Monday, April 30, 2007

ப.பா.சங்கம் - ஒரு அறிமுகக் கூட்டம்

கிடேசன் பார்க்கில் ப.பா.சங்க நிர்வாகிகள் பேரீச்சம்பழ ஜூஸ் குடித்தப் படி தங்கள் முதல் பொதுக்கூட்டம் பற்றி ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கன்னாப்பின்னாவென கற்பனை வெள்ளம் அங்கே கரைப் புரண்டு ஓட கிடேசன் பார்க்கில் வெள்ள நிவாரண நிதி ஏற்பாடு செய்ய அபி அப்பா தலைமையில் இன்னொருக் குழு கிளம்பி விட்டதுன்னாப் பாருங்களேன்...

எதுக்கு மீட்டீங்காம்... அவங்க சங்கப் பெயரை உலகம் எங்கும் பரப்பணுமாம்... அதுக்கு உலகப் பதிவர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்து கூட்டத்தை மலேசியா ட்ரேட் சென்டர்ல ஏற்பாடும் பண்ணிட்டாங்க.. இனி ஓவர் டூ அறிமுகப் பொதுக்கூட்டம்.

ப.பா.சங்கம்

பாப்பா சங்கமா?

பாபா சங்கமா?

அய்யோ ப குறில்...அடுத்து பா நெடில் நடுவில்ல மெய் ப் வராது வராது வராது.. கண்மணி டீச்சர் கண்டப்படி கதற.. மொத்த பதிவுலக மக்களும் புதுசா ஆரம்பிச்ச சங்கம் பேரைச் சரியாச் சொல்ல முயற்சி பண்ணி வாயைக் கோணி சுளுக்கி பிடிச்சு உக்காந்து இருந்தாங்க...

"சரி மை ஃபிரண்ட்.. எங்கே நீ வா..வந்து மக்களுக்கு நம்ம சங்கம் பெயரைச் சொல்லிக் கொடு பார்க்கலாம்.."

மை ஃபிரண்ட் ஆயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பியைக் கையிலே பிடிச்ச மாதிரி தலை முடி எல்லாம் ஸ்பைக் ஸ்டல்ல மாறுன எஃபெக்ட்ல்ல..

"அக்கா நான் தான் சொல்லணுமா? நீங்கச் சொல்லியே இவங்க இந்தப் பாடு படுறாங்க நான் சின்னப் பொண்ணு".

அப்படி பேச்சு வார்த்தை நடத்தியும் ஒண்ணும் ஆகாத நிலையில்.. ம்ம் என்று கண்மணி டீச்சர் அதட்ட மை ஃபிரண்ட் மைக் பிடித்து பாஆஆஆஆ....என்று இழுக்க கண்மணி டீச்சர் ஃபிரண்டை முறைக்க.... ஃபிரண்ட் மைக்கை கையை வச்சு மூடிகிட்டு "அக்கா நான் தான் சொன்னேனே நான் தமிழ்ல்ல கொஞ்சம் வீக்ன்னு நீங்கத் தான் இப்படி இழுத்து விட்டூட்டீங்க"ன்னு கெஞ்ச...

அடுத்து நம்ம இம்சை அரசியை டீச்சர் முன்னுக்கு வரச் சொல்ல..

இம்சை அரசி மியூசிக் ட்ரூப் எல்லாம் மேடைக்கு வரச் சொல்லிட்டு தொண்டையைச் செரும ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு ஏறுது... கூட்டத்துல்ல் விசில் எல்லாம் கிழியுது....

ம்ம்ம்..ப...ம்ம்..ப...ம்ம....ப....ம்ம்...ப இதே ரேஞ்சுல்ல இமசையக்கா ராகம் போட்டு இழுக்க.. மியூசிக் ட்ரூப் பொறுமைக் கொஞ்சம் கொஞ்சமா குறையுது...

டக்குன்னு மியூசிக் ட்ரூப் மியூசிக்கை மாத்தி வாசிக்க ... மொத்தப் பதிவாளர்களும் உற்சாகம் ஆயிடுறாங்க... அட இது நமக்கு தெரிஞ்ச பாட்டு தானே..

அட இம்சையக்கா நாமளும் பாடணும் அப்படின்னு ஒரு நல்ல எண்ணத்துல்ல தான் இவ்வளவு நேரம் பொறுமைய இழுத்து இழுத்து பாடியிருக்காங்க...

"இனியும் நாம பாடாம தங்கச்சியை சோதிக்கக் கூடாது... வாங்கய்யா பாடுவோம்"ன்னு அபி அப்பா எல்லோரையும் கூப்பிட...

"அப்பா அது இங்கிலீஸ் பாட்டு உங்களுக்குச் சரியா வ்ராது அத்தைக் கூட நான் போய் பாடுறேன்"னு அபிபாப்பா ஸ்டைலா மேடைக்குப் போய் மைக்கை இம்சையக்கா கையிலே இருந்து வாங்கி கூட்டத்தைப் பார்த்து எம்.ஜீ.ஆர் ஸ்டல்ல டாட்டா எல்லாம் காட்டிட்டு.. தொண்டையை லைட்டா அட்ஜெஸ்ட் பண்ணிட்டு பாடுது.

BABA BLACK SHEEP HAVE U ANY WOOL...

உடனே மொத்தக் கூட்டமும்..
YES PAAPA YES PAAPA 3 BAGS FULL

அப்படின்னு ரிப்ளைக் கொடுக்குது...பாட்டு முழுசும் முடிஞ்சப் பொறகு அபிபாப்பா இம்சையக்கா பக்கத்துல்ல ஸ்டூல் போட்டு ஏறி நின்னு ஒரு கொட்டு வைக்குது..

"அத்தை.. நீயும் எங்கப்பா அதான் உங்கண்ணன் மாதிரியே மக்கு தான்... இந்தப் பாட்டு பாடத் தான் ப....ப....ன்னு இழுஇழுன்னு இழுத்தீயா.. அந்த மியூசிக் அங்கிள்ஸ் எல்லாம் பாட்டு ட்யூன் எடுத்துக் கொடுத்துக் கூட நீ ஒரு டோட்டல் சொதப்பல்."

இம்சையக்கா முகத்துல்ல அசடு வழிய பேக் அடிக்குறங்க... கண்மணி டீச்சர் கையிலே பிரம்பு இருக்குது இப்போ.. அடுத்து அவங்க பார்வை அனுசுயா, ஜி3 பக்கம் திரும்புது...

இரண்டு பேரும் பிரம்பைப் பாக்குறாங்க... அய்யோ பபபப..ன்னு உள்நாக்கு மடங்கி சத்தம் வராம வெறும் காத்து மட்டும் வருது ரெண்டு பேர் கிட்டயும்..

கூட்டம் எல்லாம் பெ.பெ.பென்னு சவுண்ட் விட மேடையிலே நிலவரம் கலவரம் ஆகுது.... அப்போ கண்மணி டீச்சர் கையிலிருந்த பிரம்பை வானம் நோக்கி நீட்டி எதோ மந்திரம் எல்லாம் சொல்ல வானம் இடி இடிக்குது... மின்னல் மின்னுது ( இது நிஜ மின்னலுங்கோ) பயங்கர சவுண்ட் கேக்குது...

இவங்க என் அன்புக் குழந்தைகள் பயமறியா பாவையர்கள்... இவங்க சங்கம் பேர் பயமறியா பாவையர் சங்கம்... சுருக்கமாப் ப.பா.சங்கம்....புரியுதா....

அப்படியே ரெயின்போ கலர்ல்ல வானத்துல தெரியுது...

ப.பா.சங்கம்...

ஒடனே மொத்தப் பதிவுலகமும் அப்படியே பக்தி பரவசத்துல்ல ப.பா.சங்கம் வாழ்க..ப.பா.சங்கம் வளர்கன்னு பயங்கர சந்தோசத்துல்ல குரல் கொடுக்குறாங்க...

இப்படியே இனிதாக முடிவடைகிறது நம்ம ப.பா.சங்கத்தின் முதல் அறிமுக பொதுக்கூட்டம்...

130 Comments:

said...

ஹைய்யா நாந்தான் ஃபர்ஸ்ட் :)

said...

என்னது இடி இடிக்குதா?? மின்னல் வெட்டுதா.... டி.ராஜேந்தர் கிட்ட அஸிஸ்டெண்டா இருந்திருப்பாங்களோ உங்க கண்மனி டீச்சர் :))) இந்த‌ எஃபெக்ட் கொடுக்குறாங்க‌

said...

// இராம் said...
ஹைய்யா நாந்தான் ஃபர்ஸ்ட் :) //

யோவ்.. எனக்கென்னமோ நீ எதிர் அணி மாதிரி தெரியலியே.... என்ன நடக்குது ராம்? கட்சி மாறிட்டியளோ??

said...

attendance first...

said...

//ப.பா.சங்க நிர்வாகிகள் பேரீச்சம்பழ ஜூஸ் குடித்தப் படி தங்கள் முதல் பொதுக்கூட்டம் பற்றி ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்//

ethana peru? neenga, apuram andha பேரீச்சம்பழ ஜூஸ் vikkuravarumaa?

said...

//கற்பனை வெள்ளம் அங்கே கரைப் புரண்டு ஓட //

appppo, andha வெள்ளம்'la andha ooorukey pongal seilaam'nu sollunga......

said...

ஹைய்யா கிடேசன் பார்க்ல பாப்பா சங்கம் கூடுதா! இந்தா வாரேன்:-))

said...

//இனி ஓவர் டூ அறிமுகப் பொதுக்கூட்டம்.ப.பா.சங்கம்
//

paapcorn, panjumittai kidaikumgala anga?

// ப குறில்...அடுத்து பா நெடில் நடுவில்ல மெய் //

oh paatu'ku paatu pottia, naan ready...
dho paaaduren, paaapaaaalaaali..

said...

//முயற்சி பண்ணி வாயைக் கோணி சுளுக்கி பிடிச்சு உக்காந்து இருந்தாங்க...
//

nalla velai neeenga lala sangam nu aaarabikama irrundheenga, illati ellam valukki vilundhu irupaanga...

said...

/யோவ்.. எனக்கென்னமோ நீ எதிர் அணி மாதிரி தெரியலியே.... என்ன நடக்குது ராம்? கட்சி மாறிட்டியளோ??//

ஏலேய் ஜீயா...

இப்பிடியெல்லாம் கேட்க சொல்லி யாருய்யா சொன்னது உன்கிட்டே???

அவங்க இப்போதானே உள்ளே வந்துருய்க்காங்க? நாமேதான் அவங்களை வழிநடத்தி கூட்டிட்டு போவணும்.... அதுக்குதான் யாரும் கமெண்ட் போடலன்னாலும் நாமே போட்டு ஊக்கு'விப்போம்... :)

இன்னொரு தடவை சேம் பல்லவி..

எங்களுக்கு போட்டி சங்கம் ஆரம்பிச்ச அக்காக்களே நல்லாவே இருங்க :)

said...

//தலை முடி எல்லாம் ஸ்பைக் ஸ்டல்ல மாறுன எஃபெக்ட்ல்ல.. //
oh apppo neenga popcut'a?

//அக்கா நான் தான் சொன்னேனே நான் தமிழ்ல்ல கொஞ்சம் வீக்ன்னு //
enna week neenga? 1st week a illa last week'a?

said...

hai,


kelaibitaangaiyaaaaa.....kelampitaangaiyaa

said...

//BABA BLACK SHEEP HAVE U ANY WOOL...//

i hav no bag pulla....

oh neenga indha baba va?
gud gud...

said...

13

said...

//இம்சையக்கா முகத்துல்ல அசடு வழிய //

inimel koootathku pona, oru satti eduthu'tu poga sollunga, valiaradha pudichikalam....

said...

//அவங்க இப்போதானே உள்ளே வந்துருய்க்காங்க? நாமேதான் அவங்களை வழிநடத்தி கூட்டிட்டு போவணும்.... அதுக்குதான் யாரும் கமெண்ட் போடலன்னாலும் நாமே போட்டு ஊக்கு'விப்போம்... :)//

என்ன இப்படி சொல்லிபுட்டிய.. ப.பா.சங்கத்துக்கு இல்லாத கமெண்ட்டா? எல்லாரும் அள்ளித் தெளிக்கிறாங்க பாருங்க.

உங்க சங்கத்தப் பாராட்டுனதுக்கு பேசி வச்ச மாதிரி அந்தப் பணத்த அனுப்பி வச்சிடுங்க மை ஃப்ரெண்ட் அம்மணி... :)))

said...

//ஜி3 பக்கம் திரும்புது...//

neenga ivanga kitta palapalatha kaati irundheengana. azhaga, papa nu solli irupaanga... ok ok

said...

என்ன நடக்குதிங்கே?

எல்லாம் தனித்தனியா கும்மி அடிக்கிறாங்கப்பா...

said...

//...ப.பா.சங்கம்...ஒடனே மொத்தப் பதிவுலகமும் அப்படியே பக்தி பரவசத்துல்ல ப.பா.சங்கம் வாழ்க..ப.பா.சங்கம் வளர்கன்னு பயங்கர சந்தோசத்துல்ல குரல் கொடுக்குறாங்க...//

ennadhu, pattikaattu paavaiar sangama.....

oh oh பயமறியா பாவையர் சங்கம்'aaa
gud gud....

said...

மூக்க சிந்திண்டு மூஞ்சில ஈஷிண்டு இருந்த குழந்தைகள்லாம் என்னவா பதிவு போடுறதுகள்:-))

said...

//என்ன இப்படி சொல்லிபுட்டிய.. ப.பா.சங்கத்துக்கு இல்லாத கமெண்ட்டா? எல்லாரும் அள்ளித் தெளிக்கிறாங்க பாருங்க.//

பின்னே இவிய்ங்களே 40' போட்டு தூக்கி ரெண்டாவது Tab'லே உட்கார வைக்கதானே இதெல்லாம் :))

//உங்க சங்கத்தப் பாராட்டுனதுக்கு பேசி வச்ச மாதிரி அந்தப் பணத்த அனுப்பி வச்சிடுங்க மை ஃப்ரெண்ட் அம்மணி... :)))/

எலே மக்கா,

என்னையே கேட்டுப்புட்டு நீ இப்போ கட்சி மாறிட்டியா???

நல்லா பொழைக்கிறாய்ங்கேயா பொழப்பு :)

said...

//இப்படியே இனிதாக முடிவடைகிறது நம்ம ப.பா.சங்கத்தின் முதல் அறிமுக பொதுக்கூட்டம்...
//

last'la G3 ku soru poteengala illai'a????

neenga eppadium saaptu iruka maaateeganu enakku therium.....

said...

vandhadhuku 13th spot'a pudichiten...

edhaachum paarthu pottu kodunga.. varataa?

said...

//என்ன நடக்குதிங்கே?//

சிந்த்ஸ்,

இவங்க நம்ம வ.வா.ச'க்கு போட்டி சங்கமின்னு ஒன்னே ஆரம்பிச்சு இப்பிடிதான் சீரியசா காமெடி பண்ணிட்டு இருக்காங்க... :)

//எல்லாம் தனித்தனியா கும்மி அடிக்கிறாங்கப்பா.../

அப்பிடியா??

said...

//என்னையே கேட்டுப்புட்டு நீ இப்போ கட்சி மாறிட்டியா???//

ஹி...ஹி.. இதெல்லாம் அரசியல்ல சாதாரணம். பொட்டி எங்கக் கொடுக்குறாங்களோ அங்க கும்முன்னு ஜம்ப் அடிச்சாத்தானெ உண்மையான கும்மிவாதி :))))

said...

கிடேசன் பார்க்ல என்ன கூட்டம் எப்பவும் நடக்கும் என்பது தெரியாமலே அங்க கூட்டம் போட்டா, இப்படி தான்... ப.பா. எல்லாம்... ப..பே... பூ னு வரும்.

said...

ப.பா. ச. சொல்லுறதுக்கே இப்படி நுரை தள்ளுதே.... இன்னும் போக போக.... எப்படியோ.... ம்ம்ம் நடக்கட்டும்....

said...

//இவங்க என் அன்புக் குழந்தைகள் பயமறியா பாவையர்கள்... இவங்க சங்கம் பேர் பயமறியா பாவையர் சங்கம்... சுருக்கமாப் ப.பா.சங்கம்....புரியுதா....//

என்ன மை ஃப்ரெண்ட்?? எல்லாத்தையும் போட்டீங்க. இந்தப் பத்திய கடைசில போட மறந்திட்டீங்களே.....

"ஒரு சின்ன டெக்னிக்கல் மிஸ்டேக் ஆகிப்போச்சு. அது 'பயமறியா பாவையர்கள் சங்கம்' இல்லை. 'பயந்தங்கொல்லிப் பாப்பாக்கள் சங்கம்'னு கண்மனி அதுக்கபுறம் தெளிவுப் படுத்துறாங்க."

said...

//அப்போ கண்மணி டீச்சர் கையிலிருந்த பிரம்பை வானம் நோக்கி நீட்டி எதோ மந்திரம் எல்லாம் சொல்ல வானம் இடி இடிக்குது... //

அம்புலிமாமா கோஷ்டியா நீங்க...

இது தெரியாம போச்சே....

said...

இதபார்றா இப்படி ஒரு சங்கம் இருக்கறது நமக்கு தெரியாம போச்சு...
:-)

said...

உங்க சங்கத்துக்கு டொனேசன் வாங்க வரலாமா? :-)

said...

/ஒடனே மொத்தப் பதிவுலகமும் அப்படியே பக்தி பரவசத்துல்ல ப.பா.சங்கம் வாழ்க..ப.பா.சங்கம் வளர்கன்னு பயங்கர சந்தோசத்துல்ல குரல் கொடுக்குறாங்க../

என்ன கொடும சரவணா

:((

said...

ஓ இங்க கும்மியா


டொக்..டொக்..

said...

//
மின்னல் மின்னுது ( இது நிஜ மின்னலுங்கோ) பயங்கர சவுண்ட் கேக்குது...
///


சரி சரி

said...

அனானிக்கு அனுமதி மறுக்கும் பபாச வை கண்ணாபின்னாவென கண்டிக்கிறேன்

said...

மின்னலு புரோப்பைல் போட்டோ சூப்பரா இருக்கு மக்கா :)

said...

ராம் ஊருக்கு போலியா

said...

//
இராம் said...
மின்னலு புரோப்பைல் போட்டோ சூப்பரா இருக்கு மக்கா :)
///


ஹி ஹி நன்றிங்கன்னாவ்..:)

said...

/ஹி ஹி நன்றிங்கன்னாவ்..:)//

மின்னலுண்ணே,

இதெல்லாம் ஓவரா இல்லே?? அண்ணா'ன்னு சொல்லுறது??

said...

//அய்யனார் said...
ராம் ஊருக்கு போலியா //

என்னது? ராம் போலியா??

said...

நீங்க பச்ச குழந்தனு சொன்னாங்க..

அப்ப நம்பள இப்ப நம்புறேன்..

சரி சரி நீங்க 26 நான் 27 ஒத்துக்கிறேன்

இப்ப்டியே ஓட்டிடுவோம்
கடலை போட்டிடுவோம்..!

said...

//
பின்னே இவிய்ங்களே 40' போட்டு தூக்கி ரெண்டாவது Tab'லே உட்கார வைக்கதானே இதெல்லாம்/
//

அடுத்த டார்கெட் அடுத்த Tab'லே உட்கார வைக்கதானே..:)

said...

இராம் நாம எவ்வளவு கஷ்ட படுறோம் இவிங்க பதிலே காணும்

அறிமுக கூட்டத்தில் அல்வா கிண்டுறாங்களா...

இல்ல இவர்களும் நமக்கு போட்டியா மப்புல்ல எறங்கிட்டாங்களா...::)))

said...

நாங்க அடுத்த கூட்டத்துக்கு ரெடியாகிட்டு இருக்கோம்.. உங்க பதில்களை எங்கள் பின்னூட்ட புயல் வந்து போடுவார். ஹீஹீஹீ...

said...

//அய்யோ பபபப..ன்னு உள்நாக்கு மடங்கி சத்தம் வராம வெறும் காத்து மட்டும் வருது ரெண்டு பேர் கிட்டயும்..//
:)) ப.பா சங்க சிங்கங்காள் ஒரு பிரம்புக்கே இந்த போடு போடுறாங்க, ஹஹஹஹஹஹ.. :))

said...

//நாங்க அடுத்த கூட்டத்துக்கு ரெடியாகிட்டு இருக்கோம்.. உங்க பதில்களை எங்கள் பின்னூட்ட புயல் வந்து போடுவார். ஹீஹீஹீ... //

உங்க சங்க பெயர சரியா சொல்லி பாக்க ஒரு கூட்டம், அப்பால அதை எழுதி பாக்க ஒரு கூட்டம், இப்படி நடத்துங்க..... சூப்பரா இருக்கும்

said...

//நாங்க அடுத்த கூட்டத்துக்கு ரெடியாகிட்டு இருக்கோம்.. உங்க பதில்களை எங்கள் பின்னூட்ட புயல் வந்து போடுவார். ஹீஹீஹீ... //

புயல் எத்தன மணிக்கு மையம் கொள்ளும், எந்த கொடி ஏத்தனும் சொல்லுங்க, அதுக்கு தகுந்த மாதிரி மக்களும் தயார் ஆகிப்பாங்கள....

said...

கொஞ்சம் வேலையா இருந்துட்டோம்.அதுக்குள்ள எங்க தலைவிய இப்படி கலாய்க்கிறீங்களா?

said...

அடடா.. நான் ஆபீஸுக்கு வந்து கமெண்டலாம்னு விட்டா அதுக்குள்ள இம்புட்டு கூத்தா.. இதோ வந்துட்டேன்..

said...

@இராம் : திருவிழால எங்க பேர சொல்லி ரெண்டு சொம்பு கூழ எக்ஸ்ட்ரா வாங்கிக்கோங்க :-))

said...

@ஜி : //டி.ராஜேந்தர் கிட்ட அஸிஸ்டெண்டா இருந்திருப்பாங்களோ உங்க கண்மனி டீச்சர் :))) இந்த‌ எஃபெக்ட் கொடுக்குறாங்க‌//

உங்க பதிவெல்லாம் படிச்ச எஃபெக்ட்டுனு ஊருக்குள்ளார பேசிக்கறாங்க..

said...

@ஜி : //யோவ்.. எனக்கென்னமோ நீ எதிர் அணி மாதிரி தெரியலியே.... என்ன நடக்குது ராம்? கட்சி மாறிட்டியளோ?? //

அடடா.. அவர் பொட்டி வாங்கினது உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?? நான் சொல்லல இராம்..

said...

@கோப்ஸ் : //ethana peru? neenga, apuram andha பேரீச்சம்பழ ஜூஸ் vikkuravarumaa? //

ஷ்... என்ன பேச்சிது?? உண்மையெல்லாம் இப்படி உரக்க சொல்ல கூடாது

said...

@கோப்ஸ் : //appppo, andha வெள்ளம்'la andha ooorukey pongal seilaam'nu sollunga...... //

சாப்பாட்டு நெனைப்புலியே இருந்தா இப்படித்தான் தோனும்..

said...

@அபி அப்பா : //ஹைய்யா கிடேசன் பார்க்ல பாப்பா சங்கம் கூடுதா! இந்தா வாரேன்:-)) //

அட.. கூட்டமெல்லாம் முடிஞ்சு போச்சு.. இனிமே போய் என்ன பண்ண போறீங்க???

said...

@கோப்ஸ் : //paapcorn, panjumittai kidaikumgala anga? //
அதெல்லாம் கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு மட்டும் தான்..

//oh paatu'ku paatu pottia, naan ready...
dho paaaduren, paaapaaaalaaali.. //
அடடா.. உன் பக்கத்து சீட்டு அம்மணி உன்ன ஒதைக்க எழுந்து வர்றாங்க பாரு..

said...

@கோப்ஸ் : //nalla velai neeenga lala sangam nu aaarabikama irrundheenga, illati ellam valukki vilundhu irupaanga... //

அந்த சங்கத்துல இல்லாமலே நீ வழுக்கி விழுந்ததா கேள்வி..

said...

//
பயமறியா பாவையர் சங்கம்
அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லயே...
///

மொதல பேர மாத்துங்க

This blog does not allow anonymous comments.


அனானி ஆட்டத்துக்கு பயந்தவங்க சொல்லுறாங்க

உச்சி மீது வான் விழுந்த போதிலும்...ஹும்

நல்லா சிரிப்பா சிரிக்குது சங்கம்..::))


தலக்கு எவ்வளவு ஆப்பு வாங்கி கொடுத்துருப்போம்

வேனாம் தலகிட்ட

(புலி நீ சொன்ன மாதிரியே எழுதிடேன்)

said...

@இராம் : //அவங்க இப்போதானே உள்ளே வந்துருய்க்காங்க? நாமேதான் அவங்களை வழிநடத்தி கூட்டிட்டு போவணும்.... அதுக்குதான் யாரும் கமெண்ட் போடலன்னாலும் நாமே போட்டு ஊக்கு'விப்போம்... :)
//

எதுக்குண்ணே இம்புட்டு சவுண்டு?? நீங்க பொட்டி வாங்கினது எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு.. :-)

said...

@கோப்ஸ் : //enna week neenga? 1st week a illa last week'a? //

இல்ல.. செகண்ட் வீக்கு... நல்லா கேக்குற கேள்வி..

said...

@சுமதி : //kelaibitaangaiyaaaaa.....kelampitaangaiyaa //

:-))))

said...

@கோப்ஸ் : //oh neenga indha baba va?//

எந்த ப.பா.னு போக போக தெரிஞ்சுப்பீங்க..

//inimel koootathku pona, oru satti eduthu'tu poga sollunga, valiaradha pudichikalam.... //

உங்களுக்கு வழியறத புடிக்க அண்டா வேணும்னு சொன்னாங்க..

said...

//(புலி நீ சொன்ன மாதிரியே எழுதிடேன்) //

மின்னல், சொன்னதை கூட உனக்கு ஒழுங்கா எழுத தெரியல

உச்சி மீது வான் "இடிந்து" இதை விட்டுட்ட பாரு...

நம் ஊருக்கார பய சரியா செய்வேனு பாத்தா, என்ன மின்னல் நீ....

said...

@ஜி : //உங்க சங்கத்தப் பாராட்டுனதுக்கு பேசி வச்ச மாதிரி அந்தப் பணத்த அனுப்பி வச்சிடுங்க மை ஃப்ரெண்ட் அம்மணி... :))) ///

இப்படி பப்ளிக்கா கேட்டதால உங்களுக்கு குடுக்கறேன்னு சொன்னதுல ஒரு பொட்டி கட்.. இராம் அண்ணன் மாதிரி பேக்க்ரவுண்டுல நடத்தனும் இதெல்லாம் :-)

said...

//சாப்பாட்டு நெனைப்"புலியே" இருந்தா இப்படித்தான் தோனும்.. //

பயம் வார்த்தையில் தெரியுது ;-)

said...

@கோப்ஸ் : //neenga ivanga kitta palapalatha kaati irundheengana. azhaga, papa nu solli irupaanga... ok ok //

பலாப்பழத்த பாப்பானு சொல்லுவாய்ங்களா உங்க ஊருல???

said...

@சிந்தாநதி : //என்ன நடக்குதிங்கே?

எல்லாம் தனித்தனியா கும்மி அடிக்கிறாங்கப்பா... //

வந்து நீங்களும் ஐக்கியமாகுங்க...

said...

@கோப்ஸ் : //ennadhu, pattikaattu paavaiar sangama.....
//

அண்ணா.. பயமறியா பாவையர் சங்கம்.. நல்லா.. கண்ண தொறந்து பாருங்க...

said...

//தலக்கு எவ்வளவு ஆப்பு வாங்கி கொடுத்துருப்போம்

வேனாம் தலகிட்ட//

விடு மின்னல், நாம எல்லாம் ஆப்பை ஆப்-பாயில் ஆக்கி சாப்பிடுறவங்க....

இவங்க எல்லாம் ஆப்பை கண்டா ஆப் ஆகுறவங்க....

said...

@அபி அப்பா : //மூக்க சிந்திண்டு மூஞ்சில ஈஷிண்டு இருந்த குழந்தைகள்லாம் என்னவா பதிவு போடுறதுகள்:-)) //

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் :-))

said...

@இராம் ://எலே மக்கா,

என்னையே கேட்டுப்புட்டு நீ இப்போ கட்சி மாறிட்டியா???
//

நீங்க தானே அவருக்கு அந்த ஐடியாவ குடுத்தது.. ** நாராயணா நாராயணா **

said...

//கோப்ஸ் : //neenga ivanga kitta palapalatha kaati irundheengana. azhaga, papa nu solli irupaanga... ok ok //

பலாப்பழத்த பாப்பானு சொல்லுவாய்ங்களா உங்க ஊருல??? //

ப.ப - பலா பழம் - papa

paappaa - பாப்பா

நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஜித்ரி

said...

@கோப்ஸ் : //last'la G3 ku soru poteengala illai'a????
//

ஆஹா.. நண்பா.. உன் பாசத்துக்கு நான் அடிமை.. :-)

said...

@கோப்ஸ் : //edhaachum paarthu pottu kodunga.. varataa? //

சென்னை வரும் போது எல்லாம் சேத்து வாங்கிக்கோ :-)

said...

@ஜி : //பொட்டி எங்கக் கொடுக்குறாங்களோ அங்க கும்முன்னு ஜம்ப் அடிச்சாத்தானெ உண்மையான கும்மிவாதி :))))
//

நீங்க உண்மையான கும்மிவாதினு ஒத்துக்கறோம்..

said...

@புலி : //கிடேசன் பார்க்ல என்ன கூட்டம் எப்பவும் நடக்கும் என்பது தெரியாமலே அங்க கூட்டம் போட்டா, இப்படி தான்... ப.பா. எல்லாம்... ப..பே... பூ னு வரும்.//

நாங்களான் இன்னும் மழலை மாறா பாவையர்னு சொல்ல வந்தாங்க மை பிரண்டு...

said...

@புலி : //ப.பா. ச. சொல்லுறதுக்கே இப்படி நுரை தள்ளுதே.... இன்னும் போக போக.... எப்படியோ.... ம்ம்ம் நடக்கட்டும்.... //

நாங்க தான் சொன்னோமில்ல.. பூவானும் இருப்போம்.. புயலாவும் இருப்போம்னு.. இப்படி சில சமயம் மழலையாவும் இருப்போம் :-))

said...

//நாங்க தான் சொன்னோமில்ல.. பூவானும் இருப்போம்.. புயலாவும் இருப்போம்னு.. இப்படி சில சமயம் மழலையாவும் இருப்போம் :-)) //

ஆக, விஜயசாந்தியின் "பூ ஒன்று புயலானது" படம் பாத்து இருக்கீங்க நீங்க அப்படி தானே!

said...

என்ன கொடுமை சரவணன் இது???

said...

//இராம் said...

ஹைய்யா நாந்தான் ஃபர்ஸ்ட் :) //

ராயலு அண்ணே,
எதிரிங்க லிஸ்ட பார்த்தும் இப்படி ஒரு ஆதரவா???

போட்டி ஏதாவது கை மாறிடுச்சா?

said...

//ஜி said...

// இராம் said...
ஹைய்யா நாந்தான் ஃபர்ஸ்ட் :) //

யோவ்.. எனக்கென்னமோ நீ எதிர் அணி மாதிரி தெரியலியே.... என்ன நடக்குது ராம்? கட்சி மாறிட்டியளோ?? //

ஜி,
எனக்கும் சந்தேகமா இருக்கு...

நமக்கு தெரியாம 5 பதிவு வரைக்கும் வந்துடுச்சி. இதுக்கு நம்ம ஆளுங்க எல்லாம் நான் ஃபர்ஸ்ட், நான் செகண்ட்னு சண்டை வேற போட்டுக்கறீங்க :@

said...

//போட்டி ஏதாவது கை மாறிடுச்சா?//

Sorry... slip of the finger

பொட்டி ஏதாவது கை மாறிடுச்சா?

said...

சரி இனிமே பதிவுக்கு வருவோம் :-)

said...

//கிடேசன் பார்க்கில் ப.பா.சங்க நிர்வாகிகள் பேரீச்சம்பழ ஜூஸ் குடித்தப் படி தங்கள் முதல் பொதுக்கூட்டம் பற்றி ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.//

முதல் வரியே தப்பு...

கிடேசன் பார்க் எதுக்குனு தெரியுமில்ல :-)))

said...

//கன்னாப்பின்னாவென கற்பனை வெள்ளம் அங்கே கரைப் புரண்டு ஓட கிடேசன் பார்க்கில் வெள்ள நிவாரண நிதி ஏற்பாடு செய்ய அபி அப்பா தலைமையில் இன்னொருக் குழு கிளம்பி விட்டதுன்னாப் பாருங்களேன்...//

அங்க என்ன வெள்ளம் ஓடும்னு நிஜமாவே தெரியாத அப்பாவியே இருக்கியே மை ஃபிரண்டு...

அபி அப்பா தான் அந்த வெள்ளத்துல தத்தளிக்கிற முதல் ஆளு... அவரு எங்க நன்கொடை எல்லாம் ;)

said...

@ji : //"ஒரு சின்ன டெக்னிக்கல் மிஸ்டேக் ஆகிப்போச்சு. அது 'பயமறியா பாவையர்கள் சங்கம்' இல்லை. 'பயந்தங்கொல்லிப் பாப்பாக்கள் சங்கம்'னு கண்மனி அதுக்கபுறம் தெளிவுப் படுத்துறாங்க." //
இதுக்கு தான் பொட்டி வாங்கிட்டு சங்கத்துல சேர்றவங்கள-லான் சங்கத்து மீட்டிங்ல சேக்க கூடாதுன்னு சொல்றது.. பாருங்க.. அங்க தூங்கிட்டு... இங்க வந்து அரகொரையா உள்றுறீங்க..

said...

//முதல் வரியே தப்பு...

கிடேசன் பார்க் எதுக்குனு தெரியுமில்ல :-))) //

நான் கேட்ட அதே கேள்விய கேட்குறான்... வெட்டி, என் இனம்டா நீ!

said...

முதல் வரியே தப்பு...

கிடேசன் பார்க் எதுக்குனு தெரியுமில்ல :-)))
//வெட்டி இந்த பூனையும் பீர் அடிக்குமா... நினைக்க வேண்டாம்..:)

said...

@புலி : //அம்புலிமாமா கோஷ்டியா நீங்க...

இது தெரியாம போச்சே.... //

அடடா.. எங்க கோஷ்டிய பத்தி சொல்றதா ஆரம்பிச்சு உங்க கோஷ்டிய பத்தி சொல்லி இருக்கீங்க :-))

said...

//அபி அப்பா தான் அந்த வெள்ளத்துல தத்தளிக்கிற முதல் ஆளு... அவரு எங்க நன்கொடை எல்லாம் ;) //

தத்தளிக்குற ஆளையா அவரு, அப்படியே மிதப்பார், இன்ப வெள்ளத்தில் மிதப்பார்.

said...

@லலாம் : //இதபார்றா இப்படி ஒரு சங்கம் இருக்கறது நமக்கு தெரியாம போச்சு...
:-) //

இப்போ தெரிஞ்சிடுச்சு இல்ல.. இனிமே கரெக்டா வந்துடுங்க..

said...

@லலாம் : //இதபார்றா இப்படி ஒரு சங்கம் இருக்கறது நமக்கு தெரியாம போச்சு...
:-) //

இப்போ தெரிஞ்சிடுச்சு இல்ல.. இனிமே கரெக்டா வந்துடுங்க..

said...

//பாப்பா சங்கமா? பாபா சங்கமா?//

உங்களுக்கே தெரியலையா???

ஐயோ ஐயோ!!!

said...

@லலாம் : //உங்க சங்கத்துக்கு டொனேசன் வாங்க வரலாமா? :-) //

டொனேசன் குடுக்க தாராளமா வரலாம் :-)

said...

//
இதுக்கு தான் பொட்டி வாங்கிட்டு சங்கத்துல சேர்றவங்கள-லான் சங்கத்து மீட்டிங்ல சேக்க கூடாதுன்னு சொல்றது.. பாருங்க.. அங்க தூங்கிட்டு... இங்க வந்து அரகொரையா உள்றுறீங்க..
//


கிடேஷன் பார்க்ல கூட்டம் நடத்துனா வேற எப்படி இருக்கும்..

said...

//அடடா.. எங்க கோஷ்டிய பத்தி சொல்றதா ஆரம்பிச்சு உங்க கோஷ்டிய பத்தி சொல்லி இருக்கீங்க :-)) //

கிடேசன் பார்க் போனது நீங்க, நாங்க இல்ல. அதுனால ரொமப்வே தெளிவா இருக்கோம், அது உங்களை பற்றி தான்....

said...

@அய்யனார் : //ஓ இங்க கும்மியா

டொக்..டொக்.. //

உள்ளே வரலாம்..

said...

//கிடேஷன் பார்க்ல கூட்டம் நடத்துனா வேற எப்படி இருக்கும்.. //

அப்படி சொல்லுய்யா என் மின்னல், இப்ப தான் நீ மின்ன ஆரம்பித்து இருக்க

said...

100

said...

100

said...

எப்படியும் ரெண்டுல ஒண்ணு 100ஆவதா இருக்கும் :-)

said...

//நாகை சிவா said...

//முதல் வரியே தப்பு...

கிடேசன் பார்க் எதுக்குனு தெரியுமில்ல :-))) //

நான் கேட்ட அதே கேள்விய கேட்குறான்... வெட்டி, என் இனம்டா நீ! //

புலி,
இது தான் பல தடவை சொல்லியாச்சே!!! :-)

said...

//புலி,
இது தான் பல தடவை சொல்லியாச்சே!!! :-) //

திருக்குறளை பல தடவை படித்து இல்லை, அது போல உண்மையை எத்தனை தடவை வேண்டுமானுலும் உலகுக்கு எடுத்து சொல்லாம்.

என்ன சரி தானே வெட்டிண்ணன் ;-)

said...

//"சரி மை ஃபிரண்ட்.. எங்கே நீ வா..வந்து மக்களுக்கு நம்ம சங்கம் பெயரைச் சொல்லிக் கொடு பார்க்கலாம்.."மை ஃபிரண்ட் ஆயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பியைக் கையிலே பிடிச்ச மாதிரி தலை முடி எல்லாம் ஸ்பைக் ஸ்டல்ல மாறுன எஃபெக்ட்ல்ல.. "அக்கா நான் தான் சொல்லணுமா?//

பாருடா...
பேர் சொல்றதுக்கே பயப்படறாங்க... இவுங்க தான் பயமறியா பாவையர்களா???

said...

//நாகை சிவா said...

//புலி,
இது தான் பல தடவை சொல்லியாச்சே!!! :-) //

திருக்குறளை பல தடவை படித்து இல்லை, அது போல உண்மையை எத்தனை தடவை வேண்டுமானுலும் உலகுக்கு எடுத்து சொல்லாம்.

என்ன சரி தானே வெட்டிண்ணன் ;-) //

வெட்டிண்ணனா?

புலியண்ணே,
ஏன் இந்த கொல வெறி???

said...

//வெட்டிண்ணனா?

புலியண்ணே,
ஏன் இந்த கொல வெறி??? //

சொன்ன கருத்தை விட்டுட்டு.... இதை மட்டும் கேளு....

என்னை விட இருமாதங்கள் இளையவனாக இருந்தாலும், படிப்பில், அறிவில், திறமையில், அன்பில், பண்பில், பதிவியில் என்னை விட நீ ரொம்ப பெரியவன்ப்பா. அதான் அண்ணன்.

said...

//நாகை சிவா said...

//வெட்டிண்ணனா?

புலியண்ணே,
ஏன் இந்த கொல வெறி??? //

சொன்ன கருத்தை விட்டுட்டு.... இதை மட்டும் கேளு....

என்னை விட இருமாதங்கள் இளையவனாக இருந்தாலும், படிப்பில், அறிவில், திறமையில், அன்பில், பண்பில், பதிவியில் என்னை விட நீ ரொம்ப பெரியவன்ப்பா. அதான் அண்ணன். //

2 மாசமா???

மீதி 36 மாசம் எங்க போச்சு???

said...

@மின்னுது மின்னல் : //அனானிக்கு அனுமதி மறுக்கும் பபாச வை கண்ணாபின்னாவென கண்டிக்கிறேன் //

கூகில் அக்கவுண்ட் இல்லாதவரை மதியாதே என்று கூகில் ஆண்டவர் சொல்லிவிட்டார் :-)

said...

@மின்னுது மின்னல் : //இராம் நாம எவ்வளவு கஷ்ட படுறோம் இவிங்க பதிலே காணும்//

வர்றதுக்குள்ள அவசர பட்டா எப்படி?? பொறுமை வேணும் :-))

said...

@சந்தோஷ் : //:)) ப.பா சங்க சிங்கங்காள் ஒரு பிரம்புக்கே இந்த போடு போடுறாங்க, ஹஹஹஹஹஹ.. :)) //

நீங்க அதுல அடி வாங்கி பாத்திருந்தா தான தெரியும் உண்மை நிலைமை..

said...

@புலி : //உங்க சங்க பெயர சரியா சொல்லி பாக்க ஒரு கூட்டம், அப்பால அதை எழுதி பாக்க ஒரு கூட்டம், இப்படி நடத்துங்க..... சூப்பரா இருக்கும் //

நீங்க சொல்லி நாங்க நடத்தாம விட்டா நல்லாவா இருக்கும்.. நடத்திடுவோம்.. ஆனா.. கூட்டத்துக்கு நிதிய மட்டும் சூடான்ல இருந்து அனுப்பிடுங்க..

said...

@புலி : //புயல் எத்தன மணிக்கு மையம் கொள்ளும், எந்த கொடி ஏத்தனும் சொல்லுங்க, அதுக்கு தகுந்த மாதிரி மக்களும் தயார் ஆகிப்பாங்கள.... //

இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு மையம் கொள்ளும் :-))

said...

@ மின்னுது மின்னல் : //அனானி ஆட்டத்துக்கு பயந்தவங்க சொல்லுறாங்க//

பேரை போட பயப்படுற அனானிக்கெல்லாம் இந்த சங்கத்துல வேலை இல்லைனு தான் :-))

said...

@புலி : //பயம் வார்த்தையில் தெரியுது ;-) //

அது படிக்கற உங்க கண்ணுல இருக்கற பயம் :-))

said...

@புலி : //விடு மின்னல், நாம எல்லாம் ஆப்பை ஆப்-பாயில் ஆக்கி சாப்பிடுறவங்க....

இவங்க எல்லாம் ஆப்பை கண்டா ஆப் ஆகுறவங்க.... //

நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் :-))

said...

@புலி : //ப.ப - பலா பழம் - papa

paappaa - பாப்பா

நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஜித்ரி///

பலாப்பழம் ஒரு வார்த்தை.. அதை உங்க வசதிக்காகலான் ரெண்டா பிரிக்க கூடாது :P

said...

@புலி : //ஆக, விஜயசாந்தியின் "பூ ஒன்று புயலானது" படம் பாத்து இருக்கீங்க நீங்க அப்படி தானே!//

எங்கள பாத்து தான் அந்த படத்தையே எடுத்தாங்களாம்...

said...

@வெட்டி : //ராயலு அண்ணே,
எதிரிங்க லிஸ்ட பார்த்தும் இப்படி ஒரு ஆதரவா???

போட்டி ஏதாவது கை மாறிடுச்சா?
//

அதெல்லாம் கரெக்டா மாறிடுச்சில்ல..

said...

@வெட்டி : //முதல் வரியே தப்பு...

கிடேசன் பார்க் எதுக்குனு தெரியுமில்ல :-))) //

சின்ன பசங்க.. பார்குனா மீட்டிங் போடன்னு நெனைச்சி மீட்டிங் போட்டிட்டோம்.. நீங்க சொல்றத பாத்தா வில்லங்கமா தோனுதே.. சரி.. அடுத்த வாட்டிலேர்ந்து லொகேஷன் சேஞ்ச்...

said...

@வெட்டி : //அபி அப்பா தான் அந்த வெள்ளத்துல தத்தளிக்கிற முதல் ஆளு... அவரு எங்க நன்கொடை எல்லாம் ;) //

ஆஹா.. மை ப்ரண்டு.. இது என்ன மேட்டரு? அப்போ நன்கொடை அம்பேலா?? சரி பரவால்ல.. அதுக்கும் சேத்து வெட்டிகாரு கிட்ட வாங்கிக்கலாம் :-)

said...

@வெட்டி ://உங்களுக்கே தெரியலையா???

ஐயோ ஐயோ!!! //

அதெல்லாம் எங்க சங்கத்து பேரு எல்லாருக்கும் தெளிவா தெரியனும்ங்கறதுக்காக குடுக்கற எஃபெக்டு.. :-)

said...

@மின்னுது மின்னல் : //கிடேஷன் பார்க்ல கூட்டம் நடத்துனா வேற எப்படி இருக்கும்.. //

ஆஹா... இது அந்த பார்க்கா.. சொல்லவே இல்ல மை பிரண்ட்.. :-((

said...

@புலி : //கிடேசன் பார்க் போனது நீங்க, நாங்க இல்ல. அதுனால ரொமப்வே தெளிவா இருக்கோம், அது உங்களை பற்றி தான்.... //

நாங்க போயிட்டு அப்பவே வந்துட்டோம்.. நீங்க எல்லாம் தான் அங்கயே டெண்ட் அடிச்சி தங்கிட்டதா மக்கள் சொன்னாங்க...

said...

@வெட்டி : சதம் அடித்த வெட்டிகாரு வாழ்க.. [யாருப்பா அங்க வெட்டிகார்ரு சதம் அடிக்க எத்தனை பொட்டி வாங்குனாருன்னு கேக்குறது??]

said...

@வெட்டி : //பாருடா...
பேர் சொல்றதுக்கே பயப்படறாங்க... இவுங்க தான் பயமறியா பாவையர்களா??? //

அதுக்கு பேரு பயமில்லீங்கோ.. தன்னடக்கம்.. :-)

said...

//2 மாசமா???

மீதி 36 மாசம் எங்க போச்சு??? //

யோவ் வெட்டி இது எல்லாம் உனக்கே ஒவரா தெரியல....

said...

இப்ப ஒத்துக்குறேன்..::)))


எதுக்கு சொன்னேன்னு என்னோட டைட்டில பாத்தாலே தெரியும்...::)

said...

/என்னது? ராம் போலியா??//

ஏலேய், ஒரு எழுத்து விட்டதுக்கு இப்பிடி கேள்வியா????

said...

//ராயலு அண்ணே,
எதிரிங்க லிஸ்ட பார்த்தும் இப்படி ஒரு ஆதரவா??? //

வெட்டி,

எந்த ஒரு சந்தேகமும் வேணாம்..... :)

said...

என்ன சின்னபுள்ள சங்கம் ஆரம்பிக்கு முன்பு சிங்கங்களை கலந்து ஆலோசித்தாயா ?தனிப் பொரும் கழக தலைவியாகிய என் கவனத்திற்கும் கொண்டுவரவல்லை,கவன ஈர்பு அரிக்கை ஒன்றை சட்டமன்றம் ,பாராழுமன்றம் ,ஐ.நாசபைவரை சமர்பிக்க போகிறேன்.உறங்கிக் கிடக்கும் சிங்கங்களை தட்டிஎழுபவேடாம் என்று எச்சரிக்கிறேர்.(பபா.சங்க உருப்பினருக்கு மட்டும்.இன்று எதிர் அணி நாளை கூட்டணியாக மாறலாம்.எனவே நான் விடும் உதாரை கண்டு பயம்வேண்டாம்.நான் உங்கள் அணி)

 

BLOGKUT.COM