Monday, February 11, 2008

தலைவலி மாத்திரைகள் இம்மாதம் அதிக விற்பனையாவதற்கு என்ன காரணம்?


இந்த மாதம் அமோக விற்பனை!!
எங்கள் நன்றியினை சிம்புவின் "காளை" படத்திற்கு அன்புக் காணிக்கையாக்குகிறோம்.

இப்படிக்கு
சாரிடான், மெட்டாசின், அனாசின், ஆக்ஷன் 500, நோவால்ஜின் கம்பெனிகள்.

****
பேராசிரியர் வணிகவியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
பேரா : ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு பைனான்ஸ் கிடைக்கும் இடங்களில் அதிமுக்கியமான ஒன்றைக் கூறு.
மாணவன் : மாமனார்..

****
குட்டிப்பையன் : அம்மா…உங்க தலையில எப்படி சில நரைமுடிகள் வந்துருக்கு?
அம்மா : நீ அதிகமா சேட்டை செய்யிறேயில்ல. நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.
பையன் : ஓ! அப்படியா.. பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
அம்மா : !!??

****
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். எவ்வளவு ஆச்சரியம்! இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

****
நபர் : சிரிச்ச பழம் ஒண்ணு கொடுங்க
கடைக்காரர் : அப்படின்னா??
நபர் : அழுகாத பழம் தான் சிரிச்ச பழம்.

நன்றி: நிலாச்சாரல்

10 Comments:

said...

காளை படம் பற்றிய பகிடி; உண்மையுடன் கூடிய ரசிக்கும் படியானது. நான் சிம்பு;ராஜேந்தர் ;மனநல மருத்துவரை சந்திக்க வேண்டியவர்கள் என்பேன்.

said...

இந்த பதிவும் ஒரு காரணம்

said...

நல்ல ஜோக்ஸ் மை ஃப்ரண்ட்..வகுப்பறை ஜோக் ரொம்ப நல்லாருந்துச்சு..

Pulliraaja said...

1). தமிழச்சி போட்ட அட்டகாசம்.
2. ஜெயலலிதா விட்ட தொடர் அறிக்கைகள்

said...

காளை படம் பற்றிய பகிடி; உண்மையுடன் கூடிய ரசிக்கும் படியானது. நான் சிம்பு;ராஜேந்தர் ;மனநல மருத்துவரை சந்திக்க வேண்டியவர்கள் என்பேன்.//

எத்தனை ரிப்பீட்டு சொன்னா சரியோ அத்தனை ரிப்பீட்டுங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க

said...

:))

said...

http://bp1.blogger.com/_dxs4kM-5jzI/R6_kTl7mENI/AAAAAAAAAGI/rbDF4gYs4pI/s1600-h/sh2.jpg

இந்த விளம்பரம் கடந்த சனிக்கிழமையன்று ( 09.02.2008) சென்னையில் எல்லா தினசரியிலும் வந்தது !!

கவனமாக பாருங்கள் .... உண்மை அவர்கள் வாயாலேயே வந்துருச்சு !!!
ஆனா அதுக்காக நம்ம முரட்டுகாளையை சேர்த்தது ரொம்ப ஓவர் !

இது அச்சுபிழையாகக்கூட இருக்கலாம்... ஆனால் ரொம்ப பொருத்தமாக இருக்கிறது !

said...

//இந்த மாதம் அமோக விற்பனை!!
எங்கள் நன்றியினை சிம்புவின் "காளை" படத்திற்கு அன்புக் காணிக்கையாக்குகிறோம்.

இப்படிக்கு
சாரிடான், மெட்டாசின், அனாசின், ஆக்ஷன் 500, நோவால்ஜின் கம்பெனிகள்.//
ஹா/...ஹா... இது கலக்கல்..
ஆனா அந்தப் படம் பாத்துட்டு நான் சுவத்துல முட்டிக்கிட்டதுக்கு அப்புறம் யுஸ் பண்ண டீப் ஹீட் கம்பெனிய ஏன் கூட்டணில சேக்கலை?..:)

said...

//குட்டிப்பையன் : அம்மா…உங்க தலையில எப்படி சில நரைமுடிகள் வந்துருக்கு?
அம்மா : நீ அதிகமா சேட்டை செய்யிறேயில்ல. நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.
பையன் : ஓ! அப்படியா.. பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
அம்மா : !!??//

இது நச்.. சூப்பர்..:))))))))))

said...

"நியூட்டன்" ஜோக் இல்லைங்க, நிஜம்.

 

BLOGKUT.COM