Saturday, September 1, 2007

ஜி3 க்கு பிறந்தநாள் - கொண்டாடலாம் வாங்க!!


ஹாய் மக்காஸ் அண்ட் மக்கீஸ்!!

இன்னிக்கு எங்களுக்கு வெரி ஸ்பெஷல் டே!! எங்கள் செல்லத் தோழியும் ப்ரிய சகோதரியுமாகவும்.. பயமறியாப் பாவையர் சங்கத்தின் 'அசைக்க முடியாத தூணாகவும்' (இதுல உள்குத்து ஒன்னும் கிடையாதுங்கோ!!) விளங்கும் ஜி3 என்ற காயத்ரிக்கு இன்று பிறந்த நாள்!!!

அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது! அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை! சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)

ஜி3 'பய'டேட்டா

பெயர் : காயத்ரி நாதன்

செல்லப் பெயர் : ஜி3

வயது : 17 முடிந்து 16 துவக்கம்!

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது

பொழுது போக்கு : ஆபீஸ் போவது

பிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது!

பிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..

பிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....
2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..
3. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...

பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.

விரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை

வெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை

சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது

நீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது

வாழ்நாள் லட்சியம் : உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!


இப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு! எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு சங்கத்து சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்!!


தங்கள் நல்வரவை எதிர்நோக்கும் :

அனுசுயா
கண்மணி
காயத்ரி
இம்சையரசி
மை ஃப்ரண்ட்

26 Comments:

said...

மீ த பர்ஸ்ட்டு

வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் G3

எங்கள் சங்கத்தின் தூஊஊண் G3 யின் பிறந்த நாளாளுக்காக நாளை தமிழ்மணத்தில் [அம்புஜம் மாமியின்] அல்வா கொடுக்கப் படும்.
முன் பதிவுக்கு டோக்கன் வாங்கிக் 'கொள்ளவும் மக்காஸ்

said...

நீங்கள் இன்று போல் என்றும் 16 ஆகவே இருக்க வாழ்த்தும் தங்கை கண்மணி ;)

said...

ஒன் டூ த்ரீ
எங்க தலைவி ஜி3
தங்க தலைவி காயத்ரி
பாசமலரில் சாவித்திரி
போட்டுக்கலாம் சா---பூ--த்ரீ

அய் நானும் கவுஜ போட்டுட்டேன் [கவிதாய்யினி நான் பாஸா?]

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி...

said...

அட!!!
எத்தனை இடங்களப்பா!!!
இருந்தாலும் அசராம எல்லா எடத்துலையும் வாழ்த்து சொல்லுவோம்ல!!! :-P

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!! :-D

said...

அட்ரா.. அட்ரா...அக்கா பேர்த்டேக்கு இது 8வது போஸ்ட்

said...

//பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்./

சூப்பரப்பு..

said...

//சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது//

அஹா..இது ரொம்ப ரொம்ப சரி...

said...

அக்காவ இங்கன்யும் வாழ்த்திக்குறேன்...


அக்கா.. ஹாப்பி பேர்த்டே..

said...

ஜூப்பர்.. :-D

said...

G3 யக்கா.. சங்கத்துல எங்க எல்லாருக்கும் நீங்க விருந்து தர்றீங்கன்னு சொன்னீங்க.. ஆனால் நாங்க அது நம்பலை. சாப்பாடுன்னா அது எங்க கையில வந்து சேராதுன்னு தெரியும். அதனால், காசை மட்டும் கொடுத்துடுங்க.. நாங்களே எஞ்சாய் பண்ணிக்குவோம். :-D

said...

என்னது காயத்ரிக்குப் பிறந்தநாளா...? அண்மையில்தானே கொண்டாடிய ஞாபகம்... அதெப்படி அதற்குள் திரும்ப வந்தது... எனது வேலைகளில் அளவுக்கதிகமாக மூழ்கிவிட்டேனோ...! அல்லது...சரி எது எப்பிடி இருந்தாலும் என் அன்புத் தங்கை காயத்ரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்க நல்லா சாப்பிடுவீங்களோ...:)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3 ;)

said...

G3 பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து ஒட்டல்களிலும் சிறப்பு சலுகை உண்டு :-))

said...

//அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது!//

ஆமா.. யாரு அவங்க?

வாழ்க வளமுடன்

இப்படிக்கு
எப்பவும் 16 லேயே இருப்பவன்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3

said...

//அய் நானும் கவுஜ போட்டுட்டேன் [கவிதாய்யினி நான் பாஸா?]
//

அக்காஆஆஆஆ!! கொன்னுட்டீங்க!!

said...

//தமிழ்மணத்தில் [அம்புஜம் மாமியின்] அல்வா கொடுக்கப் படும்.
//

எனக்கு அரைக்கிலோ பார்சல்..

said...

//என்னது காயத்ரிக்குப் பிறந்தநாளா...? அண்மையில்தானே கொண்டாடிய ஞாபகம்... //

தமிழ் வந்துட்டீங்களா? மாசா மாசம் பர்த்டே கொண்டாட நான் என்ன அரசியல்வாதியா? பிறந்தநாள் 'பிரவாகம்' காயத்ரிக்கு.. போஸ்ட் போட்டது 'பாலைத்திணை' காயத்ரி. தெளிவாச்சா? :))

said...

//G3 பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து ஒட்டல்களிலும் சிறப்பு சலுகை உண்டு :-))

//

எங்க ஷார்ஜாவுலயா? இங்க அவ பேர சொன்னா அடிக்க வராங்க.. எல்லா ஹோட்டல்லயும் அக்கௌண்ட் வெச்சிருக்காளாம்!!

(என்னை திட்டினிங்களாமே? ஏன் ஏன் ஏன் கோபி? :(

said...

பு3 க்கு இனிய பிறந்த நாள் கொண்டாட்டங்கள்..

என்னங்க அதிசயமா இருக்கு உங்களுக்கு மட்டும் வயது குறைந்து கொண்டே வருகின்றது..லிம்காவுக்கு சாதனையை அனுப்பி வச்சுட்டீங்களா..?

said...

அப்படியே வந்து இந்தப் போட்டியில ப பா சங்கம் மூலமா கலந்துக்கோங்க..

http://nilavunanban.blogspot.com/2007/08/blog-post_30.html

said...

சொ.செ.சூ வைத்துக் கொள்ளத் துடிக்கும் அப்பாவி கவிதாயினிக்கு அனுதாபங்கள்.
[அல்வா அரைகிலோ கேட்டியே]

said...

/உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!/

ஏனிந்த கொலவெறி? இத படிச்சு அதிர்ச்சியடைந்த காயத்ரி பாவம் இன்னிக்கு ட்ரீட் கொடுக்கும் போது பேசவே இல்ல(பின்ன சாப்பிடவே நேரமில்ல இதுல என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு;))

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி :)

said...

நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)

said...

காயத்ரி பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

 

BLOGKUT.COM