Wednesday, January 28, 2009

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா- (1)

கொலை பண்றதுல பலவிதம் இருக்கு. சிலர் கத்திய வச்சு கொலை பண்ணுவாங்க,சிலர் கத்தி பேசி கொலை பண்ணுவாங்க, சிலர் பாட்டு பாடி கொலை பண்ணுவாங்க, சிலர் டான்ஸ் ஆடி கொலை பண்ணுவாங்க, எல்லாத்தையும் தாண்டி, சிலர் நடிப்பு என்ற பெயரில் கொலை பண்ணுவாங்க. அந்த வரிசையில் உலகம் அறிந்த இருவரைதான் இன்னிங்க நம்ம ஷோல சந்திக்க போறோம், அவங்க வேறு யாருமில்ல

the one and only பல்லு...ச்சி...வில்லு பட நாயகன், இளைய தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார், இன்றைய இளையர்களின் நாடி துடிப்பு, என்றைக்குமே பெண்களின் சமையல் அடுப்பு, சமுதாயத்திலுள்ள தீமைகளை ஒழிக்க வந்த துடுப்பு....

(சத்தம் போடாமல் விஜய்: ஏங்க கொஞ்ச சீக்கிரம் கூப்பிடுங்க...இப்படியே சொல்லி, எப்ப முடிப்பீங்க?)

நம்ம தமிழ்நாட்டின் சிங்கம் விஜய் அவர்களையும், அவரை வச்சு படம் பண்ண இயக்குனர் சிகரம் பிரபுதேவா அவர்களையும் அன்போடு வரவேற்கிறோம்.

(இருவரும் வந்து அமர்கிறார்கள்)

நான்: வாங்க, வாங்க, இன்னிக்கு உங்கள வச்சு தான் காமெடி பண்ண போறேன்.

தேவா: என்னது? (முழித்தார்)

நான்: சாரி, ஐ மின் ஷோ பண்ண போறேன்னு சொல்ல வந்தேன்.

(தாடியை தடவி கொண்டார் தேவா)

நான்: தேவா, சொல்லுங்க, எப்படி இப்படி ஒரு படம் பண்ணனும்னு தோனிச்சு?

தேவா: விஜய வச்சு வேற என்ன பண்ண முடியும்? அதான் இப்படி ஒரு படம் பண்ணலாம்னு...

நான்: அட... இது நல்லா இருக்கு.

( தன்னை பற்றி தான் பேசுகிறார் என்று தெரியாமல் முழித்தார் விஜய்)

நான்: விஜய், சொல்லுங்க, உங்க படங்கள டான்ஸுக்கும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கே... அது எப்படி. நீங்களே விரும்பி கேட்குறதா, இல்ல அதுவா அமையுதா...

விஜய்: நீங்க வேற, வயத்தெறிச்சல கிளப்பாதீங்க... என்கிட்ட வரவங்க எல்லாம் 5 டான்ஸ்/ பாட்டுடோட தான் வராங்க. அதுக்கு அப்பரம் தான், அத சுத்தி ஒரு கதைய பண்ணி, படமா எடுக்குறோம்.

தேவா: இந்த படத்துல 6 பாட்டுமே சூப்பர் ஹிட். படம் பாக்கும்போதே ஒரு james bond படம் பார்க்குற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும்.

நான்: ஓ.. எந்த james bond படத்துல 6 பாட்டு இருக்குன்னு கொஞ்ச சொல்லுறீங்களா?

(நான் சொன்னதை கேட்டு ஃபிரண்ஸ் படத்தில் வடிவேலு தலையில் தார் கொட்டியபிறகு விஜய் சிரிப்பாரே, அதே போல சிரிக்க ஆரம்பித்துவிட்டார் இங்க, விஜய்)

தேவா: என்ன விஜய், நக்கலா இருக்கா?
அப்படி சொல்ல வரல....வில்லுன்னு ஒரு positive energy கிடைச்ச மாதிரி இருந்துச்சு.. அந்த காலத்து...(என்று ஆரம்பித்தார்)

நான்: அந்த காலத்து எம் ஜி ஆர் படம் மாதிரி இருக்கும். படம் பார்த்தா ஒரு exhibitionக்குள்ள போன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். இத தானே சொல்ல வந்தீங்க?

தேவா: எப்படிங்க கண்டு பிடிச்சீங்க?

நான்: ஆமா, பொங்கல் அன்னிக்கு எந்த சேனல திருப்பினாலும் இதே டயலாக், இதே பேச்சு.

விஜய்: அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சுன்னு பேச மாட்டோம். எப்பவுமே ஒரே பேச்சு தான்!

தேவா: சார், சூப்பர் சார்! நம்ம அடுத்த படத்துக்கு இதையே பஞ் டயலாக்கா வச்சுடுவோம்.

(இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.)

நான்: அட ராமா...

தேவா: ஏய் ராமா ராமா பாட்டு உங்களுக்கு பிடிக்குமா?

நான்: என்னனமோ பிடிச்சுருக்கு, இத பிடிக்காதா. ஆமா, உங்ககிட்ட ஒரு கேள்வி. இந்த பாட்டுல எப்படி graphics சேர்க்கலாம்னு ஐடியா வந்துச்சு?

(இருவரும் குழப்பம் அடைந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்)

விஜய்: நீங்க என்ன சொல்லவறீங்க?

நான்: ஆமாங்க, எத்தனையோ டான்சர்ஸ் இருந்தாலும், 5 அடி இட்லி குண்டா மாதிரி graphicsல போட்டு விஜயோட ஆடவிட்டீங்க பாத்தீங்களா...அங்க தான் நீங்க நிக்குறீங்க.

தேவா(சிரித்து கொண்டே): ஐயோ அது இட்லி குண்டாவும் இல்ல, graphicsம் இல்ல. அது குஷ்பு மேடம்!

நான்: குஷ்புவா?????????????

(இவங்கள கிண்டல் பண்ணி முடிக்க ஒரு ஷோ போதாது என்பதால் அடுத்த வாரமும் தொடரும்)

கேப்பங்கஞ்சி வித் வில்லு விஜய் & பிரபுதேவா
(-2)

5 Comments:

said...

நல்ல நகைச்சுவை.. நான் ஒரு தீவிர விஜய் எதிர்ப்பாளன் என்பதால் இன்னும் ரசித்தேன்.. தொடர்ச்சியை சீக்கிரம் எழுதுங்கள்..

said...

ஏன் டைட்டிலை என்னை கேட்காமல் எடுத்ததுக்கு.. நான் கண்டிச்சிக்கிறேன்..!!

:)) எல்லாரும் கேப்பங்கஞ்சி ஊத்த ஆரம்பிக்கலாமா.?!!

said...

சிரித்துக்கொண்டே படித்தேன். அருமையா எழுதிஇருகீங்க.

அவசியம் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

said...

நான்: ஆமாங்க, எத்தனையோ டான்சர்ஸ் இருந்தாலும், 5 அடி இட்லி குண்டா மாதிரி graphicsல போட்டு விஜயோட ஆடவிட்டீங்க பாத்தீங்களா...அங்க தான் நீங்க நிக்குறீங்க.

தேவா(சிரித்து கொண்டே): ஐயோ அது இட்லி குண்டாவும் இல்ல, graphicsம் இல்ல. அது குஷ்பு மேடம்!

நான்: குஷ்புவா?????????????

/////

Office லா இருந்தாலும், இதை படித்து என்னால சிரிப்ப அடக்க முடியலை..சத்த போட்டு சிரிச்சிட்டேன்..அப்புறம் ஒரு excuse me போட்டுகிட்டேன் :)

said...

ஆஹா, முடியல..!
:))

 

BLOGKUT.COM