Saturday, June 16, 2007

பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 5

ஹாய்.. ஹாய்.. ஹாய்! எப்படி இருக்கீங்க எல்லாரும்? சங்கத்து பி.ஆர்.ஓ ஆகி எந்த பிரச்சினைன்னாலும் அணுகலாம்னு ஓபனா அறிக்கை விட்டதுல இருந்து நம்ம பாடு திண்டாட்டமாகிப் போச்சுங்க. :( "பின்லேடனைப் பிடிக்க ஒரு வழி சொல்லுங்கன்னு புஷ் கண்ணீரும் கம்பலையுமா மெயில் அனுப்பிருக்கார். நம்மூர்ல சாம்பார்ல உப்பு கொறஞ்சா கூட சங்கத்துல வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க! ம்ம்.. பிரபலம்னாலே இப்டி ப்ராப்ளம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக கடமைய விட முடியுமா? சரி வாங்க.. பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ்க்குப் போவோம்!

அது ஒரு அழகிய நிலாக்காலம்! (ஹிஹி. ஃப்ளாஷ் பேக் போறமுல்ல!) என் அக்கப்போர் தாங்காம என்னையும் 3 வருஷம் ஜெயில்ல போட்ருந்தாங்க அப்போ! அதாங்க.. ஹாஸ்டல்ல. எங்க காலேஜ், ஹாஸ்டல் எல்லாத்துக்கும் ஹிட்லரே ரூல்ஸ் போட்டாப்பல... அவ்ளோ ஸ்ட்ரிக்ட். மாடர்ன் டிரஸ் போடக்கூடாது, பசங்க பொண்ணுங்க பேசிக்க கூடாது, அங்கங்க நின்னு அரட்டை அடிக்கக் கூடாதுன்னு ஏகப்பட்டசட்டதிட்டங்கள்! இது எல்லாத்த விட என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குன விஷயம் ஹாஸ்டல்ல என்.வி கிடையாதுங்கிறது தான். நான் பறக்கறதுல ஏரோப்லேனையும் மிதக்கறதுல கப்பலையும் நடக்கறதுல மனுஷனையும் விட்டுட்டு மிச்ச எல்லாத்தயும் திங்கறவ. என்னைக் கொன்டு போய் இப்டி ஒரு ஹாஸ்டல்ல விட்டா? (அவ்வ்வ்வ்.. இப்ப நினச்சாலும் அழுவாச்சியா வரு்து) :(

நாக்கு செத்துப் போய அதை அடக்கம் பண்ற நிலைமை வர்ரதுக்குள்ள நானும் ராதிகாவும் (என் உயிர்த்தோழி!) சேர்ந்து, அங்க வேல செய்யற யாருக்காச்சும் லஞ்சம் குடுத்து சரிக்கட்டினா சிக்கன கண்ல பாக்கலாம்னு கண்டுபிடிச்சோம்! அப்டி மாட்டினவங்க தான் டயானா பாட்டி! (ஹிஹி.. இளவரசி டயானா மாதிரியே ஹேர்ஸ்டைல் அவங்களுக்கு) எல்லாம் கச்சிதமா ப்ளான் பண்ணி, குடுக்குற காசுல அவங்களுக்கு 20% னு பிசினஸ் பேசி... வாங்கிட்டு வரச் சொல்லி சிக்கன் பார்சலும் ரூமுக்கே வந்தாச்சு! அப்புறம்தான் பிரச்சினையே!

ரூம்ல பார்சல ஓபன் பண்ணினா... வாசம் காட்டிக்குடுத்துடும். பக்கத்துலயே நம்ம கிரைண்டர்... அதாங்க வார்டன் ரூம் வேற. (ஹாஸ்டல் அசெம்பிளில அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்கன்னா நான்ஸ்டாப்பா கிர்ர்ருன்னு கிரைண்டர் ஓடற மாதிரியே சத்தம் கேக்கும்!!) இரண்டாவது ரூம்ல கூட இருக்குற இன்னொருத்தி (ஜோதி) எட்டப்பன் வம்சாவளில வந்தவ! அவ எதும் உளறி வெக்காம இருக்கனும். அதனால ஆக்கப் பொறுத்தோம்.. ஆறப் பொறுக்க மாட்டமான்னு கம்னு இத்துப் போன இட்டிலிய சாப்பிட்டு படுத்துட்டோம். 10 மணிக்கு ஊரடங்கி எல்லாரும் தூங்க ஆரம்பிச்ச பெறவு ஜோதிகிட்ட யார்கிட்டயும் சொல்லாதேன்னு சத்தியம் வாங்கிகிட்டு பார்சல எடுத்துகிட்டு மொட்ட மாடிக்கு போனோம். (8 மணிக்கு மேல மொட்டமாடிக்கு போகக் கூடாதுன்னு ரூல்ஸ்! சட்டத்தையெல்லாம் நாம்ப என்னிக்குங்க மதிச்சோம்?)

போய் இருட்டுல த்ட்டு தடுமாறி உக்காந்து லெக்பீஸ கைல எடுத்தா ரொம்ப நாள் பாக்காத ஃப்ரண்ட பாத்த மாதிரி ஆனந்தக் கண்ணீர் வருது. நான் அதை கைல வெச்சிட்டு "ஆட்டுக்கு நாலு கால்.. மாட்டுக்கு நாலு கால்.. ஏன் பூச்சிக்கு கூட எட்டுக்கால் படைச்ச ஆண்டவன் கோழிக்கு ரெண்டே ரெண்டு கால் மட்டும் குடுத்துட்டானேஏஏ..."ன்னு நடிகர் திலகம் மாதிரி ஃபீல் பண்ணிகிட்டு இருக்கும் போது தான் கவனிக்கிறேன் ராதிகா அப்டியே பேயடிச்சாப்பல உக்காந்திருக்கா. என்னாடின்னு அவ பாக்கற திசைல பாத்தா மூலைல தண்ணி டேங்க் பின்னாடி இருந்து வெள்ளையா.. புகை புகையா கிளம்புது. டேங்க்குக்கு நேரா கீழ இருக்குற ரூம்ல ரெண்டு வருஷம்முன்னாடி
ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சின்னு சீனியர்ஸ் சொன்னதெல்லாம் நியாபகம் வந்து படுகலவரமாய்டுச்சு எங்களுக்கு. 3 பேரும் ஓடறதுக்கு ரெடி ஆனோம். அந்த நேரம் கரெக்ட்டா புகைக்குள்ள இருந்து ஒரு உருவம் எந்திரிக்குது... வாயெல்லாம் வேற சிவப்பா இருக்குது! பாத்தவுடனே பயத்துல பாதி உசிர் போய்டுச்சி. நானும் ராதிகாவும் வுட்டா போதும்னு ஓடரோம். ஜோதி எருமை மாடு... நிறைய தமிழ் சினிமா பாத்த எபக்ட்ல பொறங்கைய வாயில வெச்சி ஸ்டைலா 'வீல்' னு சவுண்டு விட்டுட்டே ஓடி வர்றா மடப்பய மவ! அலறியடிச்சு தபதபன்னு கீழ இறங்கினா... என்னமோ நாங்க ஃப்லைட்ல வந்து இறங்கிற மாதிரி ஹாஸ்டலே திரண்டு எங்களை ரிசீவ் பண்ண நிக்குது. கிரைண்டர் வேற ஓட ஆரம்பிச்சிடுச்சு!

நானும் ராதிகாவும் தலை குனிஞ்சு நிக்க... (தப்பு பண்ணினா அப்டிதான் நிக்கனும். அப்பதான் தண்டனையோட வீரியம் குறையும்!!) ஜோதி கீழ உக்காந்து கிடுகி்டுன்னு நடுங்க... அவசரமா உண்மை கண்டறியும் குழு ஒன்னு கிளம்பி மாடிக்கு போச்சு. அவங்க தாக்கல் செஞ்ச அறிக்கை மூலமா நாங்க சிக்கன் வாங்கின உண்மை ஹாஸ்டலுக்கும்.. நாங்க பாத்த உருவம் கொள்ளிவாய் பிசாசு இல்ல.. வீணாப்போன டயானா பாட்டி தான் அங்க உக்காந்து சுருட்டு குடிச்சிட்டு இருநதுதுங்கிற உண்மை எங்களுக்கும் தெரிய வந்துச்சு. ஒரே அவமானமாப் போச்சு!

மறுநாள் மேட்டர் எல்லாப் பக்கமும் பரவி ஹாஸ்டல்ல டிசிப்லின் மெய்ண்டெய்ன் பண்ணலன்னு கிரைண்டரை மாத்திட்டு புது வார்டன் போட்டுட்டாங்க. எங்களுக்கு அன் டைம்ல மாடிக்கு போனதுக்கு ஆளுக்கு 50 ரூபா ஃபைனும் அரை மணி நேர அட்வைசும் பனிஷ்மெண்ட்! (இப்டி எல்லாம் பண்ணினா திருந்திடுவோமா?) எப்டியோ கிரைண்டர ஒழிச்சாச்சுன்னு சந்தோஷம். ஆனா ஜோதி மட்டும் என்ன சொல்லியும் கேக்காம கே.பி.சுந்தராம்பாள் மாதிரி நெத்தில திருநீறு பூசிகிட்டு அவங்கம்மா கூட ஊருக்கு போய்ட்டா. பாவம் புள்ளைக்கு ஒரு வாரம் ஜொரமாம்! திரும்பி வந்தும் எங்க கூட இருக்க மாட்டேன்னு வேற ரூம் மாத்திகிட்டா! நீங்களே சொல்லுங்க எங்க மேல என்னங்க தப்பு?

26 Comments:

said...

இதெல்லாம் ஓவரா தெரியல! நாங்கெல்லாம் ஹாஸ்டல்ல தண்ணியடிச்சப்ப கூட இப்படி பயப்பட்டது இல்ல...

said...

hahaha..
sema comedy experience..

Anonymous said...

//
நாங்கெல்லாம் ஹாஸ்டல்ல தண்ணியடிச்சப்ப கூட இப்படி பயப்பட்டது இல்ல...
//

யாருக்கு தண்ணியடிச்சு குடுத்திங்க சமையக்கார ஆயாவுக்கா..

யார கரக்ட் பண்ண...

ஆயா பொண்ணயா இல்ல....

Anonymous said...

I enjoyed your post. Good one.

said...

வாவ்.. கலக்கல்..

said...

நல்ல வேளை.. எங்க ஹாஸ்டல்ல இப்படி கண்டிஷனெல்லாம் இல்ல.. அப்படியே இருந்தாலும் அதுப்படி நடந்திடுவோமா என்ன.. ஹீஹீ

said...

//நீங்களே சொல்லுங்க எங்க மேல என்னங்க தப்பு?//

யக்கா.. உங்க மேலே தப்பே இல்ல. :-D

said...

//நாங்கெல்லாம் ஹாஸ்டல்ல தண்ணியடிச்சப்ப கூட இப்படி பயப்பட்டது இல்ல...//

தண்ணியடிக்கிறது தப்பா? எதுக்கு பயப்படனும்? :)))

//யாருக்கு தண்ணியடிச்சு குடுத்திங்க சமையக்கார ஆயாவுக்கா..//

கரெக்டா கேட்டிங்க அனானி! பிசாசு செஞ்சாலும் செஞ்சிருக்கும்!

said...

//யக்கா.. உங்க மேலே தப்பே இல்ல. :-D //

அப்டி சொல்லு என் தங்கமே! உனக்காவது தெரிஞ்சா சரி. எல்லாரும் தப்பாவேஏஏ புரிஞ்சுக்கறாய்ங்க!

said...

தண்னி அடிச்சா தப்பே இல்ல. சிக்கன் சாப்பிட்டா தான் மகா தப்பு.

said...

அப்புறம் அந்த லெக் பீஸ் என்னாச்சு..? அதை சொல்லலியே..?

said...

//நான் அதை கைல வெச்சிட்டு "ஆட்டுக்கு நாலு கால்.. மாட்டுக்கு நாலு கால்.. ஏன் பூச்சிக்கு கூட எட்டுக்கால் படைச்ச ஆண்டவன் கோழிக்கு ரெண்டே ரெண்டு கால் மட்டும் குடுத்துட்டானேஏஏ..."ன்னு நடிகர் திலகம் மாதிரி ஃபீல் பண்ணிகிட்டு //
சிம்ப்ளி சூப்பர்ப் காயூ !கீப் கோயிங்.ரியால்லி என்ஞாய்டு.

said...

இப்படி ஒரு லைவ் ரிலே எழுதனும்ன்னுதான்
நானும் என்ன என்னமோ செஞ்சு பார்த்துட்டேன்(சுரங்க பாதை ஒன்னு தோண்டாத குறைதான்)
ஆனா ஹாஸ்டல் உள்ளதான் போக முடியல...

said...

pappa sagaththu puthu papa kalakkuthutooy:-))))

said...

//சிம்ப்ளி சூப்பர்ப் காயூ !கீப் கோயிங்.ரியால்லி என்ஞாய்டு.//

தேங்க்ஸ் அக்கா! உங்கள விடவா நான்?

//(சுரங்க பாதை ஒன்னு தோண்டாத குறைதான்)
ஆனா ஹாஸ்டல் உள்ளதான் போக முடியல...//

சுரங்கப்பாதைய லேடீஸ் ஹாஸ்டல்ல தோண்டினிங்களா?

said...

//அப்புறம் அந்த லெக் பீஸ் என்னாச்சு..? அதை சொல்லலியே..?
//

அத காக்கா தூக்கிட்டு போய்டுச்சு! போங்க போய் வேலைய பாருங்க!

said...

ஆஹா...புது டெம்ப்ளேட் குளு குளுன்னு அழகாக்கீது நம்ம சங்கத்துப் பாப்பாங்க மாதிரியே.
ஒத்த ரோஜாக்கு பதில் ரோஜாக்கூட்டம் போடுங்க.

said...

சூப்பர்.... கலக்கல் போஸ்ட்... :)

said...

//இராம் said...
சூப்பர்.... கலக்கல் போஸ்ட்... :)
//

ராம் பபாச கைக்கூலி ஆகிட்டார்னு நேத்து எல்லா நிவ்ஸ் சேனல்லையும் போட்டாங்களே... அது உண்மதான் போலிருக்குது :((

said...

பயமறியா பாவையர் சங்கத்து பி ஆர் ஓ பாவையே பயந்து போயிருக்கு.. இனி டைட்டில "பயந்துபோன பாவையர் சங்கம்"னு மாத்திடுவீங்களா??

நல்ல நகைச்சுவை பதிவு.. வாழ்த்துக்கள் :D

said...

உங்க கத இப்படியா. நான் ஈரோட்ல ஹாஸ்டல்ல இருந்தப்ப ஹாஸ்டல்ல வெஜ் சாப்பாடுதான்னாங்க. ஈரோட்ல எல்லா ஹாஸ்டலுமே வெஜ்னுட்டாங்க. ஆனா நான் இருந்த ஹாஸ்டல் வெஜ்னாலும், சாப்பாடு பண்ற மெஸ் நான்வெஜ். அதனால வெஜ்குழம்புல சிக்கன்னேல்லாம் சிக்கும்

அபிஅப்பா said...

அப்ப நீங்க காலேஜ்ல்லாம் போய் படிச்சீங்கன்னு சொல்ல வர்ரீங்க தங்கச்சி! சரி சரி:-))

said...

ரொம்ப ஜாலியா இருந்திருக்கீங்க :-)

said...

நீங்க பண்ணின தப்பே இல்லங்க... பாவம் ஜோதி, நடு ராத்திரில எப்படீ பயந்திருப்பாங்க??? ரத்தக்கரையோட(வெற்றிலை கரை) சுருட்டு குடிச்ச டயானாவ ஏன்ன சொல்றது... ம்ம்ம் பசங்களா இருந்தா சந்தம்போடாம சிக்கன பேயிக்கும் பங்குபோட்டு குடுத்து சாப்பிட்டு வந்திருப்பாங்க(பசங்கள்ளயும் தொட நடுங்கிக இருக்குங்க)...

ஆனா இத படிக்கும் போது விழுந்து விழுந்து சிரிச்சு கண்ணில கண்ணீரே வந்திருச்சுங்க... நீங்க பேசாம காமெடி கதை எழூதலாம்...

மனசு...

Anonymous said...

Nalla njoyable posta irunthathu.
-Manic

said...

//நீங்களே சொல்லுங்க எங்க மேல என்னங்க தப்பு?//

ஐயோ பாவமே....
புள்ள இப்படி அப்ராணியா இருக்காளுவளே.!!!

 

BLOGKUT.COM