Wednesday, July 30, 2008

சிரிக்கலாம் வாங்க...

1) வேடந்தாங்கல் பறவைகள் எங்கிருந்து வருகின்றன?

உங்க பதில்களா இவை?
- வேடந்தாங்கல் பறவைகள் வேடந்தாங்கலில் இருந்து வருகின்றன
- வீடமைப்புக் கழகத்திலிருந்து வந்தன
- உலகின் பல பகுதிகளில் இருந்து
- வேடம் தாங்கி வருவதால், makeup அறையிலிருந்து
- வேடனிடமிருந்து வருகின்றன
- வானத்தில் இருந்து வருகின்றன

சரி பதில்... வேடந்தாங்கல் பறவைகள் மட்டுமல்ல.. எல்லா பறவைகளுமே, முட்டையிலிருந்து தான் வருகின்றன.. கூ கூ கூ!

2) ஒரு சுட்டிப் பையன்..
பள்ளிக்குச் சென்ற அவன் வீடுத் திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் அந்தப் பையனைத் தேடிப் பார்த்தார்கள்.. ஆனால் அவன் கிடைக்கவில்லை.

மூன்று மாதங்கள் கழித்து, அந்த பையன் வீடு திரும்பினான். அவன் வந்தவுடனேயே, அவர்கள் என்ன செய்திருப்பார்கள்?

உங்க பதில்களா இவை :
- பையனுக்கு நன்றாக அடி உதை கொடுத்திருப்பார்கள்
- கட்டியணைத்து முத்தமிட்டிருப்பார்கள்
- கதவைத் திறந்து வைத்திருப்பார்கள்
- முதலில் அந்தப் பையனைப் பார்ப்பார்கள்
- வா மகனே என்றுக் கூறிக் கட்டியணை ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்கள்.
- நீ யார் என்று கோபத்தோடு கேட்டிருப்பார்கள்
- கால்கள் இருக்கின்றனவா என்றுப் பார்த்திருப்பார்கள்
- ஆரத்தி எடுத்திருப்பார்கள்
- பையன் தேசிய சேவைக்குச் சென்றிருப்பான்.. பெற்றோர்கள் பெருமிதம் அடைந்திருப்பார்கள்.
- இனியும் காணாமல் போகாதே எனக் கண்டித்திருப்பார்கள்
- காவல் துறையினருக்குத் தெரிவித்திருப்பார்கள்

நல்ல பதில்கள் தான்.. இருப்பினும் நான் கேட்டக் கேள்வி..
மூன்று மாதங்கள் கழித்து, அந்த பையன் வீடு திரும்பினான். அவன் 'வந்தவுடனேயே', அவர்கள் என்ன செய்திருப்பார்கள்?
பதில்.. பையன் வந்தவுடனேயே, தேடுவதை நிறுத்தி விடுவார்கள்.. :)

3) அம்மா தன்னுடைய மகனை அழைத்து, ' கடைக்கு போய் 2 முட்டைகளை வாங்கி வாப்பா' அப்படின்னு சொன்னாங்க.. அப்படின்னா பையன் கடைக்குச் சென்று முட்டைகளை எப்படி வாங்குவான்?


உங்க பதில்களா இவை :
- ஒரு முட்டையை வாங்கி இரண்டாக உடைத்து எடுத்து வருவான்
- முட்டைக்கு பதில் கோழி ஒன்றை வாங்கி வருவான்.. அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
- ஒரு தாளில் இரு பூஜியங்களை இட்டுக் கொண்டுக் கொண்டு வருவான்
- மூச்சு வாங்க வாங்கி வருவான்
- கேட்டுதான் வன்ஙி வருவான்

பதில்: பையன் கடைக்குச் சென்று முட்டைகளை எப்படி வாங்குவான்? கைலதான் வாங்குவான்!! :Pஹிஹிஹி....

8 Comments:

ராஜ நடராஜன் said...

எனக்கென்னமோ இரண்டாவதில் பையன் மூன்றுமாதம் கழித்து வந்தால் மொத்து மொத்துன்னு மொத்தமா மொத்தனும் தான் பிடிச்சிருக்கு:)

MyFriend said...

hilarious.. :-))))))

Iyappan Krishnan said...

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

சிரிப்பு வரல -- சாரி

FunScribbler said...

@jeeves

//சிரிப்பு வரல -- சாரி//

அட சிரிப்பு வரலையின்னா பரவாயில்ல.. நீங்க வந்துட்டு போங்க!!

அவ்வ்வ்வ்...:)

Anonymous said...

ம் பரவாயில்லை :)



வெடிகுண்டு முருகேசன் :)

ஜெகதீசன் said...

:)

மாயா said...

hi immsai arasi i'm your fan you know... all your postings and tries are great... if time permits check out my blog... i'd attached you to my blog... pls do permit!!!!

Karthik said...

சுட்டிபையன் முட்டை வாங்கப்போய் மூன்று மாதம் கழித்து வரும்போது முட்டையிலிருந்து பறவைகள் வந்துவிட்டது.

புரியலைல? என்னவோ உளர்றேன். விட்டிருங்க....

 

BLOGKUT.COM