Saturday, May 24, 2008

நாங்க என்ன கேணையனுங்களா?

நாங்க தாங்க கேணையனுங்க, அதாவது ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்கதான் ஒத்துகிறோம்

 • அலுவலகத்துல இலவச இணைப்பு, முழு நேரமும் எங்களோட சேட்டிங் பண்றீங்க. வீட்டுக்குப் போனா dialup. உங்க அப்பன் காசுக்கு மட்டும் அப்படி ஒரு செக்யூரிடடி நீங்க. யாருக்கும் தெரியாம மிஸ்ட் கால் மட்டும் குடுப்பீங்க.
 • செல்லு கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்குத் தெரியுமா நீங்க குடுக்கிற ஒரே ஒரு மிஸ்ட் காலுக்கு பல மணி நேரத்துக்கான பில்லு எங்களுக்குத்தான் பழுக்குதுன்னு.
 • வெளியே போகும்போது பெரிய பை தோளில தொங்கும். காலியா வர்ற பை குண்டா வீட்டுக்குப் போவும், எங்க பர்ஸ் மட்டும் சீக்கிரமா இளைச்சுகிட்டே போவும்.
 • ஷாப்பிங்னு கூப்பிட்டா முப்பது ரூவாய் டீ சர்டும் 5 ரூபாய் கம்மலும் போட்டுகிட்டு வருவீங்க. எங்களுக்கோ ஆயிரம் ஆயிரமாப் செலவு வெப்பீங்க.
 • வீட்டுக்கு வந்தா ஒரு வாய் காப்பி தண்ணி தரமாட்டீங்க. கேட்ட வெக்கத் தெரியாதுன்னு சிரிப்பு வேற. ஆனா நாங்க கூப்பிட்டா மட்டும் காப்பிக்கு 150க்கு பில்லை ஆவும்னு வயித்த கலக்க வெப்பீங்க.
 • உங்ககிட்ட ஸ்கூட்டி இருக்கும், பெட்ரோல் புல் டாங்குல இருக்கும். நாங்க வெளியில கூப்பிட்டா, எங்க வண்டியில பெட்ரோல் மட்டும் இல்லே எங்க தாவும் சேர்ந்தே தீரும்.
 • நீங்க மெரினாவே பார்த்து இருக்க மாட்டீங்க. ஓசிலனா எங்க கூட ரெண்டு பக்கம் கால் போட்டுக்கிட்டு மஹாப்ஸ் போலாம்பீங்க.
 • நீங்க விடுற பீலாவுக்கும் புருடாவுக்கும் மயங்கித்தானே எங்க வாயைபொளந்து கேட்டுக்கிட்டே பர்ஸ்ஸையும் திறந்து வச்சு பார்த்துட்டு இருக்கோம்.
 • மாச ஆரம்பத்துல அவுட்டிங் வருவீங்க, அதனால 20ம் தேதியான அண்ணாச்சி கடையில் அக்கவுண்ட் நாங்க வெப்போம்.
 • காலையில பழைய சோறை கறைச்சு குடுச்சுப்புட்டு வந்துட்டு பீட்ஸா கார்னர் கூட்டிட்டு போவச் சொல்றீங்களே, உருப்புடுவீங்களா?
 • We are too smart?னு அடிக்கடி சொல்றதுக்கு அர்த்தம் இப்போதானே புரியுது.

இப்போ சொல்லுங்க ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்க தானே?

17 Comments:

said...

ஆமாம்.இப்படி இருந்தா "கேனயன்" தான்.
:-))

said...

:))

said...

தங்கமணி ஊரில் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு பதிவு போட்ட நீர் கேனையந்தான். சந்தேகமே இல்லை!

said...

நீங்க நல்லவரா / கெட்டவரா????....

said...

இளா அண்ணே ஏன் இப்படி திடீருன்னு கொந்தளிச்சு குமுறிட்டீங்க???
பாதிப்பு அதிகமோ ? :))))))))))))

said...

விடுங்க பாஸ், பொண்ணுங்கன்னா அப்பிடித்தான், ஆனா சில ஏமாளி பொண்ணுங்களும் இருக்காங்க பாஸ், என்ன கொஞ்சம் பொறுமையா தேடனும், பேச ஆரம்பிச்சா கொஞ்சம் மொக்கை தூக்கலா இருக்கும், அவ்வளவு தான்!

said...

ஆமா

said...

ரொம்பதான் நொந்து போய்ட்டிங்க போல

Anonymous said...

ரங்கமணி இல்லாத நேரம் இப்படித்தான் காசு செலவாகுதா. ப பா சங்கத்தை பேர் மாத்தி, பா ப சங்கம்னு வைச்சிடலாம். (பாவப்பட்ட பசங்க சங்கம்) நல்லாப்புலம்பிருக்கீங்க போங்க.

said...

வாழ்க ;))

said...

இளா ஸார்.. நல்லாவே இருக்கு.. உண்மையாத்தான் இருக்கு.. என்ன இருந்தாலும் இவ்ளோ சின்ன வயசுல உங்களுக்கு இம்புட்டு அனுபவம் கிட்டியிருக்க வேணாம்..

said...

தல

உங்க அனுபவத்தைக் கேட்டதுக் கதறீட்டேன், என்னை விடவும் ஒரு ஆள் இருக்காரேன்னு பூரிப்பாவும் இருந்துச்சு.

said...

ஓ.. லோகத்துல இப்படி எல்லாம் கூட நடக்குதா.. கலி முத்தி போச்சி.. ஈஸ்வரா... இந்த பொட்ட புள்ளைகளை நம்பி வெளியே வர முடியாது போல இருக்கே.. நான் பெரிவனானச்சே இந்த மாதிரி பொம்மனாட்டிங்க கூட எல்லாம் சகவாசம் வச்சிக்க மாட்டேன்பா...

.... ஆனாலும் இளா... அவங்க ஏரியாவுல நுழைஞ்சி அவங்களுக்கே ரிவீட்டு அடிக்கிறிங்க பாருங்க... உங்க மன தைரியத்தை நான் பாராட்டறேன்... :P

said...

//இப்போ சொல்லுங்க ஆம்பிளைங்க எல்லாம் கேணையனுங்க தானே?//

சேச்சே... இனிமே நாங்க இளா-ன்னே கூப்புட்டுக்கறோம் :))

said...

//ப பா சங்கத்தை பேர் மாத்தி, பா ப சங்கம்னு வைச்சிடலாம். (பாவப்பட்ட பசங்க சங்கம்) நல்லாப்புலம்பிருக்கீங்க போங்க.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

said...

/
.... ஆனாலும் இளா... அவங்க ஏரியாவுல நுழைஞ்சி அவங்களுக்கே ரிவீட்டு அடிக்கிறிங்க பாருங்க... உங்க மன தைரியத்தை நான் பாராட்டறேன்... :P
/

ரிப்ப்பிடேய்ய்ய்ய்ய்ய்ய்

said...

//என்னை விடவும் ஒரு ஆள் இருக்காரேன்னு பூரிப்பாவும் இருந்துச்சு//
same blood

 

BLOGKUT.COM