Thursday, August 2, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 1

அது ஒரு அமைதியான மாலை நேரம். இருக்காதா பின்னே? கவிதாயினி காயத்ரிதான் சங்கத்து ரிஷப்ஷன் மேஜைல காலை நீட்டி படுத்துக்கிட்டு கண்ணை மூடிட்டு யோசிச்சுக்கிட்டு (தூங்கிக்கிட்டு) இருந்தாங்களே!

அந்த நேரம் பார்த்து மை ஃபிரண்டும் இம்சை அரசியும் சங்கத்து ஆபிஸ்ல நுழைஞ்சாங்க.

மை பிரண்ட்: இம்சை, அங்கே பாரு! ஏதோ ஒன்னு மேஜை மேலே கிடக்கு!!

இம்சை: அது ஏதோ ஒன்னு இல்ல. இங்கண ஒரு பொண்ணு கவிதை சொல்லி நம்ம காதுல ரத்தம் வர வைச்சாளே! அவதான் மேஜை மேலே படுத்துட்டு இருக்கா..

மை பிரண்ட்: அப்போ, வேலையை ஆரம்பிச்சிடுவோமா?

இம்சை அரசி மை ஃபிரண்டை பார்த்து கண்ணடிக்க, இம்சை அரசி சங்கத்துல வளர்கிற மயிலிடம் போராடி வெற்றிகரமா ஒரு மயிலிறகை பிடுங்கிட்டு ஓடி வர, மை ஃபிரண்ட் ஆபிஸ் முழுக்க தேடி, கடைசியாக கண்மணி டீச்சர் அறைக்குள்ளே ஓடி அவங்க தலை நரையை மறைக்க முடிக்கு பூச வச்சிருந்த கரு மையை எடுத்துட்டு ஓடி வந்தார்.

இம்சை: ஸ்டார்ட் மியூஜிக்.. டன் டன் டன் டன் டன்ன்ன்...

"நேத்து எங்க ட்ரோவிங் க்ளாஸ்ல இப்படிதான் மீசை தாடி வரையிறதுன்னு சொல்லிக்கொடுத்தாங்க. அழகா இருக்கா?"ன்னு கேட்டுக்கிட்டே காயத்ரிக்கு பெரிய மீசையும் குருந்தாடி ஒன்னும் வரைய, "நாந்தான் கிச்சு கிச்சு மூட்டுவேன்" என சொல்லி காயத்ரி காதுகளில் மயிலிறகை தடவி தன் பங்கை சரியாக செய்தார் இம்சை.

திடுக்கென முளித்த காயத்ரி தடார்ன்னு தன் கையை வீச, அப்பாவியா அவர் பின்னால உட்கார்ந்து சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டு கொண்டிருந்த G3யின் வலது கன்னத்தில் அடி இடியா விழ, ஒரு ஸ்ப்பீக்கர் அவுட்டு!

G3: அய்யோ! மம்மி....

மை ஃபிரண்ட்: இங்க பாருடா! இப்பக்கூட மேடம் இங்கீலீஸுலதான் அலறுராங்க!

"அட பாவி G3! அது என்னோட சிக்கன் லெக் பீஸ்ஸு!"ன்னு காயத்ரி கத்தி G3யின் இடது கன்னத்தில் இன்னொரு அறை மின்னல் வேகத்துல (இப்போதும் அடி இடி மாதிரிதான்) விட்டார்.

G3: அய்யோ! அம்மா......

இப்போ G3யின் அடுத்த ஸ்ப்பீகரும் அவுட்டு!

இம்சை: இப்போ அம்மா தமிழ்ல வந்துட்டாங்க.. ஹா ஹா ஹா...

மை பிரண்ட்:
எகிறி குதித்தேன்.. வானம் இடித்தது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..


அந்த பக்கம் நடந்து வந்த கண்மணி டீச்சர்,

கண்மணி: என்ன ஃபிரண்டு, ரெக்கோர்ட் தேய்ஞ்சு போச்சா? ஒரே லைன்க்கு சென்ஷியாட்டம் ரிப்பீட்டு போட்டுட்டிருக்கே?

மை ஃபிரண்ட்: சித்து சொன்ன வார்த்தை பளிச்சிடுச்சு டீச்சர்..

கண்மணி: நம்ம சங்கத்துக்கு சித்தரெல்லாம் வந்தாங்கன்னு சொல்லவே இல்லையே? சொல்லியிருந்தா ரெண்டு ஃபுல்லு வாங்கி கொடுத்து அருள் வாக்கு வாங்கியிருப்பேனே!

மை ஃபிரண்ட்: ட்ட்டீச்ச்சர்ர்ர்ர்... எந்த சித்தானந்தாவும் இல்ல. நான் சொன்னது சித்தார்த்!!!!

ரெண்டு பக்க ஸ்ப்பீக்கரும் அவுட்டான G3 என்ன நடக்குதுன்னு புரியாமல் தன் ரெண்டு கைகளையும் கன்னங்களில் வைத்து ஒவ்வொருத்தவங்க முகத்தையும் பார்த்துண்டு இருந்தார். திடீர்ன்னு பிச்சக்காரி தட்டுல உருளும் சில்லறை காசு சவுண்டுல G3 சிரிக்க, என்னன்னு பார்த்தா காயத்ரியின் புருவம் இறங்கி மீசையாகிடுச்சு!! (அது இம்சையும் ஃபிரண்டும் பண்ண ட்ரோவிங்ன்னு நான் சொல்லிதான் தெரியணுமா?) ;-)

பிறகு என்ன? மீதி இருந்த மையை தூக்கிட்டு காயத்ரி ஃபிரண்டையும் இம்சையையும் துரத்த, கண்மணி டீச்சர் அந்த மையை காப்பாத்தணும்ன்னு காயத்ரியை துரத்த, ஏன் எல்லாரும் ஓடுறாங்கன்னு தெரியாமல் G3யும் பின்னால ஓட.. ஒரே ச்சேஸிங்கா இருந்துச்சு. இம்சையும் மை ஃபிரண்டும் ஓடுனாங்க.. ஓடுனாங்க.. வாழ்க்கையின் எல்லை வரைக்கும் அவங்கனால ஓட முடியல. ஏன்னா, நடுவுல சங்கத்து ஸ்விம்மிங் பூல்....

"மாட்டிக்கிட்டீங்களா!!"ன்னு காயத்ரி வில்லி சொர்ணாக்கா போல தலையை ஆட்டி ஆட்டி நடந்து வர, புலிக்கிட்ட மாட்டின முயல்களாய் இம்சையும் மை ஃபிரண்டும் ஒவ்வொரு அடியாய் பின்னால் எடுத்து வைத்தனர். சொர்ணாக்கா.. ஐ மீன் காய்த்ரி மையை எடுத்து வீச, ஃபிரண்டும் இம்சையும் குனிய, பின்னால...

"பூ பூப்பாவாய் புன்னகைக்கும் இவள்..
உங்கள் வீட்டு புது கவிதை..."ன்னு ஸ்விம்மிங் பூல்ல இருந்து பாடிட்டே வெளியே வந்த அனுசுயா மேல பட...

ஆஸ்த்ரேலியா நாட்டு இளவரசி மாதிரி இருந்த அனுசுயா.. ஆப்பிரிக்க நாட்டு ராணி மாதிரி ஆகிட்டாங்க.. ம்ம்.. பல்லு கூட கருத்துடுச்சுனா பாருங்களேன்..

அனுசுயா: 3 மணி நேரமா குளிச்சிட்டு வந்த பூவை இப்படி கருக்கிட்டீங்களே!!!!! அவ்வ்வ்வ்வ்......

மை ஃபிரண்ட் & இம்சை: ஹா ஹா ஹா..

பின்னால ஓடி வந்த டீச்சர் முகம் விஜயகாந்த் மாதிரி க்ராஃபிக்ஸ்ல சிங்கமா மாறி திரும்ப அவங்க முகத்துக்கு திரும்பியது. சின்ன பசங்க (ஃபிரண்ட், இம்சை, G3, அனுசுயா, காயத்ரி) அதை ரசிச்சு பார்க்கிறதுக்குள்ள அவங்களை குனிய வச்சு அடி பின்னி நொங்கெடுத்து துவைச்சு தூக்கி வந்து சங்கத்து நடு ஹால்ல காயப்போட்டாங்க டீச்சர்.

கண்மணி: வியாழன் கிழமை மாலை மீட்டிங்ன்னு சொன்னா, எல்லாரும் வந்து சேர்ந்ததே வெள்ளிக் கிழமைதான்!! வந்து சேர்ந்ததும் சங்கத்தை ஒரு வழி பண்ணிட்டீங்க!!!

மை ஃபிரண்ட்: (மெதுவாக இம்சை காதில்) டீச்சருக்கு கருப்பு மை தீர்ந்து போச்சுன்னு ஒரே ஃபீலிங்கு.. பக்கத்து வீட்டுல கேட்டுக்கு கருப்பு ஆயில் பெயிண்டு அடிச்சிட்டிருக்காங்க. அங்கே கொஞ்சம் வாங்கி டீச்சர் துங்கிட்டு இருக்கும்போது அவங்க தலைக்கு அடிச்சிடலாம்.. ஹீஹீ

காயத்ரி: மங்கள கரமா இருக்கட்டுமேன்னுதான் நாங்க வெள்ளிக்கிழமை மீட்டிங்கை மாத்தி வச்சிக்கிட்டோம். ;-)

அனுசுயா: அவ்வ்வ்... பேச வந்ததை சீக்கிரம் சொல்லுங்க. நான் மறுபடியும் போய் குளிக்கணும்.. :-((

G3: என்னது? குடிக்கனுமா? எனக்கு ஒரு பெரிய போட்டல் கோக்க கோலா ப்ளீஸ்.. :-D

காயத்ரி: எனக்கு லெக் பீஸுதான் வேணும்.

இம்சை: அடங்கொய்யாலே... டீச்சர் என்னமோ சொல்ல வர்றாங்க..

மை ஃபிரண்ட்: வேற என்ன சொல்ல போறாங்க.. கோழிக்கு கால் ரெண்டு.. ஆட்டுக்கு கால் நாலு.. முயலுக்கு மட்டும் மூனு காலுன்னுதானே.. அய்யோ! அம்மா... டீச்சர் என் காதை விடுங்க.. வலிக்குது!!!!

கண்மணி: (மை ஃபிரண்டின் காதை திருகிக்க்கொண்டே) போட்ட ஆட்டமெல்லாம் போதும். சங்கத்து கஜானாவுல பணம் நிறைய இருக்கு! மேனேஜ் பண்ண என்னால முடியலை.. எப்படி இதெல்லாம் செலவு பண்றதுன்னு ஐடியா கொடுங்க..

G3: டீச்சர், வாங்க நாமெல்லாம் 10 ஸ்டார் ஹோட்டல்ல போய் 24 மணி நேரமும் சாப்பிட்டுட்டே இருக்கலாம்..

அனுசுயா: டீச்சர், அட்லாண்டா கடலை வாங்கலாம்.. இந்த ஸ்விம்மிங் ஃபூல் பத்தலை எனக்கு!!

காயத்ரி: டீச்சர், என் கவிதையெல்லாம் பெரிய அளவுல புத்தக ப்ரிண்டு போட்டு விக்கலாம்..

கண்மணி: புத்தகம் விற்றால் லாபம்தானே! கஜானா கூடுமே!

மை ஃபிரண்ட்: அட மக்கு டீச்சரே! அவங்கதான் சொல்றாங்கல்ல.. அவங்க கவிதையோட மவுசு! புத்தகத்தை ஃப்ரீயா கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டாங்க! சோ, கஜானாவை காலி பண்ணிடலாம்ன்னு அவங்க ஐடியா போடுறாங்க..

இம்சை: ஐ கோட் அன் ஐடியா! டீச்சர், தலைவர் அருணாச்சலத்துல சொல்லியிருக்கார்.. கஜானாவை காலி பண்ணனும்ன்னா மூனே மூனு வழிதான் இருக்கு!

கண்மணி: நீதாண்டா என் செல்லம்.. அது என்னதுன்னு சொல்லுடா..

மை ஃபிரண்ட்: ஒன்னு நாந்தான் சொல்லுவேன்.. ஒன்னு!

இம்சை: குதிரை ரேஸ்..

G3: சிக்கன் ரோஸ் சூப்பரா இருக்குமே! :-)

கண்மணி: ரேஸும் வேணாம்.. ரோஸும் வேணாம்.. அது தப்பு! நெக்ஸ்ட்?

இம்சை: ரெண்டாவது அரசியல்..

கண்மணி: அதுக்கு இன்னும் காலம் இருக்கு! இப்பவே அரசியல்ல குதிச்சா என்னை CM ஆக்கிடுவாங்க.. நான் PM ஆகணும். சரி, அடுத்து என்ன?

இம்சை: படம்... சினிமா படம் எடுக்கனும்

மை ஃபிரண்ட்: ஹய்யா! இந்த ஐடியா சூப்பரு! :-D

காயத்ரி: டீச்சர் டீச்சர்.. நாம் படம் எடுத்தா யாராவது பார்ப்பாங்களா??

அனுசுயா: படம்ன்னு லிஸ்ட்டுல சேர்க்க முடியாத படங்களே 100-200ன்னு ஓடும்போது, நமக்கு 500 நாட்கள் எல்லாம் ஜுஜுபி..

G3: ஜிலேபி எங்கே கிடைக்கும்??

கண்மணி: ம்ம்ம்.. ஆமாம்.. இந்த பதிவுலகில் யாரும் சினிமாவில் காலெடுத்து வைக்கவே இல்லை.. நாமதான் முதன் முதலில் கால் பதிக்க போகிறோம்..

இம்சை: யெஸ் யெஸ்.. வரலாற்றில் முதன் முறையாக..

மை ஃபிரண்ட்: ஃபுல்லா நான் சொல்லவா?

கண்மணி: ம்ம்..

மை ஃபிரண்ட்: பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக "ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.." ஆக்க்ஷன்.. ஆக்க்ஷன்.. ஆக்க்ஷன்...

16 Comments:

said...

என்ன நடக்குது இங்கே...

said...

இங்கே வர்றவங்க போறவங்க எல்லாருமே நடக்குறாங்களே??? :-P

said...

சூப்பரு!!!
ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்னு சொல்லும்போதே நெனைச்சேன்!!!
உங்களுக்கு காமெடி க்வீன்னு பட்டம் சும்மாவா கொடுத்தாங்க??
நகைச்சுவைல போட்டு தாக்கியிருக்கீங்க!! :-D

வாழ்த்துக்கள்!! :-)

said...

@CVR:

//
சூப்பரு!!!
ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்னு சொல்லும்போதே நெனைச்சேன்!!!
உங்களுக்கு காமெடி க்வீன்னு பட்டம் சும்மாவா கொடுத்தாங்க??
நகைச்சுவைல போட்டு தாக்கியிருக்கீங்க!! :-D
//

இதுக்கே சூப்பருன்னு சொல்லிட்டீங்க.. பின்னால இன்னும் வந்துட்டே இருக்கு! அதுகு நீங்க ரிப்பீட்டுதான் போடணும் போல. ;-)

//வாழ்த்துக்கள்!! :-) //

நன்றி.. :-D

said...

சொல்லவே இல்ல...சொ சுவீட்!!!!
//*
.:: மை ஃபிரண்ட் ::. said... இங்கே வர்றவங்க போறவங்க எல்லாருமே நடக்குறாங்களே??? :-P*//

said...

@TBCD said:

//சொல்லவே இல்ல...சொ சுவீட்!!!!//

ஆமா.. ஸ்வீட் கிலோ என்ன விலைன்னு நீங்க சொல்லவே இல்லை.. :-)))

said...

நான் என்னா வேலை செய்றவன்னு நினனச்சிங்களா... அதல்லாம் எனக்கு தெரியாது...
யாரவது வேல பாக்கிறவங்க கிட்ட கேளுங்க..

//*ஆமா.. ஸ்வீட் கிலோ என்ன விலைன்னு நீங்க சொல்லவே இல்லை.. :-)))*//

Anonymous said...

படம் பேர் என்னாங்க கோழி முட்டையா. முட்டைமாதிரி என்னமோ தெரியுது

said...

படத்துக்கு பேர் வைக்கவே 2, 3 சீரியல் ஓடும் போல. பஜெட் எவ்வளவு. நல்லா சிரிக்க வைச்சிங்க.

வாழ்த்துக்கள்

said...

\\மை ஃபிரண்ட்: (மெதுவாக இம்சை காதில்) டீச்சருக்கு கருப்பு மை தீர்ந்து போச்சுன்னு ஒரே ஃபீலிங்கு.. பக்கத்து வீட்டுல கேட்டுக்கு கருப்பு ஆயில் பெயிண்டு அடிச்சிட்டிருக்காங்க. அங்கே கொஞ்சம் வாங்கி டீச்சர் துங்கிட்டு இருக்கும்போது அவங்க தலைக்கு அடிச்சிடலாம்.. ஹீஹீ\\

தோழி...வர வர எங்க அக்காவை கலாய்க்கறதே உங்களுக்கு வேலையா போச்சி.....எங்க அக்கா கலாய்க்க ஆரம்பிச்சாங்க தாங்க மாட்டிங்க சொல்லிப்புட்டேன் ;-))

said...

\\கண்மணி: (மை ஃபிரண்டின் காதை திருகிக்க்கொண்டே) போட்ட ஆட்டமெல்லாம் போதும். சங்கத்து கஜானாவுல பணம் நிறைய இருக்கு! மேனேஜ் பண்ண என்னால முடியலை.. எப்படி இதெல்லாம் செலவு பண்றதுன்னு ஐடியா கொடுங்க..\\

உங்க கஜானா மட்டும் எப்படி தான் நிரஞ்சி இருக்கே..!!!!

said...

LOL :)
sema comedy

said...

பாட்டெழுத ஏதாச்சும் சான்ஸு கிடைக்குமா நமக்கு?

- கவிஞர் கோமேதகன்!

said...

ennoda boto ellam potu.. avvvvvvvvvvvv

adhu enna link abiappa postukku poguthu.. onnume puriyaliye !!!

said...

Four Ants are moving through a forest.
They see a சிங்கம் coming towards them. Ant 1 says : we should KILL him.
Ant 2 says : No, Let us break his Leg alone. Ant 3 says : No, we will just throw him away from our path.
Ant 4 says : No, we will LEAVE him because he is ALONE and we are FOUR.

இது பாப்பா அல்லது பீப்பா சங்கத்தையோ குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல
மங்களூர் சிவா
http://mangalore-siva.blogspot.com

said...

//பாட்டெழுத ஏதாச்சும் சான்ஸு கிடைக்குமா நமக்கு?

- கவிஞர் கோமேதகன்!//

சிபி, கலவர பூமியிலும் காமெடி பண்ணறீங்களே???

 

BLOGKUT.COM