Wednesday, January 28, 2009

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (1)

கொலை பண்றதுல பலவிதம் இருக்கு. சிலர் கத்திய வச்சு கொலை பண்ணுவாங்க,சிலர் கத்தி பேசி கொலை பண்ணுவாங்க, சிலர் பாட்டு பாடி கொலை பண்ணுவாங்க, சிலர் டான்ஸ் ஆடி கொலை பண்ணுவாங்க, எல்லாத்தையும் தாண்டி, சிலர் நடிப்பு என்ற பெயரில் கொலை பண்ணுவாங்க. அந்த வரிசையில் உலகம் அறிந்த இருவரைதான் இன்னிங்க நம்ம ஷோல சந்திக்க போறோம், அவங்க வேறு யாருமில்ல

the one and only பல்லு...ச்சி...வில்லு பட நாயகன், இளைய தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார், இன்றைய இளையர்களின் நாடி துடிப்பு, என்றைக்குமே பெண்களின் சமையல் அடுப்பு, சமுதாயத்திலுள்ள தீமைகளை ஒழிக்க வந்த துடுப்பு....

(சத்தம் போடாமல் விஜய்: ஏங்க கொஞ்ச சீக்கிரம் கூப்பிடுங்க...இப்படியே சொல்லி, எப்ப முடிப்பீங்க?)

நம்ம தமிழ்நாட்டின் சிங்கம் விஜய் அவர்களையும், அவரை வச்சு படம் பண்ண இயக்குனர் சிகரம் பிரபுதேவா அவர்களையும் அன்போடு வரவேற்கிறோம்.

(இருவரும் வந்து அமர்கிறார்கள்)

நான்: வாங்க, வாங்க, இன்னிக்கு உங்கள வச்சு தான் காமெடி பண்ண போறேன்.

தேவா: என்னது? (முழித்தார்)

நான்: சாரி, ஐ மின் ஷோ பண்ண போறேன்னு சொல்ல வந்தேன்.

(தாடியை தடவி கொண்டார் தேவா)

நான்: தேவா, சொல்லுங்க, எப்படி இப்படி ஒரு படம் பண்ணனும்னு தோனிச்சு?

தேவா: விஜய வச்சு வேற என்ன பண்ண முடியும்? அதான் இப்படி ஒரு படம் பண்ணலாம்னு...

நான்: அட... இது நல்லா இருக்கு.

( தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று தெரியாமல் முழித்தார் விஜய்)

நான்: விஜய், சொல்லுங்க, உங்க படங்கள டான்ஸுக்கும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கே... அது எப்படி. நீங்களே விரும்பி கேட்குறதா, இல்ல அதுவா அமையுதா...

விஜய்: நீங்க வேற, வயத்தெறிச்சல கிளப்பாதீங்க... என்கிட்ட வரவங்க எல்லாம் 5 டான்ஸ்/ பாட்டுடோட தான் வராங்க. அதுக்கு அப்பரம் தான், அத சுத்தி ஒரு கதைய பண்ணி, படமா எடுக்குறோம்.

தேவா: இந்த படத்துல 6 பாட்டுமே சூப்பர் ஹிட். படம் பாக்கும்போதே ஒரு james bond படம் பார்க்குற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.

நான்: ஓ.. எந்த james bond படத்துல 6 பாட்டு இருக்குன்னு கொஞ்ச சொல்லுறீங்களா?

(நான் சொன்னதை கேட்டு ஃபிரண்ஸ் படத்தில் வடிவேலு தலையில் தார் கொட்டியபிறகு விஜய் சிரிப்பாரே, அதே போல சிரிக்க ஆரம்பித்துவிட்டார் இங்க, விஜய்)

தேவா: என்ன விஜய், நக்கலா இருக்கா?
அப்படி சொல்ல வரல....வில்லுன்னு ஒரு positive energy கிடைச்ச மாதிரி இருந்துச்சு.. அந்த காலத்து...(என்று ஆரம்பித்தார்)

நான்: அந்த காலத்து எம் ஜி ஆர் படம் மாதிரி இருக்கும். படம் பார்த்தா ஒரு exhibitionக்குள்ள போன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். இத தானே சொல்ல வந்தீங்க?

தேவா: எப்படிங்க கண்டு பிடிச்சீங்க?

நான்: ஆமா, பொங்கல் அன்னிக்கு எந்த சேனல திருப்பினாலும் இதே டயலாக், இதே பேச்சு.

விஜய்: அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சுன்னு பேச மாட்டோம். எப்பவுமே ஒரே பேச்சு தான்!

தேவா: சார், சூப்பர் சார்! நம்ம அடுத்த படத்துக்கு இதையே பஞ் டயலாக்கா வச்சுடுவோம்.

(இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.)

நான்: அட ராமா...

தேவா: ஏய் ராமா ராமா பாட்டு உங்களுக்கு பிடிக்குமா?

நான்: என்னனமோ பிடிச்சுருக்கு, இத பிடிக்காதா. ஆமா, உங்ககிட்ட ஒரு கேள்வி. இந்த பாட்டுல எப்படி graphics சேர்க்கலாம்னு ஐடியா வந்துச்சு?

(இருவரும் குழப்பம் அடைந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்)

விஜய்: நீங்க என்ன சொல்லவறீங்க?

நான்: ஆமாங்க, எத்தனையோ டான்சர்ஸ் இருந்தாலும், 5 அடி இட்லி குண்டா மாதிரி graphicsல போட்டு விஜயோட ஆடவிட்டீங்க பாத்தீங்களா...அங்க தான் நீங்க நிக்குறீங்க.

தேவா(சிரித்து கொண்டே): ஐயோ அது இட்லி குண்டாவும் இல்ல, graphicsம் இல்ல. அது குஷ்பு மேடம்!

நான்: குஷ்புவா?????????????

(இவங்கள கிண்டல் பண்ணி முடிக்க ஒரு ஷோ போதாது என்பதால் அடுத்த வாரமும் தொடரும்)

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா
(-2)

Tuesday, January 13, 2009

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?

சிலம்பாட்டத்தில் சிலம்பரசன் ஆடிய ஆட்டத்தை இனி வரும் 7 ஜென்மங்களிலும் மறக்க முடியாது. நான் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது "சிம்புக்கு மட்டும் தான் இப்படி ஆட தெரியுமா?" ஏன் நம்மளும் ஆடலாமேன்னு என் மனதில் தோன்றியது. சிலம்பரசன் ஆடும் சிலம்பாட்டத்தை ரசிக்க முடிந்ததோ இல்லையோ, இனி வர போகும்
வலைப்பூவரசன்/வலைப்பூவரசி ஆடும் வலைப்பூஆட்டத்தை பாருங்கோ....

நம்மில் எத்தனையோ பேருக்கு எழுத்து திறமை இருக்கும் ஆனால் ஆடல் திறமை இருக்கிறதோ இல்லையோ என்று நிறைய வலைப்பூ எழுத்தாளர்கள் யோசித்து இருப்பாங்க....

ஆக, இன்று நாம் ஆடும் திறனை வளர்த்து கொண்டு சிலம்பரசனையும் தாண்டி வேற ஒரு லெவலுக்கு கொண்டு போக போறேன் உங்களை. சிறப்பா செய்ய போறோம் ஜி!

முதலில் குரு நமஸ்காரம். ஒரு கண்ணில் சிம்புவையும் மறுகண்ணில் விஜயையும் நினைத்து கொண்டு மூன்று முறை எச்சி துப்புங்கோ. அது தான் குரு நமஸ்காரம்.

இனி நம்ம ஆட போகும் ஸ்டெப் ரொம்ப கஷ்டம். அதனால, உங்க கணினவிட்டு கொஞ்ச தள்ளி நில்லுங்க. ஆபிஸுல இருந்தா, பக்கத்தில் வேலை செய்யும் நண்பர்களை அழைத்து கொண்டு ஆடலாம். வீட்டில் இருந்தா, பாட்டி, தாத்தா இப்படி யாரேனும் கம்பெனிக்கு கூப்பிடலாம்.

ஒகே....ரெடி....

என்னது? இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களா? அட...உட்கார்ந்துகிட்டே எப்படிங்க ஆடுறது... நான் உங்கள சிம்பு, விஜய் அளவுக்கு கொண்டு போக பாக்குறேன்..நீங்க இன்னும் உட்கார்ந்து இருக்கீங்களே...

சரி எழுந்து நில்லுங்க.

1,2,3,4
தொடையில் இரண்டு தடவ அடிக்கனும்.

5,6,7,8
தலையில் இரண்டு தடவ அடிக்கனும்.

1,2,3,4
கீழே உட்காரனும். பந்தியில் இலை சாப்பாடு போட்டு இருக்கும்போது நாம் உட்கார்ந்து கொள்வோமே, அந்த மாதிரி உட்காரனும். சாப்பிடுவதுபோல பாவனை செய்யனும்.

5,6,7,8
டக்குனு மேல எழுந்திருச்சு வலது பக்கத்துக்கு குதிக்கனும்.

இது தான் ஸ்டெப். இதையே 4 முறை செய்தால்...கிட்டதட்ட... இப்படி ஆடிவிடலாம்.

Friday, January 2, 2009

நீங்க பார்த்தா ‘சைட் அடிக்குறீங்க’, நாங்க பார்த்தா ‘just looking'

இரண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் என் பள்ளி நண்பர்கள் ,10 பேரும் கடற்கரைக்கு போனோம். ஒரு மெகா pinic! சாப்பாடு,plastic தட்டுகள், mats, கூல் டிரிங்ஸ்- இப்படி ஆளுக்கு ஒன்னு கொண்டு வந்தோம். ஆனா முக்கியமா எல்லாருமே கொண்டு போனது cooling glasses. வெயில் அடிக்குதோ இல்லையோ எல்லாரும் அத மாட்டிகிட்டோம்.

தோழன்: இத போட்டா, எவ்வளவு வசதி தெரியுமா?

தோழி: ஆமா ஆமா...அப்ப தானே வர போற பொண்ணுங்கள சைட் அடிக்க முடியும்.

தோழன்: நீங்க மட்டும் எதுக்கு போடுறீங்களாம்...நல்ல வெள்ளையா ஒரு வெள்ளக்காரன் வந்தா போதுமே...எல்லாம் ஜொல்லு விட்டுகிட்டு இருப்பீங்களே....

அப்போது ஒரு வெள்ளைக்காரன் நாய்க்குட்டியோடு ஜாக்கிங் சென்றார். 6-பெக் வேற.

தோழன்: ஏய் ஏய்....பொண்ணுங்களா...இந்தாங்க டிஷு பேப்பர். வாய துடைச்சுக்குங்கோ....ஜொல்லு வழியுது.

தோழி: ஹேய் தோஸ்த், shut up ya. நாங்க just looking.

தோழன்: ஏய் இங்க பாருங்கடா, நாங்க செஞ்ச அத சைட் அடிக்குறது...நீங்க பண்ண அதுக்கு வேற பெயரு...என்னங்கடி நியாயம் இது.

ஒருத்தி மட்டும் அந்த வெள்ளைக்காரனையே பார்த்து கொண்டிருந்தாள்.

நான்: ஏய், விடு விடு... அவரு போய் அரை மணி நேரம் ஆச்சு.

அவள்: நான் ஒன்னும் அவர பாக்கல்ல.... நாய்க்குட்டிய...
(என்று முடிப்பதற்கு)

நான்: அட பாவி.... என்னது? மனதிர்களை தாண்டி, நாய்க்குட்டியையும் சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டீயா!

தோழர்கள்: மனிதர்கள் புரிந்த கொள்ள இது சாதாரண ‘just looking' அல்ல...அதையும் தாண்டி புனிதமானது! புனிதமானது!

அவள்: கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா....look at that puppy. so cute... guys are total waste. i have lost hope on them.

நான்: ஏய் என்ன ஆச்சு உனக்கு?

இன்னொரு தோழி: ஓ...அவ லவ் failureனால இப்படி பேசுறா...

மறுபடியும் அவள்: அப்படி ஒன்னுமில்ல....basically guys are...Eeeeeeeeee....

நான்: இல்ல மேன். நீ தப்பா புரிஞ்சுகிட்ட.... எல்லாம் ஆண்கள்கிட்டயும் ஒரு speciality இருக்கு. அத நம்ம தான் புரிஞ்சிக்க முயற்சி பண்ணனும்.

அனைத்து தோழிகளும்: ஏய் என்ன சொல்ல வர?

தோழர்களும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர்.

நான் தொடங்கினேன்.

இங்க பாருங்க. பசங்கள 5 வகையா பிரிக்கலாம்- cute, hot,good looking, handsome, attractive.

cute- இவங்க பேரழகர் என்று சொல்ல முடியாது. ஆனால் சுமார் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்கள். எப்படி ஒரு குழந்தை படத்தை நாம் ரசித்து பார்ப்போமோ அப்படி தான் இவர்களும். for example, கண்ணாடி போட்டு இருப்பாங்க. அந்த கண்ணாடி போடும் விதமும் ஒரு ஸ்டையலா இருக்கும். எப்போதுமே வேலை வேலையின்னு இருப்பாங்க. சில விசித்திரமான குணங்கள் இருக்கும்-for example, crossword puzzle போட பிடிக்கும்.

hot- சல்மான் கான், ஷாருக் கான், விவேக் ஓப்ராய், அமீர் கான், சூர்யா, விஷால், மாதவன், வினேய்....இவர்கள் போன்றவர்கள் hot. பார்த்தவுடனே பெண்கள் வாவ் என்று சொல்லும் ரகம். படங்களில், உடற்பயிற்சி நிலையங்களில் மட்டுமே காண முடியும். அந்த நிமிடத்திற்கு பார்க்க தோன்றும். ஆனால், நாளடைவில் அவர்கள் மேல் இருக்கும் மோகம் குறைந்துவிடும். இப்போ, இன்னிக்கு எனக்கு அமீர் கான பிடிக்கும். நாளைக்கு இன்னொரு ஆள பிடிக்கும். சோ....இப்படிப்பட்டவர்கள் ரொம்ப ரொம்ப temporary.

handsome-இவர்கள் தான் நம்ம பக்கத்துவீட்டுல, பக்கத்து தெருவுல, காலேஜ்ல, பஸ் ஸ்டாப்ல, அத்தை பையன், மாமா பையன்...இந்த ரகத்தை சேர்ந்தவர்கள். இயல்பான நமது வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க நேரிடும் நபர்கள். மனசுக்கும் சரி கண்ணுக்கும் சரி ரொம்ப பிடிச்சிருக்கும்.

(இடையில் தோழி கேட்டாள்...handsome, good-looking ஒன்னு தானே...அதுக்கு ஏன் இரண்டு category..)

நான்,

இது ஒரு நல்ல கேள்வி. அதாவது கண்ணுகளா.... handsome, good-looking இடையே ஒரு சின்ன வித்தியாசம். பார்த்தவுடனே handsome என்று வாயில் வந்துவிடும். ஆனால், ஒருத்தர் good-looking என்று உடனே சொல்ல வராது. பழகி, பேசி அவங்கள புரிஞ்சிகிட்டு, அவங்க குறைகளையும் ஏத்துக்கும்போது தான் good-looking என்று மனசு சொல்லும். ஆக, மூளை மட்டும் சொன்னால் அது 'handsome' மனசும் சேர்த்து சொன்னா அவர் 'good-looking' வகையை சேர்ந்தவர்.

கடைசியா attractive- இந்த வகையை சேர்ந்தவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஆண்களின் ஸ்பெஷல் என்னவென்றால் அவர்களின் mannerisms. இப்போ உதாரணத்திற்கு கௌதம் மேனன் தெரியுமா....

தோழி: ஓ...that வாரணம் ஆயிரம் இயக்குனர்...

நான்: அவரே தான். அவர் இந்த attractive வகையை சேர்ந்தவர். அவர் காதோரம் நரைத்திருக்கும். அவர் கைஅசைத்து பேசும்விதம். ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும்விதம். அடிக்கடி சட்டையை முன்னாடி இழுத்து கொள்ளும் mannerism. இப்படி physical features தாண்டி ஒரு அழகு தெரியும். அது தான் attractiveness... ஸ்டிபன் தேவசி தெரியுமா... அந்த keyboard player... அவர் வாசிக்கும்போது அவர் விரல் இசை பேசும். அவரும் இந்த வகையை சேர்ந்தவர் தான்!

தோழி: எப்படி இப்படி!!!

நான்: ஆராய்ச்சி செஞ்சிருக்கோம்ல.

தோழர்கள்: அப்போ நான் எந்த வகையை சேர்ந்தவன்?

நான்: சாரி...இன்னிக்கு கிளாஸ் அவ்வளவு தான். ஹாஹா...

சோகமாக பேசிய தோழியிடம் சென்று

“ஏய் cheer up. உலகத்துல உள்ள எல்லா ஆண்களும் ஏதோ ஒரு வகையில அழகு தான். don't worry babe!"

தொடங்கினோம்....சைட் அடிக்க இல்லேங்க...சாப்பிட!:)

 

BLOGKUT.COM