Saturday, September 15, 2007

விநாயகா எங்க மெளஸ காப்பாத்து



இன்னிக்கு காலைல எழுந்திருச்சு விநாயகர் சதுர்த்தி ஆச்சே நம்ம கணேசன குளிப்பாட்டலாம்னு போயிருந்தோம். சங்க கட்டிடத்துக்கு முன்னாடியே ஒரு விநாயகர் வெச்சிருக்கோம்ல. மைப்ரெண்ட் போய் கணேசன எழுப்பி குளிப்பாட்டும்போது தான் ஆரம்பிச்சாரு பாருங்க அழுகைய. அடஅடஅட உங்க வீட்டு அழுகை எங்க வீட்டு அழுகையில்ல செம அழுகைங்க.

கண்மணி : விநாயகா உனக்கு என்ன கஷ்டம் ஒரு நாள்தான குளிப்பாட்டறோம் இதுக்கு போய் இவ்ளோ அழுகையா?

இம்சை : விநாயகர் காயத்ரி கவிதைய படிச்சுட்டாறோ என்னவோ?

கவிதாயினி : ஆண்டவா என் கவிதைக்காக நீ அழலாமா? நான் வேணா இனிமேல கவிதை எழுதறத விட்டுட்டு கவுஜ எழுதறேன் அழாதப்பா கணேசா.

அனு : அட விநாயகருக்கு அவரோட எலிய காணோமாமா அதுக்குதான் அழறாரு

மை ப்ரெண்ட் : ஓ அதானா விசயம் இப்பதான பார்த்தேன் இங்கதான இருந்தது. (உடனே ஜி3 யோட மெளஸ எடுத்து விநாயகர்கிட்ட தர்ராங்க.)

ஜி3 : என் மெளஸ் எவ்ளோ புண்ணியம் பண்ணியிருக்கு பாருங்க விநாயகருக்கே கொடுக்கற அளவுக்கு இதுக்காகவே செஞ்ச சுண்டல் கொழுக்கட்டை எல்லாத்தையும் எனக்குதான் தரனும் இப்பவே சொல்லிடறேன்.


உடனே எல்லாரும் அதெப்படி நாங்களும்தான காலைல இருந்து காத்துகிட்டு இருக்கறோம் எங்களுக்கும் கொழுக்கட்டை வேணும் அப்டீங்கறாங்க.

கண்மணி : அட குழந்தைங்களா இங்க யாரு சுண்டல் கொழுக்கட்டை செஞ்சாங்க. சமத்தா எல்லாரும் அவங்க அவங்க தெரு முக்குல இருக்கற விநாயகர் கோவிலுக்கு போயி சுண்டல் தருவாங்க வாங்கி சாப்பிட்டுக்கோங்க



இதை கேட்டு எல்லாரும் முழிக்கறாங்க. அப்ப நம்ம
கவிதாயினி : அங்க பாருங்க நம்ம பிள்ளையாரோட எலி குளிக்க போயிருந்தாராமா அவர் வரதுக்குள்ள நாம நம்ம மெளஸ குடுத்ததால பிள்ளையாரு எலிய திரும்பிகூட பார்க்க மாட்டேங்கறாரு பாருங்க நம்ம எலிகுட்டி முகத்துல எவ்‍ளோ சோகம்னு :(

இம்சை : அய்யோ எல்லாரும் கொஞ்சம் கொழுக்கட்டை குடுங்கப்பா கவிதாயினி வாய்க்கு குடுக்கனும் இல்லீனா இதுக்கும் ஒரு சோக கவிதை எழுதிடுவா :)


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும். எல்லாரோட மெளஸயும் அந்த விநாயகர் காப்பத்தனும்னு நானும் வேண்டிக்கிறேன்.

டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல :)

20 Comments:

said...

எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

said...

//டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல //

ROTFL.. சூப்பரோ சூப்பர். ;-)

said...

சிரிக்க வைத்த பபாச மக்கள்ஸ்... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

said...

//எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்//

நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

Anonymous said...

நீங்க எல்லாம் குளிக்காம என்ன குளிப்பாட்டுவது மட்டும் என்ன நியாயம்:((((

Anonymous said...

கொழுக்கட்டை எல்லாம் சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் வாளிய மூடிபோட்டு உள்ள கொழுக்கட்டை இருப்பதுபோல் நடிக்கு ப.பா சங்கத்தின் தில்லுமுல்லுவை அம்பலபடுத்த வாங்க

Anonymous said...

பிள்ளையாரே வந்து கமெண்ட் போட்டும் இன்னும் கமெண்டை ரிலீஸ் செய்யவில்லையா?

said...

கொழுக்கட்டை எல்லாத்தையும் சாப்பிட்டது யாரு???

said...

காட்டாறு நன்றி
நாமக்கல்சிபி வாழ்த்துக்கு நன்றி

said...

பிள்ளையார்: பிள்ளையாரப்பா நாங்கல்லாம் மழை வரும்போதே குளிச்சாச்சு நீ தான் பாவம் உள்ள இருக்கற மழைல கூட குளிக்க முடியாது அதான் இன்னிக்கு குளிப்பாட்டறோம்
குசும்பன் : கொழுக்கட்டை எல்லாத்தையும் சாப்பிட்டது சத்தியமா நான் இல்ல. ஜி3 யா இருக்குமோ என்னமோ எனக்கு தெரியலப்பா :)

said...

முருகன் : நீயுமா முருகா :)

Anonymous said...

நான் கேட்டேனா..நீங்க..தின்னுறதுக்கு ஏம்மா என் பேரச் சொல்லுறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

நீங்க எல்லாம் வித விதமா , வயர் லெஸ் மவுஸ், ஆப்டிகல் மவுஸ் வச்சிக்கிட்டு எனக்கு மட்டும் ஓட்ட மவுசா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\\

ஆஹா..இன்னிக்கு தானா விநாயகர் சதுர்த்தி...வாழ்த்துக்கள் கணேசா :)

said...

படத்தைவச்சி கலக்கல் காமெடி பண்ணியிருக்கிங்க...சூப்பர் :)

said...

பிள்ளையார் : பிள்ளையாரப்பா உனக்கு எலியில இருந்து இப்பதான மெளஸ்கு வந்திருக்கற அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு கட்டாயம் ஜி3 யோட ஆப்டிகல் மெளஸ் உண்டு.

கோபிநாத் : நன்றிங்க

Anonymous said...

நான் ஏற்கனவே ஒரு ஆப்டிகல் மவுஸை ஆகச்ட் 5 பதிவர் பட்டறையிலிருந்து லவட்டிகிட்டு வந்து வெச்சிருந்தேன். இப்போ அதையும் காணோம். அவ்வ்வ்.....!

Anonymous said...

ஓ! இனிக்கு இங்கதான் முகாமா?

ரைட்டு! ஆரம்பிச்சிட வேண்டியதுதான்!

நாராயண!நாராயண!

Anonymous said...

என்ன பிள்ளையாரப்பா!

எல்லாரும் உன்னை தேர்ல, பல்லக்குல உட்கார வெச்சி ஊர்வலமா போய் ஊரைச் சுத்திக் காட்டுறாங்க!

இவங்க குறைந்த பட்சம் இடுப்புல உட்கார வெச்சிக்கிட்டாவது உன்னைப் பக்கத்து தெரு வரைக்கும் கூட கூட்டிட்டுப் போகலையா?

ம்ஹூம்! கஷ்டம்தான்!

said...

//டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல //
சூப்பர்

 

BLOGKUT.COM