வ.வா.சங்கம் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்துல இருக்காங்க. போட்டி எல்லாம் அறிவிச்சி நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு ஆளாளுக்கு ரெண்டு ஜுரத்துல அலையுறாங்க. கொஞ்ச நாளா யாருக்கு பிங் பண்ணுனாலும் சும்மா இருங்க நான் வ.வா. சங்க போட்டிக்கு அத எழுதுறேன் இத எழுதுறேன்னு படம் காட்டுறாங்க. பாக்க சந்தோஷமா தான் இருக்கு. ஆனாலும் ஒரு வருத்தமுங்க. இந்த ப.பா.சங்கம் ன்னு ஒன்னு இருந்துச்சே அது இப்போ இருக்கா இல்லையான்னே தெரியலையே?
போன வருஷம் ஏப்ரல் மாதத்துல கற்பனை வெள்ளம் கரைபிரண்டு ஒடுனப்போ பாபாசங்கம் அறிமுகம் கண்டதா சொல்லுறாங்க.இன்னைய தேதிக்கு ஒரு வருஷம் முடிஞ்சி போச்சி.. இன்னமும் அந்த பக்கம் ஒரு சத்தத்தையும் காணல. சங்கம் அறிமுகம் கண்டப்போ இப்படி சொன்னாங்க.
பெண்ணென்றால் தாய்மை
பெண்ணென்றால் அன்பு
பெண்ணென்றால் பாசம்
பெண்ணென்றால் கருணை
பெண்ணென்றால் வீரமும் உண்டு
இப்போ பெண்ணென்றால் சங்கமும் அம்பேல்ன்னு சேர்த்துக்கணும் போலருக்கே. என்ன கொடும பாப்பாஸ் இது?
''ஐயேங்... நானு? நான் இந்த பல்லி.. கரப்பான் பூச்சி..எலி.. இந்த மாதிரி பயங்கர மிருகங்கள கண்டா கூட பயப்படவே மாட்டேன் தெரியுமா? பாம்ப கண்டா மட்டும் லேசா ஜெர்க் ஆகி ஓடிப் போய்டுவேன்.. மத்தபடி நான் சுடிதார் போட்ட ஜான்சி ராணியாக்கும்! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க ப்ளீஸ்! ''
என்ன பார்க்குறீங்க மேல உள்ளத பின்னூட்டமா போட்டு பாப்பாசங்கத்துல பி.ஆர்.ஒ வா சேர்ந்தாங்க கவிதாயனி. இவங்கதானே ஆண்டு விழா கொண்டாட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்யணும்? பாலைத்திணைல பதிவு போடுறதுக்கே இவங்களுக்கு இப்போ நேரம் கிடைக்கல போல.
சங்கத்தோட கண்காணிப்பு ஆலோசகரா இருந்த கண்மணி டீச்சர இப்பவெல்லாம் பதிவுகள் பக்கம் பார்க்கவே முடியுறதில்ல. சின்ன புள்ளைங்கள நம்பி வந்திருக்க கூடாதுன்னு தெரிஞ்சி ஒதுங்கிட்டாங்க போல. சங்கத்தோட தல அனுசுயா கல்யாணம் முடிஞ்சப்புறம் இங்க வர்றது இல்ல. பாவை பத்தியும் ஒண்ணும் தெரியல. இம்சை அரசி கல்யாண பிஸில இருக்காங்க. இனிமே அவங்களும் இங்க வருவாங்களானு தெரியல. மிச்சம் இருக்கிறது g3 யும் மை பிரண்டும் தான்.
பிரவாகமா அன்பு பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்ச பிறகு g3 க்கு எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்து போடவே நேரம் பத்தல. ஆக கடைசில மை பிரண்ட் தான் அப்பப்ப பதிவு போட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்களும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு இப்ப தேன் கிண்ணத்துல பாட்டு போட்டு காலத்த ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.
பாப்பாசங்கத்துக்கு எதிர்காலம் ஏதும் இருக்கா? பதில் சொல்லுங்க பாப்பாஸ்?
இப்படிக்கு,
நிஜமா நல்லவன்
Sunday, May 4, 2008
ஆரிராரோ கண்ணுறங்கு!!
சிரிக்க வைக்க முயற்சித்தது MyFriend at 6:09 AM 31 சிரிப்பொலிகள்
சிரிப்பு வகை: நிஜமா நல்லவன்
Subscribe to:
Posts (Atom)


