Tuesday, July 22, 2008

ஃமை பிரண்ட் பிறந்த நாள் கொண்டாட்டம்

ஒரு five star hotel வெளியில் மிக பிரமாண்டமான 'கட் அவுட்'. மாலை, தோரணம், பெரிய banner என்று திருவிழா போல் காட்சியளித்தது இடம்! 'மை ஃபிரண்ட் பிறந்த நாள் கொண்டாட்டம்' என்று பெரியதாய் ஒரு பலகையில் எழுதியிருந்தது. முக்கியமான பல ஆட்கள், தொழில் அதிபர்கள் என்று ஒவ்வொருவராய் உள்ளே சென்றனர்... நமக்கு தெரிந்த பல ஆட்களும் அங்கே வந்திருந்தனர். என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்!

(பன்னீர் தெளித்து கொண்டிருந்த பெண்களை நோக்கி நடந்தார்)

கவுண்டமணி: ஹாய் லேடீஸ் லேடீஸ், ஐ எம் ஆல் இன் ஆல் அழகுராஜா, எம் எல் ஏ, அஞ்சா சிங்கம்.

செந்தில்: வணக்கம்ண்ணே....

கவுண்டமணி: who is that black sheep? (என்று பின்னாடி பார்க்கிறார்) ஓ, நீயா... என்னடா horlicks bottleக்கு label சுத்துன மாதிரி ஒரு சட்டைய போட்டு வந்திருக்கே..

செந்தில்: நீங்க மட்டும் என்னவாம்...toilet tiles போட்ட சட்டைய போட்டு வந்து இருக்கீங்க...

கவுண்டமணி: என்னடா... நக்கலா...

செந்தில்: சரி வாங்கண்ணே உள்ளே போவோம்...(வாசலில் நின்ற பெண்களிடம் பல்லை காட்டி கொண்டே..)

கவுண்டமணி: சரிடா யாருக்கு இன்னிக்கு பொறந்த நாளாம்?

செந்தில்: மை ஃபிரண்ட்

கவுண்டமணி: சரி இருக்கட்டும்... உன் ஃபிரண்ட் தான். அதான் யாருக்கு?

செந்தில்: மை ஃபிரண்ட் அண்ணே!

கவுண்டமணி: அடே, நான் அத கேட்கல்லடா... யாருக்கு பொறந்த நாளு?

செந்தில்: அதான் அண்ணே மை ஃபிரண்ட்....

கவுண்டமணி: அடே!!! (என்று அடிக்க போகிறார்..)

அரங்கத்தினுள் இருக்கும் மேடையில், சாலமன் பாப்பையா பேச ஆரம்பிக்கிறார்.

கவுண்டமணி: நிகழ்ச்சிய ஆரம்பிச்சுட்டாங்க... நீ தப்பிச்சுட்டே இப்போ..அப்பரம் கவனிச்சுக்கிறேண்டா உன்னைய....
(பாவமாக பார்க்கிறார் செந்தில்)

பாப்பையா: அருமை தாய்மார்களே, அன்பு பெரியோர்களே... வணக்கம்ய்யா! இன்னிக்கு எல்லாரும் நம்ம பொறந்த நாளு பொண்ண வாழ்த்த வந்திருக்கிறோம்ய்யா... நிறைய பேரு வந்திருக்காங்க... ஒவ்வொரு ஆளா வாங்க..வந்து வாழ்த்துங்க... முதல வராரு நம்ம ரஜினிகாந்த்

ரஜினி: எல்லாருக்கும் வணக்கம்(சிரிக்கிறார்) நான் இன்னிக்கு இமயமலைக்கு போறதா இருந்துச்சு.. ஆனா, இன்னிக்கு நம்ம லேடி சூப்பர் ஸ்டார் பொறந்த நாள் விலான்னு கேள்விபட்ட உடனே, எல்லாத்தையும் cancel பண்ணிட்டு வந்துட்டேன்... அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு சொன்ன காலமெல்லாம் மலையேறி போச்சு... இப்ப பொண்ணுங்க எல்லாம் ரொம்ப முன்னேறிகிட்டு வராங்க.. அதுக்கு ஒரு living example தான் நம்ம மை ஃபிரண்ட். எனக்கு ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகத்துக்கு வருது.. ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க... அவங்க ரொம்ப ஏழை. அவங்க வீட்டுல ஒரே ஒரு சைக்களில் தான் இருந்துச்சு

(கதைய ஆரம்பித்து பேசி கொண்டிருந்தார்...)

கீழே உட்கார்ந்து இருந்த செந்தில்,

செந்தில்: உங்களுக்கு கதை புரியுதா அண்ணே

கவுண்டமணி: புரியலன்னு சொன்னா... புரிய வைக்கவா போறே.. சும்மா நிகழ்ச்சிய பாருடா...

பாப்பையா: ரொம்ப அருமையா வாழ்த்து சொன்னாரு நம்ம ரஜினிகாந்த். அடுத்து வாங்கய்யா தசாவதார சிங்கம் உலக நாயகன் கமல்.

கமல்: மேடையில் அமிர்ந்து இருக்கும் அனைவருக்கும், இந்த விழாவை கண்டுகளிக்க வந்திருக்கும் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகளை முதலில் தெரிவித்து கொள்கிறேன். ஐயா அழைக்கும்போது, தசாவதார சிங்கம் என்று சொன்னார்கள். தசாவதார சிங்கம் நான் இல்லை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் மை ஃபிரண்ட் தான். என் படத்தை பலவகையில் விமர்சனம் போட்டு, பெரிய அளவில் மக்களிடம் சேர்த்தவளுக்கு நான் என்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன். அடுத்த படத்திற்காக நிறைய வேலைகள் உள்ளதால், நான் கிளம்பவேண்டிய சூழலுக்கு தள்ளபட்டிருக்கிறேன். விழா நன்றாக நடக்கட்டும். மை ஃபிரண்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க தமிழ், வளர்க தமிழ், வாழ்க உன் தமிழ் சேவை!

கவுண்டமணி பக்கத்தில் நம்ம பிரியாமணி வந்து உட்காருகிறார்.

செந்தில் உற்சாகமாகிறார், நான் தான் செந்தில் என்று அறிமுகப்படுத்தி கை குலுக்கி கொள்ள கையை நீட்டுகிறார். அதை தடுத்த கவுண்டமணி,

கவுண்டமணி: ஹாய் ஐ எம் ஆல் இன் ஆல் அழகுராஜ், அஞ்சா சிங்கம்.

பிரியாமணி: hello, hi. glad to meet you. was in caught in a heavy traffic jam. it's so stuffy in here. are the air conditioners working?

(கவுண்டமணி முழிக்க, செந்தில் சிரிக்கிறார்...)

கவுண்டமணி:(செந்தில் காதுகளில் கேட்கும் அளவில் மெல்லிய குரலில்) என்னடா இவ இப்படி பேசுறா.. ஒன்னுமே புரியல்ல... சரி சரி இது நமக்குள்ளே இருக்கட்டும்....

(திடீரென்னு பிரியாமணி அழும் சத்தம் கேட்க...)

பிரியாமணி ஒரு தாளில் வாழ்த்து எழுதுகிறார்,

பிரியாமணி: உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டி மை ஃபிரண்ட்....

செந்தில்: ஆமா, நீங்க ஏன் அழுவுறீங்க...

பிரியாமணி: பருத்திவீரன் படத்துக்கு அப்பரம் எனக்கு இப்படியே வந்துடுச்சு....

மேடையில் பலரும் வாழ்த்து சொல்கிறார்கள். கைதட்டல்கள் ஒரு புரம் இருக்க... உள்ளே நுழைகிறார் பருத்திவீரன் கார்த்தி. மை ஃபிரண்ட் பக்கத்தில் உட்காருகிறார். மதுரை பாஷையில்,

கார்த்தி: இப்பலாம் ரேடியோவில் ஒரே லவ் சாங்கா தான் கேட்க தோனுது. அதே மாதிரி இப்பலாம் இண்டெர்நெட் பக்கம் போனா ஒரே உங்க ப்ளாக்கா தான் பாக்க தோணுது. நல்லா எழுதுற புள்ள... இந்த புள்ள என் அண்ணி ஜோ கொடுத்துவுட்டாங்க gift. வரட்டா முத்தழகு!

இவர் கொடுத்த giftயை வாங்கி கொண்டு சந்தோஷத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார் மை ஃபிரண்ட்.

மேடை ஏறுகிறார் பார்த்திபன்.

பார்த்திபன்: ஒரு விதைக்கு தண்ணி ஊத்தின்னா, அது செடியா மாறும். அதுக்கு அப்பரம் பூவா மாறும். அந்த பூவ ரசிக்க நிறைய பேர் இருப்பாங்க. அதே மாதிரி, இங்க ஒரு 'பூ' வைச்சுருக்கும் பல வலைப்பூக்களை நாங்கள் ரசித்து கொண்டிருக்கிறோம். இவங்க தேன்கிண்ணத்துல எண்ணங்கள ஊத்துறாங்க. பசங்களுக்கு போட்டியா பயமறியா பாவையர் சங்கத்தலையும் இருக்காங்க. இந்த 'பறவை' ஒரு வேடந்தாங்கல் சொந்தக்காரி. இந்த குழந்தைக்கும் ஒரு குட்டீஸ் கார்னர். ஜில்லுனு ஒரு காதல் பார்த்த நமக்கு ஜில்லுனு ஒரு மலேசியாவையும் காட்டுறாங்க. இந்த வலைப்பூ வசியக்காரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!

பார்த்திபன் பேசி முடித்தபிறகு, பயங்கர கைதட்டல். தனஷை அழைக்கிறார் சாலமன் பாப்பையா...

தனஷ்: நான் தான் கொக்கி குமார் பேசுறேன். யாருச்சு இருக்கீங்களா?

கவுண்டமணி: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே, கூட்டம் ஜெய் ஜெய்ன்னு இருக்கு. யாருச்சு இருக்கீங்களான்னு கேட்குறான். இந்த வரேண்டா...(என்று கோபத்தில் மேடைக்கு போக, செந்தில் கவுண்டரை தடுக்கிறார்)

செந்தில்: அண்ணே, உட்காருங்கண்ணே. அவர் கொஞ்சம் அப்படிதான்....

தொடர்கிறார் தனஷ்.

கவுண்டமணி: யப்பா...ஒரு வழியா.. காதல் கொண்டேன் தனஷ், புதுப்பேட்டை தனஷ், சுள்ளான் தனஷ்னு எல்லா modulationலையும் பேசி முடிச்சுட்டான். என்னால முடியலடா சாமி.

பக்கத்தில் ஒருவர் வந்து நிற்கிறார். தலையை நிமிர்த்தி பார்க்கிறார் கவுண்டர்.

7ஜி ரவிகிருஷ்ணா: ம்ம்ம்...பசங்கன்னா அப்படிதான் இருப்பாங்க. ஒரே மாதிரியாவா பேசுவாங்க ம்ம்ம்.... நான் எந்த பொறந்த நாள் வாழ்த்தும் சொன்னது இல்ல இதுவரைக்கும்....ம்ம்ம்.. அனிதாகிட்டகூட இப்படிலாம் செஞ்சதில்ல தெரியுமா..ம்ம்ம்....

கவுண்டமணி: மைக் செட் வாயா, அதுக்கு என்னய என்னடா பண்ண சொல்லுற...

ரவிகிருஷ்ணா: நான் போய் மை ஃபிரண்டுகிட்ட ஹாய் சொல்லிட்டு வந்துடுறேன்...(லூசுத்தனமாக சிரித்து கொண்டு மை ஃபிரண்ட் பக்கத்துக்கு செல்கிறார்....)

ஒரு வழியா எல்லாரும் வாழ்த்துகள் சொல்லி முடித்தார்கள். சாப்பாடு வழங்கப்பட்டது. கவுண்டமணியும் செந்திலும் வாழ்த்து சொல்ல மை ஃபிரண்டை பாக்க செல்கிறார்கள். அங்கே ஒருவர் ஒரு மணி நேரமா மை ஃபிரண்ட்கிட்ட பேசாமலேயே அவங்க கண்களை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறார்.

கவுண்டமணி: என்னடா இங்க நடக்குது?

ஜெயம் ரவி: அவர் தான் சார் சித்தார்த். special guest for this show. மை ஃபிரண்டுக்கு ரொம்ப பிடிச்ச ஆளு. அதான் அவங்க கண்ணாலேயே பேசிக்கிறாங்க.

செந்தில்: அது ஏன் காபி குடிச்சிகிட்டே பேசுறாங்க?

ஜெயம் ரவி: அதான்ங்க 'காபி வித் அனு'

கவுண்டமணி: ஓ அனுவா? ஆமா.. நீ என்னடா இவ்வளவு நேரமா இங்க பண்ணிகிட்டு இருக்கே....

ஜெயம் ரவி: சித்தார்த் அநேகமா தெலுங்குலதான் பேசி இருப்பாரு. அத, நான் copyright வாங்கி தமிழ்ல பண்ணலாம்னு தான் வேட்டிங்!!!! (அசட்டு சிரிப்பு சிரிக்கிறார்)

கவுண்டமணி: இந்த விஞ்ஞான உலகத்துல இப்படி ஒரு கொடுமையா?

***முற்றும்***

11 Comments:

மங்களூர் சிவா said...

/
சிரிக்க வைக்க முயற்சித்தது Thamizhmaangani
/

பதிவு ரொம்ப ச்சின்னதா இருக்கறதால படிக்கலை

haPPy b'Day aNu

நாமக்கல் சிபி said...

:)

MyFriend said...

சூப்பர் பதிவும்மா.. எல்லா ஸ்டார்களையும் கொண்டு வந்து இறக்கிட்டியே. :-)

MyFriend said...

ஒவ்வொரு ஸ்டாரும் அவங்க ஸ்டைல்ல எப்படி மிமிக்ரி பண்ணுவாங்க்கன்னு நானே இமேஜின் பண்ணி பார்த்தேன். விவிசி. :-)))))

MyFriend said...

//கவுண்டமணி: ஓ அனுவா? ஆமா.. நீ என்னடா இவ்வளவு நேரமா இங்க பண்ணிகிட்டு இருக்கே....

ஜெயம் ரவி: சித்தார்த் அநேகமா தெலுங்குலதான் பேசி இருப்பாரு. அத, நான் copyright வாங்கி தமிழ்ல பண்ணலாம்னு தான் வேட்டிங்!!!! (அசட்டு சிரிப்பு சிரிக்கிறார்)

கவுண்டமணி: இந்த விஞ்ஞான உலகத்துல இப்படி ஒரு கொடுமையா?//

இது சூபப்ரோ சூப்பர் விவிசி. :-))))))

MyFriend said...

@சிவா 7 சிபி:

நன்றி :-)

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

ஆமா கட்டாயம் சிரிக்கணுமாம்ல...

தமிழன்-கறுப்பி... said...

இங்கேயும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்...!

Sundar சுந்தர் said...

நல்ல கற்பனை. கலக்கிட்டீங்க. belated பிறந்த நாள் வாழ்த்துகள்!

Divya said...

கலக்கோ கலக்குன்னு கலக்கியிருக்கிறீங்க தமிழ்மாங்கனி.....சிரித்து ரசித்து படித்தேன்!!

My Friend......sure deserves such a hilarious post on her Special day!!

 

BLOGKUT.COM