Monday, April 6, 2009

'மரியாதை' பார்த்தால் மரியாதை கெடுமா?

சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மரியாதைக்குரிய படம் மரியாதை. விஜயகாந்த் என்றாலே நிறைய பேருக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. அதுவும் சமீபகாலமாக அது அதிகமாய் போக, அனைவரும் முந்தி அடித்துகொண்டு படத்தை பார்க்க துடிக்கின்றனர். அன்று ஒரு திரையரங்கில் இப்படத்தின் போஸ்டர் பார்த்தேன். போஸ்டரை பார்த்தே அரை மணி நேரம் சிரித்தேன். படத்தை பார்த்தால் எவ்வளவு மஜாவாக இருக்கும்!

இப்போது விக்ரமன் படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவருவதில்லை. அதை அறிந்தே அவர் விஜயகாந்தை ஹீரோவாக போட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.அவரது சிஷயர்கள் கேஸ் ரவிகுமார் போன்றோர் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கிறார்கள். நாமும் அப்படி எடுக்கவேண்டும் என்று நினைத்து இப்படத்தை அதிக பொருட்செலவில் எடுத்துள்ளார். பாருங்க இந்த ஸ்டில்லை...

பொதுவாக ஒரு கேமிரா வைத்து எடுக்கலாம். ஆனால், ஒரு கேமிராவுக்குள் அதுவும் ஒரு frameக்குள் இருவரையும் கொண்டு வந்திருக்க முடியுமா? ஆக, அநேகமாக ரெண்டு மூணு கேமிராவை வைத்து இந்த ஸ்டில்லை எடுத்து இருப்பார்! ஒரு சின்ன ஸ்டில்லுக்கே இப்படி என்றால்... முழு படத்தை எந்த மாதிரி எடுத்து இருப்பார் என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்! ஆக, அதிக பொருட்செலவு தானே!

விக்ரமன் படம் என்றாலே ஒரு 'லல்லலா லல்லலா..." தீம் மியூசிக் இருக்கும் அதுக்கு சொந்தக்காரர் ராஜ்குமாராக தான் இருப்பார்! ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி! யப்பா... என்ன நடக்கபோகுதே. மனதில் பீதியையும் மீதியை வயிற்று கலக்களால் போக நேரிடும் பேதியையும் நினைத்து பார்த்தாலே... நெஞ்சு பகீர் என்கிறது. அதுவும் இப்படத்தில் "இன்பமே, உந்தன் பெயர் பெண்மையோ" பாடலை ரீமிக்ஸ் செய்து நம்மை இன்னும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டது 'மரியாதை'. இப்பாடல் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டதாம்!(கொடுமை.. சரி விடுங்க)

படத்தில் மீரா ஜாஸ்மின், சீனியர் நடிகை மீனா, சீனியரின் சீனியர் நடிகை அம்பிகா... இன்னும் எத்தன ஹீரோயின் இருக்க போறாங்கன்னு தெரியல. மீனா, அம்பிகா.. சரி ஒகே.. வயசாச்சு.. பரவாயில்ல. ஏங்க மீரா ஜாஸ்மீன், உங்களுக்கு ஏங்க இப்படி... ! பாவமா இருக்கு உங்கள நினைச்சா...அவ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படத்தை பார்த்தே தீருவேன் என்று சில நண்பர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட்.

7 Comments:

said...

படம் பார்க்காமலேயே எப்படி இப்படி விமர்சனம் எழுதுரீங்க ?பார்க்க ஆசைப்பட்ட கொஞ்சம் பேரும் (நான் இல்லை )அந்த ஆசையை மறந்துடுவங்க போலிருக்கு ...

said...

அய்யோ, முடியலை..! என்னை யாராவது காப்பாத்துங்க.

LOL. :)))))))

Anonymous said...

தமிழ்மாங்கனி, நீங்க எல்லா பதிவுலையும் "மரியாதையா ஓட்டு போடுங்க" னு சொல்லறீங்களே? நீங்க தேமுதிக வா??

said...

@suttapalam

//நீங்க எல்லா பதிவுலையும் "மரியாதையா ஓட்டு போடுங்க" னு சொல்லறீங்களே? நீங்க தேமுதிக வா??//

யாருங்க அங்க. ஏங்க, இப்படி மாட்டிவிடுறீங்க! நான் எந்த கட்சியும் இல்ல!:)

said...

மீரா ஜாஸ்மினுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று..

அட.. இதுல விஜயகாந்த் கூட நடிச்சுருக்காரா :-)

Anonymous said...

பாவம் அம்பிகா, எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீஙக!! எத்தனை முறை என் கனவில்......போதும்டா சாமி!!

said...

Nalla irukku.

 

BLOGKUT.COM