Thursday, May 15, 2008

இன்று ப.பா. சங்கத்தில்..

ZZzzzzZZZzzzzZZZzzzzZZZzzz.... எப்போ கவிதாயினிக்கு PRO பதவி கொடுத்து ரிஷப்ஷன்ல உட்கார வச்சாங்களோ அப்போதிலிருந்தே இந்த சீட்டு மட்டும்தான் பிஜியா இருக்கு.. உட்கார்ந்துக்கிட்டே தூங்குறது, படுத்துக்கிட்டே தூங்குறது, காதுல ஃபோனை வச்சிக்கிட்டே தூங்குறதுன்னு தினமும் ஒவ்வொரு ஸ்டைலில் கலக்குறாங்க.. முதல்ல இந்த ரிஷப்ஷன்ல இருக்கிற மேஜையையும் நாற்காலியையும் தூக்கி தூர போடணும்..

அடுத்து.. kRrr.. koRr..mMm.. cHap Chap..SLurrppp... இது என்னன்னு நான் சொல்லிதான் தெரியணுமா என்ன? நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்களே.. G3 நொறுக்கு தீனியை நொருக்கி தின்ற அழகுதான் இது! இதை என்னால எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியல. அப்படி ஏதாவது செய்தா "என்னை கொடுமை படுத்துறாங்க.. காப்பாத்துங்க"ன்னு கத்தி ஊரை, உலகத்தையே கூட்டிடுறாங்க.. என்ன கொடுமை சார் இது!

"காதலா காதலா காதலால் தவிக்கிறேன்.."... இவ்வளவு நாளா மொக்கை போட்டு நம்மை இம்சித்துக்கொண்டிருந்த இம்சை அரசி இப்போ ஒரு நல்லவரின் இம்சையில் வசமாய் மாட்டிக்கொண்டார். இவங்க பொட்டி கட்டிட்டு ஊரு பக்கம் போயிட்டதா காத்து வாக்குல தகவல் வந்துச்சு. திருமணம் முடிஞ்சு எப்போ நம்மளையெல்லாம் இம்சை பண்ண வருவாரோ?... காத்திருக்கிறோம்.

Dush Dush. YeeHaah.. Dishyoommmm.... யாரோ குஸ்தி ப்ராக்டிஸ் பண்ற மாதிரி இருக்கே? யாருப்பா அது? மக்களே, கொஞ்சம் இருங்க..நான் எட்டிப் பார்த்துட்டு சொல்றேன். ஆஹா அஹா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.. போன பதிவுல "நான் காது கடிச்ச மைக் டைசன் ஊருல"ன்னு சொன்னவங்க அடுத்த பதிவுல "காது கடிச்ச மைக் டைசன் என் காலுக்கடியில"ன்னு சொல்லுவாங்க போல.. அம்மணி அனுசுயா வெயிட்டான ட்ரேயினிங்ல இருக்காஹ..

"காணவில்லை.. கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு இரண்டு பிரம்படிகளும், மூனு புத்தகம் வீட்டுப்பாடங்களும் கொடுக்கப்படும்" என்ற பேன்னர் இங்கே மாட்டியிருக்கு. அடடே.. போட்டோல உள்ளவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. ஆஹா.. இவங்கதானே அவங்க.. அதான் மணி மணியா எழுதுவாங்களே கண்மணி டீச்சர்!! ஆஹா டீச்சர், உங்களுக்கு ஏன் இந்த நிலமை? எங்கே இருக்கீங்க..உங்களை கண்டுபிடிக்க வேடந்தாங்கல் பறவைகள் அனுப்பியிருக்கேன்.

----------------------------------------------------------------------------------------------------------
இந்த ஐந்து பேரை தேடி தேடி கண்டுபிடிக்கவே .:: மை ஃபிரண்ட் ::. எவ்வலவு கஷ்டப்படுறா.. பாருங்க மக்களே.. இதனலாத்தான் சொல்றேன். மை ஃபிரண்ட் குழந்தையை திட்ட கூடாது.. பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லவ.. அவ்வ்வ்வ்.....

"டொக் டொக் டொக்"

மை ஃபிரண்ட்:
வெளியே யாரு? உள்ளே நானு..

அனானி: வெளியே நானு.. உள்ளே யாரு?

மை ஃபிரண்ட்: ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா... இன்னைக்கும் எனக்கு சனி உச்சத்துலதான் போல.. யாருய்ய்யா அது?

அனானி: கொஞ்சம் வந்து எட்டிதான் பார்க்கிறது?

மை ஃபிரண்ட் வெளியே வந்து எட்டி (அதாவது தலையை மட்டும் வெளியே நீட்டி) பார்க்கிறார்..

மை ஃபிரண்ட்: இப்போ சொல்லும்மா.. யார் நீ?

அனானி: இது படம் பேர். "நீயா?"ன்னு கேளுங்க..

மை ஃபிரண்ட்:
அடங்கொய்யாலே.. எனக்கு BP எல்லாம் எகுறுது. நீ யார்?

அனானி: நியூ அட்மிஸ்ஷன்

மை ஃபிரண்ட்: உனக்கு யார் கொடுத்த நியூ அட்மிஸ்ஷன்.. எங்களுக்கு மஞ்சள் அறைத்து கொடுத்தாயா? இல்ல நாத்துதான் நட்டாயா? (மனசுக்குள்..) இன்னைக்கு பார்த்த கட்டபொம்மன் படத்து வசனத்தை இங்கே பேசி காட்டியாச்சு. :-)))

அனானி: அட்மிஷன் கொடுத்தவரே யார் கொடுத்தான்னு கேட்டா என்ன சொல்ல.. நகருங்க.. கதவுல நின்னு ஒழுங்க டியூட்டி பாருங்க.. நான் உள்ளே போறேன். அடடே.. இந்த ரூம் நல்லா இருக்கே.. இனி இந்த ரூம் என்னது.. இங்கே உள்ள குப்பைகளையெல்லாம் எடுத்து வெளியே வீசிடு கூர்கா..

மை ஃபிரண்ட்:
என்னது கூர்காவா? இது என்னுடைய அறை.. ஹேய் ஹேய் ஹேய்.. அதெல்லாம் எங்கே வீசுற?

அனானி: எத்தனை தடவை சொல்றது? கூர்கா கதவுகிட்டதான் நிக்கனும். போய் அங்கே நில்லு.. நான் கூப்பிடுற வரைக்கும் உள்ளே வர கூடாது..

மை ஃபிரண்ட்:
அவ்வ்வ்வ்வ்....

அனானி: மக்களே, நான் யாருன்னு பார்க்குறீங்களா? நாந்தான் மாங்கனி... தமிழ் மாங்கனி.. உங்களையெல்லாம் இனி இம்சிக்க வந்த மாங்கனி. வணக்கம் வணக்கம் வணக்கம்

மை ஃபிரண்ட்: (அப்பாவியாக..) அவ்வ்வ்.. என்னை வச்சி காமெடி கீமடி பண்ணலையே???????

20 Comments:

said...

வாங்க வாங்க.. வந்துட்டீங்க இல்ல.. இனி எல்லாம் சரியா நடக்கும்னு நம்புவோம் (இவ்ளோ நாள் நொண்டி நொண்டி நடந்துதான்னெல்லாம் கேக்கபுடாது சொல்லிப்புட்டேன் :P )

said...

// G3 said...
வாங்க வாங்க.. வந்துட்டீங்க இல்ல.. இனி எல்லாம் சரியா நடக்கும்னு நம்புவோம் (இவ்ளோ நாள் நொண்டி நொண்டி நடந்துதான்னெல்லாம் கேக்கபுடாது சொல்லிப்புட்டேன் :P )
/

அப்பிடியெல்லாம் கேக்கமாட்டோம்!

ஆமாம் நடந்து நடந்துங்கறாங்களே அது என்ன?

இனி நடக்கப்போறது என்ன?

said...

ஆஹா மறந்தே போயிட்டேன்!

தமிழ்மாங்கனி நீங்க ஃப்ளீஸ் நம்ம மைஃப்ரெண்டுக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருந்து அப்பப்ப ப.பா சங்கம் தமிழ்மணத்தில வர்ற மாதிரி பார்த்துக்கணும்

அதான் எங்க எதிர்ப்பார்ப்புக்கள் :)))

said...

ஆமா தூங்காம(காயத்ரிமாதிரி) கொறிக்காம (ஜி திரி மாத்ரீ) உதைக்காம (அனுசுயா மாதிரி) .. நீங்க என்ன செய்வீங்க ப.பா.சங்கத்துல.. உங்க ப்ரைபைல் என்ன .. வரும்போதே மைபிரண்டை இந்த கலக்கு கலக்கி இருக்கீங்கன்னா.. சே வேலை வாங்கி இருக்க்கீங்கன்னா... மை ப்ரண்டு பாட்டு போட்டு களைத்து இருந்த நேரம் பாத்து ப.பா சங்கத்தை க்ளீன் பண்ணவச்சி இருப்பீங்க போல..
வாங்க மாங்கனி வாழ்த்துக்கள்..

said...

மேங்கோ, வந்தாச்சா?

said...

//தமிழ்மாங்கனி நீங்க ஃப்ளீஸ் நம்ம மைஃப்ரெண்டுக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருந்து அப்பப்ப ப.பா சங்கம் தமிழ்மணத்தில வர்ற மாதிரி பார்த்துக்கணும் //

கண்டிப்பா என்னால முடிஞ்சவரைக்கும் சிரிக்க வைக்குறேன்..

said...

நல்வருகைகள் தமிழ்மாங்கனி..

நம்ம ஃமைபிரண்டுவ கலாய்ச்சு எண்டர் ஆகியிருக்கிங்க.,.உள்ள தூங்கிக்கிட்டிருக்கறவங்க எல்லாரையும் அலறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கற மாதிரி செய்யனும்/.என்ன ஓகேவா?

(யாருக்குத்தெரியும்? தூங்கறவங்களோட நம்ம தமிழ்மாங்கனியும் தூங்க ஆரம்பிச்சுட்டா என்ன பண்ணறது ஃமைபிரண்டு?:P

said...

ப.பா.சங்கத்துக்கு புது வரவு.. புதுசு கண்ணா புதுசு...

said...

ரசிகன்.....
///தூங்கறவங்களோட நம்ம தமிழ்மாங்கனியும் தூங்க ஆரம்பிச்சுட்டா என்ன பண்ணறது ///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

:))))

said...

நீங்களும் சேர்ந்திட்டீங்களா,

மீ தி எஸ்கேப்பு

said...

//யாருக்குத்தெரியும்? தூங்கறவங்களோட நம்ம தமிழ்மாங்கனியும் தூங்க ஆரம்பிச்சுட்டா என்ன பண்ணறது ஃமைபிரண்டு?:P//

ஆஹா எல்லாரையும் யோசிக்க வச்சுட்டீங்களே!!

said...

இந்த தூங்கற கோஷ்டில நீயும் சேந்தாச்சா !!

வாம்மா மின்னல்!!

said...

//இந்த தூங்கற கோஷ்டில நீயும் சேந்தாச்சா !!

வாம்மா மின்னல்!!//

ஆஹா சாச்சுப்புட்டான் மச்சான்!!

said...

///G3 said...
(இவ்ளோ நாள் நொண்டி நொண்டி நடந்துதான்னெல்லாம் கேக்கபுடாது சொல்லிப்புட்டேன் :P )//


g3 ஒப்புதல் வாக்குமூலம் சூப்பர்ப்!

said...

ஆயில்யன். said...
///ஆஹா மறந்தே போயிட்டேன்!

தமிழ்மாங்கனி நீங்க ஃப்ளீஸ் நம்ம மைஃப்ரெண்டுக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருந்து அப்பப்ப ப.பா சங்கம் தமிழ்மணத்தில வர்ற மாதிரி பார்த்துக்கணும்

அதான் எங்க எதிர்ப்பார்ப்புக்கள் :)))///


ரிப்பீட்டேய்....

said...

///ரசிகன் said...
(யாருக்குத்தெரியும்? தூங்கறவங்களோட நம்ம தமிழ்மாங்கனியும் தூங்க ஆரம்பிச்சுட்டா என்ன பண்ணறது ///


ஹா ஹா ஹா ஹா...

கவலைப்படாதீங்க மாம்ஸ் திரும்பவும் ஒரு பதிவு எழுதி மை பிரண்ட் கிட்ட கொடுத்து போஸ்ட் பண்ணிடலாம். அப்புறம் கொஞ்ச நாள் ஆக்டிவா இருப்பாங்க.

said...

///Thamizhmaangani said...
கண்டிப்பா என்னால முடிஞ்சவரைக்கும் சிரிக்க வைக்குறேன்..//


முடியாட்டி என்ன பண்ணுவீங்க. அதையும் சொல்லிடுங்க.(நாங்க அப்படியே சிரிக்காத மாதிரி நடிப்போம்ல)

said...

///உங்களை கண்டுபிடிக்க வேடந்தாங்கல் பறவைகள் அனுப்பியிருக்கேன். ///ஆஹா இப்படியும் ஒரு நக்கலா?
புரியுது...புரியுது....

said...

///மை ஃபிரண்ட்: ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா... இன்னைக்கும் எனக்கு சனி உச்சத்துலதான் போல.. யாருய்ய்யா அது?///


அப்ப தினமும் உச்சத்துல தானா?

 

BLOGKUT.COM