Thursday, July 12, 2007

பொறி(ரி)யல் படிப்பு

வணக்கம் மக்களே இப்பத்த மார்க்கெட் என்னனா சமையல் குறிப்பு எழுதறதுதான் அதான் நானும் சமையல் குறிப்பு எழுத வந்துட்டேன். (அது யாரது ஓரமா சிரிக்கறது ) ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சிரிக்ககூடாது.

அதி காலைல விடிஞ்சும் விடியாததுக்கு முன்னாடி (7 மணிக்கு) போன் மணியடிச்சுது. யாருடா இது இப்டி நடு ராத்திரில போன் பண்ணறாகனு யோசிச்சுகிட்டே போன எடுத்தா என் உயிர் தோழி கனகாதான் லைன்ல.

என்னடி அதிசயம் இந்நேரத்துக்கு போன் பண்ற.

ஒரு சின்ன சிக்கல்டி நீதான் ஒரு தீர்வு சொல்லனும்

சொல்லிடுவோம் என்ன பிரச்னை சொல்லுடி

ஒன்னுமில்ல எங்க அம்மா காலைல ஒரு கல்யாணத்துக்கு போகனும்னு அவசரமா சாதம் பருப்பு மட்டும் செஞ்சிட்டு போயிட்டாங்க. ஆனா எங்க அப்பாவுக்கு பொரியல் செஞ்சே ஆகனும் அதான் பிரச்னை

சரிடி இதுல என்ன பிரச்னை செய்ய வேண்டியதுதான

என்னடி நீயுமா இப்டி பேசற எனக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம் திடீர்னு பொரியல் செய்ய சொன்னா என்ன செயறதுடி அதிலயும் எங்க அப்பா ஈசியா முட்டை போட்டு பண்ணிடுனு சொல்லிட்டு வாக்கிங் போயிருக்காருடி

சரி இவ்ளோதான பிரச்னை நாமெல்லாம் பொறியியல் படிச்சவங்க இந்த சாதாரண பொரியலுக்கு பயப்படலாமாடி?

அடியே அது பொறியியல் இது பொரியல்

அதனால என்ன அங்க எப்டி எதுவும் தெரியாம லேப்ல பாஸ் பண்ணலயா அந்த மாதிரிதான் இதுவும்

சரி சரி அப்டினா எப்டி செய்றதுனு நீயே சொல்லி குடுடி

அவ்ளோதான விடு முதல்ல வெங்காயம் தக்காளி எல்லாம் வெட்டிக்கோ

ம் சரி அப்புறம்

அடுப்புல பாத்திரம் வெச்சு எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து தாளிச்சு இந்த வெங்காயம் தக்காளி கொத்தமல்லி எல்லாம் போட்டு வதக்கிக்கோடி

ம் அப்புறம்

முட்டைய எடுத்து ஒடைச்சு ஊத்திக்கோ

ம்

அப்புறம் ரெண்டு சொம்பு தண்ணிய ஊத்தி நல்லா மூடி வெச்சுடு பத்து நிமிசம் கழிச்சு எறக்கிட்டீனா முட்டை பொரியல் ரெடி

அட இவ்ளோதானா சரிடி நான் செய்யறேன் அப்டீனு போன் கட் பண்ணுனா

அப்ப எங்க அம்மா வந்தாங்க என்னடி காலைல போன் பேசிகிட்டு போய் ஆபீஸ் கிளம்பற வழிய பாருனாங்க. இல்லமா என் தோழிக்கு முட்டை பொரியல் செய்ய சொல்லி குடுத்தேன் அதான் பேசுனேன்னு சொன்னேன். அத கேட்டுட்டு எங்கம்மா சரி எப்படி சொன்ன சொல்லுனாங்க . கடைசி வரைக்கும் கேட்டுட்டு எங்க அம்மா சிரிச்சாங்களே ஒரு சிரிப்பு. அது ஏன்னுதான் புரியல உங்களுக்காவது புரியுதுங்களா?

19 Comments:

said...

:((((
நான் விஜ், (சேர்த்து படிக்க கூடாது)
ஸோ எனக்கு முட்டை பத்தி தெரியாது. பேப்பரில் முட்டை வாங்குவது எப்படின்னா சொல்லூறேன்

said...

thangachi..
inda mathiri mutai poriyal seiyarthuku oru payalala mudiyathu

said...

அட நீங்களுமா குசும்பன்???
விடையையும் நீங்களே சொல்லிடுங்க மா பாப்பாக்களா!!
முட்டை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் சொன்ன செய்முறை சரியா இருப்பது போல தான் தெரிகிறது!! ;)

said...

இப்படிதனுங்க அனு, ஒரு நாள் மோர்க் குழம்பு ரெசிப்பி ஒரு நல்லவங்ககிட்ட கேட்டனுங்க.. அவங்க என்ன சொன்னாங்க தெரியுங்களா? :P

kspp said...

நிஜமாகவே பயமறியா பாவைதான் நீங்கள். நண்பரின் தந்தைக்கே ஆப்படிக்க நினைக்கிறீர்களே.

said...

அனு நல்ல வேளை உங்களை வீடு கட்டலாம்னுஇருந்தேன் .

அப்புறம் என்னை எல்லாம் சேர்ந்து வூடுகட்டி இருப்பாங்க ;)

said...

ஆக உங்களுக்கு சமையல்னா அ.ஆ.இ.ஈ தெரியாது...

அடுத்த நாள் காலையில கனகாவோட அப்பாவால வாக்கிங் போக முடிஞ்சுதா ? இல்லை படுத்துட்டாரா ?

Anonymous said...

அட சினிமா நடிகை கனகா உங்க கல்லூரி தோழியா பெரிய்யயய ஆளுதாங்க நீங்க

said...

என்ன கொடுமை சார் இது??

நண்பரின் அப்பா ;((((

said...

\\CVR said...
அட நீங்களுமா குசும்பன்???
விடையையும் நீங்களே சொல்லிடுங்க மா பாப்பாக்களா!!
முட்டை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் சொன்ன செய்முறை சரியா இருப்பது போல தான் தெரிகிறது!! ;)\\

நீங்க எந்த கட்சி தல?

said...

குசும்பன் : பேப்பரில் முட்டை வாங்கறது முடியாதுங்க போண்டா பஜ்ஜி இதெல்லாம் வாங்கலாங்க

டுபுக்கு : அண்ணனே சொல்லிட்டீங்க நான் நல்லா சமைக்கறனு நன்றிங்கோ

சிவிஆர் : //முட்டை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் சொன்ன செய்முறை சரியா இருப்பது போல தான் தெரிகிறது//
அப்படீங்களா தகவலுக்கு நன்றி அடுத்த தோழிக்கு இதையும் சேர்த்து சொல்லிடுறேன் :)

said...

கோபாலன் : //நல்லவங்ககிட்ட கேட்டனுங்க.. அவங்க என்ன சொன்னாங்க தெரியுங்களா//
அந்த நல்லவங்க யார்னு நான் கேட்கவே மாட்டேனுங்க. :)

kspp : நோ என்னுடைய சமையல் உதவிய இப்டியெல்லாம் தப்பா பேச கூடாது. இதுக்கு பேரு உதவி

தியாகு : வீடு கட்டனும்னா நல்ல சிவில் என்ஜினியர போய் பாருங்க.


செந்தழல் ரவி : //ஆக உங்களுக்கு சமையல்னா அ.ஆ.இ.ஈ தெரியாது...//
ஏனுங்க ஒரு முழு பக்கத்துக்கு எழுதியிருக்கேன் என்ன பாத்து இப்டி சொல்லிபுட்டீங்களே.

said...

அக்கா! இதை எப்பிடி சாப்பிடனும்? டம்ளர்ல ஊத்தி மூக்கப் பிடிச்சுட்டு வாய்ல ஊத்திக்கனுமா?

said...

@கோபிநாத்
நானும் குழும்பன் கட்சி தான் அண்ணாத்த!! :D

Rodrigo said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso. (If you speak English can see the version in English of the Camiseta Personalizada. If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).

said...

கனகாவின் அப்பா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

said...

//டம்ளர்ல ஊத்தி மூக்கப் பிடிச்சுட்டு வாய்ல ஊத்திக்கனுமா? //
காயத்திரி, விஷயம் தெரியாம பேசக்கூடாது. 10 நிமிஷம் கழிச்சு மூடிவெச்ச மூடிய எடுத்துட்டு பார்த்தாவே மூச்சு நின்னுபோயிரும். அப்புறம் மூக்கை புடிச்சா என்னா? வாய்ல ஊத்த வேண்டியது பாலுதானே

said...

// அப்புறம் ரெண்டு சொம்பு தண்ணிய ஊத்தி நல்லா மூடி வெச்சுடு //

ம்ஹீம்! இதெல்லாம் ஆவறதில்லை... நீங்க பொறி(யி)யல் படிப்புக்கு பதில கரை(ச்)சல் படிப்பை சிலபஸ் மாத்தி படிச்சிட்டீங்களோன்னு தோணுது! :)

said...

கடைசி வரைக்கும் கேட்டுட்டு எங்க அம்மா சிரிச்சாங்களே ஒரு சிரிப்பு. அது ஏன்னுதான் புரியல உங்களுக்காவது புரியுதுங்களா?

////////

ஏன் சிரிக்கமாட்டாங்க..........?

தண்ணிய ஏன் ஊத்த சொன்னீங்க?????????

இதையெல்லாம் ஒரு ஆண்பிள்ளை
சொல்லிதர வேண்டியிருக்கு

 

BLOGKUT.COM