு நிமிஷம்.. ஊர்ல இருந்து அப்பா கால் பண்றாரு.. நீங்க எல்லாரும் பேசிட்டிருங்க.. நான் இதோ வந்துடறேன்..

கவிதாயினி : சீக்கிரம் வந்துடு.

கண்மணி டீச்சர் ரொம்ப ஆர்வமாக மெயிலில் தரப்பட்டிருந்த நம்பருக்கு போன் பண்றாங்க.. ட்ரிங்.. ட்ரிங்...

அந்த பக்கம் : ஹலோ

கண்மணி : வணக்கங்க.. நாங்க ப.பா. சங்கத்துல இருந்து பேசறோம். ஜெ.ஜெ. மேடம் அவங்க கிட்ட பேச எங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்க..

அந்த பக்கம் : ஒ.. நீங்க தானா? மேடம் சொன்னாங்க.. உங்க கால் வரும்னு.. ஒரு நிமிஷம் லைன்ல இருங்க..

மை ப்ரெண்ட் : என்ன ஆச்சு? லைன்ல வந்துட்டாங்களா?

கண்மணி : இல்ல கூப்பிட போயிருக்காங்க.. வந்துடுவாங்க.. இரு ஸ்பீக்கர்ல போடறேன்..

ஜெ.ஜெ : ஹல்லோ. வணக்கம்.. நான் தான் ஜெ.ஜெ. பேசறேன்.

கண்மணி : வணக்கம் மேடம்.. எங்க சங்கத்து சார்பா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

எல்லாரும் கோரசாக : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!!!

ஜெ.ஜெ : நன்றி.. நன்றி.. உங்க சங்கத்த பத்தி கேள்விபட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துது. அதான் பிறந்தநாள் அதுவுமா உங்க எல்லார் கிட்டயும் பேசலாம்னு முடிவு பண்ணேன்..

கவிதாயினி : ரொம்ப சந்தோஷம் மேடம்.. உங்களுக்காக ஒரு பிறந்தநாள் வாழ்த்து கவிதை சொல்லட்டுமா மேடம்..

ஜெ.ஜெ : வேணாம்டா செல்லம்.. பிறந்தநாள் அதுவுமா என்ன அழவெச்சிடாத.. நீ கவிதை சொல்லாம இருந்தா என் பிறந்தநாள் பரிசா உனக்கு கோழிக்கால் சூப்பு அனுப்பி வைக்கறேன்..

கவிதாயினி : நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க மேடம்.. மறக்காம கோழிக்கால் சூப்ப அனுப்பிடுங்க..

மை ப்ரெண்ட் : அவ கெடக்கறா விடுங்க மேடம்.. ஒரு ராணியோட தோரணை உங்க கிட்ட தெரியுதே.. அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..

ஜெ.ஜெ. : அது என்னோட குணம் அப்படி... எப்பவும் அடுத்தவங்கள அடக்கித்தான் பழக்கம்.. நான் யாருக்கும் அடங்கி பழக்கமே கிடையாது..

ஜி3 : [ஆஹா.. அராஜகப் பேர்வழியா இருப்பாங்க போல்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே] மேடம் கவிதாயினி கவிதை சொல்லாம விட்டா கோழிக்கால் சூப் தர்றேன்னு சொன்னீங்களே.. அதே மாதிரி நானும் உங்கள கேள்வி கேட்காம விட்டா எனக்கு சிக்கன் பிரியாணி அனுப்புவீங்களா மேடம்?

ஜெ.ஜெ : நீ திருந்தவே மாட்டியா? ஆமா.. இப்போ நீ கேட்டதே ஒரு கேள்வி தானே.. அப்போ உனக்கு நான் சிக்கன் பிரியாணி குடுக்க வேண்டியதில்லையே..

ஜி3 (மனதிற்குள்) : அடடா.. கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்காங்களே.. சரி.. கவிதாயினி சூப்ல கைய வைச்சிட வேண்டியது தான்..

அனுசுயா : மேடம் நீங்க ஏன் மேடம் கல்யாணமே பண்ணிக்கல??

ஜெ.ஜெ : நான் வரதட்சனைங்கற பேர்ல விலை குடுத்து வாங்கற மாப்பிள்ளை அந்த விலைக்கு தகுந்தவனா இருக்கனும்னு எதிர்பாக்கறேன்.. ஆனா இது வரைக்கும் அந்த மாதிரி யாருமே கிடைக்கலை.. அதான்..

இந்த வாக்கியத்தை கேட்டதும் நம் கண்மணி டீச்சரின் மூலையில் இது எங்கயோ கேள்விப்பட்ட பதிலா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டே வெளியில வர அங்க இம்சை அரசி போனில் ஜெ.ஜெ. மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்.

கண்மணி : அடிப்பாவி.. இதெல்லாம் உன் வேலை தானா? அட என் அறிவு ஜீவி அப்ரண்டிசுகளா இங்க வந்து பாருங்க.. இவ்ளோ நேரம் நாம பேசினது இந்த இம்சை கிட்ட..

ஏமாந்த கலை முகத்தில வழிய அனைவரும் இம்சையை துரத்திக்கொண்டு ஓடுகின்றனர்..

எப்படியும் இம்சைக்கு பிறந்தநாள் அதுவுமா நல்ல பர்த்டே பம்ப்ஸ் உறுதி.. நேர்ல குடுக்க முடியாதத இப்படி கற்பனைல குடுத்துக்கறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இம்சை அரசி.. உன் ஆட்சி இன்று போல் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் :))

Friday, August 17, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 3

இம்சை : கதை சொல்லு கதை சொல்லுனு சும்மா நச்சாதீங்கப்பா (அது தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? )
சரி, சொல்றேன் கேட்டுக்கோங்க. நைட் 12 மணி. க்ளாக்ல பெல் அடிக்குது. தூரத்துல நரி ஊளைவிடுது.

கண்மணி : அதெப்படி நடு சிட்டில நரி ஊளைவிடும்.

G3 : அதெல்லாம் அப்டிதான் எத்தனை சினிமால வருது அதெல்லாம் கேட்க மாட்டீங்க. இத மட்டும் கேளுங்க.

இம்சை : ம் அப்புறம் இந்த சத்தம் கேட்டு ஹிரோயின் திடுக்குன்னு முழிச்சுக்கறா. ஏதோ ஒன்னு அவ தொண்டை மேல சுறுசுறுனு ஏறுது.

மைபிரெண்ட் : அப்ப மியூசிக் தடதடனு அதிரனும் பாக்கறவங்க அதிரனும் சரியா

இம்சை : குட் கரெக்ட் இப்டிதான் பிக் அப் பண்ணனும்

G3 : சரி அப்புறம் என்ன சொல்லுங்க

இம்சை : அப்ப ப்ரெண்ட்டோட தம்ம திருட்டுதனமா எடுத்து அடிச்சிட்டு வீதில நடந்து போற நம்ம கதாநாயகன் சத்தம் கேட்டு காப்பாத்த வராரு வீட்டுக்குள்ள. அப்ப கதைவு சாத்தியிருக்கு அதை உடைக்கலாம்னு நம்ம ஹிரோ வேகமா ஓடி வராரு. அந்த கேப்ல ஒரு பெருச்சாளி ஓடி வந்து கதவு மேல முட்டி கதவு ஒடைஞ்சி போயிடுது. ஆனா இன்னும் நம்ம ஹீரோயினி கத்திட்டே இருக்காங்க.

கண்மணி : ஏன் கத்தறாங்க.

G3 : ம் கதவ உடைச்சா யாருதான் கத்த மாட்டாங்க ?

இம்சை : சொல்றேன் முழுசா கேளுங்க. அப்புறம் உள்ள வந்து ஹீரோயின் கழுத்துல இருந்து கஷ்டப்பட்டு தேடி ஒரு குட்டி எறும்ப எடுத்து கீழ விடுவாரு. இதனால நம்ம ஹீரோயினுக்கு அவன் மேல லவ் வந்திடுது. எப்டி என் இன்ட்ரோ சீன்

கண்மணி : சூப்பர் :)

மைபிரெண்ட் : என்ன கொடுமை இது இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன் போங்க.

இம்சை : ஏன் இந்த கதைக்கு என்ன குறை?

G3 : அதான இதுக்கு என்ன குறை?

மைபிரெண்ட் : என்ன கொடுமை ஒரு எறும்ப எடுத்து விட்டதுக்கெல்லாம் காதல் வருமா?

G3: ஆமா எத்தனை தமிழ் சினிமா பாத்திருப்போம் சும்மா கீழ விழுகறப்போ பிடிச்சா கூட காதல் வருதாமா? இதுல எறும்பு கடிக்காம காப்பத்தற ஹீரோ மேல காதல் வரதுல என்ன தப்பு?

மைபிரெண்ட்: சரி டூயட் இல்லயா? சும்மா கண்ண மூடுனா ஆஸ்திரேலியா அமெரிக்கானு போய் பாட வேண்டியதில்லையா?

அனுசுயா : என்னது ஆஸ்திரேலியா அமெரிக்காவா இதெல்லாம் பட்ஜெட்ல வராது. பேசாம சென்னை கூவம் பக்கத்துல எடுத்தாப் போதும்.

மைபிரெண்ட்: அய்யோ நாத்தம் தாங்காதே?

அனுசுயா : வேணும்னா ஆளுக்கு ஒரு மாஸ்க் வாங்கிக்கலாம்

இம்சை : சரி இந்த இடத்துல ஒரு பாட்டு வருது. எறும்பும் பெருச்சாளியயும் வெச்சு.

அனு : காயத்ரி நம்ம கதைக்கு ஒரு பாட்டு சும்மா சூப்பரா எழுதி குடும்மா

கவிதாயினி : ஆகா உங்க கதையில வர்ர எறும்பு, பெருச்சாளிக்கெல்லாம் என்னால பாட்டு எழுத முடியாது

அனு : இங்க பாரு நீ ரொம்ப பிகு பண்ணுனா நானே கவிதை எழுதி உன் பேர்ல பப்ளிஷ் பண்ணிடுவோம்

கவிதாயினி : அப்ப சரி அப்டியே எழுதிகோங்க ஆனா என் இமேஜ் ஸ்பாயில் ஆகாம பாத்துக்கோங்க

அனு : இமேஜ்னா Bmp, JPEG file தான.. அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டோம் டோன்ட் வொர்ரிமா :)

கவிதாயினி : அட கொடுமையே இப்டிலாம் நக்கல் பண்ணுனா நான் பாட்டு எழுத மாட்டேன் போங்க.

அனு : அதனால என்ன நாங்களே உன் பேர்ல எழுதிக்கரோம் :)

கண்மணி : பேசாம நீயே பாட்டு எழுதிடு.. கவிதாயினி எழுதினா அப்புறம் ஹீரோயினோட கண்ணீர தொடைக்க லாரி லாரியா டிஷ்யூ பேப்பர் வாங்க வேண்டி இருக்கும்.. உன் பட்ஜெட் தான் உதைபடும்..

அனு : அட ஆமா.. அத வேற மறந்தே போயிட்டேன்.. அப்போ நானே பாட்டு எழுதிடறேன்..

மை ப்ரெண்ட் : சரி பாட்டுக்கப்புறம் கதைய கண்டின்யூ பண்ணுங்கப்பா..

இம்சை : அடுத்து டூயட் முடிஞ்சதும் அப்படியே ஹீரோ அண்ட் ஹீரோயின் 2 பேரும் அடுத்தவங்க கண்ணையே பாத்துட்டிருக்காங்க.. திடீர்னு டமால்-னு ஒரு பயங்கர சத்தம்..

கவிதாயினி : அய்யய்யோ.. என்ன ஆச்சு??

இம்சை : ஹீரோ அப்படியே கண்ண சொருகிக்கிட்டு கீழ விழறாரு.. பாத்தா பின்னாடி ஹீரோயினோட அண்ணன் சித்தார்த் கையில ஒரு கட்டையோட கண்ணுல ஒரு கொல வெறியோட நிக்கறாரு..

மை ப்ரெண்ட் உடனே தரையில உருண்டு பொறண்டு அழறாங்க..

இம்சை : குட் இப்படித்தான் உணர்ச்சிப்பூர்வமா கதைய கேட்கனும்.. படத்துலயும் உன் ரியாக்ஷன் இது தான்.

கண்மணி : அட, கொஞ்சம் நல்லா பாருங்க.. அவ நிஜமாவே அழறா..

அனு : அய்யோ.. அடி கிடி பட்டுட போகுது.. பாத்து மா.. அப்புறம் இதுக்கு வேற நான் செலவு பண்ணனும் :-(

ஜி3 : எதுக்கு இப்படி நீ ஓவரா சீன் போடற??

மை ப்ரெண்ட் : என் சித்து எனக்கு ஹீரோவா போடாதது கூட ஓ.கே.. ஆனா அவரு எனக்கு.. எனக்கு.. ச்சே.. அந்த வார்த்தைய சொல்றதுக்கே எனக்கு பிடிக்கல :-((

நான் இந்த டிஸ்கஷன்ல இருந்து வெளிநடப்பு செய்யறேன்..

இம்சை, கவிதாயினி, ஜி3 அதிர்ச்சியில் உறைந்து நிற்க,

கண்மணி : ஹையா.. அப்போ ஹீரோயின் போஸ்டுக்கு போட்டியே இல்ல.. இனி நான் தான் ஹீரோயின் :)

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நம் ப்ரொட்யூசர் அனு, தலையில் கை வைத்து உட்கார்த்துவிடுகிறார்..

Monday, August 6, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 2

வணக்கம் படம் எடுக்கறதுனு முடிவாயிடுச்சு அடுத்து என்ன டிஸ்கஷன்தான். இதோ கீழ சங்க கட்டிடத்தின் புல்வெளில உக்காந்து G3 டீ சாப்பிட்டுட்டு இருக்காங்க அப்ப நம்ம கவிதாயினி ‘காற்றினிலே வரும் கீதம்’னு பாட்டு பாடறாங்க அத கேட்டு காயத்ரி டென்ஷன் ஆயிட்டாங்க

G3 : ஏன் கவிதாயினி ப்ளாக்லதான் சோக கவிதை எழுதி எல்லாரையும் அழ விடற அட்லீஸ்ட் இங்கயாவது கொஞ்சம் சந்தோசமா பாட்டு பாடலாம்ல?

கவிதாயினி : நான் எப்பவும் சந்தோசமான பாட்டுதான் எழுதுவேன் ஆனா மத்தவங்களுக்கு காட்டும்போது கொஞ்சம் சோகம் சேர்த்தாதான் பிரபலம் ஆகும். உதாரணமா இந்த வெயில், பருத்திவீரன், காதல் இப்டி சோகமான படங்கள்தான ஹிட் ஆகுது :)

G3 : அடிபாவி இப்டியெல்லாமா ஹிட் ஆகறது ம்.. அடுத்தவங்கள அதிகமா அழ‍ வெச்ச கவிதையும், அதிகமா சிரிக்க வெச்ச படமும் ஹிட் ஆனதா சரித்திரமே இல்ல.

அப்ப அந்த பக்கமா வர்ர நம்ம கண்மணி டீச்சர்

கண்மணி : என்னது இங்க யாரோ தத்துவம் சொன்ன மாதிரி இருக்கு எனக்கு மறுபடியும் சொல்லுங்க என் ப்ளாக்ல இதை ஒரு கதையா போடனும்

அப்ப அங்க எனக்கொரு பாய்ப்ரெண்ட் வேணுமடானு பாட்டு கேட்கது ‍ அதை அடுத்து நம்ம இம்மைஅரசி வராங்க

இம்சை : வணக்கம் எல்லாருக்கும் என்ன கதை வேணும் சொல்லுங்க டீச்சர் நான் டெவலப் பண்ணி தறேன்.

அதை கேட்டதும் எல்லாரும் கோரசா வாடியம்மா கதை டெவலப் பண்றதுல உன்ன அடிச்சுக்க ஆள் ஏது?அப்ப மைபிரெண்ட்டும் அனுசுயாவும் தோட்டத்துல புதுசா பூத்த பூக்களுக்கு பேர் வெச்சிட்டு இருக்காங்க. இந்த சத்தம் கேட்டு எட்டி பார்த்திட்டு சங்க கூட்டத்துல ஐக்கியம் ஆகறாங்க.

அனுசுயா : சரி எல்லாரும் ஒன்னா சேர்ந்தாச்சு அப்டியே நாம எடுக்கபோற படத்த பத்தி ‍டிஸ்கஷன் பண்ணலாம்

மைபிரெண்ட் : படம் எடுத்தா கண்டிப்பா நம்ம சித்துதான் ஹீரோ

இம்சை : ஆரம்பிச்சுட்டியா இன்னும் படம் பேர்கூட செலக்ட் பண்ணல

மைபிரெண்ட் : சித்து ஹீரோனா நான் வேணா போனா போகுதுனு ஹிரோயினா நடிக்கறேன்பா

அனுசுயா : என்னது சித்து கித்து எல்லாம் முடியாது அம்மணி பட்ஜெட் தாங்காது. எதாவது புது முகம் போடலாம் அப்பதான் ஒத்து வரும்.

கண்மணி : என்னய ஹிரோயினியா போடனும் அப்பதான் டிஸ்கஷன்ல கலந்துக்குவேன்

G3 : அட கொடுமையே இத கேட்க ஆளே இல்லையா? நாம எடுக்க போறது முதியோர படம் இல்லீங்க டீச்சர்.

இம்சை : அதான இது என்ன ஒரு யூத் சப்ஜெக்ட் தெரியுமா?

கவிதாயினி : அது சரி யார் யார் என்ன என்ன வேலைனு முடிவு பண்ணுங்க முதல்ல

கண்மணி : நான் இப்பவே சொல்லிடறேன். படத்துல வர பஞ்ச் டயலாக் என்னோடதுதான்

அனுசுயா : நம்ம கவிதாயினிதான் பாட்டு எழுத போறாங்க

மைபிரெண்ட் : நம்ம அனு வேணா ப்ரொட்யூஸ் பண்ணட்டும்பா

அனுசுயா : சரி நம்ம இம்சைதான் டைரக்டர் ஏன்னா அவங்கதான் ஒன்னுமில்லாத கதைய டெவலப் பண்ணி டெவலப் பண்ணி நாலு பக்கம் எழுதுவாங்க. :)

G3 : யாருமே சாப்பாட்டு பொறுப்ப எடுத்துக்கல அதனால நான் அந்த பொறுப்ப பெரிய மனசு பண்ணி எடுத்துக்கறேன்.

மைபிரெண்ட் : என்னது சாப்பாட்டு பொறுப்பு நம்ம G3 யா அவளே எல்லாத்தையும் சாப்பிட்டுடுவா அப்புறம் நாம என்னத்தா சாப்பிடறது.

இம்சை : டோண்ட் வொர்ரி படம் நல்லபடியா முடியனும்னு வேண்டிகிட்டு நம்ம G3 உண்ணா விரதம் இருக்க போறாங்க அதனால ஒரு பிரச்னையும் இல்ல :)

G3 : உண்ணா நோன்பா நோ நோ நோ நான் உண்ணும் நோன்பு வேணா இருக்கறேன்

அனுசுயா : அது சரி டைரக்டர் மேடம் ஹிரோவா யார போடறது?

இம்சை : நம்ம பிரசாந்த் இல்லீனா ஸ்ரீகாந்த் இவங்கள போடலாமா?

மைபிரெண்ட் : சித்து சித்து

இம்சை : சும்மா சித்து சித்துனு சவுண்ட்விடாத அப்புறம் நம்ம கேப்டன ஹீரோவா போட்டுடுவோம்

மைபிரெண்ட் : அய்யோ வேண்டாம் நம்ம சித்துவ போட்டு படம் எடுத்து பாருங்க படம் பிச்சுகிட்டு ஓடும்

அனுசுயா : நோ நோ சம்பளம் கட்டுபடியாகாது வேணா நம்ம மெளனராகம் கார்த்தி அல்லது மைக் மோகனை ட்ரை பண்ணலாம் கொஞ்சம் சம்பளம் கம்மியா இருக்கும் :)

மைபிரெண்ட் : இந்த படம் ஓடுன மாதிரிதான் இதுவே சித்துவ போட்டு எடுத்து பாருங்க படம் 100 நாள் ஓடும்

இம்சை : யார் சொன்னாங்க சித்து வெச்சு எடுத்து ஒரு படமாவது 100 நாள் ஓடியிருக்கா அதே தாத்தாவான பிறகுகூட நம்ம தல பட்டைய கிளப்பறாரு பாரு இது தமிழ்நாடு கண்ணு இங்க ஓல்டு ஹீரோவுக்குதான் மவுசு அதிகம்

மைபிரெண்ட் : அப்ப மோகன் கார்த்தினா நான் நடிக்க மாட்டேன்பா. அவங்க மார்க்கெட் போய் ரொம்ப நாள் ஆகுது. வேற யாராவது லேட்டஸ்ட்டா 100 நாள் குடுத்தவங்கள போடுங்க.

அனுசுயா : அப்போ ஒரே ஒருத்தர்தான் இருக்கார். அவரப் போட்டா கவிதை எழுதறது, பாட்டு பாடறதுல இருந்து நமக்கு சாப்பாடு செஞ்சு போடற வரைக்கும் எல்லாத்தையும் அவரே பாத்துக்குவார். இப்போ கூட அவர் படம் 100 நாள் ஓடுச்சு.

G3 : யாராது அப்பேற்பட்ட ஆளு? நமக்கு தெரியாம???

அனுசுயா : வேற யாரு நம்ம TR தான்..........

மைபிரெண்ட் : ஆஆஆஆஆ...... (மயக்கம் போட்டு விழுகிறார்)
உடனே கவிதாயினி மைபிரெண்ட் முகத்தில் தண்ணீர் அடித்து தெளிய வைக்கிறார். எழுந்ததும் அவர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க

அனுசயா : சரி சரி நாம வேணா சிபிராஜ ட்ரை பண்ணலாம். அவர போட்டா அவங்க அப்பா சத்யராஜ்கூட பணம் தந்து உதவுவாரு

இம்சை : ம் இது நல்ல ஐடியா

கண்மணி : இது மட்டும் என்ன அநியாயம் வயசான காலத்துல சத்யராஜ் மட்டும் இங்கிலீஷ்காரன் படத்தில ஹீரோவா நடிக்கறாரு நான் நடிக்க கூடாதா?

கவிதாயினி : அதானே அக்காவுக்கு நான் இருக்கேன் உடனடியா கண்மணி டீச்சர ஹீரோயினியா போட்டு தமிழ்காரினு படம் எடுக்கலாம்

இம்சை : ஆஹா எல்லாரும் ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா?

அனுசுயா : சரி சரி நாம அடுத்த டிஸ்கஷன நடேசன் பார்க்ல வெச்சுகலாம் அப்டியே டிபன் கொண்டு வந்திடுங்க அவங்க அவங்களுக்கு.

கண்மணி : என்னது டிஸ்கஷன் பூங்காவிலயா நான் 5 ஸ்டார் ஹோட்டல்னாதான் வருவேன்

கவிதாயினி : என்ன சோகம் இது ப்ரொட்டியூஸர் (உடனே ஒரு சோக கவிதை எழுத ஆரம்பிக்கறாங்க)

மைபிரெண்ட் : நான் என் சித்துகிட்ட சம்பளம் கம்மியானு கேட்டுட்டு வரேன் பை பை

இம்சை : நான் போய் கதை டெவலப் பண்றேன்பா

கண்மணி : அப்பா எப்டியோ என்ன வெச்சு படம் எடுக்க போறாங்க சந்தோசம்

அனுசுயா : எப்டியாவது ப்ரொடக்ஷன் செலவ கம்மி பண்ணனும் என்ன
பண்ணலாம் ம்ம்ம்ம்

Thursday, August 2, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 1

அது ஒரு அமைதியான மாலை நேரம். இருக்காதா பின்னே? கவிதாயினி காயத்ரிதான் சங்கத்து ரிஷப்ஷன் மேஜைல காலை நீட்டி படுத்துக்கிட்டு கண்ணை மூடிட்டு யோசிச்சுக்கிட்டு (தூங்கிக்கிட்டு) இருந்தாங்களே!

அந்த நேரம் பார்த்து மை ஃபிரண்டும் இம்சை அரசியும் சங்கத்து ஆபிஸ்ல நுழைஞ்சாங்க.

மை பிரண்ட்: இம்சை, அங்கே பாரு! ஏதோ ஒன்னு மேஜை மேலே கிடக்கு!!

இம்சை: அது ஏதோ ஒன்னு இல்ல. இங்கண ஒரு பொண்ணு கவிதை சொல்லி நம்ம காதுல ரத்தம் வர வைச்சாளே! அவதான் மேஜை மேலே படுத்துட்டு இருக்கா..

மை பிரண்ட்: அப்போ, வேலையை ஆரம்பிச்சிடுவோமா?

இம்சை அரசி மை ஃபிரண்டை பார்த்து கண்ணடிக்க, இம்சை அரசி சங்கத்துல வளர்கிற மயிலிடம் போராடி வெற்றிகரமா ஒரு மயிலிறகை பிடுங்கிட்டு ஓடி வர, மை ஃபிரண்ட் ஆபிஸ் முழுக்க தேடி, கடைசியாக கண்மணி டீச்சர் அறைக்குள்ளே ஓடி அவங்க தலை நரையை மறைக்க முடிக்கு பூச வச்சிருந்த கரு மையை எடுத்துட்டு ஓடி வந்தார்.

இம்சை: ஸ்டார்ட் மியூஜிக்.. டன் டன் டன் டன் டன்ன்ன்...

"நேத்து எங்க ட்ரோவிங் க்ளாஸ்ல இப்படிதான் மீசை தாடி வரையிறதுன்னு சொல்லிக்கொடுத்தாங்க. அழகா இருக்கா?"ன்னு கேட்டுக்கிட்டே காயத்ரிக்கு பெரிய மீசையும் குருந்தாடி ஒன்னும் வரைய, "நாந்தான் கிச்சு கிச்சு மூட்டுவேன்" என சொல்லி காயத்ரி காதுகளில் மயிலிறகை தடவி தன் பங்கை சரியாக செய்தார் இம்சை.

திடுக்கென முளித்த காயத்ரி தடார்ன்னு தன் கையை வீச, அப்பாவியா அவர் பின்னால உட்கார்ந்து சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டு கொண்டிருந்த G3யின் வலது கன்னத்தில் அடி இடியா விழ, ஒரு ஸ்ப்பீக்கர் அவுட்டு!

G3: அய்யோ! மம்மி....

மை ஃபிரண்ட்: இங்க பாருடா! இப்பக்கூட மேடம் இங்கீலீஸுலதான் அலறுராங்க!

"அட பாவி G3! அது என்னோட சிக்கன் லெக் பீஸ்ஸு!"ன்னு காயத்ரி கத்தி G3யின் இடது கன்னத்தில் இன்னொரு அறை மின்னல் வேகத்துல (இப்போதும் அடி இடி மாதிரிதான்) விட்டார்.

G3: அய்யோ! அம்மா......

இப்போ G3யின் அடுத்த ஸ்ப்பீகரும் அவுட்டு!

இம்சை: இப்போ அம்மா தமிழ்ல வந்துட்டாங்க.. ஹா ஹா ஹா...

மை பிரண்ட்:
எகிறி குதித்தேன்.. வானம் இடித்தது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..


அந்த பக்கம் நடந்து வந்த கண்மணி டீச்சர்,

கண்மணி: என்ன ஃபிரண்டு, ரெக்கோர்ட் தேய்ஞ்சு போச்சா? ஒரே லைன்க்கு சென்ஷியாட்டம் ரிப்பீட்டு போட்டுட்டிருக்கே?

மை ஃபிரண்ட்: சித்து சொன்ன வார்த்தை பளிச்சிடுச்சு டீச்சர்..

கண்மணி: நம்ம சங்கத்துக்கு சித்தரெல்லாம் வந்தாங்கன்னு சொல்லவே இல்லையே? சொல்லியிருந்தா ரெண்டு ஃபுல்லு வாங்கி கொடுத்து அருள் வாக்கு வாங்கியிருப்பேனே!

மை ஃபிரண்ட்: ட்ட்டீச்ச்சர்ர்ர்ர்... எந்த சித்தானந்தாவும் இல்ல. நான் சொன்னது சித்தார்த்!!!!

ரெண்டு பக்க ஸ்ப்பீக்கரும் அவுட்டான G3 என்ன நடக்குதுன்னு புரியாமல் தன் ரெண்டு கைகளையும் கன்னங்களில் வைத்து ஒவ்வொருத்தவங்க முகத்தையும் பார்த்துண்டு இருந்தார். திடீர்ன்னு பிச்சக்காரி தட்டுல உருளும் சில்லறை காசு சவுண்டுல G3 சிரிக்க, என்னன்னு பார்த்தா காயத்ரியின் புருவம் இறங்கி மீசையாகிடுச்சு!! (அது இம்சையும் ஃபிரண்டும் பண்ண ட்ரோவிங்ன்னு நான் சொல்லிதான் தெரியணுமா?) ;-)

பிறகு என்ன? மீதி இருந்த மையை தூக்கிட்டு காயத்ரி ஃபிரண்டையும் இம்சையையும் துரத்த, கண்மணி டீச்சர் அந்த மையை காப்பாத்தணும்ன்னு காயத்ரியை துரத்த, ஏன் எல்லாரும் ஓடுறாங்கன்னு தெரியாமல் G3யும் பின்னால ஓட.. ஒரே ச்சேஸிங்கா இருந்துச்சு. இம்சையும் மை ஃபிரண்டும் ஓடுனாங்க.. ஓடுனாங்க.. வாழ்க்கையின் எல்லை வரைக்கும் அவங்கனால ஓட முடியல. ஏன்னா, நடுவுல சங்கத்து ஸ்விம்மிங் பூல்....

"மாட்டிக்கிட்டீங்களா!!"ன்னு காயத்ரி வில்லி சொர்ணாக்கா போல தலையை ஆட்டி ஆட்டி நடந்து வர, புலிக்கிட்ட மாட்டின முயல்களாய் இம்சையும் மை ஃபிரண்டும் ஒவ்வொரு அடியாய் பின்னால் எடுத்து வைத்தனர். சொர்ணாக்கா.. ஐ மீன் காய்த்ரி மையை எடுத்து வீச, ஃபிரண்டும் இம்சையும் குனிய, பின்னால...

"பூ பூப்பாவாய் புன்னகைக்கும் இவள்..
உங்கள் வீட்டு புது கவிதை..."ன்னு ஸ்விம்மிங் பூல்ல இருந்து பாடிட்டே வெளியே வந்த அனுசுயா மேல பட...

ஆஸ்த்ரேலியா நாட்டு இளவரசி மாதிரி இருந்த அனுசுயா.. ஆப்பிரிக்க நாட்டு ராணி மாதிரி ஆகிட்டாங்க.. ம்ம்.. பல்லு கூட கருத்துடுச்சுனா பாருங்களேன்..

அனுசுயா: 3 மணி நேரமா குளிச்சிட்டு வந்த பூவை இப்படி கருக்கிட்டீங்களே!!!!! அவ்வ்வ்வ்வ்......

மை ஃபிரண்ட் & இம்சை: ஹா ஹா ஹா..

பின்னால ஓடி வந்த டீச்சர் முகம் விஜயகாந்த் மாதிரி க்ராஃபிக்ஸ்ல சிங்கமா மாறி திரும்ப அவங்க முகத்துக்கு திரும்பியது. சின்ன பசங்க (ஃபிரண்ட், இம்சை, G3, அனுசுயா, காயத்ரி) அதை ரசிச்சு பார்க்கிறதுக்குள்ள அவங்களை குனிய வச்சு அடி பின்னி நொங்கெடுத்து துவைச்சு தூக்கி வந்து சங்கத்து நடு ஹால்ல காயப்போட்டாங்க டீச்சர்.

கண்மணி: வியாழன் கிழமை மாலை மீட்டிங்ன்னு சொன்னா, எல்லாரும் வந்து சேர்ந்ததே வெள்ளிக் கிழமைதான்!! வந்து சேர்ந்ததும் சங்கத்தை ஒரு வழி பண்ணிட்டீங்க!!!

மை ஃபிரண்ட்: (மெதுவாக இம்சை காதில்) டீச்சருக்கு கருப்பு மை தீர்ந்து போச்சுன்னு ஒரே ஃபீலிங்கு.. பக்கத்து வீட்டுல கேட்டுக்கு கருப்பு ஆயில் பெயிண்டு அடிச்சிட்டிருக்காங்க. அங்கே கொஞ்சம் வாங்கி டீச்சர் துங்கிட்டு இருக்கும்போது அவங்க தலைக்கு அடிச்சிடலாம்.. ஹீஹீ

காயத்ரி: மங்கள கரமா இருக்கட்டுமேன்னுதான் நாங்க வெள்ளிக்கிழமை மீட்டிங்கை மாத்தி வச்சிக்கிட்டோம். ;-)

அனுசுயா: அவ்வ்வ்... பேச வந்ததை சீக்கிரம் சொல்லுங்க. நான் மறுபடியும் போய் குளிக்கணும்.. :-((

G3: என்னது? குடிக்கனுமா? எனக்கு ஒரு பெரிய போட்டல் கோக்க கோலா ப்ளீஸ்.. :-D

காயத்ரி: எனக்கு லெக் பீஸுதான் வேணும்.

இம்சை: அடங்கொய்யாலே... டீச்சர் என்னமோ சொல்ல வர்றாங்க..

மை ஃபிரண்ட்: வேற என்ன சொல்ல போறாங்க.. கோழிக்கு கால் ரெண்டு.. ஆட்டுக்கு கால் நாலு.. முயலுக்கு மட்டும் மூனு காலுன்னுதானே.. அய்யோ! அம்மா... டீச்சர் என் காதை விடுங்க.. வலிக்குது!!!!

கண்மணி: (மை ஃபிரண்டின் காதை திருகிக்க்கொண்டே) போட்ட ஆட்டமெல்லாம் போதும். சங்கத்து கஜானாவுல பணம் நிறைய இருக்கு! மேனேஜ் பண்ண என்னால முடியலை.. எப்படி இதெல்லாம் செலவு பண்றதுன்னு ஐடியா கொடுங்க..

G3: டீச்சர், வாங்க நாமெல்லாம் 10 ஸ்டார் ஹோட்டல்ல போய் 24 மணி நேரமும் சாப்பிட்டுட்டே இருக்கலாம்..

அனுசுயா: டீச்சர், அட்லாண்டா கடலை வாங்கலாம்.. இந்த ஸ்விம்மிங் ஃபூல் பத்தலை எனக்கு!!

காயத்ரி: டீச்சர், என் கவிதையெல்லாம் பெரிய அளவுல புத்தக ப்ரிண்டு போட்டு விக்கலாம்..

கண்மணி: புத்தகம் விற்றால் லாபம்தானே! கஜானா கூடுமே!

மை ஃபிரண்ட்: அட மக்கு டீச்சரே! அவங்கதான் சொல்றாங்கல்ல.. அவங்க கவிதையோட மவுசு! புத்தகத்தை ஃப்ரீயா கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டாங்க! சோ, கஜானாவை காலி பண்ணிடலாம்ன்னு அவங்க ஐடியா போடுறாங்க..

இம்சை: ஐ கோட் அன் ஐடியா! டீச்சர், தலைவர் அருணாச்சலத்துல சொல்லியிருக்கார்.. கஜானாவை காலி பண்ணனும்ன்னா மூனே மூனு வழிதான் இருக்கு!

கண்மணி: நீதாண்டா என் செல்லம்.. அது என்னதுன்னு சொல்லுடா..

மை ஃபிரண்ட்: ஒன்னு நாந்தான் சொல்லுவேன்.. ஒன்னு!

இம்சை: குதிரை ரேஸ்..

G3: சிக்கன் ரோஸ் சூப்பரா இருக்குமே! :-)

கண்மணி: ரேஸும் வேணாம்.. ரோஸும் வேணாம்.. அது தப்பு! நெக்ஸ்ட்?

இம்சை: ரெண்டாவது அரசியல்..

கண்மணி: அதுக்கு இன்னும் காலம் இருக்கு! இப்பவே அரசியல்ல குதிச்சா என்னை CM ஆக்கிடுவாங்க.. நான் PM ஆகணும். சரி, அடுத்து என்ன?

இம்சை: படம்... சினிமா படம் எடுக்கனும்

மை ஃபிரண்ட்: ஹய்யா! இந்த ஐடியா சூப்பரு! :-D

காயத்ரி: டீச்சர் டீச்சர்.. நாம் படம் எடுத்தா யாராவது பார்ப்பாங்களா??

அனுசுயா: படம்ன்னு லிஸ்ட்டுல சேர்க்க முடியாத படங்களே 100-200ன்னு ஓடும்போது, நமக்கு 500 நாட்கள் எல்லாம் ஜுஜுபி..

G3: ஜிலேபி எங்கே கிடைக்கும்??

கண்மணி: ம்ம்ம்.. ஆமாம்.. இந்த பதிவுலகில் யாரும் சினிமாவில் காலெடுத்து வைக்கவே இல்லை.. நாமதான் முதன் முதலில் கால் பதிக்க போகிறோம்..

இம்சை: யெஸ் யெஸ்.. வரலாற்றில் முதன் முறையாக..

மை ஃபிரண்ட்: ஃபுல்லா நான் சொல்லவா?

கண்மணி: ம்ம்..

மை ஃபிரண்ட்: பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக "ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.." ஆக்க்ஷன்.. ஆக்க்ஷன்.. ஆக்க்ஷன்...

Wednesday, August 1, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன் (டிரெயிலர்)

பதிவுலக வரலாற்றில்
முதன் முறையாக


ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்..


நாளை மகத்தான ஆரம்பம்.. :P

 

BLOGKUT.COM