Tuesday, June 17, 2008

பிரியாணி with பிரியாமணி

இன்றைக்கு நாம் பாக்க போக போற நட்சத்திரம், சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரியாமணி. ஒரு படத்தில்தான் அவர் உருப்படியாக நடித்தார். முத்தழகு என்று தமிழ்நாட்டு ரசிகர் நெஞ்சில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் நமது பிரியாமணியை இந்த 'பிரியாணி with பிரியாமணி' நிகழ்ச்சி மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நிருபர்: வணக்கம் பிரியாமணி. நாங்க ப.பா. சங்கத்திலிருந்து வந்து இருக்கிறோம்.

பிரியாமணி: yea hi.

நிருபர்: உங்களுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. அத பத்தி நினைக்கும்போது எப்படி இருக்கு?

பிரியாமணி: i am really thrilled and excited. i couldn't believe when my father broke the news to me. (சிரித்து கொண்டு) i was actually sleeping at that time..

நிருபர்: கொஞ்ச நிறுத்துங்க. ஏங்க தமிழ் தெரியாதா உங்களுக்கு? தமிழ்ல பேசி தான படத்துல நடிக்கிறீங்க. விருதுலாம் வாங்கியிருக்கீங்க. தமிழ்ல பேசுங்கப்பா.. ஏன்னா, இந்த நிகழ்ச்சிய வெள்ளைக்காரனும் பாக்குறான். அவனுக்கு தமிழ் நல்லா தெரியும்!

பிரியாமணி:( சிரித்து கொண்டே) எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எப்படி என்னைய தேர்வு செஞ்சாங்கன்னு தெரியல்ல. ஆனா இந்த நேரத்துல அமீர் சாருக்கு என்னுடைய நன்றிய சொல்லிக்கிறேன்.

நிருபர்: அப்ப அமீர் சார் தான் உங்க வெற்றிக்கு காரணமா?

பிரியாமணி: ஆமா சொல்ல போனால் அவர் எனக்கு குரு மாதிரி.

நிருபர்: ஆனா நாங்க கேள்விப்பட்டோம் அவர் நடிக்கபோகும் அடுத்த படத்துக்கு உங்கள select பண்ணாரு.. ஆனா நீங்க தான்...(என்று இழுத்தோம்)

பிரியாமணி: அப்படிலாம் ஒன்னுமில்லையே. எனக்கு dates சரிவரல்ல. அதுனால தான் (என்று மழுப்பி கொண்டு சும்மா இருந்த கைப்பேசியில் ஸ்.எம்.ஸ் வந்த மாதிரி சீன் போட..)

நிருபர்: dates? தமிழ்ல பேரிச்சம்பழம் என்போமே அதுவா? சரிவரல்லைன்னா வேற கடையில வாங்கவேண்டியது தானே.

பிரியாமணி: ஹாஹா.. குட் ஜோக்! ஒகே அடுத்த கேள்விக்கு போகலாமா?

நிருபர்: பருத்திவீரன் படத்துல உங்க மொத்த நடிப்பையும் நடிச்சதுனால, அதுக்கு அப்பரம் வந்த தோட்டா, மலைக்கோட்டை படத்துல் சுத்தமா நடிக்க மறந்துட்டீங்களே, ஏங்க?

பிரியாமணி: பருத்திவீரன் படத்துல நடிக்கிறதுக்கு space இருந்துச்சு.. மத்த படம் hero-oriented movies.

நிருபர்: ஆமா ஆமா.. கண்டிப்பா உங்களுக்கு space இருந்திருக்காது.. தோட்டா படத்துல ஜீவன் வச்சிருக்கும் முடிக்கே இடம் இருந்திருக்காது.. அப்பரம் இப்படி உங்களுக்கு.. ச்சே ச்சே.. அப்பரம் இன்னொரு கேள்வி. உங்களுக்கு ஞாபகம் மறதி இருக்கா?

பிரியாமணி: இல்ல. ஏன் இப்படி திடீர்ன்னு ஒரு கேள்வி?

நிருபர்: 'ஏ ஆத்தா ஆத்தோரமா' பாட்டுல நீங்க மறந்துபோய் உங்க அண்ண பொண்ணு dress போட்டுகிட்டு ஆடுனீங்களே. அத வச்சு சொன்னேன்.

பிரியாமணி: மம்மீ(என்று கூச்சலிட்டார். கோபமாக தான் கூப்பிடுகிறார் என்று பயந்துபோய்..)

நிருபர்: ஐயோ ஏங்க?

பிரியாமணி:(சிரித்து கொண்டு) இல்ல, இப்ப ஆப்பிள் ஜூஸ் குடிக்குற நேரம். அதான் அம்மாவ கொண்டுவர சொன்னேன்.

நிருபர்: ஓ.. நாங்க பயந்துபோயிட்டோம்.

பிரியாமணி:(ஆப்பிள் ஜூஸை குடித்து கொண்டு) ம்.. அடுத்த கேள்வி.

நிருபர்: அங்க செவுத்துல மாட்டி இருக்கே படம். அது எப்ப எடுத்தது?

பிரியாமணி: அச்சு birthday partyல.

நிருபர்: அச்சுவா?

பிரியாமணி: அஸ்வீன். ஸ்வீ சேகர் son.

நிருபர்: ஓ.. அவரா!! ஹாஹாஹா..

பிரியாமணி; ஏன் சிரிக்கிறீங்க?

நிருபர்:இல்ல, உங்க ஃபிரண்ட்ஸை பாத்தா சிரிப்பு வருது. வேகம் படத்துல என்னமா நடிச்சாரு? ச்சே.. சான்ஸே இல்ல. தொப்பை அழகனாச்சே!! பக்கத்துல அது பாக்யராஜ் மகன் தானே. அவர் படம் எப்ப வெளிவருதுன்னு அவருக்கே தெரியாது! அதுக்கு பக்கத்துல சந்தியா. காதல் படத்துக்கு அப்பரம், உங்கள மாதிரியே அவங்களும் நடிக்க மறந்துட்டாங்க. ஹாஹஹ..அதான சிரிச்சேன்.

பிரியாமணி: என்ன கிண்டலா?

நிருபர்: இல்ல சுண்டலு!

பிரியாமணி: what?!

நிருபர்: இல்ல.. பசிக்குது. அதான் கேட்டேன்.

பிரியாமணி: பேட்டி முடியட்டும். விருதே கொடுக்குறோம்.

நிருபர்: என்னது விருதா?

பிரியாமணி: சாரி ஐ மின் விருந்து. விருது கிடைச்ச பிறகு வாயிலேந்து விருது விருதுன்னே வருது.

நிருபர்: ம்ஹும் வரும் வரும்!

நி்ருபர்: அப்பரம் அடுத்த கேள்வி. உங்கள நிறைய பேர் mimicry செய்யுறாங்களே, அத பத்தி என்ன நினைக்குறீங்க.

பிரியாமணி: நம்மள ரொம்ப நேசிக்கிறவங்க தான் நம்மள மாதிரியே பண்ண ஆசைப்படுவாங்க. அப்படி நினைக்கும்போது, என் ரசிகர்களை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நிருபர்: அப்படியா! நான்கூட உங்கள மாதிரியே பேசுவேன். பாக்குறீங்களா?

(பிரியாமணி முகத்தில் ஆனந்தம் ஆட...)

நிருபர்:(அழுதுகொண்டே) உன்னைய எனக்கு ரொம்ப புடிக்கும்டா. நீ என் உசுருடா!!

பிரியாமணி: ஹாஹாஹா... நான் சாதாரணமா பேசுற மாதிரி பேசுங்க.

நிருபர்: சாரி அது என்னால முடியாது. அப்படி ஒருத்தருக்கு மட்டும்தான் வரும்.

பிரியாமணி; அப்படியா? who is that?

நிருபர்: நம்ம மன்சூர் அலிகானுக்கு தொண்டை கட்டிக்கிச்சுன்னா.. உங்க குரலே தான்!!!

(நாங்கள் எங்கள் பைகளை எடுத்து கொண்டு ஒரே ஓட்டம்...விடு ஜூட்!!)

22 Comments:

Anonymous said...

அப்படியே அந்த படத்தில இருக்குறது யார் யாருன்னு சொல்லிருக்கலமில்ல

Anonymous said...

good imagination..

intha maathiri kalaaikirathunna..

nee naanu nalla eluthireengappa

said...

//சின்ன அம்மிணி said...
அப்படியே அந்த படத்தில இருக்குறது யார் யாருன்னு சொல்லிருக்கலமில்ல//


உங்க கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன் சின்ன அம்மிணி....
படத்தில் இருப்பவர்கள் - இடமிருந்து வலம் :
1) நடிகை சந்தியா
2) நடிகர் சக்தி (தொட்டால் பூ மலரும் படத்தில் நடித்துள்ளார். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் டைரக்டர் பி.வாசுவின் மகன்)
3) அதான் தெரியுமே... ப்ரியாமணியேதான்
4) நடிகர் அஸ்வின்‌ சேகர் (எஸ்.வி.சேகரின் மகன். தற்போது நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.)

said...

தமிழ்மாங்கனியின் எழுத்துக்கள் ரசித்து படிக்கும் படியாய் இருக்கின்றன. பாராட்டுக்கள்.

said...

//) நடிகர் சக்தி (தொட்டால் பூ மலரும் படத்தில் நடித்துள்ளார். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் டைரக்டர் பி.வாசுவின் மகன்)//

சினிமா நிருபரே, அவர் இல்லை இவர்! படத்தில் இருப்பவர் பெயர் சந்தானு. நம்ம பாக்யராஜ் மகன். சக்கரக்கட்டி என்னும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

said...

//தமிழ்மாங்கனியின் எழுத்துக்கள் ரசித்து படிக்கும் படியாய் இருக்கின்றன. பாராட்டுக்கள்.//

நன்றி நிருபரே!

said...

/
"பிரியாணி with பிரியாமணி"
/

மட்டன் பிரியாணியா இல்ல சிக்கன் பிரியாணியா????அப்பாடா தலைப்புக்கு சம்பந்தமா பின்னூட்டம் போட்டாச்சு.

:))

said...

/
சினிமா நிருபர் said...
தமிழ்மாங்கனியின் எழுத்துக்கள் ரசித்து படிக்கும் படியாய் இருக்கின்றன. பாராட்டுக்கள்.
/

ஏகப்பட்ட உள்குத்து வெளிகுத்து எல்லாம் இருக்கும் போல

:))))))))))

said...

//படத்தில் இருப்பவர் பெயர் சந்தானு//

படம் கொஞ்சம் டல்லாக இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...!

said...

//படம் கொஞ்சம் டல்லாக இருந்ததால்//

ஒருவேளை, அவங்க நடித்த படங்கள் போலவே இருந்துச்சோ!!

(ஐயோ நான் ஒன்னும் சொல்லல்லப்பா..அவ்வ்வ்)

said...

//மட்டன் பிரியாணியா இல்ல சிக்கன் பிரியாணியா????//

அஞ்சு ரூபாய் காக்கா பிரியாணி! :))

said...

சிரிக்கும் படி எழுதியிருந்த பதிவுக்கு நன்றி தமிழ் மங்கை.

said...

தங்களுடைய பெயரை சற்று தவறுதலாக உச்சரித்து விட்டேன் தமிழ் மாங்கனி.

said...

//நம்ம மன்சூர் அலிகானுக்கு தொண்டை கட்டிக்கிச்சுன்னா.. உங்க குரலே தான்!!!//
இதான் டாப்:))) நல்ல கற்பனை!

said...

நல்ல இருந்தது !!

அன்புடன்
கார்த்திகேயன்

said...

எங்கள் கனவுக்கன்னியை கலாய்த்த நிருபர் வீடு தேடி பத்து சிங்கப்பூர் ஆட்டோ சீனாக்காரர்களுடன் விரைவில் வரும்.

said...
This comment has been removed by the author.
said...

ஐ..பிரியாமணி பக்கத்தில் ஒரு திருஷ்டி பூசணிக்கா இருக்கே

said...

@மோகன்,

//எங்கள் கனவுக்கன்னியை கலாய்த்த நிருபர் வீடு தேடி பத்து சிங்கப்பூர் ஆட்டோ சீனாக்காரர்களுடன் விரைவில் வரும்.//

ஹாஹா... இங்குள்ள ஆளுங்க எல்லாம் நம்ம பயலுவதான்..ஒன்னும் நடக்காது!! :))

said...

என்ன ஒரு அருமையான கற்பனை!!

அசத்தீட்டீங்க தமிழ்மாங்கனி! (உங்க profile படத்தை மாத்துங்களேன்.. பயமா இருக்கு!)

நான் ப்ரியாமணியோட ஏதோ ஒரு பேட்டியை சமீபத்தில் பாத்த போது தமிழ்ப் படத்துல நடிச்சு விருத்ஹு வாங்கீட்டு இப்படி இங்க்லீஷ்ல பேசுதே இந்தப் பொண்ணு-ன்ணு நினைச்சேன்!

said...

'பிரியாணி with பிரியாமணி'

ஹா...ஹா...

Hilarious!

said...

நல்லா ஜோக்கா எழுதறீங்க

 

BLOGKUT.COM