Saturday, April 28, 2007

வாங்கோ! வாங்கோ!

என்னடா இது ப.பா சங்கம்?? எல்லாம் சின்ன பாப்பாங்கதானேன்னு நினைச்சுட்டு வந்திருந்தீங்கனா... நீங்க டுமீல்... ஏன்னா நாங்க எல்லாரும் பயம்னா என்னான்னே தெரியாத பாவையர்...... பயமறியா பாவையர்......


"வெத்தலை போட்ட ஷோக்குல
நான் கப்புனு குத்துனேன் மூக்குல
வந்தது பாரு ரத்தம்"-னு பாடிட்டு ஒரு கோஷ்டி கிளம்பிடுச்சோனு பயப்படாதீங்க.

நாங்க ஆப்பு வாங்கி உங்களை சிரிக்க வைக்க மாட்டோம். ஆப்படிக்க வரவங்களை பயப்படாம எதிர்த்து நின்னு அதே ஆப்ப திருப்பி கொடுத்து உங்களை சிரிக்க வைப்போம் :)))

அதான் பயமறியா பாவையர் சங்கம்.........

எங்க எல்லாரும் ஜோரா மெளசைத் தட்டுங்க பாப்போம்............ ரிப்பன் பக்கோடா சே சே ரிப்பன் கட்டிங் இதுக்கு முன்னாடியே முடிச்சாச்சு................. இப்போ ஒரு சொற்பொழிவும் ஆத்தியாச்சு............. இனிமே வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதான்.........

ஆத்து ஆத்துனு ஆத்தி களைச்சுப் போயிட்டேன். அப்பாளிக்கா வரோம். வர்ட்டா............... :)))

54 Comments:

said...

//நாங்க ஆப்பு வாங்கி உங்களை சிரிக்க வைக்க மாட்டோம். ஆப்படிக்க வரவங்களை பயப்படாம எதிர்த்து நின்னு அதே ஆப்ப திருப்பி கொடுத்து உங்களை சிரிக்க வைப்போம் :)))//

அடடா என்ன ஒரு உயர்ந்த உள்ளம்...:)

எங்களுக்கு போட்டி சங்கம் ஆரம்பிச்சே பாசக்கார அக்காக்களே நல்லா இருங்க....

said...

hmmm.... nadathunga.. nadathunga...

said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்
பார்க்கலாம்,என்ன பண்ண போறீங்கன்னு!! :-)

said...

ஒரு நாள் வலை பக்கம் எட்டி பார்க்கலை...அதுக்குள்ள என்னென்ன கூத்து நடக்குது இந்த உலகத்துல:-)) நடத்துங்க நடத்துங்க வாழ்த்துக்கள்:-))

said...

இங்க பாருடா உலகத்தை பாவையர்களுக்கு வாழ்த்து கூறும் அம்புட்டு பேரும் காளையர்கள்....

வாழ்த்தும் நல்ல உள்ளம் ஆண்களே உரித்தனா தனித்தன்மை அப்படி சொன்னா கேட்கவா போறீங்க....

சரி வந்ததுக்கு மறுபடியும் சொல்லிட்டு போறேன்,

வாழ்த்துக்கள்.....

said...

//ஒரு நாள் வலை பக்கம் எட்டி பார்க்கலை...அதுக்குள்ள என்னென்ன கூத்து நடக்குது இந்த உலகத்துல:-)) நடத்துங்க நடத்துங்க வாழ்த்துக்கள்:-)) //

தொல்ஸ், அவங்க தனியா பதிவு ஆரம்பித்தது உங்களுக்கு கூத்தா தெரியுதா? நான் என்னத்த சொல்ல போங்க....

said...

தொல்ஸ்....

காலையில் நீங்க சொன்னது சரியா மேட்ச் ஆகும் போல இருக்கே... ஏன்ன சொன்னேன் கேட்குறீங்களா, நீங்க ஏகப்பட்டது சொன்னீங்க, அதை எல்லாம் சொல்ல முடியாது, நீங்க சொன்னதில் நச்சுனு இருந்ததை சபைல சொல்லுறேன்...

ப.பா.ச. - பச்சோந்தி பாசக்கிளிகள் சங்கம்....

said...

மேடம்ஸ்!

வவாச விலே பரிசு கிடைச்சவங்களுக்கு இங்கியும் விருந்தும் பண முடிப்பும் கொடுக்க இருப்பதாக கேள்விப்பட்டனே உண்மையா?:-)

said...

//மேடம்ஸ்!

வவாச விலே பரிசு கிடைச்சவங்களுக்கு இங்கியும் விருந்தும் பண முடிப்பும் கொடுக்க இருப்பதாக கேள்விப்பட்டனே உண்மையா?:-)//

எல்லாம் பெரிய இடம் தான், பண முடிப்பு என்ன சும்மா பிஸ்கோத்து... உலகத்தை வலம் வர இலவச பிளைட் டிக்கெட் மை ஃபிரண்ட் தருவாங்க...

தங்கும் செலவை கண்மணியின் ரங்கமணி ஏத்துப்பார்.

உணவு செலவை அனுஷ்யாவும், தீர்த்தவாரி செலவை இம்சையும் ஏற்றுக் கொள்ள போவதாக காற்று வாக்கில் செய்தி வருது.

said...

மனசு குளுந்துச்சுப்பா புலி! பெரிய இடம்ன்னா பெரிய இடம் தான், நீங்களும் தான் இருக்கீங்களே:-)

said...

//ப.பா.ச. - பச்சோந்தி பாசக்கிளிகள் சங்கம்.... //

பத்த வச்சுட்டியே பரட்டை:-))

said...

//மனசு குளுந்துச்சுப்பா புலி! பெரிய இடம்ன்னா பெரிய இடம் தான், நீங்களும் தான் இருக்கீங்களே:-)//

இருக்கப்பட்டவங்க தாராளமா செய்வாங்க, நாம் அப்படியா எல்லா பணமும் மருத்துவ செலவுக்கே சரியா இருக்கு, அதையும் மீறி உங்களுக்கு பரிசு கொடுத்தை நினைத்து பெருமைப்படனும் அய்யா, பெருமைப்படனும்.

said...

////ப.பா.ச. - பச்சோந்தி பாசக்கிளிகள் சங்கம்.... //

பத்த வச்சுட்டியே பரட்டை:-)) //

இது எப்படி இருக்கு....

பக்கத்தில் கவுண்டர் இல்ல.... தலையில் தட்ட...

said...

ஆமா புலி! மேடம்ஸ் யாரும் பதிலே சொல்லலையே! வேற வீட்டுக்கு போகலாமா..இன்னும் 5 நிமிஷம் பாப்பும்:-)

said...

//ஆமா புலி! மேடம்ஸ் யாரும் பதிலே சொல்லலையே! வேற வீட்டுக்கு போகலாமா..இன்னும் 5 நிமிஷம் பாப்பும்:-) //

ஒரு வேளை அவங்க வச்ச தலைப்புக்கு எதிர்பதமா இருக்குமோ... உம்மை கண்டா அம்புட்டு XXமா?

said...

பச்சோந்தி பாசக்கிளிகளா இல்லை பாயும் பெண்புலிகளான்னு பொறுத்திருந்து பாருங்க அப்பூஸ்

said...

அடபாவிகளா...

அதுக்குள்ளே இங்கே கும்மியடிக்க ஆரம்பிச்சாசா??

அவங்களே ஃபிரியா விட்டு பிடிப்போம்,
ஹிம் பாசக்கார அக்காக்களே பார்ப்போம். எம்புட்டு நாளு தாக்குப்பிடிப்பிங்கன்னு :))

////ப.பா.ச. - பச்சோந்தி பாசக்கிளிகள் சங்கம்.... //

பத்த வச்சுட்டியே பரட்டை:-))//

ஹி ஹி.... தரையில் விழுந்து பொரண்டு சிரிக்கிறேன்... :)

said...

//ஹி ஹி.... தரையில் விழுந்து பொரண்டு சிரிக்கிறேன்... :) //

அப்டீல்லாம் அழக்கூடாது:-)

said...

// கண்மணி said...
பச்சோந்தி பாசக்கிளிகளா இல்லை பாயும் பெண்புலிகளான்னு பொறுத்திருந்து பாருங்க அப்பூஸ்//

கொஞ்சம் ஓவரா தெரியல:-))

said...

தமிழ்மணம் உங்களை சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா மேடம்ஸ்:-)
அங்க தெரியலையே, 3 பதிவு தான் போட்டீங்களே, அதிலும் தங்கச்சி கண்மணி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க (test)பதிவை போட்டு....என்ன கொடுமை சரவணா:-)

said...

\\ அபி அப்பா said...
தமிழ்மணம் உங்களை சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா மேடம்ஸ்:-)
அங்க தெரியலையே, 3 பதிவு தான் போட்டீங்களே, அதிலும் தங்கச்சி கண்மணி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க (test)பதிவை போட்டு\\

கண்மணியக்கோவ்....நீங்களும் TEST பதிவு போட்டிங்களா?.....அதுக்குள்ள துக்கிட்டிங்களா?

said...

\\....என்ன கொடுமை சரவணா:-)\\\

அபி அப்பா கண்மணிக்காவுக்கு பிடித்த தலைப்பு
"என்ன கொடுமை சரவணா" தான்.

said...

யாரத் தூக்கறாங்கன்னு பொறுத்திருந்து பாருங்க.போட்டின்னு வந்த பிறகு அண்ணனாவது தம்பியாவது மை பிரண்ட் வா ஒரு கை பாத்துடுவோம்.

said...

//அண்ணனாவது தம்பியாவது மை பிரண்ட் வா ஒரு கை பாத்துடுவோம//

வாங்க! உங்க மிருகத்தை எழுப்பியாச்சு. இதுவே வெற்றி தானே!!:-))

புலி பாய்ஞ்சு வா, கோபி வந்து குமுற வா:-)

said...

//
புலி பாய்ஞ்சு வா, கோபி வந்து குமுற வா:-)//

அண்ணே!! நானு??? :((

said...

//அண்ணே!! நானு??? :(( //

பருப்பு இல்லாத சாம்பாரப்பா, உம்மைதான் என் கையிலேயே புடுச்சிகிட்டு களத்துக்கு வந்திருக்கேனே ராம் தம்பி:-))

said...

\\போட்டின்னு வந்த பிறகு அண்ணனாவது தம்பியாவது மை பிரண்ட் வா ஒரு கை பாத்துடுவோம்.\\

கையை பாத்துடுவோம்..... அது இதுன்னு சவுண்டு மட்டும் வருது ஆளை காணோம் ;)

said...

\\இராம் said...
//
புலி பாய்ஞ்சு வா, கோபி வந்து குமுற வா:-)//

அண்ணே!! நானு??? :((\\

பார்த்திங்களா...எவ்வளவு வெறியோட இருக்காரு பாருங்க ;)

said...

தொல்ஸ்,

ஒடி வா, பாய்ஞ்சு வா, குமறி வா னு கூப்பிடுறீங்க....ஆனா இங்க ஒன்னும் கதைக்கு ஆவாது இருக்கே....

said...

/// கண்மணி said...
பச்சோந்தி பாசக்கிளிகளா இல்லை பாயும் பெண்புலிகளான்னு பொறுத்திருந்து பாருங்க அப்பூஸ்//

கண்மணியக்கோவ் கொஞ்சம் ரைமிங்கா சொல்லுங்க... அப்ப தானே நல்லா இருக்கும்

பா.பெ.பு சங்கம்னா வச்சிங்க ப.பா.ச தானே வச்சிங்க....

said...

வாழ்த்துக்கள் சொன்ன எல்லாருக்கும் நன்றிங்கோ :-))

said...

@இராம் : //எங்களுக்கு போட்டி சங்கம் ஆரம்பிச்சே பாசக்கார அக்காக்களே நல்லா இருங்க...//

நல்ல காமெடி தான்... :-))) எங்களோட போட்டி போடற அளவுலயா உங்க சங்கம் இருக்கு???

said...

//நீங்க சொன்னதில் நச்சுனு இருந்ததை சபைல சொல்லுறேன்...

ப.பா.ச. - பச்சோந்தி பாசக்கிளிகள் சங்கம்....//

@அபி அப்பா : நீங்க எங்க சங்கத்து ஆதரவாளர்னு பாவம் புலிக்கு தெரியல.. :-)))

@நாகை சிவா : அவர் சொன்னதுக்கு உண்மையான அர்த்தம்.. இந்த சங்கத்துல போஸ்ட் போடற நாங்க எல்லாரும் பாசக்கிளிகள்.. கமெண்ட் போடற நீங்க எல்லாரும் பச்சோந்திகள்னு :-)))

said...

//பருப்பு இல்லாத சாம்பாரப்பா, உம்மைதான் என் கையிலேயே புடுச்சிகிட்டு களத்துக்கு வந்திருக்கேனே ராம் தம்பி:-))//

ஆஹா ,

சாம்பாருக்கு முக்கியம் பருப்பு, இப்போ இவங்க லந்துக்கு நாந்தான் மெயின் ஆளா????

சைலஜா மேடம் ஒரு கதை எழுத போக அதிலே இருந்து இவங்களும் சங்கத்தை ஒன்னு ஆரம்பிச்சிட்டு கிளம்பிட்டாங்க....... :))

திரும்பவும் சொல்லுறேன்...

எங்களுக்கு போட்டி சங்கம் ஆரம்பிச்சே பாசக்கார அக்காக்களே நல்லா இருங்க....

said...

//
நல்ல காமெடி தான்... :-))) எங்களோட போட்டி போடற அளவுலயா உங்க சங்கம் இருக்கு???//

ஊஞ்சலக்கா,

இதெல்லாம் ஒங்களுக்கே ஓவரா இல்லே??? மலைக்கிட்டே மோதிட்டா நீங்க பெரியவங்களா????

இன்னொரு தடவை சொல்லுக்கிறேன்.. நல்லா இருங்க :)

said...

//நல்ல காமெடி தான்... :-))) எங்களோட போட்டி போடற அளவுலயா உங்க சங்கம் இருக்கு???//

பார்ரா பார்ரா :-)இந்த புள்ள சிரிக்காம அடிக்குது சோக்கு:-)

said...

@இராம் : //சாம்பாருக்கு முக்கியம் பருப்பு, இப்போ இவங்க லந்துக்கு நாந்தான் மெயின் ஆளா????//

ஹி..ஹி.. அபி அப்பா எங்க கட்சி ஆதரவாளர்னு முன்னாடியே சொல்லிட்டேனே.. அதான்.. சேட்டை செய்யற உங்கள கவனிக்க சொல்லி இங்க கூட்டிட்டு வந்துட்டார் :-))

said...

//அவர் சொன்னதுக்கு உண்மையான அர்த்தம்.. இந்த சங்கத்துல போஸ்ட் போடற நாங்க எல்லாரும் பாசக்கிளிகள்.. கமெண்ட் போடற நீங்க எல்லாரும் பச்சோந்திகள்னு :-)))//

உக்காந்து யோசிப்பாய்ங்களோ:-)) நான் சொன்னதுக்கு இப்டி இரு அர்த்தம் வருதா, சரி புலி என்ன சொல்லுதுன்னு பாப்போம், அம்மாடி ராசத்திகளா அண்ணாத்த ஒரு ஓரமா குத்த வச்சு வேடிக்கை பாக்குறேன்:-))

said...

எச்சூஸ் மி

மே ஐ கம்

said...

நேத்து காகச ன்னு ஏதோ தொறந்திங்களே அது இன்னா அச்சு

said...

\\இன்னொரு தடவை சொல்லுக்கிறேன்.. நல்லா இருங்க :)\\

நானும் இன்னொரு தடவை சொல்றேன்...... இது வாழ்த்து மாதிரி இல்லையே ;)

said...

ராம் ..

ஏன் நீங்க உங்க சங்கத்துல இவிங்கள சேத்துக்காததால கொலவெறி யோட ஆரம்பிச்சிருக்காங்கலாமே நிஜமா???

said...

என்னப்பா நடக்குது இங்கே ஒரே கும்மியா இருக்கே.இப்பமே இப்டின்னா எங்க சங்கத்து புள்ளைங்க போஸ்ட்டு போட ஆரம்பிச்சா இவிங்க எங்கன போய் முட்டிக்குவாங்க.

said...

//நேத்து காகச ன்னு ஏதோ தொறந்திங்களே அது இன்னா அச்சு//

ஐய்ஸ்,

அதை காக்கா தூக்கிட்டு போயிருச்சாம்...:)

said...

//ராம் ..

ஏன் நீங்க உங்க சங்கத்துல இவிங்கள சேத்துக்காததால கொலவெறி யோட ஆரம்பிச்சிருக்காங்கலாமே நிஜமா???//

ஓ அப்பிடியா??? நம்ம அக்காக்களாம் ரொம்பவே நல்லவங்க..:) அந்தமாதிரி சின்னப்புள்ளதனமான காரணமெல்லாம் வச்சு இதை ஆரம்பிச்சிருக்க மாட்டாங்க :))

said...

//இப்பமே இப்டின்னா எங்க சங்கத்து புள்ளைங்க போஸ்ட்டு போட ஆரம்பிச்சா இவிங்க எங்கன போய் முட்டிக்குவாங்க./

யக்கோவ்,

உங்களுக்கு அநியாயத்துக்கு நகைச்சுவை உணர்ச்சி ததும்பி வழியுது :)

said...

வ.வா.ச ஆண்டு நிறைவுக்கு சரியான "ஆப்பு"ரைசல் இது தான் போலிருக்கே! வாழ்க ப.பா.ச.. வளர்க நும் தொண்டு ;)

said...

//வ.வா.ச ஆண்டு நிறைவுக்கு சரியான "ஆப்பு"ரைசல் இது தான் போலிருக்கே! //

பொன்ஸ்க்கோவ்,

நீங்களுமா?? ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்... :)

//வாழ்க ப.பா.ச.. வளர்க நும் தொண்டு ;)/

ஹிக்கும்...இதை சொல்லிட்டு கவுந்தடிச்சு சிரிக்கிறீங்களே??? என்ன அர்த்தம்??? :)

இன்னொரு தடவையும் சொல்லுறேன்...

எங்களுக்கு போட்டி சங்கம் ஆரம்பிச்சே பாசக்கார அக்காக்களே நல்லா இருங்க....

said...

ராமுத் தம்பி வாழ்த்துச் சொல்லியே நொந்து போன மனச ஆத்திக்கிறீங்களா பாவம்

said...

ஹைய்யா நாந்தான் 50 :)

said...

G3!

நீங்களாச்சும் "பயப்படாம" வந்து பதில் போட்டீங்களே! அதுவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, பதிவின் தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் ஆச்சும் இருக்கீங்களே என்று தான்.

said...

ஆஹா.. என்ன இது?? ஒருத்தர்தான் ஆரம்பிச்ச மாதிரி இருந்தது. அதுக்குள்ள ஒவ்வொருத்தரா வர்றாங்களே... இப்படி எத்தன பேரு கெளம்பிருக்கீங்க??

said...

வாழ்த்துக்கள்.

said...

எனக்கு ஒரு ஐயப்பாடுங்க..அதென்ன பயமறியா? அப்ப கரப்பான்பூச்சி, எலி, கொசு இதுக்கெல்லாம் பயப்படவே மாட்டீங்களா? ஆகா..வீராங்கனைகள் வாழ்க. வாழ்க.

கிண்டல் அப்பார்ட்டு. வாழ்க வளமுடன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தச் சொன்னாரு பாரதி. அந்தாளு நெனச்ச புதுமைப் பெண்களா வாழ்க.

 

BLOGKUT.COM