Tuesday, January 15, 2008

புதிர் போடும் பாப்பா சங்கம்...

மக்கள்ஸ்!!!!
எல்லோருக்கும் பாப்பா சங்கத்து சார்பாக

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



அப்பப்ப யாராச்சும் சங்கம் தூங்குது இழுத்து மூடியாச்சுன்னு புரளி கெளப்பறாங்க.
தூங்குற சிங்கத்தை சாரி...சங்கத்தை சீண்டாதீங்கப்பூ
சரி இந்த முறை மொக்கைக்கு பதில் கொஞ்சம் விடுகதை சொல்றேன்..பதில் சொல்லுங்க.

1.சாயந்திரம் கை சேர்த்து
சாமத்தில கருத்தரிச்சி
விடிஞ்சதும் தாயும் புள்ளயும்
பிரிச்சி விட்டாச்சி

அவர்கள் யார்?

2.பொட்டு பொட்டா இலை இருக்கும்
பொறி போல பூப் பூக்கும்
தின்னக் காய் கொடுக்கும்
திங்காத பழம் கொடுக்கும்

அது என்ன?

3.வாரீரே போறீரே கீழாலே
வந்திருக்கான் உன் பாட்டன் மேலாலே
செத்துக் கிடக்கேன் நான் உன்னாலே
சாகப் போறே நீ என்னலே

யார் அவர்கள்?

4.அரியலூர் சீமாட்டி
அதிக புள்ளைக்காரி
பால் கொடுக்காது
புள்ளை வளர்ப்பதில் கெட்டிக்காரி

யார் அவள்?

5.காயான பிறகு பூவாகும்
கனியான பிறகு காயாகும்

அவை என்ன?

6.பொறந்த வீட்டில் ஒரு கிள்ளு
புகுந்த வீட்டில் ரெண்டு கிள்ளு

அவன் யார்?

7.பாட்டி வீட்டுத் தோட்டத்தில்
ஊஞ்சலாடும் மஞ்சக் குருவி

அது என்ன?

அப்பாடா....ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு போட்டாச்சு..[இல்லாட்டி சங்கத்துல இருந்து தூக்கிடுவாங்களே;)...தூக்குறது பத்தி மேட்டரு இல்ல.பாப்பா னு சொல்லிக்க முடியாதே:))

விடை கண்டு புடிச்சி பின்னூட்டம் போடுங்க மக்கள்ஸ்!!!!

சரியான பதிலை அடுத்த பதிவுல சொல்றேன்.

 

BLOGKUT.COM