நான்: சுவாமி பெண்கள் எப்பொழுது மிகவும் அழகாக இருப்பார்கள்? அவர்களுக்கு இருப்பது நிஜமான அழகா?
சுவாமி: குழந்தாய் என்ன இது சின்ன பிள்ளை தனமாக கேள்வி உனக்கு எப்பொழுது அழகா தெரிகிறார்கள் சொல் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன்.
நான்: சுவாமி சில சமயம் தொட்டில் குழந்தையாக ஈஈஈ என்று பொக்கை வாய் காட்டி சிரிக்கும் பொழுது அழகாக தெரிகிறது.
சுவாமி: இல்லை, அப்பொழுது நீ கூட அழகாய்தான் இருந்து இருப்பாய்!!!
நான்: (இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்) நடக்க தெரியாமல் தத்தகா பித்தகா என்று நடக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மண் தரையில் சொப்பு சட்டிவைத்து மண் சோறு சமைத்து விளாயாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: மாமா பச்சை ஓலை கட்டிய பிறகு புதிதாய் போட்ட தாவணியில் வெளியே வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: 12 வது படிக்கும் பட்டணத்து பெண் குட்டியோண்டு பாவாடை சட்டையில் புத்தக மூட்டை தூக்கி செல்லும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: தோட்டத்து மல்லிகையை பறித்து பூ கட்டும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: தலை குளித்து நுனியில் ஒரு முடிச்சு போட்டு லேசான ஈரம் படர்ந்து கோவிலுக்கு வரும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: வெவ்வெவ்வே என்று பழிப்பு காட்டும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: விழி ஓரத்தில் கண்ணீரும் அதை மறைக்க உதட்டு ஓரத்தில் பொய் சிரிப்பும் சிரிக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் பட்டு சேலை சர சரக்க மாலை போட்டு மண கோலத்தில்?
சுவாமி: இல்லை
நான்: அழகாய் வயிறு பெருத்து முகம் பூரித்து நிறை மாத கர்பிணியாய் இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: குழந்தை பெற்று குழந்தையோடு குழந்தையாகி மூக்கோடு மூக்கு உரசி விளையாடும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: பொக்கை வாய் தெரிய சிரித்து தோல் சுருங்கி பாட்டியாக இருக்கும் பொழுது?
சுவாமி: இல்லை
நான்: சுவாமி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன் குழந்தை முதல் பாட்டிவரை எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் இதுக்கு மேல் ஒன்னும் சொல்ல முடியாது நீங்களே சொல்லிவிடுங்கள் குருவே!
சுவாமி: பெண் என்று வந்த பிறகு அவள் எப்பொழுதுமே அழகுதானாட! இப்பொழுது அப்பொழுது என்று எல்லாம் பிரித்து சொல்ல முடியாது! எப்பொழுதுமே அழகாய் தான் இருக்கிறாள் பெண் உன் பார்வை தானடா வித்தியாசபடுகிறது.
குறிப்பு: 1) இந்த பதிவை சுயநினைவோடும், யாருரைய மிரட்டலும் இல்லாமல் நானே எழுதியது.
2) அருகில் பா.பா சங்கத்து ஆட்கள் யாரும் இல்லை அவர்கள் கையில் கத்தி, தூக்கு கயிறு, விசம், கவிதாயினி கவிதை, அய்யனார் கவிதை தொகுப்பு புத்தகம் எல்லாம் வைத்து என்னை மிரட்டவில்லை நானே சொந்தமாக எழுதியது அவ்வ்வ்வ்வ்:(
26 Comments:
இரண்டாவது குறிப்பு சூப்பருங்க. :)
முத்தி போச்சு!!
படங்கள் எல்லாம் அருமை!
அது என்ன ப.பா.சங்கத்துல நீ ஐக்கியமாயிட்ட??
என்ன காரணம்!!
இதுக்குதான் நிலா பாப்பா நேத்து சராமரி கேள்வி கேட்டுச்சோ???
//
இந்த பதிவை சுயநினைவோடும், யாருரைய மிரட்டலும் இல்லாமல் நானே எழுதியது.
//
வேப்பிலை அடிச்சி மந்திரிச்சாதான் சரிபட்டு வரும்
//
அருகில் பா.பா சங்கத்து ஆட்கள் யாரும் இல்லை அவர்கள் கையில் கத்தி, தூக்கு கயிறு, விசம், கவிதாயினி கவிதை, அய்யனார் கவிதை தொகுப்பு புத்தகம் எல்லாம் வைத்து என்னை மிரட்டவில்லை நானே சொந்தமாக எழுதியது
//
ஐயனார் கவிதை தொகுப்பும் வீச்சருவாவும் ஒன்றா. நல்ல வேளை நான் அந்த கரை பக்கம் ஒதுங்கறதில்லை !!
யோவ் குசும்பா லிங்க் குடுத்து கூப்பிட்டுவிட்டு கமெண்ட் அப்ரூவ் பண்ணாம எங்கய்யா போயிட்ட??
சரி போட்ட கமெண்ட் வரைக்கும் அப்ரூவ் பண்ணு நான் அப்பாலிக்கா வாரேன்
வர்ர்ட்டாஆ??
புகழ்ச்சியா..வஞ்சப்புகழ்ச்சியா?
பாப்பாக்கள் சங்கத்துல உனக்கென்னய்யா வேலை!
கூட்டணி வைக்கிறதுதான் வைக்கிற ஜெயிக்கிற கூட்டணியில சேராம, நொண்டியடிக்கிற கூட்டணியில சேர்ந்திருக்கிறீயே :)
//அனுசுயா said...
இரண்டாவது குறிப்பு சூப்பருங்க. :)//
:)))
*******************
மங்களூர் சிவா said...
முத்தி போச்சு!!///
பறிச்சு பழுக்கவைக்கனும்
**********************
மங்களூர் சிவா said...
அது என்ன ப.பா.சங்கத்துல நீ ஐக்கியமாயிட்ட??
என்ன காரணம்!!///
சும்மாச்சுக்கும், ஆமா ஏன் காதுல புகை வருது?
***********************
ஐயனார் கவிதை தொகுப்பும் வீச்சருவாவும் ஒன்றா. நல்ல வேளை நான் அந்த கரை பக்கம் ஒதுங்கறதில்லை !!///
அப்ப கவிதாயினி கவிதை தொகுப்பும் விசமும் வேறு வேறா?
****************************
பாச மலர் said...
புகழ்ச்சியா..வஞ்சப்புகழ்ச்சியா?///
என்ன பாசமலர் புகழ்ந்தாலும் இப்படி ஒரு டவுட்டோட என்னை பார்த்தா என்ன சொல்வது:(
***********************
//பாரி.அரசு said...
பாப்பாக்கள் சங்கத்துல உனக்கென்னய்யா வேலை!
கூட்டணி வைக்கிறதுதான் வைக்கிற ஜெயிக்கிற கூட்டணியில சேராம, நொண்டியடிக்கிற கூட்டணியில சேர்ந்திருக்கிறீயே :)///
அவ்வ் அவ்வ் ஒரு மாசம் எழுத கூப்பிட்டாங்கன்னா அதுதாங்கன்னா!!!
இதுல யாருங்க ஜெயிக்கிறது தோற்பது எல்லாம், பத்தவெச்சிட்டியே பாரி அண்ணா!!!
//
பாச மலர் said...
புகழ்ச்சியா..வஞ்சப்புகழ்ச்சியா?
//
இதுல என்னங்க சந்தேகம் வஞ்ச புகழ்ச்சியேதான்!
//
பாச மலர் said...
புகழ்ச்சியா..வஞ்சப்புகழ்ச்சியா?
//
இதுல என்னங்க சந்தேகம் வஞ்ச புகழ்ச்சியேதான்!
பாசமலர் கேட்டது தான் நானும் கேக்கறேன்.. புகழ்ச்சியா வஞ்சப்புகழ்ச்சியா இது.. இத்தனை இல்லை போட்டுட்டு அப்பறம் ஒரே ஒரு பாராவில் அழகுன்னு சொன்னா ஒத்துக்கறதா நாங்க..
கீழே குறிப்புகள் தான் சங்கத்துக்கு ஏற்ற நல்ல நகைச்சுவை விருந்து..
//
பாரி.அரசு said...
பாப்பாக்கள் சங்கத்துல உனக்கென்னய்யா வேலை!
கூட்டணி வைக்கிறதுதான் வைக்கிற ஜெயிக்கிற கூட்டணியில சேராம, நொண்டியடிக்கிற கூட்டணியில சேர்ந்திருக்கிறீயே :)
//
ரிப்பீட்டேய்
உண்மையை எழுதிட்டு இப்படி டிஸ்கி எல்லாம் கொடுக்கிறது தப்பு தப்பு ரொம்பத் தப்பு.
//மங்களூர் சிவா said...
இதுல என்னங்க சந்தேகம் வஞ்ச புகழ்ச்சியேதான்!///
சிவா நண்பனே நான் இருக்கும் இடத்தை கொஞ்சம் யோசித்து பார், என்னால் இப்பொழுது ஒரு சோக ஸ்மைலி மட்டும் போட்டு விடுகிறேன்
:(
****************************
delphine said...
அப்பாடா. இப்பத்தான் உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கே சரவணா!!///
அவ்வ்வ்வ்வ் டாக்டர்
************************
முத்துலெட்சுமி said...
பாசமலர் கேட்டது தான் நானும் கேக்கறேன்.. புகழ்ச்சியா வஞ்சப்புகழ்ச்சியா இது.. இத்தனை இல்லை///
ஜாங்கிரியில் எந்த பக்கம் இனிப்பு என்றால் என்ன சொல்ல முடியும் அது போல தான் என்று சுவாமி சொல்ல வருகிறார்!!!:)))
****************************
சேதுக்கரசி said...
உண்மையை எழுதிட்டு இப்படி டிஸ்கி எல்லாம் கொடுக்கிறது தப்பு தப்பு ரொம்பத் தப்பு.///
வாங்க சேதுக்கரசி அது சும்மாச்சுக்கும், கண்டுக்காதீங்க!!
///************************
முத்துலெட்சுமி said...
பாசமலர் கேட்டது தான் நானும் கேக்கறேன்.. புகழ்ச்சியா வஞ்சப்புகழ்ச்சியா இது.. இத்தனை இல்லை///
ஜாங்கிரியில் எந்த பக்கம் இனிப்பு என்றால் என்ன சொல்ல முடியும் அது போல தான் என்று சுவாமி சொல்ல வருகிறார்!!!:)))
****************************
///
அடப்பாவி சரவணா! பொய்யை இனிப்பு தடவி சொல்லுறதுன்னு சொல்வாய்ங்களே! அதுவா இது :))
பாரி.அரசு said...
அடப்பாவி சரவணா! பொய்யை இனிப்பு தடவி சொல்லுறதுன்னு சொல்வாய்ங்களே! அதுவா இது :))///
பாரி நீங்க இன்னைக்கு எனக்கு பொங்கல் வைக்கனும் என்று முடிவு செஞ்சபிறகு நான் என்ன சொல்லி என்ன ஆக போவுது?
இன்று நான் மெளனவிரதம், அஜித் மாதிரி சொல்லனும் என்றால் "பேஸ் மாத்தேன்":)
very nice
//பெண் என்று வந்த பிறகு அவள் எப்பொழுதுமே அழகுதானாட//
இது முற்றிலும் உண்மை..உண்மையை தவிர வேறு ஒன்னும் இல்லை :)
தம்பிக்குக் கல்யாணம் ஆகப் போகுதுல்ல...இனிமே கொஞ்ச நாளைக்கு இப்பிடித்தான் எழுதுவாரு, பொண்ணுங்க எப்பவுமே அழகுன்னு :) ஐஸ் வைக்கத் தெரிஞ்சா மட்டும் பத்தாது, அப்பிடியே தகுந்த தற்காப்புக் கலைக்கும் பயிற்சி எடுக்கவும்...
நெசமாவே குசும்பரா எழுதியது? நம்ப முடியவில்லை வில்லை வில்லை ல்லை ல்லை லை லை... எங்கோ அடி வாங்கிட்டு வந்து இப்பிடி ஒப்பிச்சிட்டு இருக்குற மாதிரி இருக்குதுப்பா... நான் குசும்பரே சொந்த முயற்சில எழுதினாருன்னு ஒத்துக்க மாட்டேன். :-)
குசும்பற்றதாய் உண்மை மட்டுமே சொல்லும் ஒரு பதிவு!
Post a Comment