Tuesday, June 5, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 1

அட அட அட... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியானதால எல்லாரும் அமைதியா இருந்துட்டோம். அதுக்குள்ள சங்கத்துல உள்சங்க கலவரம், வெளிசங்க கலவரம்னு ஆளாளுக்கு கெளப்பி விட்டுட்டே இருக்காங்கப்பா... யாராவது நாலு பேரு ஒற்றுமையா இருந்துட்டா பொறுக்க முடியாம எதையாவது கெளப்பி விடணும்னே ஒரு கும்பலு அலைஞ்சுட்டு இருக்கு. இதுக்கெல்லாம் அசர ஆளுங்க நாங்க இல்ல......... இல்ல......... இல்ல...........

சரி மேட்டருக்கு வருவோம். காலேஜ் லைஃப் லூட்டீஸ், ராகிங் காமெடி, காலேஜ் லவ் ஸ்டோரீஸ் இப்படி காலேஜ் வச்சு நிறைய எழுதியிருக்காங்க. ஒரு சேஞ்சுக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல நாங்க பண்ணின லூட்டீஸ் எல்லாம் எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ ஒரு சின்ன ட்ரை :)))

நாங்க செகண்ட் வந்ததும் அப்படியே பெருமை தாங்க முடியலை. ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுங்க வந்ததும் கூப்பிட்டு வச்சு ராகிங் பண்ணனும்னு முடிவு பண்ணி வச்சிருந்தோம். ராகிங் பண்ணக் கூடாதுனு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். 'ப்ரேக் த ரூல்ஸ்' - இதுதான நம்ம கொள்கை. ஹி... ஹி... எங்க ஜூன்ஸ் வந்ததும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு நைட்டு ஒரொருத்தரா எங்க ரூமுக்கு வர சொல்லி சொல்லி விட்டோம். ஒரு பத்து பேரை பாட்டு பாட சொல்லி டான்ஸ் ஆட சொல்லி அது இதுனு பயங்கரமா ஓட்டி தொரத்தி விட்டுட்டோம். அதுக்கப்புறம் ரெண்டு பேரு வந்தாங்க.

நான் வாய் இருக்க மாட்டாம ஒரு பொண்ணு கைல சாக்பீஸ் குடுத்து உலக மேப்பை தரைல வரைய சொன்னேன். அவளும் அவளுக்கு தெரிஞ்ச மாதிரி வரைஞ்சு வச்சா. எங்க ஆளுங்க அவகிட்ட இதுல எந்த நாட்டுல இருக்கனு காமின்னாளுங்க. அவ இந்தியா மேல கை வச்சு இங்கன்னு காமிச்சா. அப்படியே ஒவ்வொருத்தரா எந்த ஸ்டேட்டு, எந்த டிஸ்ட்ரிக்ட், எந்த ஊருன்னு வரிசையா கேக்க கேக்க அந்த பொண்ணும் கை வச்சு காட்டிட்டே வந்தது. அந்த பொண்ணு ஊரை சொன்னதும் அப்படியே ஆடி போயிட்டேன். எங்கூரு பொண்ணு. சரி அவ்ளோ பெரிய ஊருல நம்மள தெரியவா போகுதுனு விட்டுட்டேன். எந்த ஏரியான்னதும் எங்க ஏரியா பேர சொன்னா. அப்டியே மேடம்(ஹி... ஹி... நாந்தான்) கொஞ்சம் பின்னால போயி பதுங்கிட்டாங்க. ஒருத்தி சும்மா இருக்க மாட்டாம எங்க உங்க வீட்டு காலிங் பெல்ல அடி... உங்க அம்மா கதவ தொறக்கறாங்களான்னு பாக்கலாம்னா. அந்த பொண்ணு வேக வேகமா எங்க வீட்டுல காலிங் பெல் இல்லை அக்கான்னாலே பாக்கலாம். ஷேம் ஷேம் பப்பி ஷேமாயிடுச்சு கேட்டவளுக்கு. அவளும் சளைக்காம சரி கதவைத் தட்டி கூப்பிடுன்னா. அந்த பொண்ணு என்ன பண்றதுன்னு தெரியாம பேய் முழி முழிச்சது.

எல்லாரும் அவ என்ன பண்ணப் போறானு அவளையே பாத்துட்டு இருந்தப்ப யாரோ வர சத்தம். திரும்பி பாத்தா கதவுகிட்ட வார்டன் முறைச்சுக்கிட்டு இருக்காங்க. அட கடவுளே! சனி எங்க எல்லார் வாழ்க்கைலயும் இப்படியா விளையாடனும்???!!! உள்ள வந்தவங்க "ராகிங் பண்ணக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா ரூல்ஸ் போட்டிருக்குல்ல? அப்புறம் எதுக்கு ஜூனியர் பொண்ணை கூப்பிட்டு வச்சு ராகிங் பண்ணிட்டு இருக்கீங்க?" அப்படினு கோபமா கேட்டாங்க. நான் அப்படியே வீராவேசமா முன்னாடி வந்து "மேம் நாங்க ராகிங் பண்ணவே இல்லை. நாங்க எல்லாரும் ரூல்ஸை கண்ணை மூடிக்கிட்டு ஃபாலோ பண்றோம். எங்களையே இப்படி கேக்கறீங்க" அப்படின்னு வேகமா பேசினேன். உள்ளுக்குள்ள உதறுது அப்படியே. அந்த பொண்ணு மாட்டி வச்சிடுச்சுனா என்னடா பண்றதுனு. உடனே மேம் அந்த பொண்ணு பக்கம் திரும்பி "உன்னை இவங்க ராகிங் பண்ணினாங்களா? உண்மைய சொல்லு"-ன்னு மெரட்டல் தொனில கேட்டாங்க. அந்த பொண்ணு எங்களை பாத்து முழிச்சுக்கிட்டே "இல்லை மேடம். என்னை ராகிங் பண்ணல"ன்னா. அப்பாடா காப்பாத்திட்டானு நாங்க நிம்மதி பெருமூச்சு விடங்குள்ள "சரி சீனியர் ரூமுக்கு போகவே கூடாதுனு ஃபர்ஸ்ட் நாள் மீட்டிங்லயே சொன்னாங்க இல்ல. எதுக்கு இங்க வந்த?" அப்படின்னு அந்தம்மா கேட்டுடுச்சு. எங்களுக்கா உள்ளுக்குள்ள உதறுது. அந்த பொண்ணு எதும் பேசாம அமைதியா முழிச்சுக்கிட்டே நின்னது. உடனே அந்தம்மா "ஃபர்ஸ்ட் இயர்லயே இப்படி சொல்ற பேச்ச கேக்கறது இல்லை. ரூல்ஸ்னு எதுக்கு போடறோம்? இப்படி கேக்காம வர வேண்டியது. அப்புறம் என்னை அவங்க ராகிங் பண்ணினாங்க இவங்க ராகிங் பண்ணினாங்கன்னு ரிப்போர்ட் பண்ண வேண்டியது. நாளைக்கு ப்ரின்சிபால்கிட்ட சொல்லி டிசி குடுக்க சொல்றேன். இப்பவே பேச்சை கேக்கலைனா நீயெல்லாம் பின்னாடி எங்க ஒழுங்கா இருக்கப் போற............" இப்படி திட்டிக்கிட்டே போக அந்த பொண்ணு ரொம்ப பயந்து போயி "இல்லை மேம். நானா வரலை. இவங்கதான் என்னை வர சொல்லி ராகிங் பண்ணினாங்க" அப்டின்னு பயந்துகிட்டே சொல்லிடுச்சு. கண்ணுல வேற தண்ணி முட்டிட்டு நிக்குது. நாங்க எல்லாம் அப்டியே அமைதியா நின்னோம். வார்டன் எங்களை முறைச்சுப் பாத்துட்டே எங்க பக்கத்துல வந்தாங்க. ஒரு நிமிஷம் எங்க எல்லாரையும் அமைதியாப் பாத்துட்டு "அப்பவே சொன்னேன் இல்ல. அது வந்து மெரட்டுச்சுனா புது பொண்ணுங்க உண்மைய சொல்லிடுவாங்கன்னு" அப்படின்னு சொல்லிட்டு என் தோள் மேல கையப் போட்டுக்கிட்டு "பாவம்டி. அழுதுட்டா. அனுப்பிடுங்க. தூக்கம் வருது. நாளைக்குப் பாத்துக்கலாம்"னு அவ சொன்னதும்தான் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது வந்தவ எங்காளுன்னு :)))

40 Comments:

said...

யக்கா.. எல்லாமே சொன்னீங்க.. நாம் அஞ்சு பேரும் ஜப்பானுக்கு போயிட்டு வந்த கதையை சொல்லவே இல்லே!! :-P

said...

நாங்க அஞ்சு பேரும் ஒத்துமையாத்தான் இருக்கிறோம் என்று இங்கே சொல்லிக்கொள்கிறேன்.. இதையெல்லாம் அறிவிக்க வேண்டியதா இருக்கு!!!
இந்த பையனுங்க ரொம்பவே சந்தேகப்படுறாங்க எங்க கூட்டணி மேலே... இப்பவே கண்ண கட்டுதே!!!

said...

//"பாவம்டி. அழுதுட்டா. அனுப்பிடுங்க. தூக்கம் வருது. நாளைக்குப் பாத்துக்கலாம்"னு அவ சொன்னதும்தான் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது வந்தவ எங்காளுன்னு//

:))

said...

ஆத்தி! நல்லா கலாய்க்குறீங்களே நம்மளை மாதிரியே!

பிசாசினியின் பிசாசன் said...

இன்னமும் சந்தேகம் தான்.. கண்மனியக்காவ இங்க காணல மிச்சம் பேரையும் காணலை.. சோ சண்டை கன்ஃபர்ம்ட்.. ( நாராயணா நாராயணா )

said...

/ஆத்தி! நல்லா கலாய்க்குறீங்களே நம்மளை மாதிரியே!//

தள,

உண்மைதான்... நம்ம சங்கத்து பாணியே அப்பிடியே காப்பி அடிக்கிறாங்க.... :)

said...

ராக்கிங் பண்ணக் கூடாது என்கிற சட்டத் திட்டத்தை மீறி ராகிங் பண்ணியதே தப்பு..... அதை பண்ணியதில் என்ன பெருமை பாருங்க இவங்களுக்கு.... என்னத்த சொல்ல......

சூப்ரீம் கோர்ட் ல சட்டம் அப்பவே இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்......

said...

//"ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 1" //

இதை எல்லாம் கேட்க யாருமே இல்லையா இங்க.....

said...

கண்மணி...கண்மணி...கண்மணீ

இதோ இங்கிருக்கேன்.
யாருடா அது பிசாசினியின் பிசாசன்
எங்க குட்டி பிசாசுகிட்ட சொல்லி பிச்சிடுவேன் பிச்சி.

அக்கா +2 பரீட்சை எழுதிட்டு வர்ரதுக்குள்ள காணல்லை விளம்பரமா?

said...

//ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 1//
தலைப்புலையே இது உங்களை சார்ந்த கதை அல்ல என்று தெரிந்துவிட்டது!! :-P

லேடீஸ் ஆஸ்டல்னா "மல மல" ரேங்சுக்கு ஆட்டமும் பாட்டுமா இருக்கும்னு பாத்தா இப்படி ரணகளமா இருக்குதே!!!
ஹ்ம்ம்ம்!!
எங்களை மாதிரி நல்ல பிள்ளைகள் எல்லாம் ஒதுங்கி இருக்கறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்!! :-P

கடைசி வரைக்கும் அந்த வார்டன் உங்க தோழிதான்னு தெரியவே இல்ல!!
வாழ்த்துக்கள் மேடம்!! :-)

said...

ஆஹா டர்க்கி டவல் டேன்ஸ் தவிர இதெல்லாம் செய்வீங்களா லேடிஸ் ஹாஸ்டல்ல :P
தேசிபண்ட்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/06/05/ragging/

said...

//அக்கா +2 பரீட்சை எழுதிட்டு வர்ரதுக்குள்ள காணல்லை விளம்பரமா? //

இதுக்கு தான் கால காலத்துல அதை எல்லாம் முடிக்கனும் என்று சொல்வது. எம்புட்டு நாள் தான் +2 எழுதுவீங்க..... ஆமாம் உங்க காலத்தில் எல்லாம் பி.யூ.சி தானே.... இது என்ன புது கதையா இருக்கு...

said...

அடேங்கப்பா! என்ன கூத்து! என்ன கூத்து! கலக்கல்தான் போங்க!

said...

சங்கத்துப்பெண் சிங்கங்களே!!! சூப்பர்
கலக்குங்க‌

said...

ஆத்தி! நல்லா கலாய்க்குறீங்களே நம்மளை மாதிரியே!
"

முடியாது. அவ‌ங்களவிட நல்லா கலாய்க்குறீங்கன்னு அவங்களால‌‌ ஒத்துக்க‌ முடியாது

said...

பாசக மோசக வா இருந்திருக்கே :(

said...

Akkayoo bayangaramana aala irupeenga pola....
Super kalasalngoo...

said...

அட அட சங்கம் திறந்து விருந்து கொடுத்து கொண்டாடுனதுனால டயர்ட் ஆயி லீவுக்கு போனோம் அதுக்குள்ள பிரச்னை அது இதுனு ஆரம்பிச்சுட்டீங்களே. எல்லாரும் ஒற்றுமையா ஒன்னாத்தான் இருக்கறோங்க. :)

said...

ஏன் தங்கச்சி தலைப்பை மாத்த கூடாதா? கொஞ்சம் ஓவரா தெரியல:-)))

said...

ஆஹா.. யக்கா... இம்சை அரசின்னு கரிக்ட்டாதான் பேரு வச்சிருக்கீங்க... நீங்கெல்லாம் நல்ல பொண்ணுன்ல நெனச்சிட்டு இருந்தேன்.. இப்படி மோசமான பொண்ணுங்களா??

Anonymous said...

/பிசாசினியின் பிசாசன் said...
இன்னமும் சந்தேகம் தான்.. கண்மனியக்காவ இங்க காணல மிச்சம் பேரையும் காணலை.. சோ சண்டை கன்ஃபர்ம்ட்.. ( நாராயணா நாராயணா )
//

ippadi ellam purali vera kilapi vidurangleee...sisters...ellam unga paasathai paarthu yaaruko jealous ;-))

Anonymous said...

//ஜி said...
ஆஹா.. யக்கா... இம்சை அரசின்னு கரிக்ட்டாதான் பேரு வச்சிருக்கீங்க... நீங்கெல்லாம் நல்ல பொண்ணுன்ல நெனச்சிட்டு இருந்தேன்.. இப்படி மோசமான பொண்ணுங்களா??
//

gee...don't talk bad about my sister.appuram pinnala aapu neeraiya vaipen.mind it.

Anonymous said...

// நாகை சிவா said...
//"ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 1" //

இதை எல்லாம் கேட்க யாருமே இல்லையா இங்க.....
//

puli..ungaluku yean man jealous?

Anonymous said...

@cvr
//எங்களை மாதிரி நல்ல பிள்ளைகள் எல்லாம் ஒதுங்கி இருக்கறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்!! :-P//

ahhh ippadi ellam poi solla naaku kusala ungaluku?

said...

இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை

said...

// 코멘트 축소
.:: மை ஃபிரண்ட் ::. 덧글 내용...
யக்கா.. எல்லாமே சொன்னீங்க.. நாம் அஞ்சு பேரும் ஜப்பானுக்கு போயிட்டு வந்த கதையை சொல்லவே இல்லே!! :-P
//

அதை சொன்னா எல்லாரும் கண்ணு போடுவாங்கன்னுதான் சொல்லலை...

said...

// நாமக்கல் சிபி 덧글 내용...
//"பாவம்டி. அழுதுட்டா. அனுப்பிடுங்க. தூக்கம் வருது. நாளைக்குப் பாத்துக்கலாம்"னு அவ சொன்னதும்தான் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது வந்தவ எங்காளுன்னு//

:))
//

:)))

// நாமக்கல் சிபி 덧글 내용...
ஆத்தி! நல்லா கலாய்க்குறீங்களே நம்மளை மாதிரியே!
//

அய்... உங்க கட்சில எங்களை சேத்தற வேலையெல்லாம் இங்க வேணாம்... ;)

said...

// பிசாசினியின் பிசாசன் 덧글 내용...
இன்னமும் சந்தேகம் தான்.. கண்மனியக்காவ இங்க காணல மிச்சம் பேரையும் காணலை.. சோ சண்டை கன்ஃபர்ம்ட்.. ( நாராயணா நாராயணா )
//

யோவ் பிசாசு... தைரியம் இருந்தா நேர்ல வந்து பாரு... இப்படி அனானியா வராத... நாங்கல்லாம் தேவதைக்கு தேவதைகள்... பிசாசுக்கு பிசாசுகள்...

said...

// இராம் 덧글 내용...
/ஆத்தி! நல்லா கலாய்க்குறீங்களே நம்மளை மாதிரியே!//

தள,

உண்மைதான்... நம்ம சங்கத்து பாணியே அப்பிடியே காப்பி அடிக்கிறாங்க.... :)
//

எலேய் இது ஓவரா தெரியலை. எது பண்ணினாலும் உங்களை காப்பியடிக்கறோம்னு சொல்லிட்டு திரியப்படாது... நல்லதுக்கில்ல... ;)

said...

// நாகை சிவா 덧글 내용...
ராக்கிங் பண்ணக் கூடாது என்கிற சட்டத் திட்டத்தை மீறி ராகிங் பண்ணியதே தப்பு..... அதை பண்ணியதில் என்ன பெருமை பாருங்க இவங்களுக்கு.... என்னத்த சொல்ல......

சூப்ரீம் கோர்ட் ல சட்டம் அப்பவே இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்......
//

இதெல்லாம் ஒரு ராகிங்கா??? உட்டா அந்த பொண்ணுங்க எங்களை தூக்கி சாப்பிட்டுட்டு போயிருப்பாங்க :)

said...

// நாகை சிவா 덧글 내용...
//"ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 1" //

இதை எல்லாம் கேட்க யாருமே இல்லையா இங்க.....
//

பொறாமை பொறாமை... சில்லுனு ஐஸ் வாட்டர் குடிப்பா புளி... ;)

said...

// கண்மணி 덧글 내용...
கண்மணி...கண்மணி...கண்மணீ

இதோ இங்கிருக்கேன்.
யாருடா அது பிசாசினியின் பிசாசன்
எங்க குட்டி பிசாசுகிட்ட சொல்லி பிச்சிடுவேன் பிச்சி.

அக்கா +2 பரீட்சை எழுதிட்டு வர்ரதுக்குள்ள காணல்லை விளம்பரமா?
//

கெடக்கறாங்க விடுங்கக்கா பொடி பசங்க :)))

said...

// CVR 덧글 내용...
//ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 1//
தலைப்புலையே இது உங்களை சார்ந்த கதை அல்ல என்று தெரிந்துவிட்டது!! :-P
//

தாத்தாஆஆஆஆஆ!!!!! நீங்களே இப்படி சொல்லலாமா??? :'(

//லேடீஸ் ஆஸ்டல்னா "மல மல" ரேங்சுக்கு ஆட்டமும் பாட்டுமா இருக்கும்னு பாத்தா இப்படி ரணகளமா இருக்குதே!!!
ஹ்ம்ம்ம்!!
எங்களை மாதிரி நல்ல பிள்ளைகள் எல்லாம் ஒதுங்கி இருக்கறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்!! :-P
//

இது ரொம்ப ஓவராத்தெரியலை???

//கடைசி வரைக்கும் அந்த வார்டன் உங்க தோழிதான்னு தெரியவே இல்ல!!
வாழ்த்துக்கள் மேடம்!! :-)
//

தேங்க் யூ... தேங்க் யூ...

said...

// Dubukku 덧글 내용...
ஆஹா டர்க்கி டவல் டேன்ஸ் தவிர இதெல்லாம் செய்வீங்களா லேடிஸ் ஹாஸ்டல்ல :P
//

இதுவும் பண்ணுவோம்... இதுக்கு மேலயும் பண்ணுவோம் :)))

//தேசிபண்ட்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/06/05/ragging/
//

தேங்க்ஸ் அண்ணா :)))

said...

// G.Ragavan 덧글 내용...
அடேங்கப்பா! என்ன கூத்து! என்ன கூத்து! கலக்கல்தான் போங்க!

//

அடடடா... இவ்ளோ நாளா எங்க போயிருந்தீங்க? காணவில்லை விளம்பரம் போடலாம்னு பேசிட்டு இருந்தோம். நல்லவேளை அதுக்குள்ள வந்துட்டிங்க ;)

said...

// Chinna Ammini 덧글 내용...
சங்கத்துப்பெண் சிங்கங்களே!!! சூப்பர்
கலக்குங்க‌
//

ரொம்ப நன்றிங்க Chinna Ammini

// Chinna Ammini 덧글 내용...
ஆத்தி! நல்லா கலாய்க்குறீங்களே நம்மளை மாதிரியே!
"

முடியாது. அவ‌ங்களவிட நல்லா கலாய்க்குறீங்கன்னு அவங்களால‌‌ ஒத்துக்க‌ முடியாது
//

ஆமாம் ஆமாம்... பொறாமை பிடிச்சவிங்க ;)

said...

// அய்யனார் 덧글 내용...
பாசக மோசக வா இருந்திருக்கே :(
//

அட அய்யனாரு... நீங்க பண்ணாததையா நாங்க பண்ணிட்டோம்???

said...

// Raji 덧글 내용...
Akkayoo bayangaramana aala irupeenga pola....
Super kalasalngoo...
//

அப்படில்லாம் எதும் இல்லை ராஜி... சும்மா எதோ நம்மளால முடிஞ்சது... நான் ரொம்ப நல்ல பொண்ணு தெரியுமா. ரொம்ப அப்பாவி :)))

said...

// அபி அப்பா 덧글 내용...
ஏன் தங்கச்சி தலைப்பை மாத்த கூடாதா? கொஞ்சம் ஓவரா தெரியல:-)))
//

அண்ணாஆஆஆஆஆஆஆஆ... :@ யு டூ???

// ஜி 덧글 내용...
ஆஹா.. யக்கா... இம்சை அரசின்னு கரிக்ட்டாதான் பேரு வச்சிருக்கீங்க... நீங்கெல்லாம் நல்ல பொண்ணுன்ல நெனச்சிட்டு இருந்தேன்.. இப்படி மோசமான பொண்ணுங்களா??
//

உங்களை விட மோசம் இல்ல ;)

said...

// இம்சை 덧글 내용...
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
இம்சை இம்சை இம்சை இம்சை
//

ஹி ஹி... இம்போசிஷன் குடுக்கற பழக்கம் எங்களுக்கு இல்லீங்க ;)

BLOGKUT.COM