சங்கத்து ரிசப்ஷன்ல நல்லா தூங்கிட்டிருந்த நம்ம கவிதாயினி டக்குனு "யூ ஹேவ் அ நியூ மெயில்" னு கம்ப்யூட்டர்ல இருந்து சத்தம் வந்ததும் அலறி அடிச்சிக்கிட்டு எழுந்துக்கறாங்க.. வந்திருந்த மெயில பாத்ததும் அலறி அடிச்சிக்கிட்டு மத்த மக்கள் எல்லாரையும் கூப்பிட மொத்த சங்கமும் கவிதாயினி முன்னாடி ஆஜர்..
கண்மணி : ஏண்டி இப்படி அலறின??
கவிதாயினி : இங்க வந்து இந்த மெயில பாருங்க.. இன்னிக்கு ஜெ.ஜெ. மேடம்க்கு பிறந்தநாளாம். நம்ம சங்கத்து மக்களுக்கு போன்ல பேச அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்களாம்..
மை ப்ரெண்ட் : என்னது? நிஜமாவா?
ஜி3 : ஆஹா.. சூப்பர்.. இப்பவே போன போடுவோம்..
அனுசுயா : சரி.. சரி.. வாங்க போன் பண்ணலாம்.
இம்சை : ஒரு நிமிஷம்.. ஊர்ல இருந்து அப்பா கால் பண்றாரு.. நீங்க எல்லாரும் பேசிட்டிருங்க.. நான் இதோ வந்துடறேன்..
கவிதாயினி : சீக்கிரம் வந்துடு.
கண்மணி டீச்சர் ரொம்ப ஆர்வமாக மெயிலில் தரப்பட்டிருந்த நம்பருக்கு போன் பண்றாங்க.. ட்ரிங்.. ட்ரிங்...
அந்த பக்கம் : ஹலோ
கண்மணி : வணக்கங்க.. நாங்க ப.பா. சங்கத்துல இருந்து பேசறோம். ஜெ.ஜெ. மேடம் அவங்க கிட்ட பேச எங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்க..
அந்த பக்கம் : ஒ.. நீங்க தானா? மேடம் சொன்னாங்க.. உங்க கால் வரும்னு.. ஒரு நிமிஷம் லைன்ல இருங்க..
மை ப்ரெண்ட் : என்ன ஆச்சு? லைன்ல வந்துட்டாங்களா?
கண்மணி : இல்ல கூப்பிட போயிருக்காங்க.. வந்துடுவாங்க.. இரு ஸ்பீக்கர்ல போடறேன்..
ஜெ.ஜெ : ஹல்லோ. வணக்கம்.. நான் தான் ஜெ.ஜெ. பேசறேன்.
கண்மணி : வணக்கம் மேடம்.. எங்க சங்கத்து சார்பா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
எல்லாரும் கோரசாக : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!!!
ஜெ.ஜெ : நன்றி.. நன்றி.. உங்க சங்கத்த பத்தி கேள்விபட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துது. அதான் பிறந்தநாள் அதுவுமா உங்க எல்லார் கிட்டயும் பேசலாம்னு முடிவு பண்ணேன்..
கவிதாயினி : ரொம்ப சந்தோஷம் மேடம்.. உங்களுக்காக ஒரு பிறந்தநாள் வாழ்த்து கவிதை சொல்லட்டுமா மேடம்..
ஜெ.ஜெ : வேணாம்டா செல்லம்.. பிறந்தநாள் அதுவுமா என்ன அழவெச்சிடாத.. நீ கவிதை சொல்லாம இருந்தா என் பிறந்தநாள் பரிசா உனக்கு கோழிக்கால் சூப்பு அனுப்பி வைக்கறேன்..
கவிதாயினி : நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க மேடம்.. மறக்காம கோழிக்கால் சூப்ப அனுப்பிடுங்க..
மை ப்ரெண்ட் : அவ கெடக்கறா விடுங்க மேடம்.. ஒரு ராணியோட தோரணை உங்க கிட்ட தெரியுதே.. அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..
ஜெ.ஜெ. : அது என்னோட குணம் அப்படி... எப்பவும் அடுத்தவங்கள அடக்கித்தான் பழக்கம்.. நான் யாருக்கும் அடங்கி பழக்கமே கிடையாது..
ஜி3 : [ஆஹா.. அராஜகப் பேர்வழியா இருப்பாங்க போல்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே] மேடம் கவிதாயினி கவிதை சொல்லாம விட்டா கோழிக்கால் சூப் தர்றேன்னு சொன்னீங்களே.. அதே மாதிரி நானும் உங்கள கேள்வி கேட்காம விட்டா எனக்கு சிக்கன் பிரியாணி அனுப்புவீங்களா மேடம்?
ஜெ.ஜெ : நீ திருந்தவே மாட்டியா? ஆமா.. இப்போ நீ கேட்டதே ஒரு கேள்வி தானே.. அப்போ உனக்கு நான் சிக்கன் பிரியாணி குடுக்க வேண்டியதில்லையே..
ஜி3 (மனதிற்குள்) : அடடா.. கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்காங்களே.. சரி.. கவிதாயினி சூப்ல கைய வைச்சிட வேண்டியது தான்..
அனுசுயா : மேடம் நீங்க ஏன் மேடம் கல்யாணமே பண்ணிக்கல??
ஜெ.ஜெ : நான் வரதட்சனைங்கற பேர்ல விலை குடுத்து வாங்கற மாப்பிள்ளை அந்த விலைக்கு தகுந்தவனா இருக்கனும்னு எதிர்பாக்கறேன்.. ஆனா இது வரைக்கும் அந்த மாதிரி யாருமே கிடைக்கலை.. அதான்..
இந்த வாக்கியத்தை கேட்டதும் நம் கண்மணி டீச்சரின் மூலையில் இது எங்கயோ கேள்விப்பட்ட பதிலா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டே வெளியில வர அங்க இம்சை அரசி போனில் ஜெ.ஜெ. மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்.
கண்மணி : அடிப்பாவி.. இதெல்லாம் உன் வேலை தானா? அட என் அறிவு ஜீவி அப்ரண்டிசுகளா இங்க வந்து பாருங்க.. இவ்ளோ நேரம் நாம பேசினது இந்த இம்சை கிட்ட..
ஏமாந்த கலை முகத்தில வழிய அனைவரும் இம்சையை துரத்திக்கொண்டு ஓடுகின்றனர்..
எப்படியும் இம்சைக்கு பிறந்தநாள் அதுவுமா நல்ல பர்த்டே பம்ப்ஸ் உறுதி.. நேர்ல குடுக்க முடியாதத இப்படி கற்பனைல குடுத்துக்கறோம்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இம்சை அரசி.. உன் ஆட்சி இன்று போல் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் :))
Tuesday, August 21, 2007
ஜெ-வுடன் ஒரு பேட்டி
சிரிக்க வைக்க முயற்சித்தது G3 at 7:42 AM
சிரிப்பு வகை: பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
:))
Happy Birthday Imsai(3rd Time)
thanks u all my dears, Ila anna and Delphine amma... :)))
வாழ்த்துக்கள் இம்சை அரசி.
அக்கா வாழ்த்துக்கள்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இம்சை அரசி
வாங்கிட்டீங்களா..வாங்கிட்டீங்களா..?
அப்படின்னு சொன்ன மாதிரி..
வாழ்த்திட்டீங்களா..வாழ்த்திட்டீங்களா..?
அப்படின்னு..விரட்டி விரட்டி..என்னக் கேட்டதால..
இம்சை அரசி உங்கள
வாழ்த்த வயசில்லை..வணங்குறேன்.. (இனையத்தில புதியவன் தானே..ஹி! ஹி !)
இம்சை அக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!! :-)
ஏங்க கவிதாயினி அவ்வளவு அருமையாவா கவிதை எழுதுவாங்க? ஒரு sample கொடுங்களேன்??
Post a Comment