Friday, June 22, 2007

மளிகை கடையா? டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா?

வணக்கம் மக்கா..

கதை எழுதியாச்சு.. அனுபவம் எழுதியாச்சு.. சீரியலா பதிவும் போட்டாச்சு!! நெக்ஸ்டு என்னன்னு கேக்குறசங்களுக்கு இதோ புதுசா டெம்ப்ளேட் மாற்றி புதுசா விவாத கும்மி ஒன்னு ஆரம்பிச்சிச்சிருக்கோம். சும்மா பேரை கேட்டதுமே அதிருதுல்ல? அது!!!!

கும்மிக்கு தேவையான அடிப்படை தகுதி பதிவை படிக்காததுன்னு அபி அப்பா ரூல்ஸ் போட்டாலும், அவர்தான் ஃபர்ஸ்ட்டா பதிவை படிச்சுட்டு வருவார்ன்னு தெரியும்.. அதனால், கும்மிக்கு எதுக்கு தலைப்புன்னு நீங்க கேட்டாலும் தலை இல்லாமல் வால் (குட்டி பிசாசே, உன்னை இல்ல) ஆடாதுங்கிற காரணத்தால இதோ இன்றைய கும்மியின் தலை(ப்) பூ.

வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு போனால், நாம் கையில ஒரு லிஸ்ட்டை தூக்கிட்டு போய் "அண்ணாச்சி, லிஸ்ட்டுல இருக்கிற ஐயிட்டமெல்லாம் கட்டிக் கொடுங்க"ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்கிற டீக்கடையில தம் அடிக்கிறது, டீ குடிக்கிறது, ரோட்டுல போற பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுன்னு பையனுங்க ஒரு பக்கம் இருக்க.. இதே பொண்ணுங்கன்னு பார்த்தா அவங்களும் ரோட்டுல போற பையனுங்களைகொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க.. கடைகாரர் சாமான்களை கட்டி முடிச்சதும், "என்ன அண்ணாச்சி.. சௌக்கியமா? வீட்டுல மாமி எப்படி இருக்காங்க? பக்கத்து வீட்டு சரோஜா எதுத்த வீட்டு கண்ணனோடு ஓடிட்டாலாமே?"ன்னு ஃப்ரண்ட்லியா பேசுவோம்.

இதுவே இப்போ மழைக்கு பிறகு முளைச்ச காளான் மாதிரி ஆங்காங்கே இருக்கிற டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல கதையே வேற. இங்கே நுழைவாசலிலேயே தள்ளு வண்டி ஒன்னை வச்சிருப்பாங்க. அதை உருட்டிட்டே போய் நமக்கு வேண்டிய பொருட்களை தேடி கண்டுபிடிக்கணும் (என்ன கொடுமை இது கொடி?). ஆனால், இப்போ திரும்ப யோசிச்சு பார்த்தா, இங்கே போகும்போது மட்டும் நாம் ஏன் லிஸ்ட்டு எடுத்துட்டு போறதில்லை.. கண்டிப்பா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்க்கு போய் சேர்ந்ததும் வாங்க வேண்டிய சாமான்கள் என்னன்னு ஞாபகம் இருக்காது! ஆனா பந்தாவா வண்டியை உருட்டிட்டு தேடிக்கிட்டே போவோம்.. வாங்க வேண்டிய லிஸ்டுல இல்லாத சாமான்கள் அப்போதான் பளிச் பளிச்ன்னு கண்ணை கூசும்.. அதையெல்லாம் அள்ளிப்போட்டு வாங்க வேண்டிய சாமான்களில் ஒன்னு ரெண்டு மட்டுமே வாங்குவோம். சிலர் பேர் வாங்க வேண்டிய சாமான்களில் ஒன்னு கூட வாங்காம, பர்ஸை காலி பண்ணிட்டு போன கதை கூட இருக்குங்க. கேஷர் நாற்காலியில யூணிஃபார்ம் போட்ட ஒரு பொண்ணோ பையனோ வேலையில இருப்பாங்க.. டக் டக்ன்னு மெஷின்ல தட்டுவாங்க.. மிஷின்ல தெரியிற பில்லை செட்டல் பண்ணிட்டு பையை தூக்கிட்டு வந்துடுவோம்.. மளிகை கடை அண்ணாச்சிக்கிட்ட பேசின மாதிரி ஏன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் கேஷர் கிட்ட பேச மாட்றோம்? (கேஷர் பொண்ணுங்களை சைட் அடிக்கிற இளைஞர்கள் இதுல சேர்த்துக்கப்படாது சொல்லிட்டேன்..)

இதுல இருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும். மளிகை கடையில் இருக்கும் அந்த அன்னியோன்யமும், நெருக்கமும் ஏன் டிப்பார்மெண்டல் ஸ்டோர்ல இல்ல? இப்போ உங்க சாய்ஸ்: மளிகை கடையா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா? (மளிகை கடை அண்ணாச்சியின் பொண்ணா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரின் கேஷர் பொண்ணான்னு நான் கேட்கல மின்னல்..அதுக்குள்ள மின்ன ஆரம்பிச்சிட்ட மாதிரி இருக்கு?) உங்க சாய்ஸ் என்னன்னு சொல்லி அதுக்கு உங்க கருத்துக்களையும் (கும்மின்னு படிச்சாலும் தப்பே இல்ல) அள்ளி தெளிங்க..

ஸ்டார்ட் மியூஜிக்... நீங்க அடிக்கிற கும்மியில இங்க இருக்கிற ட்ராஃபிக்கே கிளிஞ்சு தொங்க வேண்டாமா?

பி.கு: ப.பா சங்கத்துல புதுசா ஒரு பொட்டி திறந்திருக்கோம்ங்க. இந்த வாரத்துல சிறந்த காமெடின்னு உங்க பதிவிலிருந்தே ஒன்னு தேர்ந்தெடுத்து "காமெடி சிற்பி"ன்னு ஃப்ரேம் போட்டு கௌரவிக்க போறோம்.

பி.குக்கு பி.கு: இந்த வாரம் "காமெடி சிற்பி" அம்பி இப்போ மின்னுராரு! ;)

பி.குக்கு பி.குக்கு மு.கு: இந்த வாரம் நீங்க இல்லையா? அட!! அடுத்த வாரம் நீங்கதாங்க! ;)

48 Comments:

Anonymous said...

ennaku rendume ok :D

Anonymous said...

//பி.குக்கு பி.குக்கு மு.கு: இந்த வாரம் நீங்க இல்லையா? அட!! அடுத்த வாரம் நீங்கதாங்க! ;)
//
பி.குக்கு பி.குக்கு மு.குக்கு. பி

அடுத்த வாரம் என் பெயர் வராது வராது வராது :D

said...

@துர்கா|†hµrgåh:

//ennaku rendume ok //

ரெண்டு சைட்டுலேயும் கோல் போட்டா.. அது செல்லு படி ஆகாது துர்கா. :-))

said...

@துர்கா|†hµrgåh:

//பி.குக்கு பி.குக்கு மு.குக்கு. பி

அடுத்த வாரம் என் பெயர் வராது வராது வராது :D //


ஆனா, பின்னூட்டத்துல உங்க பெயர் வந்துடுச்சே! முயற்சி செய்யுங்க.. காமெடி சிற்பியாகவும் ஆகிடலாம் நீங்க. :-D

Anonymous said...

//ரெண்டு சைட்டுலேயும் கோல் போட்டா.. அது செல்லு படி ஆகாது துர்கா. :-)) //

hehe..எனக்கு வேண்டியது மளிகை பொருள்.அது எங்கு கிடைச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை.இது எப்படி :D

said...

@துர்கா|†hµrgåh:

//hehe..எனக்கு வேண்டியது மளிகை பொருள்.அது எங்கு கிடைச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை.இது எப்படி :D //

மளிகை சாமான் வாங்க மளிகை கடைக்கு நீங்க போவீங்களா? ஆச்சர்யமா இருக்கே! ஹீஹீ.. இது எப்படி இருக்கு? ;-)

said...

நான் மளிகைகடைக்கு போனதே இல்லயே!! எனக்கு ஒரு வழி சொல்லுங்க!!

said...

@குட்டிபிசாசு:

//நான் மளிகைகடைக்கு போனதே இல்லயே!! எனக்கு ஒரு வழி சொல்லுங்க!!
//

வழிதானே? உங்க வீட்டுல இருந்து நேரா போய், பீச்சாங்கை பக்கம் திரும்பி பாருங்க. அந்த அண்ணாச்சி மளிகை கடை அங்கேதான் இருக்கு. இன்னைக்கே லிஸ்ட்டை எடுத்துட்டு கிளம்புங்க. ;-)

said...

//நான் மளிகைகடைக்கு போனதே இல்லயே!! எனக்கு ஒரு வழி சொல்லுங்க!!//

நேரா போய் ரைட்ல திருப்புங்க.. அங்கே ஒரு கோயில் வரும் , அதுக்கு பக்கத்து லெப்ட்ல போயி மூனாவது ரைட்ல நாலாவது கடை தான் நம்ம அண்ணாச்சி மளிகை கடை..

டிபார்ட்மெண்ட் ஸ்டோர் - சூப்பர் குடும்பம், திருவாளர் திருமதி ல பார்க்க வேணும்னா நல்லா இருக்கும்.. பட் நீங்களே சொன்ன மாதிரி அன்னியோன்யமும், நெருக்கமும் நம்ம அண்ணாச்சி மளிகை கடைல தான்..
வீ எம்

said...

@வீ. எம்:

//நேரா போய் ரைட்ல திருப்புங்க.. அங்கே ஒரு கோயில் வரும் , அதுக்கு பக்கத்து லெப்ட்ல போயி மூனாவது ரைட்ல நாலாவது கடை தான் நம்ம அண்ணாச்சி மளிகை கடை.. //

வீ. எம்மும் குட்டிபிசாசும் ஒரே ஊரு போல? கரெக்ட்டா டைரக்ஷன் சொல்லியிருக்காரு.. குட்டிபிசாசு, அங்கே என்ன பண்றீங்க? கிளம்புங்க..

//டிபார்ட்மெண்ட் ஸ்டோர் - சூப்பர் குடும்பம், திருவாளர் திருமதி ல பார்க்க வேணும்னா நல்லா இருக்கும்.. பட் நீங்களே சொன்ன மாதிரி அன்னியோன்யமும், நெருக்கமும் நம்ம அண்ணாச்சி மளிகை கடைல தான்..//

சரியா சொன்னீங்க? ஒரு நாளைக்கு எத்தனை தடவை மளிகை கடைக்கு நீங்க போவீங்க?

said...

ஆன் லைனில் ஆர்டர் பண்ணுனா, வீட்டு வாசலில் டப்பாவில் வந்து இருக்கப் போகுது. இதுக்கு போயி ஒரு பதிவு!!

said...

கடை விரித்தேன் கேட்பாரில்லை என்ற சொற்றொடரை போல் கும்மிக்காக பதிவு போட்டு அதை கவனிக்க ஆளில்லாமல் போன அவல நிலையை கண்டு என் உள்ளம் பொங்குகிறது!!
இதை கண்டு பாசக்கார பதிவர்கள் யாரும் தீ குளிக்கவேண்டாம் என்று கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்


இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு பதிவு போட்டால் எப்படி கூட்டம் சேரும் என்பது அமைப்பாளர்கள் யோசிக்க வேண்டிய விஷயம்.

said...

13 naaan thaaana?

said...

// மாற்றி புதுசா விவாத கும்மி ஒன்னு ஆரம்பிச்சிச்சிருக்கோம். சும்மா பேரை கேட்டதுமே அதிருதுல்ல? அது!!!!
//

ennadhu ''பேரை கேட்டதுமே அதிருதுல்ல?''
bomb edhuvum vachi irukeeengala?

//இதோ இன்றைய கும்மியின் தலை(ப்) பூ.//
adhu enna pooonga? thalaiku vaikira pooola different vagai's irukey.....

said...

//பக்கத்துல இருக்கிற டீக்கடையில தம் அடிக்கிறது, டீ குடிக்கிறது, ரோட்டுல போற பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுன்னு பையனுங்க ஒரு பக்கம் இருக்க//

adra adra, enga survey edutheeenga idhelam?

//அவங்களும் ரோட்டுல போற பையனுங்களைகொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க.. //
idhu verai ah? eppaila irundhu? [:o]

said...

//என்ன அண்ணாச்சி.. சௌக்கியமா? வீட்டுல மாமி எப்படி இருக்காங்க? ஃப்ரண்ட்லியா பேசுவோம்.//

ippadi thaaanga naanum pechi kodupen.. aaana paarunga, first rendu kelvi ku mattum badhil sollitu namma annachi avaru velai ah paarka poiruvaaru... so ungala maadhiri "பக்கத்து வீட்டு சரோஜா எதுத்த வீட்டு கண்ணனோடு ஓடிட்டாலாமே?" appadinu ellam kelvi ketka mudiala... :(

said...

//போகும்போது மட்டும் நாம் ஏன் லிஸ்ட்டு எடுத்துட்டு போறதில்லை.. கண்டிப்பா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்க்கு போய் சேர்ந்ததும் வாங்க வேண்டிய சாமான்கள் என்னன்னு ஞாபகம் இருக்காது!//

idhu kelvi..adhavaadhu paartheeengana (ennai illa nga)

ippo ellam figures adhigama time pass'ku dept stores ku vara aarambichitaaanga.. so, youths ellam kaila list eduthutu pona, seekiram things vaangitu vootuku poga vendiadhu vandhudumey, appuram eppadi figures ah sight adikiradhu'nu, purposly list ah marandhutu poitu,
anga poitu , single single rack ah things nottam vudura maadhiri, cycle gap'la santro ottiduvaanga..
:)

said...

//.. மளிகை கடை அண்ணாச்சிக்கிட்ட பேசின மாதிரி ஏன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் கேஷர் கிட்ட பேச மாட்றோம்?//

yenna, konjam pechi koduthaalum pinnadi irukiravangakitta archanai vaanga vendhiadhu irukumey appadingradhu oru side irundhaaalum...

cashier counter la remba neram ninna, nammala robbery list'la serthu, ulla pudichitu potruvaanganu oru bayam thaaanga.

said...

மளிகை கடைக்கு போனால்

Nanmai :-

1.annachi kitta kadan sollalam,
2.arisi mootai'la irundhu konjam arisi ai eduthu thungalam,
3.1gm la irundhu 100gm varai, naama ketkira measurement'la things kidaikum.
4.friendly atmosphere irukum...
annachi'nu illa, namma area la irukira figures, brothers, akkas koooda ellam porumai ah mokkai podalam....

said...

மளிகை கடைக்கு போனால்

kodumai's ..
(kodi ungala illa)

1.hygenic irukaadhu
(appo dept stores varathuku mudhal engathe poneeengalam? appadi neeenga ennai ketkuradhu enakku ketkudhu..... naaan enna pannuradhu? naaana sonnen hygenic irukaadhunu? sonnavangala poi kelunga)

2.eppadium oru 5 rats oduradha paarkalam...
100 "E" parakuradha paarkalam...
appuram cockroaches oru 2,3 paarkalam...

3. namma annachi irukaarey, sumtimes avaruku vendiavanga vandha avangala thaan gavanipaaru..
line la irukira nammala marandhuduvaaru..

4.readymade item like milk packet,
,soap,paste,horlicks ippadi items kettu varavangalaium first gavanichi anupiduvaaru....
appo line la irukira mattha sillarai items vaanguradhu ellam enna thinks illai ah?

ada, naan solluradhu ellam 5 yrs ku before..... ippa eppadinu theriala...

said...

டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா

nanmai's
1.poludhu pogadhavanga indha store ulla pona, nalla time pass aaagum..
2.kidaikaadha items nu paartheeengana, onnumey irukaadhu...
ella items laium 3,4 brand irukum. like maan maark, mangai maark, appadinu.
3.hygenic ah irukum...
extra guests yaaraium paarka mudiadhu (rats,E,cockroaches)
4.customer service "may i help u" appadinu namma koooda mokkai poda aalunga irupaaaanga..

5.appuram "promotion" appadinu oru super figure ah vuttu product demo kodupaaanga... he he he..
(unmaiya sonnen :), so no dension)

said...

டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா

kodumai's

1.naama ketkura measurement la things kidakaadhu..
2.weight sare ah irukum nu gurantee koduka mudiaadhu..
3.things ah maaathi vaangitu poitu, appuram exchange nu pona "bill" irundha mattum thaan maathuvaanga.. adhum maximum 3days kulla maathi aaaganum...
(annachi kadaila appadi irukaaadhu, paaambin kaaal paambu arium formula maligai kadaila mattum thaaan apply aagum :) )
4.aairam figures vandhaaalum , ella figurum things edukiradhulaiey thaan kannum karuthumaa irukum
(indha point inga solla koodadhu thaaan..still, vera enga solluvenaaam?)

said...

//உங்க சாய்ஸ் என்னன்னு சொல்லி//

cinema theatre la podura padam onnum naaaalum, adhula 1stclass,2nd class appadinu different class irukum...

vasadhi irukuravanga, avangalukku yetha maadhiri class ku poi padam paarpaaanga..

adhy maadhiri thaaan ,
மளிகை பொருள்'nu vaaga poravanga, avanga vasadhia/convenience ah poruthu thaan dept store/maligai kadai ah therndhu edupaanga endru en theerpai,

said...

weekly/monthly budget poduravangalukku departmental store noki povaaanga...

daily budget poduravanga maligai kadaiku povaaaanga..

endru koooori en urai ai mudithu kolgiren...

(remba pesiten, neenga kandipaaa enakku soda thaaanga plz)

said...

ennada ivan ivlo pesitaaanu paarkureeengala..

ada, unmai ah sollanum na, naanum indha thalaipula oru post poda ready pannunen... adhai next week podalamnu irukurathuku kulla neeenga vivadhamey pottuteeenga..

gud gud.....

said...

quarter adichikiren.......remba kazhaipaaa iruku.... annachi oru soda udachi thaanga.....

varatta......

//அதுக்கு உங்க கருத்துக்களையும் (கும்மின்னு படிச்சாலும் தப்பே இல்ல) அள்ளி தெளிங்க..
//

edho ennaaala mudinchadhu.... paarthu pottu kodunga thaaaieee...

said...

@இலவசகொத்தனார் : நல்ல வேளை. ஞாபகபடுத்தினதுக்கு நன்றிங்கோ :-))

said...

@CVR : //அவல நிலையை கண்டு என் உள்ளம் பொங்குகிறது!!//
அவ்ளோ பொங்கியும் ஒரே ஒரு கமெண்டு போட்டுட்டு போயிருக்கீங்களே.. இது உங்களுக்கே ஞாயமா??

said...

@கோப்ஸ் : ராசா.. கமெண்ட் போட்ட உனக்கு ஒரு சோடா போதுமா? இதுக்கு பதில் சொல்லனும்னு நினைச்சாலே எனக்கு 4 சோடா தேவப்படும்னு தோணுது. நான் போய் மொதல்ல அதுக்கு ரெடி பண்ணிட்டு வர்றேன் :-))

said...

கோபி, இதோ வந்துட்டேன்...

said...

@My days(Gops):

//adra adra, enga survey edutheeenga idhelam? //

அதே கடையில உக்கார்ந்துதான்.. ;-)


//idhu verai ah? eppaila irundhu? [:o] //

நீங்க குவய்ட்டுக்கு போனதிலிருந்து!

said...

@My days(Gops):

//ippadi thaaanga naanum pechi kodupen.. aaana paarunga, first rendu kelvi ku mattum badhil sollitu namma annachi avaru velai ah paarka poiruvaaru... so ungala maadhiri "பக்கத்து வீட்டு சரோஜா எதுத்த வீட்டு கண்ணனோடு ஓடிட்டாலாமே?" appadinu ellam kelvi ketka mudiala... :( //

நீங்க அவரு பின்னாலேயே நடந்து போய் கேட்ட கேள்விக்கு பதில் வாங்கியிருக்கலாமே! அடடடடா! மிஸ் பண்ணிட்டீங்களே! :-P

said...

@My days(Gops):

//idhu kelvi..adhavaadhu paartheeengana (ennai illa nga)//

அதனே! எப்படி உங்களை பார்க்கிரதுன்னு கேட்கதான் நினைத்தேன். :-P

//ippo ellam figures adhigama time pass'ku dept stores ku vara aarambichitaaanga.. so, youths ellam kaila list eduthutu pona, seekiram things vaangitu vootuku poga vendiadhu vandhudumey, appuram eppadi figures ah sight adikiradhu'nu, purposly list ah marandhutu poitu,
anga poitu , single single rack ah things nottam vudura maadhiri, cycle gap'la santro ottiduvaanga..
:) //

அதுக்குதான் உங்களை மாதிரி பசங்க மணிக்கணக்கா கடையில ரவுண்ட் அடிச்சு கடைசியில 10 காசுக்கு ஒரு சாக்லெட் வாங்கிட்டு போறதை கண்ணால பாத்திருக்கேனே! :-P

said...

மளிகை கடை நன்மைஸ் பாய்ண்ட் எல்லாமே பக்காவா இருக்கு! கொடுமைஸ் பார்க்கலாம்:


//1.hygenic irukaadhu//
ஹைஜெனிக் இல்லையா? இது அபாண்டமான குற்றச்சாட்டு!

//2.eppadium oru 5 rats oduradha paarkalam...//

இது பழங்காலத்து மளிகை கடை.. இப்பவெல்லாம் அப்படியில்லைப்பா..

//3. namma annachi irukaarey, sumtimes avaruku vendiavanga vandha avangala thaan gavanipaaru..
line la irukira nammala marandhuduvaaru..//

இது ஒரு அளவுக்கு சரியா இருக்கலாம்.. ஆனா, டிப்.ஸ்டோர்ல வரிசையில நிக்குற மாதிரி மளிக கடையில நீங்க எங்க வரிசை கட்டி நிக்குறீங்க? யாரு முதல்ல வாய் திரந்து கேக்குறாங்களோ, அவங்களுக்கு முதல்ல சாமான்கள் கொடுக்கப்படுகின்றன.. என்ன சரியா? ;-)

//4.readymade item like milk packet,
,soap,paste,horlicks ippadi items kettu varavangalaium first gavanichi anupiduvaaru....
appo line la irukira mattha sillarai items vaanguradhu ellam enna thinks illai ah?//

ம்ம்.. நல்ல கேள்வி.. பட் அப்படிப்பட்ட சாமான்கள் அவ்வளோ டைம் எடுக்காது.. அதுக்குதான்.. ;-)

//ada, naan solluradhu ellam 5 yrs ku before..... ippa eppadinu theriala... //

இது 100% உண்மை.. இதையேதான் நானும் சொல்லவந்தேன். ;-)

said...

@My days(Gops):
டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா

nanmai's

//1.poludhu pogadhavanga indha store ulla pona, nalla time pass aaagum..//

அதான் மணிக்கணக்கா அங்கணயே கடலை போடுறாங்களே!

//2.kidaikaadha items nu paartheeengana, onnumey irukaadhu...
ella items laium 3,4 brand irukum. like maan maark, mangai maark, appadinu.//

சில நேரம் சாமான்கள் அங்கே இருந்தாலும் தேடி கண்டுப்பிடிக்க முடியாதே!

//3.hygenic ah irukum...
extra guests yaaraium paarka mudiadhu (rats,E,cockroaches)//

இருக்கும் இருக்கும்...

//4.customer service "may i help u" appadinu namma koooda mokkai poda aalunga irupaaaanga..//

ஆனா சில நேரம் அவங்களே நமக்கு தொந்தரவா இருக்கும்.. எங்கே போனாலும் நம் பின்னாலேயே வருவாங்க.. ரொம்ப அன்கன்ஃபார்டபலா இருக்கும்...

//5.appuram "promotion" appadinu oru super figure ah vuttu product demo kodupaaanga... he he he..
(unmaiya sonnen :), so no dension)//

பொருளை வாங்காட்டினாலும் நீங்க அந்த டெமோல கலந்துக்குவீங்களே.. ;-)

said...

@My days(Gops):
டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா

kodumai's

//1.naama ketkura measurement la things kidakaadhu..//

ஆமா.. அப்படி வெஇக்ட் பண்ணி வாங்குறதா இருந்தா 100க்ராமுக்கு 50 க்ராமுக்கு அது வேணும் இது வேணும்ன்னு நீங்க அலம்பல் பண்ணுவீங்களே. :-P

//2.weight sare ah irukum nu gurantee koduka mudiaadhu..//

ம்ம்.. இப்படி பல தரவ அங்கே வாங்கிட்டு போய் நிறுத்து பார்த்திருக்கேன். சம்டைம்ஸ் அந்த வெஇக்ட் சரியா இல்ல..


//3.things ah maaathi vaangitu poitu, appuram exchange nu pona "bill" irundha mattum thaan maathuvaanga.. adhum maximum 3days kulla maathi aaaganum...
(annachi kadaila appadi irukaaadhu, paaambin kaaal paambu arium formula maligai kadaila mattum thaaan apply aagum :) )//

வாங்கும்போது சரியா வாங்கியிருக்கலாம் நீங்க.. ஹீஹீஹீ..

//4.aairam figures vandhaaalum , ella figurum things edukiradhulaiey thaan kannum karuthumaa irukum
(indha point inga solla koodadhu thaaan..still, vera enga solluvenaaam?) //

யப்பா... என்னமா கவலை படுறீங்க! :-P

said...

கோபி, இந்த வாரம் பெஸ்ட்டு வாத கும்மி பண்ணியது நீங்கதான்.. ரெண்டு பக்கம் இருக்கிற நன்மைஸ் & கொடுமைஸ் அழகா சொல்லி.. அதுக்கு சம்மரியும் சொல்லி.. ஒரு குவாட்டரும் அடிச்சிருக்கீங்க..

உங்களுக்கு ஒரு இலை சாப்பாடு லஞ்சே கொடுக்கலாம் தாராளமாக. :-D

said...

en choice Departmental store thaan, nanmai - theemai ellathayum Annan Gops azhaga sollittaru!!!

And one more point is, Market la pudhusa introduce aayirkara porutkala ellam annachi list potutu irukka maataar.. aana D.S la potirpaanga..

Sila keakka mudiyadhavaikala.. naamale porukkikiradhu thaan nalladhu!!

so ennoda vote dept.stores ku thaan.

@My Friend,
Thalaippa nallave sollirkeenga, aana neenga annachi kadaiku thaan vote kutha poreenga pola :(

said...

Hi, pls give the hyperlink to 'varuthapadatha vaalibar sangam'.

said...

ipadi oru sangam irukkunu ippo dhaan enakku theriyudhu..enna kodumai singamla ace idhu...enakum solla vendama neenga seira matters ellam...oruthi kalyana aanona kazhati vidaradhu enna pazhakam..ozhunga ennai invite pannala..so nan kovichitu ippodhaiku poren..appalika varen..

said...

அண்ணே இந்தாங்க இந்த மாசா ரோக்கா(மளிகை கட லிஸ்ட எங்க ஊர்ல இப்படி தான் சொல்வோம்)
இதுல 400 ருவா இருக்கு மீதிய அப்புறம் தற்றேன்னு அப்பா சொன்னாங்க.

இது மாதா மாதம் நடந்த விஷயம் தான்.

டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல ஏசி, தள்ளுர வண்டி பில் போட அழகான பொண்ணு அப்படி இப்படீன்னு என்ன வேணுமனாலும் இருக்கலாம்

ஆனா

மனிதாபிமானம், மற்றவர்களுக்கு உதவும் குணம் கண்டிப்பாக இருக்காது. . . . ?

(கும்மி அடிக்காம சீரியசா பின்னூட்டம் போட்டுவிட்டேனோ . . . .)

said...

bayapadatha paavaiyar sanga-thin
members ellarukum ennoda "Hi" sollikaren. :-)

varutha padatha vaalibar sangam pathi dinamani la paichutu, net la vanthu pathen apa than unga sangam pathiyum terinchuthu, ana anga irunthu direct link ila inga varathuku. sirripu sangathuku mail panninen link kodunga apadinu, ana opposite party la ellarum silenta irunthutanga.

aparama nan G3 oda comments anga irunthatha vechu apadiyea inga vanthu sernthen.

good job, kalakkunga neenga !!!
aparam nan note pannina oru visayam enana Pa.Paa.Sa web pagela
varutha padatha valibar sangam, sirippu sangam rendukumae link koduthu irukeenga, unga mathiri periya manasu avangalukku ila paarunga :-(
nan mail panni kettapa kuda yarum reply panala :-(

said...

@Padmapriya:

//en choice Departmental store thaan, nanmai - theemai ellathayum Annan Gops azhaga sollittaru!!!//

பையனுங்கதான் பொண்ணுங்க சைட் அடிக்க டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்கு போறாங்கன்னா, நீங்களுமா ப்ரியா? ;-)

//And one more point is, Market la pudhusa introduce aayirkara porutkala ellam annachi list potutu irukka maataar.. aana D.S la potirpaanga.. //

இது என்னமோ உண்மைதான். அதனால் இந்த கருத்தை சேர்த்துக்கலாம். :-)

//Sila keakka mudiyadhavaikala.. naamale porukkikiradhu thaan nalladhu!!//

ஹீஹீ..
ஆனா, மளிகை கடையில அந்த மாதிரி பொருட்களை பேப்பர்ல மடிச்சு கொடுப்பாங்க. ஆனா, டி.ஸ்ல அதை ட்ரான்பேரண்ட் ப்ளாஸ்டிக்லதானே போட்டு கொடுப்பாங்க?

//so ennoda vote dept.stores ku thaan.//

சரி சரி.. நான் வேணாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க? ;-)

//@My Friend,
Thalaippa nallave sollirkeenga, aana neenga annachi kadaiku thaan vote kutha poreenga pola :( //

என் வோட்டு அண்ணாச்சி கடைக்குதாங்க. ;-)

said...

@arun:

//Hi, pls give the hyperlink to 'varuthapadatha vaalibar sangam'. //

இந்தாங்க அருண்:
http://vavaasangam.blogspot.com

said...

@ramya:

//ipadi oru sangam irukkunu ippo dhaan enakku theriyudhu..enna kodumai singamla ace idhu...//

இதுக்கு எதுக்கு ஏஸை கூப்பிடுறீங்க.. பாவம் அவர்! விக்கிட்டு இருப்பார் இன்னேரம். என்ன கொடுமை கொடி இது! :-P

//enakum solla vendama neenga seira matters ellam...oruthi kalyana aanona kazhati vidaradhu enna pazhakam..//

நீங்கதான் கல்யாணம், அட்லாண்டான்னு பிஜியா இருந்துட்டீங்க.. கொஞ்சம் ஃப்ரீயா ஆனதும் சொல்லிக்கலாம்ன்னு நெனச்சோம். ஹீஹீ..

//ozhunga ennai invite pannala..so nan kovichitu ippodhaiku poren..appalika varen.. //

இப்போ கோபம் தணிஞ்சிறுச்சா? ;-)

said...

@வெங்கட்ராமன்:

//(கும்மி அடிக்காம சீரியசா பின்னூட்டம் போட்டுவிட்டேனோ . . . .) //

சீரியஸா பின்னூட்டம் போட்டதால், இதுக்கு எப்படி ரிப்ளை பண்ணுவது என்று தெரியாமல் திருதிருன்னு முளிக்கின்றேன். :-P

said...

@deeps:

//bayapadatha paavaiyar sanga-thin
members ellarukum ennoda "Hi" sollikaren. :-)//

ஹை ஹை. :-)

//varutha padatha vaalibar sangam pathi dinamani la paichutu, net la vanthu pathen apa than unga sangam pathiyum terinchuthu, ana anga irunthu direct link ila inga varathuku. sirripu sangathuku mail panninen link kodunga apadinu, ana opposite party la ellarum silenta irunthutanga.//

அவங்க இன்னும் உங்க மெயிலை படிக்கலை போலும். படிச்சதும் கண்டிப்பா ரிப்ளை பண்ணிடுவாங்க டீப்ஸ். :-)

//aparama nan G3 oda comments anga irunthatha vechu apadiyea inga vanthu sernthen.//

வருக! வருக!

//good job, kalakkunga neenga !!!
aparam nan note pannina oru visayam enana Pa.Paa.Sa web pagela
varutha padatha valibar sangam, sirippu sangam rendukumae link koduthu irukeenga, unga mathiri periya manasu avangalukku ila paarunga :-(//

நன்றி ஹை! :-D
nan mail panni kettapa kuda yarum reply panala :-(

said...

பேரை சொல்லி பார்த்தேன்!! கேட்டும் பார்த்தேன்!! அதிரவே இல்லையே??

சரி அது கெடக்கட்டும்! மளிகை கடையா இல்லை டிபார்ட்மெண்டல் ஸ்டோரான்னு பார்த்தா, நம்ம அண்ணாச்சி கடையை அடிச்சிக்கறத்துக்கு ஆளே இல்லீங்கோ ஏன்னா

1) அண்ணாச்சி கிட்ட தெகிரியமா கடன் சொல்லிட்டு எஸ்கேப் ஆகலாம். இதுவே டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னா கட்டி வெச்சு உதைப்பானுக

2) அண்ணாச்சி கொசுறு கொடுப்பாரு! டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காரன் கவரை கூட காசு வாங்கிட்டு தான் கொடுப்பான்

இதனால் நான் தெரிவித்து கொள்வது என்னவெனில், அடுத்த வரும் பதிவர்கள் உங்கள் பொன்னான வாக்குகளை நம் அண்ணாச்சிக்கே அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்!

 

BLOGKUT.COM