Monday, April 6, 2009

ஜே.கே ரித்தீஷை வீழ்த்த வந்த சாம்!

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், தனஷ்-சிம்பு என்று ஒரு பட்டியல் இருக்கிறது! அந்த வரிசையில் ரீத்தீஷ்-சாம் ஆண்டர்சன் வந்துள்ளனர். ஜே கே ரித்தீஷுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம்! யார் ஒருத்தருக்கு பெண் ரசிகர்கள் இருக்கிறதோ அவருக்கு தான் மவுசு அதிகம், நம்ம சூர்யா, மாதவன பாருங்க அந்த மாதிரி. ஜே கே ரீத்திஷ் கலக்கிகொண்டிருக்கிறார் என்று ஒரு புரம் இருக்க, அவரை வீழ்த்த வந்துவிட்டார் சாம் ஆண்டர்சன். நடிப்பிலும் சரி, ஆடல் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளிலும் சரி மனதைவிட்டு நீங்கா இடத்தில் stool போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.

ஹீரோயினிடம் அவர் இயல்பாய் பேசியதை பார்த்து நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்த பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வீடியோவை பாருங்க....



ஹீரோயின் நம்மைவிட அரை அடி உயரம் என்றபோதிலும், தனது வசீகர பார்வையால் ஹீரோயின் மனதில் நமது செருப்புகளிலும் இடம் பிடித்துவிடுகிறார் இந்த கருப்பு மாதவன்! ஹீரோயினிடம் தண்ணி அடிச்சுட்டு பாட சொல்வது தமிழ் சினிமாவின் இன்னொரு புதுமை!

ஆங்கில புலமை கொண்ட விஜய்காந்துக்கே மிரட்டல் விடும் அளவுக்கு எங்கள் மார்டன் சூர்யா ஆங்கிலம் பேசுவது அருமையிலும் அருமை! மஞ்ச காட்டு மைநா என்று பெண்களை பார்த்து பாடும் காலம் மலை ஏறிபோச்சு. வந்துவிட்டார் எங்கள் மஞ்ச காட்டு நைனா!



ஒவ்வொரு படத்தின் ப்ளஸ் அதன் கிளைமெக்ஸ் காட்சியாக இருக்கவேண்டும். அப்படி நிறைய படங்கள் அமைவதில்லை. நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, சேது போன்ற ஒருசில படங்களே கிளைமெக்ஸில் நம்மை உருக வைத்தது. அந்த வரிசையில் இப்படத்தின் கிளைமெக்ஸ் தாய்க்குலங்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இந்த காட்சியை பார்த்த பிறகு, இவருக்கு நிறைய பெண் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், 60 அடி உயரத்தில் இவருக்கு ஒரு கட் அவுட், கண்ணம்மாபேட்டையில்!

நமது கலாச்சாரத்தில் புதுமையை புகுத்தி, கல்யாணம் முடிந்து காரை சுற்றி வருகிறார் இந்த பெண்களின் நாயகன்! நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு!! :(


அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு கொடுக்க போகும் பட்டம் "புரட்சி புறா"

6 Comments:

Anonymous said...

Hahahahaha ....

Some body directed me to this youtube sites few months back. It was the talk of my office for atleast a week.

Fantastic comparison.

-Venkat

said...

இந்த சாம் ஆண்டர்சனுக்கு முன்னால் ரித்தீஷ் எம்புட்டோ தேவலை :(

எல்லாம் காசு கொழுப்புன்னு நினைக்கிறேன். ஆசை யார விட்டது?

said...

என்ன பாப்பாகளே ரொம்பத்தான் கலக்குறீங்க. தாங்க முடியலை. வயிறு வலிக்குது. உங்க பதிவுக்கு இல்லை இந்த பாராட்டு. சாம் ஆண்டர்சனின் நடிப்பை பார்த்துதான். கவ் ப்யூட்டிபுல் யூ ஆர்? நாம வேணா ஒன்னு சேர்ந்து சாம் ஆண்டர்சனுக்கு இரகசிய இரசிகர் மன்றம் ஆரம்பிப்போமா?

Anonymous said...

யாரு இந்த சாம் கண்ணைக்கடுதுடா சாமி
என்ன படம் இது

முடியல

said...

ur wrong in the details given.SA is senior to JKR..

Anonymous said...

...please where can I buy a unicorn?

 

BLOGKUT.COM