மக்கள்ஸ்!!!!
எல்லோருக்கும் பாப்பா சங்கத்து சார்பாக
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
அப்பப்ப யாராச்சும் சங்கம் தூங்குது இழுத்து மூடியாச்சுன்னு புரளி கெளப்பறாங்க.
தூங்குற சிங்கத்தை சாரி...சங்கத்தை சீண்டாதீங்கப்பூ
சரி இந்த முறை மொக்கைக்கு பதில் கொஞ்சம் விடுகதை சொல்றேன்..பதில் சொல்லுங்க.
1.சாயந்திரம் கை சேர்த்து
சாமத்தில கருத்தரிச்சி
விடிஞ்சதும் தாயும் புள்ளயும்
பிரிச்சி விட்டாச்சி
அவர்கள் யார்?
2.பொட்டு பொட்டா இலை இருக்கும்
பொறி போல பூப் பூக்கும்
தின்னக் காய் கொடுக்கும்
திங்காத பழம் கொடுக்கும்
அது என்ன?
3.வாரீரே போறீரே கீழாலே
வந்திருக்கான் உன் பாட்டன் மேலாலே
செத்துக் கிடக்கேன் நான் உன்னாலே
சாகப் போறே நீ என்னலே
யார் அவர்கள்?
4.அரியலூர் சீமாட்டி
அதிக புள்ளைக்காரி
பால் கொடுக்காது
புள்ளை வளர்ப்பதில் கெட்டிக்காரி
யார் அவள்?
5.காயான பிறகு பூவாகும்
கனியான பிறகு காயாகும்
அவை என்ன?
6.பொறந்த வீட்டில் ஒரு கிள்ளு
புகுந்த வீட்டில் ரெண்டு கிள்ளு
அவன் யார்?
7.பாட்டி வீட்டுத் தோட்டத்தில்
ஊஞ்சலாடும் மஞ்சக் குருவி
அது என்ன?
அப்பாடா....ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு போட்டாச்சு..[இல்லாட்டி சங்கத்துல இருந்து தூக்கிடுவாங்களே;)...தூக்குறது பத்தி மேட்டரு இல்ல.பாப்பா னு சொல்லிக்க முடியாதே:))
விடை கண்டு புடிச்சி பின்னூட்டம் போடுங்க மக்கள்ஸ்!!!!
சரியான பதிலை அடுத்த பதிவுல சொல்றேன்.
Tuesday, January 15, 2008
புதிர் போடும் பாப்பா சங்கம்...
சிரிக்க வைக்க முயற்சித்தது கண்மணி/kanmani at 3:50 PM
சிரிப்பு வகை: விடுகதை:புதிர்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
பொங்கல் லீவுல கரும்பு திங்காம இதென்னது புதிரு?
கண்மணி!
ஹா ..ஹா ..ஹி..ஹி ... இதான் உங்களுக்கு ஏத்த வழி! இப்படியே தொடருங்கள்!(உங்க அல்லக்கைகள் எல்லாம் எட்டிக்கூடப்பார்க்க மாட்டேன்கிறங்களே)
இப்படி நான் சொன்னேன் என்பதால் உடனே பைத்தியம் என்று ஒரு பதிவு போட ஆள் அனுப்பாதிங்க ஆத்தா!
என்னாச்சு உங்களுக்கு?ஏன் இப்படி இருக்கீங்க வவ்வால்?
இதுதான் உங்களுக்கு ஏத்த வழின்னு எனக்கு சொல்லாதீங்க.நீங்க உங்களுக்கு எது நல்ல வழின்னு பாருங்க.எல்லோர்கிட்டயும் வாங்கிக் கட்டிக்கிறீங்க பாவமாக இருக்கு.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.வார்த்தைகளில் கவனம் வேண்டும்.அல்லக்கைகள்னு சொல்ற அளவுக்கு நாங்க இல்லை.பாவம் நீங்கதான் இப்படியெல்லாம் அடிபட்டு விளம்பரம் தேடுறீங்க.
நீங்களும் சக பதிவர்கள் மாதிரி ஒரு நண்பர்தான்.வீணாக வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக்காதீங்க நண்பரே.
சட்டுனு யாரையும் திட்டக் கூட மனசு வரலை.உசுப்பேத்தி பாக்காதீங்க.
நான் யாரையும் அனுப்பி பதிலடி கொடுக்க வேண்டாம் நண்பரே எனக்கே தெரியும் யாருக்கு எப்படி எப்போது பதிலடி கொடுப்பது அல்லது மன்னித்து விட்டு விடுவது என்று.
இப்போது பெருந்தன்மையாக இரண்டாவதைச் செய்கிறேன்.
கண்மணி,
//வார்த்தைகளில் கவனம் வேண்டும்.அல்லக்கைகள்னு சொல்ற அளவுக்கு நாங்க இல்லை.பாவம் நீங்கதான் இப்படியெல்லாம் அடிபட்டு விளம்பரம் தேடுறீங்க.
//
என் வார்த்தைகளில் கவனம் உண்டு, ஆனால் அல்லக்கைகளை அல்லக்கைனு சொல்லாமா எப்படி சொல்வதாம், எச்ச சோறுனு சொன்னா ரொம்ப கேவலமா இருக்குமேனு பார்த்தேன்!
நாம எல்லாம் அல்லக்கை இல்லைனா லந்து லதாவை துணைக்கு கூப்பிட மாட்டோம், நேரா சம்பந்தப்பட்ட பதிவுக்கே போய் சொல்ல வந்ததை சொல்வோம், வர்ரட்டா! ஆத்தா பாத்து எதுவா இருந்தாலும் நேரடியாப்பேசுங்க!(என்னைப்போல)
வவ்வால்-->//அல்லக்கைகள் // இதுக்கு உங்க "நேரடியான" அர்த்தம் (அ) யாரு யாருன்ன்னு சொல்ல முடியுமா? நாங்களும் தெரிஞ்சுக்குவோமே.
பழைய பதிவு பிரச்சினைகளை அங்கேயே கிளப்பிக்குங்க. சும்மா எல்லாப்பதிவுலேயும் தொடராதீங்க.
//பழைய பதிவு பிரச்சினைகளை அங்கேயே கிளப்பிக்குங்க. சும்மா எல்லாப்பதிவுலேயும் தொடராதீங்க.//
இளா ,
மன்னிக்கவும், நீங்க தான் நாட்டாமைனு எனக்கு தெரியாம போச்சு! நீங்களே சொன்னப்பொறவு நான் இங்கன பேசுனா சரியா இருக்காதுல(18 பட்டியும் உங்க கண்ட்ரோலில் இருக்குனு எனக்கு சொன்னாங்க), இனிமே சம்பந்தப்பட்டப்பதிவுல போய்ப்பேசிக்குறேன், உத்தரவுங்கண்ணா!(உத்தரவுலாம் போடுறிங்க அப்போ உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கும்னு தெரியுது)
என்னைப்போல வவ்வால்னு பேர் வச்சா சொறிநாய்க்கூட ஒத்தாசைக்கு வர மாட்டேங்குதுப்பா :-)) (பேசாமா நானும் பொன்மணினு ஒரு பேருல பிலாக் போடாலாம்னு பார்க்கிறேன்)
ஏனுங்க வவ்வாலு, புதிரு போட்டா அதுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க. இது என்ன சின்னபுள்ளத்தனமா எல்லாரையும் சீண்டிக்கிட்டு.
//ஏனுங்க வவ்வாலு, புதிரு போட்டா அதுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க. இது என்ன சின்னபுள்ளத்தனமா எல்லாரையும் சீண்டிக்கிட்டு.//
ஏனுங்க சின்னம்மினி,
நான் கூடத்தான் பின்னூட்டம் போட்டு கேட்டதுக்கு பதிவு போட்டு என்னை கேள்விக்கேட்கிறதா நினைச்சு அவங்களே பதிவு போட்டு நாறிக்கிட்டாங்க(அப்போலாம் இப்படி நீங்க கேட்கவரலையே ,அது ஏன்னு நான் கேட்க மாட்டேன்)
எனக்கு எப்போ என்ன கேட்கத்தோணுதோ அதை அப்போ வந்துக்கேட்பேன், மூன்றாவது நடுவர்கள் எனக்கு தேவை இல்லை, நான் இங்கே கூட எதுவும் தவறாக சொல்லவில்லை, அப்படி இருந்தும் கேள்விக்கேட்க வரிங்கனா ரொம்ப கேவலமாக இருக்கு!
நான் போட்டப்பின்னூட்டத்தில் ஆட்சேபகரமாக என்ன இருக்குனு சொன்னிங்கனா நானும் தெரிஞ்சுப்பேன்!நான் வெகு சாதாரணமாக சொன்னதே உறுத்துகிறது என்றால் ஒரு வேளை குற்றமுள்ள நெஞ்சாக இருக்க வேண்டும்!
அதாங்க வவ்வால், அப்போ ஏன் எனக்கு பரிஞ்சு பேச வரல்லேன்னு கேக்காம கேக்கறீங்க. இந்த மனப்போக்குதான் சின்னப்புள்ள்த்தனமா இருக்குன்னு நினைக்கறேன். நாம இதை இப்படியே தொடர்ந்துட்டுப்போனா, நிசமாவே புதிருக்கு விடை தெரிஞ்சவங்க யாரும் பதில் போடாமப்போயிருவாங்க. அதனால நான் இத்தோட நிப்பாட்டிக்கறேன்.
கண்மணி அக்கா, நல்லா யோசிச்சுட்டு புதிருக்கு விடை தெரிஞ்சா மறுபடியும் வர்றேன்.
சின்னம்மினி,
//அப்போ ஏன் எனக்கு பரிஞ்சு பேச வரல்லேன்னு கேக்காம கேக்கறீங்க. இந்த மனப்போக்குதான் சின்னப்புள்ள்த்தனமா இருக்குன்னு நினைக்கறேன். //
நானா இதைக்கேட்கலையே என்னை நீங்க கேட்கவே தான் கேட்டேன் கேட்காமலே இருந்தால் இப்படி சொல்வேனா? "i dont understand this kind of group politics"
நானும் இத்தோட மூன்றாவது மனிதர்களின் தலையீட்டுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கிறேன்!
நிஜமா சத்தியமா ஒண்ணும் தெரியல, தெரிஞ்சிக்க டிரை பண்ணிட்டு திரும்ப வரேன்.
no chance soo hard tellthe answers soon
Post a Comment