Saturday, May 10, 2008

நான் இப்போ காது கடிச்ச மைக் டைசன் ஊருல...

அனு : கரீபூ கரீபூ

மைப்ரெண்ட் : என்னது கருப்பு கருப்புதானா?

அனு : ஆகா வாடி அம்மா வா கரீபூனா நல்வரவுனு அர்த்தம்

மைப்ரெண்ட் : ஓ இது என்ன புதுசா இருக்கு

அனு : இதுதான்மா ஸ்வாகிலி மொழி

மைப்ரெண்ட் : (மனதுக்குள்) ஆரம்பிச்சுட்டாங்கப்பா அலம்பல
சரி சரி சொல்லுங்க ஊரு உலகம்லாம் எப்படி இருக்கு ?

அனு : ம் அதுக்கென்னம்மா அம்சமா இருக்கு நல்ல மண்வளம் மரம் செடி கொடி கடல் ஆடு மாடு மனுசங்க எல்லாம் நல்லா இருக்கு

மைப்ரெண்ட் : இது வரைக்கும் நல்லா இருக்குனு சொல்லுங்க

அனு : இதுக்கு பேருதான் கூட இருந்து குழி பறிக்கறதுனு சொல்லு வாங்க.

மைப்ரெண்ட் : தப்பா எடுத்துக்காதீங்க வாய் தவறி உண்மை வந்திடுச்சு

அனு : ஆகா இனி உன்னைய பேசவிட்டா நீ கவுத்திடுவ சரி சரி அபாரி சா காசி?

மைப்ரெண்ட் : என்னது ஆசாரி காசிக்கு போனாறா? அவரு எங்க போனா எனக்கு என்னங்க?

அனு : அய்யோ இது கூட தெரியலயா அபாரி சா காசினா உன் வேலை எல்லாம் எப்படியிருக்குனு கேட்டேன்.

மைப்ரெண்ட் : ம் என் வேலை எல்லாம் சரியாதான் போகுது புது ஊரு சுத்தி பார்த்தீங்களா?

அனு : ஓ அதெல்லாம் வாரா வாரம் டவுனுக்கு போவமே

மைப்ரெண்ட் : என்னது டவுனுக்கா அப்ப நீங்க எங்க இருக்கீங்க

அனு : நாங்க ஒரு பெரிய மல்ட் நேசனல் வில்லேஜ்ல இருக்கோமே

மைப்ரெண்ட் : அதென்னது மல்டி நேசனல் வில்லேஜ்

அனு : அது அப்டிதான் இப்டியெல்லாம் கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல

மைப்ரெண்ட் : சரி சரி விசயத்தை சொல்லுங்க உங்க ஊரு எப்படியிருக்கு
அனு ஊரு சூப்பரு ஊரு ஆனா என்ன தனியா எங்கயும் போக முடியாது. ஆசையா 10 வளையல் காதுல கம்மல் எதும் போட்டுட்டு போக முடியல
போட்டுட்டு போனா காதையே அறுத்து எடுத்துட்டு போயிடுவாங்க

மைப்ரெண்ட் : அய் அப்ப அவங்க காது கடிச்ச மைக் டைசன் பரம்பரை போல இருக்கு

அனு : ஆமாண்டி அம்மா அவங்களேதான்

மைப்ரெண்ட் : அப்ப சரி உங்க நகை நட்டெல்லாம் என்கிட்ட குடுத்து வையுங்க நான்பத்திரமா பாத்துக்கிறேன்.

அனு : ஆமா நீ நல்லா பார்ப்பியே தெரியுமே நீ பார்த்துக்கறது கல்யாணம்னு சங்கத்தை பார்த்துக்க சொன்னா திரும்பி வந்து பார்த்தா சங்கத்தையே காணோம்
எல்லாத்தையும் ப்ளாட் போட்டு வித்துட்டீங்களே

மைப்ரெண்ட் : இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னாங்க

அனு : அது ஒரு நல்லவரு சொன்னாரு அதுக்கென்ன இப்ப

மைப்ரெண்ட் : ஆகா அப்படியா சேதி அந்த நல்லவர நான் உண்டு இல்லைனு பண்றேன் பாருங்க

அனு : ஏன்

மைப்ரெண்ட் : ம் தூங்கிட்டு இருந்த பூனைய இப்படி எழுப்பி விட்டுட்டாரே இனி ஆ ஊ னா கத்த ஆரம்பிச்சுடுமே அதுக்குதான

அனு : அடி பாவி என்னைய கடைசில பூனைனு சொல்லிட்டயே?

எழுதியவர்,
அனுசுயா


பி.கு: அனுசுயா எழுதிட்டு அவங்க பதிவா போடுறதுக்குள்ள நெட்டு புட்டுக்குச்சாம். அதனால், .:: மை ஃபிரண்ட் ::. ஹெல்பிங். :-)

11 Comments:

said...

ஆஹா.. அம்மணி..

வரும்போதே ஆப்புடன் வர்றீங்களே.. இப்படியே உண்மையை சபையில போட்டு உடைக்கிறது????? :-)))))

said...

கரீபூ கரீபூ :)))

said...

//மைப்ரெண்ட் : ஆகா அப்படியா சேதி அந்த நல்லவர நான் உண்டு இல்லைனு பண்றேன் பாருங்க//


பாவம்ங்க அந்த நல்லவரு:)))

said...

/
சிரிக்க வைக்க முயற்சித்தது .:: மை ஃபிரண்ட்
/

சிரிப்பு வராமல் பரிதவித்தது மங்களூர் சிவா

said...

வாங்க அனுசுயா
கரீபூ கரீபூ

said...

/
ஆயில்யன். said...

//மைப்ரெண்ட் : ஆகா அப்படியா சேதி அந்த நல்லவர நான் உண்டு இல்லைனு பண்றேன் பாருங்க//


பாவம்ங்க அந்த நல்லவரு:)))
/

ரிப்பீட்டு

said...

/
சிரிக்க வைக்க முயற்சித்தது .:: மை ஃபிரண்ட்
/

சிரிப்பு வராமல் பரிதவித்தது தமிழ் பிரியன்

said...

//மைப்ரெண்ட் : ஆகா அப்படியா சேதி அந்த நல்லவர நான் உண்டு இல்லைனு பண்றேன் பாருங்க//
ஐயோ பாவம்... விட்டுடுங்க

said...

எனக்கு இங்கு பின்னூட்டமிட விருப்பம் இல்லை:((.
இருந்தாலும் மங்களூர் சிவா, ஆயில்யன் மற்றும் தமிழ் பிரியனுக்கு நன்றி சொல்லுறதுக்காக மட்டும் இந்த பின்னூட்டம்.

said...

//அனு : நாங்க ஒரு பெரிய மல்ட் நேசனல் வில்லேஜ்ல இருக்கோமே

மைப்ரெண்ட் : அதென்னது மல்டி நேசனல் வில்லேஜ்

அனு : அது அப்டிதான் இப்டியெல்லாம் கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல//

ஹா..ஹா..:))))))

said...

சோதனை...;)

 

BLOGKUT.COM