Friday, July 13, 2007

ப.பா.ச.வில் உட்கட்சி பூசல்..

ப.பா.ச.வில் உட்கட்சி பூசல்.. மூத்த உறுப்பினரான கண்மணி அக்கா கட்சியை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. அங்கு நடப்பவை அனைத்தும் உங்கள் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஓவர் டூ ப.பா.ச. கட்சி ஆபீஸ்...

****************************************************************


.:: மை ஃபிரண்ட் ::., ஜி3, அனுசுயா, இம்சை அரசி அனைவரும் மிகவும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் சந்தோஷத்தை பார்த்ததும் கண்மணி அக்காவின் கோவம் இன்னும் அதிகமாகிறது.

கண்மணி : ஏய் வாலுங்களா? என்ன எல்லாருக்கும் இவ்வளவு சந்தோஷம்??

.:: மை ஃபிரண்ட் ::. : இது என்னடா இது வம்பா போச்சு? சந்தோஷமா இருக்கறது தப்பா?

கண்மணி : சந்தோஷமா இருக்கறது தப்பில்லே.. ஆனா நான் ஒருத்தி இங்க கடுப்புல இருக்கும் போது நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கறது தப்பு தான்.

ஜி3 : என்னது? நீங்க கடுப்புல இருக்கீங்களா? என்ன ஆச்சு?? யார் என்ன சொன்னாங்க உங்கள?? சொல்லுங்க. யாரா இருந்தாலும் ரெண்டுல ஒன்னு பாத்துடலாம்..

கண்மணி : ஆமா.. இந்த பில்-டப் க்கு ஒன்னும் குறைச்சல் இல்லே.. எல்லாரும் காயத்ரி பிறந்தநாள் விழாக்கு போனீங்களே.. எவளாவது ஒருத்தியாவது என்ன கூப்பிட்டீங்களா?? உங்கள்ல யாருக்காவது என் நினைப்பு இருக்கா??

அனுசுயா : தோ பார்றா.. யக்கோவ்.. நாம எல்லாரும் ஒரு குடும்பத்து மக்கள்... நீங்க வந்து பெரியவங்களா லட்சணமா முன்ன நின்னு நடத்தி குடுத்திருக்கனும்.. அப்படி நீங்க பண்ணாததும் இல்லாம எங்க மேலயே குறை வேற சொல்றீங்க??? கலி காலம்டா சாமி.. :(((

இம்சை அரசி : ஆனாலும் உங்கள மாதிரி இல்ல காயத்ரி.. அவ நீங்க வரலைன்னு எவ்வளவு கவலை பட்டா தெரியுமா? அன்னிக்கு பூரா அவ கோழிக்கால தவிர வேற எதுவுமே சாப்பிடல.. நான் அக்காவுக்கு மெயில் அனுப்பியும் கூட அவங்க வரலியேன்னு வருத்தப்பட்டுட்டிருந்தா.. ஒரு போன் பண்ணியாவது நீங்க அவள வாழ்த்தி இருக்கலாம்..

கண்மணி : என்னது எனக்கு மெயில் அனுப்பினாளா??? எங்க இங்க வந்து பாரு.. அவ கிட்ட இருந்து ஒரு மெயிலும் வரலை எனக்கு..

(எல்லாரும் அங்கு எட்டி பார்க்க.. கண்மணியக்காவின் இன்பாக்ஸில் நிஜமாகவே காயத்ரியின் மெயில் இல்லை.. நம் தலைவி .:: மை ஃபிரண்ட் ::. -ற்கு ஒரு பொறி தட்ட ஸ்பாம் ஃபோல்டரை (Spam folder) திறந்து பார்த்தால் காயத்ரியின் மெயில் அப்பாவியாய் அங்கு உட்கார்ந்திருக்கிறது )

அனுசுயா : பாத்தீங்களா... அவங்க மெயில் அனுப்பினத நீங்க கவனிக்காம எங்கள கோச்சிக்கறீங்களே??

கண்மணி : மன்னிச்சிக்கோங்கபா.. :-(((

ஜி3 : நீங்க மன்னிப்பு காயத்ரி கிட்ட தான் கேக்கனும்.. அவ நீங்களா போன் பண்ணி பேசினாதான் இனி சங்கத்து பக்கம் வருவேன்னு சொல்லிட்டா.. உங்க கிட்ட இருந்து போன் வராத சோகத்துல ஒரு கவிதைகூட எழுதி இருக்கா பாருங்க..

"முடிவற்று நீளும் இரவொன்றில்
கணங்களின் பிரக்ஞையற்று
மெளனமாய் அமர்ந்திருக்கிறேன்...

கண்ணெதிரே சுவற்றில்
படபடத்துத்
துடித்து
நிலைகொள்ளத் தவித்து
இருப்பிற்காய் போராடி
முடிவில்
சடலமாய்ச் சரிகிறது நாட்காட்டி...

திட்டமிட்டு கொலையொன்றைச்
செய்துமுடித்த திருப்தியோடு
திரும்பிப் போகிறது
காற்றும்..
உன் நினைவும்!"

இம்சை அரசி : ( ஜி3 காதில்) இது அவ டீமாஸ்டர பத்தி எழுதினது தானே.. நீ மாத்தி சொல்ற???

ஜி3 : ( இம்சை அரசி காதில்) ஷ்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. கண்டுக்காத :)

கண்மணி : அவ்வ்வ்வ்... என் மேல என் தங்கத்துக்கு இம்புட்டு பாசமா?? இதோ இப்பவே அவளுக்கு போன் பண்றேன்..

ட்ரிங்..ட்ரிங்...

காயத்ரி : ஹலோ

கண்மணி : செல்லம்.. நான் தாண்டா கண்மணியக்கா பேசறேன். சாரிமா உன் பிறந்தநாள் விழாவுக்கு வராததுக்கு.. ஜி-மெயில் சதி செஞ்சிடுச்சு :(( நீ இல்லாம அபீஸே களை கட்ட மாட்டேங்குது. சீக்கிரம் வாம்மா.. உனக்காக கோழிக்கால் ப்ரை வாங்கி வைக்கிறேன்..

காயத்ரி : ஆஹா.. இதோ வந்துட்டேன்க்கா.. நீங்க இம்புட்டு பாசமா கூப்பிட்டு நான் வராம இருப்பேனா சொல்லுங்க :))

*****************************************************

அடடா.. சரவெடியாய் வெடிக்கும் என எதிர்பார்த்தால் இப்படி புஸ்வானமாய் மாறிவிட்டதே :-(( இந்த கட்சியில் ஒன்றும் தேறவில்லை.. நாங்கள் வேறு ஒரு கட்சி ஆபீஸில் இருந்து உங்களை மீண்டும் சந்திக்கிறோம்..

நன்றி.. வணக்கம்..

10 Comments:

said...

:(
:)

said...

:))

said...

கண்மணி அக்காவ கொஞ்சம் நாளா காணோம்! யாராவது பார்த்த சொல்லுங்கபா!

said...

உடன்பிறப்புங்க எல்லாரும் உருகிட்டு இருக்காங்க!!

said...

கண்மணி அக்காவுக்கு பாசக்கார குடும்பத்து மேல செம கோவம் போல!

said...

ஆமாப்பா! டீச்சரை இன்னும் காணலியே! சீக்கிரம் வர சொல்லுங்கப்பா!

said...

டீச்சருக்கு உடம்பு சரியில்ல கண்ணுங்களா?ஜுரம்.அத்தோட அவிங்க ஊர்ல காத்தும் மழையும் கலந்து அடிச்சதுல ஃபோன் வயர் அந்து போச்சி.இந்த நேரம் பார்த்து பி.எஸென்.எல் காரங்க ஸ்டிரைக்.
இன்னைக்குத்தான் சரியாச்சி.

இப்படிக்கு

கடமை தவறாத டீச்சர்

said...

\\\அடடா.. சரவெடியாய் வெடிக்கும் என எதிர்பார்த்தால் இப்படி புஸ்வானமாய் மாறிவிட்டதே :-(( \\

எனக்கும் தான் ;(((

said...

test

said...

nanri ai thervichikiren..

indha vaaram pattam koduthadhuku :)

 

BLOGKUT.COM