கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?
மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே, அதான்!
_________________
நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
_________________
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
_________________
ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமூடி போட்டிருந்தாரு!
_________________
ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
நன்றி: தமிழ் ஜோக்ஸ்
பி.கு: டாக்டர் டெல்பின் மேடம், இதை படிச்சு அடிக்க வர்றாதீங்க. மீ தி எஸ்கேப்..
Saturday, January 12, 2008
முகமூடி கொள்ளை
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 7:34 AM
சிரிப்பு வகை: தமிழ் ஜோக்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
ஹாஹா நல்ல மொக்கை ஜோக்!
ஆத்தா நல்லா இருக்கியா கண்ணு!
ஒரே பாட்டாப் போட்டு தேன் கிண்ணமே கதின்னு கெடக்கப்போல
ஹாஹா :)
//ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமூடி போட்டிருந்தாரு!//
இது சூப்பரேய்ய்ய்...
//ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."//
அடப்பாவி மக்கா..... ஹா..ஹா... இது மிரட்டலுங்கோ..
கலக்கலா இருக்கு..
நன்றிகள் காலையிலேயே சிரிக்க வைச்சதுக்கு..:)
Post a Comment