Thursday, December 6, 2007

விருது வழங்கும் விழா

வந்தவங்களுக்கு எல்லாம் வாங்க வாங்கன்னு சொல்லியே சொல்லியே வாய் வலிச்சிருச்சு. அம்புட்டு கூட்டம் அள்ளி தள்ளிருச்சுல்ல நம்ம சங்கத்து போட்டிக்கான பரிசு வழங்கும் விழாவுல. எல்லாரும் காத்திருக்க சரியா மாலை 6 மணிக்கு விழா துவக்கம். குத்துவிளக்கேத்தி நம்ம விழாவ துவக்கி வெச்சது யாருன்னு உங்களுகு தெரியாதில்ல. கீழ படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க.



த்ரிஷா மேடமே தான். அவங்க குத்துவிளக்கு ஏத்தி முடிச்சதும் நம்ம சங்கத்து தலைவி அனு சங்கத்த பத்தியும் சங்கத்து தங்கங்களான எங்கள பத்தியும் கொஞ்சம் அறிமுகம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு சும்மா மேடையே அதிருச்சுல்ல.. உங்களுக்காக சில படங்கள் இங்கே





எல்லாம் முடிஞ்சு பரிச அறிவிக்கற தருணமும் வந்துது. எல்லாரும் ஆர்வமாய் எதிர்பார்த்த நகைச்சுவை திலக பரிசை வாங்கப்போறது யாருன்னு எதிர்பார்க்க இதுக்கு மேல காக்க வெச்சா நல்லா இருக்காதுன்னு வெற்றியாளர அறிவிக்க நம்ம ஷ்ரேயா கோஷல் மேடைக்கு வந்தாங்க.



அவங்க கொஞ்சும் குரல்ல "பரிசை பெறுபவர் திரு.குசும்பன்" னு சொல்ல நம்ம கேமராவ அப்படியே திருப்பி குசும்பன பாத்தா ஷ்ரேயா கோஷலின் திருவுருவம் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமேன்ற ரேஞ்ச்ல ஜொள்ளூ விட்டுட்டிருக்காரு.. அப்புறம் அவர உலுக்கி எழுப்பி மேடைக்கு கூட்டிட்டு போனா இவர பாருங்க பரிச வாங்காம ஷ்ரேயா கோஷலையே லுக்கு விட்டுட்டு இருக்காரு. :((



இப்படியாக அவர் விட்ட ஜொள்ளுல மயங்கிய ஷ்ரேயா கோஷல் அவருக்குன்னு ஸ்பெஷலா ஒரு பாட்டு பாடினாங்க.



அவருக்கு குடுக்க செஞ்ச அவார்டு இன்னும் ஷ்ரேயா கோஷல் கிட்டயே இருக்கறதா கேள்வி. அவரும் என் நினைவா அது அவங்க கிட்டயே இருக்கட்டும்னு பெருந்தன்மையா சொல்லிட்டாரு.



பரிசு பெற்ற குசும்பருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு இன்னொரு பரிசா எங்கள் சங்கத்தில் ஜனவரி மாதம் சிறப்பு பதிவுகள் போட பெருமையுடன் அழைக்கின்றோம்.

13 Comments:

said...

மிக்க மகிழ்ச்சி ஸ்கூல் காலத்தில் இருந்து போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் தடவை!!!

தேர்ந்து எடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி:)))

said...

வாழ்த்துக்கள் குசும்பன் அவர்களே...

said...

அவருக்கு குடுக்க செஞ்ச அவார்டு இன்னும் ஷ்ரேயா கோஷல் கிட்டயே இருக்கறதா கேள்வி. அவரும் என் நினைவா அது அவங்க கிட்டயே இருக்கட்டும்னு பெருந்தன்மையா சொல்லிட்டாரு.///

ஹி ஹி அப்படி சொல்ல மாட்டேன் நீங்களே பரிசா என் வீட்டுக்கு வந்துடுங்களேன் என்று சொல்லிவிடுவேன்!!!

said...

வாழ்த்துக்கள் குசும்பன் அங்கிள்

said...

வருங்கால நிரந்தர முதல்வர் இஞ்சினியர் குசும்பன் அங்கிளை இப்பவே காக்கா பிடிக்கரீங்க வாழ்க...

said...

வாழ்த்துக்கள் குசும்பன்

said...

குசும்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. போட்டியை வெற்றிகரமாக நடத்திய ப.பா.சங்கத்திற்கும் வாழ்த்துக்கள்

said...

குசும்பன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

விருது வழங்கிய தலைவிக்கு அ.உ.ஸ்.கோ.நற்பனி(ணி) மன்றம் சார்பாகவும் வாழ்த்துக்கள்!

said...

குசும்பன் மாமாவுக்கு கல்யானப்பரிசா முதல்பரிசு. இரண்டுக்கும் வாழ்த்துக்கள் குசும்பன் மாமா

said...

இதுல இருக்கிற உள்குத்து தெரியாம எல்லாரும் வாழ்த்தறாய்ங்களே.. ம்ம்ம்.. நானும் வாழ்த்துடறேன்.. வாழ்த்துக்கள் அங்கிள்.. :D

said...

அட....
அம்புட்டுமே
சும்மாவா..

சின்னப்புள்ளைங்க
எப்புடியெல்லாம்
ஏமாந்துபோய்ட்டோம்..

இந்தப்போட்டிக்கு
ஒரு விழாவும் நடத்தி
விருதுல குசும்பன் பேரும் போட்டு
அசத்திப்புட்டீகளே..

என்ன அருமை சார் இது..!

said...

வாழ்த்துக்கள் அண்ணே ;)

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் குசும்பன்!

\\ஹி ஹி அப்படி சொல்ல மாட்டேன் நீங்களே பரிசா என் வீட்டுக்கு வந்துடுங்களேன் என்று சொல்லிவிடுவேன்!!!\

ROTFL

 

BLOGKUT.COM