Friday, July 20, 2007

ப.பா.ச விலிருந்து கண்மணி வெளி நடப்பு

வர்ர வர்ர இந்த சிறுசுங்களுக்கு வயசானவங்கன்னு
ஒரு மரியாதையே இல்லீங்க.x(

அப்படி என்ன நமக்கு பல்லெல்லாம் கொடிப் போயி
'குடுகுடு' வயசா ஆயிடுச்சி.>:)

ஏதோ வயசான ஆயா மாதிரி நம்மள கலந்துக்காம இதுகளா லூட்டி அடிக்கிதுகள்.

பெரியவங்க அனுபவசாலின்னு ஒரு பயம் வேண்டாம்
சாட்டுன்னா இதுகளே பேசிக்கிறது.நம்மள இன்வைட் பண்ரதில்ல.
பதிவு போட்டாலும் இதுக இஷ்டம்தான்.நம்ம கேக்கறதில்ல.

இதுங்க லூட்டிக்கெல்லாம் ஈடு கொடுக்க நாம என்ன வாலிபமா?இல்லை வெவரம் இல்லாதவங்களா?

சங்க நடவடிக்கை ஒன்னும் நம்மகிட்ட சொல்றது இல்லை.சங்கம் இருக்கான்னு தெரியலை.
அது அது தானா பதிவு போட்டுக்கிதுங்க போலும்.

டீம்ல இருந்தாலும் நாம சும்மா பேருக்குத்தான்.ஏதோ வயசானவளாச்சே ஒரு பாடிகார்டு மாதிரி இருப்பமின்னு நெனச்சுத்தான் ஒப்புக்கிட்டேன்.

வயசானா என்னங்க நமக்கு இல்லாத ஒலக அனுபவமா?இல்ல நாம அடிக்காத லூட்டியா?
அத இத பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.

எளசுங்களுக்கு சமமா நம்ம லூட்டியடிக்க முடியுமா ?நாம அந்த காலத்து சாவித்திரி சரோஜா தேவி ரேஞ்சு.
இதுக இந்தக்கால அசின் திரிஷா ரேஞ்சு ன்னு ஒதுங்கியிருந்தா ஒரேயடியா நம்மள கழட்டி விட்டுடிச்சிங்க போலும்.

அக்கா எங்கிருக்கீங்க என்ன பண்றீங்க உங்க பதிவு இல்லாம புள்ளைங்க ஏங்கிப் போயிட்டம்னு கொஞ்சமாச்சும் ஒரு அக்கறை வேணாம்.

இருக்கிற வேலைய வுட்டுட்டு காலேஜு கடலைன்னு இதுக மாதிரி நாம பதிவு போட்டுகிட்டிருக்க முடியுமா?

நாம பாக்காத காலேஜா போடாத கடலையா?அத்த ஒரு பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.;)

பாய் ஃபிரண்ட் வேனுமா வேணாமன்னு கேக்குதுங்க.

பாயைப் பிராண்டற வயசுலா நாம பாய்பிரண்டு பத்தி பேச முடியுமா?
என்னயிது சின்னப் புள்ளைத்தனமாயிருக்கு.:-/

சின்னப் புள்ளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்.அனுபவிக்கிற வயசு.
பிரியாமணி அதான் நம்ம பருத்திவீரன் 'முத்தழகு' ஒரு பேட்டியில சொன்ன மாதிரி

இந்த நாள் இந்த நிமிடம் இந்த வயசு ன்னு
வாழ்க்கையை அனுபவிக்கனும்.
=D>

அதுக்காக ஒரு வயசு வரைமுறை வேனாம்?நம்மள கேட்டா இப்படி செய்யுதுங்க ச்சே...
வெறுத்துப் போச்சுங்க அதான் வெளியப்போலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

வயசுக்கும் மரியாதை இல்லை.

நம்மள ஏதோ ஓல்டு மாங்க்னு நெனைக்கிறவங்க கூட எப்படி காலம் தள்ள முடியும்.

அதான் வெளி நடக்கலாம்னு முடிவு செஞ்சேன்...செஞ்சிட்டேன்.

ஆமா நான் என்ன சொல்ல வர்ரேன்னு கேக்கறீங்களா?

யாரைப் பத்தி சொல்றேன்னு குழம்புதா?:-/

சங்கத்தை விட்டு வெளியே கொஞ்சம் காத்தாடப் போறத்தான் வெளி நடப்புன்னேன்.
நீங்க என்ன ஆஹா....பூசல் வெடிச்சிடுச்சின்னு பாத்தியளா

கெளம்பிட்டாய்ங்கய்ய்யா.......கெளம்பிட்டாய்ய்ங்க...:((

இதுக கூட்டணியே வேண்டாம்னு ஒதுங்கிக்கிறேன்.வர்ட்ட்டா

இப்ப நான் என்ன சொல்ல நெனச்சேன் ?

என்ன சொல்லிக்கிட்டிருக்கேன்?

யாருக்குத் தெரியும்?

ஏதோ 'மொக்கை' போடுன்னாங்க போட்டுட்டேன்.
கெலிச்சா அப்பாலிக்கா சொல்லியனுப்பறேன்.

சரி .... சரி ரொம்ப வழியுது மூஞ்சத் தொடச்சிக்கோ ராசா =))

வர்ட்டா.....:-h

11 Comments:

Anonymous said...

:))))

said...

யக்காவ், சூப்பர் மொக்கை யக்கா. பாத்து, சிறிசுங்க நெசமாலுமே வூட்டுக்கு அனுப்பிட போறங்க. உஷார் .

said...

மொக்கை லிஸ்ட்ல இருக்கும் போதே பார்த்தேன்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

:D

said...

:D

said...

:D

said...

ஓக்கே ISO 2000000001 மொக்கை!

said...

இன்னும் சண்டை வரலியா பாப்பா சங்கத்துல!

said...

ஜெயந்தி சொத்தை பிரிச்சு கேளுடா செல்லம்!

Anonymous said...

நாரதர் அபி அப்பா எங்க சண்டை மூட்டலாம்னு அலையாதீங்கோ

Anonymous said...

hahaha:))

 

BLOGKUT.COM