"கச்சேரிக்கு பாட்டு ரெடியா?"
"ரெடி மேடம்!"
"சேம்பலுக்கு ரெண்டு பாட்டு எடுத்து விடு.. கேட்போம்.."
"கல்யாணம் கச்சேரி கால்கட்டு என்னாச்சு.. ரயிலேறி போயாச்சுடா"
"போச்சு போச்சு!!! எல்லாமே இன்னைக்கு ரயிலேறிதான் போகப்போகுது! நான் பிறந்தநாள் கச்சேரிக்கு பாட்டு கேட்டா, நீ கல்யாணத்துக்கு பாட்டு ரெடி பண்ணிட்டிருக்கே?"
"ஏம்மா, இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்ன்னா நாளைக்கு கல்யாண கச்சேரிதானே! அதான் எல்லாம் கலந்த கலவையா ரெடி பண்ணியிருக்கோம்ல.."
"உனக்கு குசும்பு ஜாஸ்தியாயிருச்சுலே.. என்னிக்காவது சொன்னதை சொன்னபடி செஞ்சிருக்கியா நீ?"
"கோச்சிக்காதம்மே.."
"சரி, அழகா ஒரு பிறந்த நாள் வாழ்த்து பாடு"
"ஹேப்பி பர்த்டே டூ யூ..
யூ ஆர் போர்ன் இன் ட ஜூ
லைக் அ மங்கீ எண்ட் கங்கரூ..
ஹேப்பி பர்த்டே டூ யு.."
"அடே அடே.. இது என்ன பிறந்த நாள் வாழ்த்து பாட்டா? ஒருத்தியை வாழ்த்தி பாட சொன்னா, நீ என்ன மங்கீ, கங்காருன்னு எல்லாம் பாடுற?"
"சாரி சாரி... இன்னொரு சான்ஸ் கொடுங்க.... வேற பாட்டு பாடுறேன்.."
"ம்ம்.. சரி.. பாடு"
"எல்லோரும் கொண்டாஆஆஆஆடுவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..."
"ஏன் இந்த இழுவை.. இது ஒரே ஒரு பொண்ணுக்கு பர்த்டே.. எல்லாரும் கொண்டாடுறதுக்கு இது என்ன ஊர் திருவிழாவா?"
"நீங்க ரொம்ப மோசம்.. நான் பாடுற எல்லாத்துக்கும் நீங்க எதிராவே பதில் சொல்றீங்க.. எவ்வளவுதான் நான் தாங்குறது? அவ்வ்வ்..."
"ஒழுங்கா பாடினா யார் தப்பா சொல்ல போறா.. சரி, கடைசியா ஒரு சான்ஸ்.. பாடுறீயா?"
"பாடுறேன் பாருங்க.. நீங்களே அசந்து போக போறீங்க.. அஹெம்"
குரலை சரி செய்கிறார்..
"தல போல வருமா.. ஹேய்.. தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தலை போல வருமா..."
"ம்ம்.. சூப்பர் சாங்... இதுவே வாழ்த்து பாடலா பாடிடுவோம்.. ஆரம்பிக்கலாமா?"
"தல போல வருமா... தல போல வருமா?
நெஞ்சில் பட்டதை சொல்வாளே...
இவளுக்கு இரவிலும் வெயில்தானே..
அட்டகாசத்தில் புயல்தானே.
நீல வானத்தை மடியில் கட்டுவாள்..
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவாள்..."
"ஹேய்.. நிறுத்து.. நிறுத்து... நைட் எல்லாம் வெயில் படம் பார்த்தா வெயிலாகிடுமா? சரி, நீல வானத்தை மடியில் ஏன் கட்டணும்.. எனக்கு இப்பவே காரணம் தெரிஞ்சாகணும்.. சொல்லு சொல்லு"
"பாட்டு பாடுனா, கேட்கணும்.. ஆராய கூடாது... கச்சேரிக்கு லேட்டாச்சு.. ஹ்ம்ம்.. கிளம்புங்க.. (நானும் அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்.. தாங்கலைடா இவங்க பாடு)"
அடுத்து என்ன... தாரை தப்பட்டை முழங்க பேக்கிரவுண்டுல தல போல வருமா பாட்டோடு ஒரு வாழ்த்து செய்தியும் சொல்லியாகணும்ல.. கோவை நகரத்து கொள்கை புயல், பயமறியா பாவையரின் தலைவலி.. ச்சீ.. ச்சீ.. தலைவி.. எங்கத் தங்கத் தல (எத்தனை கேரட்ன்னு எல்லாம் கேக்கப்படாது) அனுசுயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போமாக..
Thursday, December 27, 2007
இங்கேயும் ஒரு வாழ்த்து (தலைவிக்கு)
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 1:16 PM
சிரிப்பு வகை: பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
இங்கயும் ஒரு வாழ்த்து சொல்லிருவோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இங்கயும் அனுசுயா ஆண்ட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
நீங்களூம் நானும் ஒரே சன் ஷைன்...அதுக்கு டிரிட் எப்போ...?
//
J K said...
இங்கயும் ஒரு வாழ்த்து சொல்லிருவோம்.
//
ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
அனுசுயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))
Yet again???
Happy Birthday Anu!!!
Seems you can win a assemply seat.
:)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எலலாருக்கும் நன்றி. ஆனா பாட்டு எழுதறேனு ஒரு ஜூவன் கிளம்கியிருக்கே அது மட்டும் என் கைல கிடைகக்கட்டும் அவ்வ்வ்வ :)
சங்கத்து தங்கம் அனுசுயா ஆண்ட்டிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். ஜாரி ஆண்ட்டி.. கொஞ்சம் லேட் ஆய்டிச்சி.. எல்லாம் இந்த பாழாப் போன ஆணி பன்ற வேலை தான். :P
Post a Comment