Saturday, June 7, 2008

லிப்ஸ்டிக் கறையை எப்படித் துடைப்பது?

ஒரு பள்ளியில் மாணவிகள் லிப்ஸ்டிக் போடக் கூடாதுன்னு தடை விதிச்சாங்க
ஆனாலும் மாணவிகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்க ஆசை.
வகுப்பறையில் மட்டும் தானே அனுமதி இல்லை என்பதால் தினமும் பள்ளியின் கழிப்பறைக்குப் போய் லிப்டிக் போட்டுக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பார்கள்.
அதோடு நிற்காமல் அந்த பெரிய கண்ணாடியில் அங்கங்கே தங்கள் லிப்ஸ்டிக் பூசிய உதடு்ளைப் பதித்தும் வருவார்கள்.
தினமும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளருக்கு கண்ணாடியில் பதிந்தி்ருக்கும் உதட்டுச் சாயக் கறைகளைத் துடைப்பதே பெரிய பாடாகிப் போனது.
மறுநாள் நன்கு சுத்தம் செய்ய்யப் பட்ட கண்ணாடியைப் பார்த்ததும் மாணவிகள் மேலும் குஷியாகி உதட்டுச் சாயத்தை பதித்து வைப்பார்கள்.
இது தினமும் தொடர் கதையாகிப் போக பணியாளார் பிரின்ஸ்பாலிடம் முறையிட்டார்.
மாணவிகளை அழைத்துப் பேசிய பிரின்ஸ்பால் தினமும் பணியாளர் எவ்வளவு சிரமப்பட்டு அந்தக் கறைகளைத் துடைக்கிறார் என்பதை சொன்னார்.மேலும் அவரை அதைச் செய்து காட்டச் சொல்ல பணியாளர் ஒரு ஸ்பாஞ்சை எடுத்து கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்..
மறுநாள் முதல் கழிப்பறை கண்ணாடியில் எந்த உதட்டுச் சாயக்கறையும் காணப்பட வில்லை;))

10 Comments:

said...

//தினமும் பள்ளியின் கழிப்பறைக்குப் போய் லிப்டிக் போட்டுக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பார்கள்.
அதோடு நிற்காமல் அந்த பெரிய கண்ணாடியில் அங்கங்கே தங்கள் லிப்ஸ்டிக் பூசிய உதடு்ளைப் பதித்தும் வருவார்கள்.//

:))))

//கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்//

:((((((((((

said...

அய்யோ பாவம்

said...

இது சிக் ஜோக் வகையைச் சாரந்தது.

said...

//கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்..
மறுநாள் முதல் கழிப்பறை கண்ணாடியில் எந்த உதட்டுச் சாயக்கறையும் காணப்பட வில்லை;))//

:-))))

இனி கண்ணாடியை விட்டுட்டு முத்தம் கொடுக்க வேற இடம் தேடாம இருந்தா சரி. நான் வேணா விண்ணப்பம் போடுகிறேன் ;-))

said...

ஐயே !!!!!
ச்சீ !!!!!!!!!!!
ரொம்ப அசிங்கமான சிக் ஜோக் ஆ இருக்கே !
அன்புடன்
அருவை பாஸ்கர்

said...

வேலை ஆகனும் என்ன செய்தா தடுக்கலாம்ங்கற விதமா முடிவெடுத்திருக்கார்.. ம்

said...

/
கிரி said...

இனி கண்ணாடியை விட்டுட்டு முத்தம் கொடுக்க வேற இடம் தேடாம இருந்தா சரி.
/

repeateyyyyy

said...

:)

said...

//எங்கள் ஆஸ்பத்திரியில் லிப்ஸ்டிக் அல்லவன்ஸ் என்று மாதம் ரூ 1000/- கொடுக்கிறார்கள்...( செக்ரட்டரிகளுக்கு) :)//

என்ன கொடும டாக்டர் இது.... வெலவாசி விக்கிற வெலைல ஆயிரம் கட்டுப்படியாகாது. சாதாரண நகத்த வெட்டி வுடறதுக்கே 200 ரூவா வாங்குறாங்க. டெய்லி ஒரு கலர் போட்டாக்கூட கட்டுப்படியாகாதே... உழவர் சந்தைல லிப்ஸ்டிக் வாங்கினாதான கட்டுப்படியாகும்.

said...

:))!
//கயல்விழி முத்துலெட்சுமி said...
வேலை ஆகனும் என்ன செய்தா தடுக்கலாம்ங்கற விதமா முடிவெடுத்திருக்கார்.. ம்//

எனக்கும் அப்படியே தோன்றியது.

[அது சரி, எங்கே தமிழ்பிரியன். 'மொத ஆளா வரணும்னு ஏதும் வேண்டுதலயா'ன்னு நீங்க கேட்டதிலே லேட் பண்றாரா? இல்ல நிஜமாவே சார் வேலையில கொஞ்சம் பிஸியா?]

 

BLOGKUT.COM